How to be picky with blog posts? – Primer for selective reading


Surfing the Internet makes about as much sense as for, say, a biologist to read all the biology journals. You will never learn anything that way. No serious scientist does that .The literature is massive. You get flooded by it. A good scientist is one who knows what to look for, so you disregard tons of stuff and you see a little thing somewhere else. The same is true for a good newspaper reader. Whether it’s in print or on the Internet, you have to know what to look for. This requires knowledge of history, an understanding of the backgrounds, a conception of the way the media functions as filters and interpreters of the world. Then you know what to look for. And the same is true on the Internet.

What We Say Goes by Noam Chomsky

சற்றுமுன்னுக்கு எழுதியதின் தொடர்ச்சியாக இதை வைத்துக் கொள்ளலாம். கில்லிக்கு எவ்வாறு பதிவுகளை இடுகிறேன் என்னும் சொந்தக் கதையாகவும் வைத்துக் கொள்ளலாம். ஒரு வருட இறுதியில் எழுதியதன் அந்தாதியாகவும் தொடரலாம்.

1. In-depth ஆக எழுதுபவர்கள் மிக மிக முக்கியம். பங்கு வணிகத்துக்கு இன்னார்(கள்), விஞ்ஞானம்/அறிவியல், காபி குடித்தல், சிக்கனமாக வாழ்தல் என்று எடுத்துக் கொண்டதை ஆழமாக சூப்பர் ரின் போடுபவர்களைப் புத்தகக் குறியிடுங்கள். குறிச்சொற்களாக, ‘அன்றாடம்’, வாராந்தரி என்று உங்களுக்கு விருப்பமான அடையாளங்களைக் கொடுங்கள். அவ்வப்போது இந்த வலையகங்களில் இருந்து தொடுப்பு கொடுத்து வரவும்.

2. தமிழ்ப்பதிவுகளை அறிய தமிழ்மணம்/தேன்கூடு, ஆங்கிலப் பதிவுகளுக்கு இன்னொரு செய்தியோடை சேவை என்று வைத்துக் கொள்ளவும். தினசரி ஒரு முறை முழுமையாக மேய்ந்துவிடவும். தமிழ்மணத்தில் கடந்த 24 மணிநேரங்களில் எழுதியவை இருக்கின்றது. தேன்கூட்டிலும் தனிப்பட்ட விருப்பங்கள் மூலம் ஒரே பார்வையில் 50 தலைப்புகளை கவனிக்க முடியும்.

3. ஒவ்வொரு விதமான விஷயங்களுக்கு, ஒவ்வொரு கணக்கு தொடங்கவும். ப்ளாக்லைன்ஸ் என்றால் நண்பர்களின் பதிவுகள்; கிஞ்சா என்றால் விடுபட்டுப் போகும் சிலர்; கூகிள் ரீடரில் புகழ்பெற்ற பதிவர்கள்; ஃபீட் ரீடர் நிறைய இருக்கின்றன. ஒவ்வொன்றையும் தனித்துவமாக பயன்படுத்தினால் குழப்பம் இன்றி கோர்வையாக வாசிக்கவும், நேரத்தை மிச்சப்படுத்தவும் செய்யலாம்.

4. Blogroll என்பது முக்கியமான விஷயம். குறிப்பாக ஆங்கிலப் பதிவுலகத்தில் மேய இது இன்றியமையாதது. ஒருவரின் குறிப்பிட்ட இடுகை பிடித்திருந்தால், வித்தியாசமாக இருந்தால், பக்கவாட்டில் நோக்குங்கள். அவர் விரும்பிப் படிக்கும், கவனித்து நோக்கும் பதிவர் பட்டியல் கிடைக்கும். ஒவ்வொன்றாக உள்ளே சென்று மேலோட்டமாகவாவது வாசிக்கவும். சிலது கவராமல் போகலாம். ஓரளவு பிடித்ததை தாற்காலிகமாக செய்தியோடை வாசிக்கும் நிரலில் ‘அண்மையில் சேர்க்கப்பட்டவை’ போன்ற குறிச்சொல்லுடன் சேர்த்து, கவனித்து வரவும். (நான் இதற்கு ப்ளாக்பிரிட்ஜ் உபயோகிக்கிறேன்).

5. ஆங்கிலப் பதிவுலகுக்குள் நுழைவது எவ்வாறு? அமித் அகர்வால் கொடுக்கும் பட்டியலை துணைக்கு அழைக்கலாம். இன்டிப்ளாக் பரிந்துரைகளில் இடம்பெற்றவர்களில் துவங்கலாம்.

6. சென்ற #4 & #5 – ஆகிய இரண்டுமே புகழ்பெற்றவர்களையும் பெத்த பேர் பெற்றவர்களை மட்டுமே சுட்டும். புதியவர்களை அறிய உபயோகம் ஆகாது. இதற்கு பிரகாஷ் சொன்ன கருத்து பயன்படும்:

தமிழ்மணத்திலே இணைச்சுக்காம, சுமார் ஆயிரத்து ஐனூறு பதிவுகள் (அத்தனையும் ஆக்டிவ்) இருக்கிறது.. நான் மானிட்டர் செஞ்சபடி, ஒரு நாளைக்கு ஒரு புதுப் பதிவு துவங்கப்படுகிறது. ரெண்டுல ஒண்ணுக்குத்தான் தமிழ்மணம், தேன்கூடு இருக்க்றதே தெரியும். இது பின்னாலே திரட்டிகளில் இணைச்சுக்கலாம் இல்லாமப் போகலாம். இது எல்லாத்தையும் பார்த்து, கண்காணிச்சு, சேர்த்து திரட்டி ஒண்ணு ஆரம்பிங்க.

புதுசா வரக்கூடிய பதிவுகளை மானிட்டர் பண்ண ஒரு வழி. நுட்ப அறிவு இருந்தா, crawler எழுதிக்கலாம். இல்லாட்டா ஒரு எளிய வழிமுறை.

1. ஏதோ ஒரு feedreader கணக்கு.

2. blogsearch.google.com க்குப்ப் போய், ‘ நான்’, ‘எனது’, ‘என்’, ‘வணக்கம்’ என்று நான் வார்த்தைகளுக்கு தனித்தனியா blogsearch alert செட் செய்து கொள்ளவும் ( sort bydate). இந்த நான்கு வார்த்தைகள் இல்லாமல் யாரும் பதிவு ஆரம்பித்து எழுதமாட்டார்கள் என்பது லாஜிக். இந்த வார்த்தைகள் இல்லாமல் எழுதுகிற பரப்பிரம்மங்கள், பதிவர் என்கிற கேட்டகரியிலேயே வர மாட்டார்கள் 🙂

3. தினம் ராத்திரி, வர பதிவுகளைப் படிக்காமலேயே, add to reader வசதி மூலமாக feedreader இலே சேர்த்துக் கொள்ளவும். ஏற்கனவே சேர்ந்திருந்தால்,. லொள்ளென்று குலைக்கிற மாதிரி ரீடரை configure செய்து கொள்ளவும். that way you can avoid redundancy.

4. மாசத்துக்கு ஒரு முறை ஒபிஎம் எல்லாக எக்ஸ்போர்ட் செய்து கொள்ளவும்.

இது கில்லியின் டிரேட்சீக்ரட் :-). ஒரே மாசத்தில் மொத்த பதிவுகளும் உள்ள வந்துடும்/

7. தமிழில் எழுதும் அத்தனை பதிவுகளையும் கூகிளின் வலைப்பதிவு தேடலில் கண்டுகொள்ளலாம். இதே மாதிரி டெக்னோரட்டியும் பயனுள்ளது. அது பதிவர்களை தரம் பிரித்தும் காட்டுவதால், தேடல் முடிவுகளில் சுவாரசியமான இடுகைகளை அடையாளம் காண்பது எளிதாகும்.

7. (அ) இன்னொன்று ஃபர்ல், டெலிசியஸ், க்ளிப்மார்க்ஸ் போன்ற இடங்களில் யார் அதிகம் படிக்கப் பெறுகிறார்கள், எவ்வாறு குறிச்சொல்லாக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதும் தரம்/குணம்/மணம்/சுவை காட்டும்.

7. (ஆ) தமிழில் ரோல்யோ, யூரெக்ஸ்டர் போன்றவை இன்னும் பரவலாக பயன்படுத்த ஆரம்பிக்கப்படாததால், பொருத்தமில்லாத முடிவுகள் மாத்திரமே வருகின்றன. பிப்பல் நான் உபயோகித்ததில்லை.

7. (இ) வீடியோக்களை கண்டுகொள்வதற்கு யூட்யூப் தலை பத்து பட்டியல் அல்லாமல் வேறு வழிகளிலும் செல்லவும்.

8. எதைத் தேடுவது? – அன்றாடம் செய்தி படிக்கிறீர்கள்; சில பிரச்சினைகளை சொந்த அனுபவமாக உணர்கிறீர்கள். சினிமா வெளியாகியுள்ளதா… தேடலாம். நியூ யார்க்கில் சத்யாகிரஹா என்னும் தியேட்டர் அரங்கேறுகிறதா… தேடுங்க.

9. எது ‘புதுசு கண்ணா புதுசு’? – டிக், ரெடிட், நியூஸ்வைன், ஸ்டம்பிள் அபான் போன்றவை கொஞ்சம் சத்தத்துக்கும் சத்துக்கும் இடையே உள்ளதை பிரித்து அன்னப்பறவை ஆக்கும்.

10. தமிழில் தற்போதைக்கு மாற்று மட்டுமே ஓரளவு இதை நிரப்புகிறது. ஆங்கலத்திற்கு தேசிபண்டிட், ப்ளாக்பாரதி போன்ற பரிந்துரைத் தளங்களை நம்பியிருக்கிறேன்.

11. மீண்டும் #1-ஐ பார்க்கவும். மற்றவருக்கு தேவை ஆழம்; இந்த மாதிரி தெரிவுகள் தளத்திற்கு தேவை அகலம். ஒரே மாதிரியான விஷயங்களே தொடர்ச்சியாக காணக்கிடைத்தால்; கிட்டத்தட்ட சம்பந்தமுள்ள தலைப்புகளை அடுத்தடுத்து பார்த்தால் அலுத்துப் போகும். 256 தொலைக்காட்சி கன்னல் இருப்பது போல் பல்வண்ணக்கோர்வை தேவை.

12. க்ரீமி லேயர், பிரதிபா பட்டீல், ஃபிட்னா என்று விவகாரமான விஷயங்களில் பன்முகம் என்ற பெயரில் மாற்றுக் கருத்து, எதிர் சிந்தனைக்கு எதிர் சிந்தனை என்று மிக்சர் கொடுக்க வேண்டும்.

13. விடாது கருப்பு, டோண்டு, என்று எல்லாவிதமான பதிவர்களும் இடம்பிடிக்க வேண்டும்.

14. ஒரே பதிவரின் இடுகைகளே மீண்டும் மீண்டும் இடம்பிடிக்கக் கூடாது. ஒரே பரிந்துரையாளரே தொடர்ந்து பதிவுகளை பரிமாறக் கூடாது. இரண்டும் #11-க்கு வழிவகுக்கும்.

15. கொடுக்கும் இரண்டு வரி காமென்ட்களில் துள்ளல் வேண்டும். ‘செத்தவன் கையில் தூர்தர்ஷன் ஷெனாய’ தந்தது மாதிரி அருஞ்சொற்பொருள் கூடாது.

16. எட்டேகால் கிலோபைட்டுக்கு மேல் எழுத்தைக் கண்டால், பொறுமையாக படிக்கவும்; அதற்கான பொருத்தமான பத்தியை கண்டுபிடிக்கும் அவகாசமும் — கொடுக்கும் வேலையில் அமர்ந்திருக்க வேண்டும்.

பிற்சேர்க்கை:

17. சமீபத்தில் சேர்க்கப்பட்ட பதிவுகளை தமிழ்மணமும் தேன்கூடும் பட்டியலிடும். அண்மையில் நுழைந்தவர்களைப் படித்து அறிமுகம் தருவது ஃப்ரெஷ்ஷாகவும் இருக்கும்; வெரைட்டியும் கொடுக்கும்; புதியவர்களுக்கு ஊக்குவிப்பாகவும் பரந்துபட்ட வாசகர் வருகைக்கு வித்தாகவும் அமையும்.

என்ன படிப்பது, எப்படியெல்லாம் வாசிப்பது, எங்கே வைத்துக்கொள்வது, எவரைப் பிடிப்பது, எப்பொழுது என்று நேரங்காலம் பார்ப்பது என்றெல்லாம் ஓரளவு சொல்லிவிட்டேன்.

எதற்காக படிக்கணும்? எதைத் தேர்ந்தெடுக்கணும்??

இரன்டுக்குமான விடை தெரிந்தால், உங்க மின்னஞ்சல் முகவரி தாங்க… அந்த பிரும்ம இரகசியத்தை சொல்லிக் கொடுங்க.

இரண்டுக்குமான விடை தெரியாதவர்கள், உங்க மின்னஞ்சல் முகவரி தாங்க… கில்லிக்கான பரிந்துரையாளர் ஆக அழைப்பு இடுகிறேன். கோஷ்டியில் சேர சரியான நபர் நீங்கதான்!

4 responses to “How to be picky with blog posts? – Primer for selective reading

  1. //எதற்காக படிக்கணும்? எதைத் தேர்ந்தெடுக்கணும்??//

    இந்த கேள்விக்கு மட்டும் விடை தெரிஞ்சுட்டா அதுக்கப்புறம் எதையுமே படிக்க மாட்டேன்! 😦

  2. லக்கி… போணி ஆரம்பிச்சு வச்சதுக்கு நன்றிங்க

  3. பிங்குபாக்: புத்தாண்டு வாழ்த்து « Snap Judgment

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.