Shelfari Spam


tamil Cards Greeting Spam Shelfari Recover Health

அசல்: தி நியு யார்க்கர்

முதலில் ஷெல்பாரி எரிதங்களுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்ள வேண்டும். மன்னிப்பு கோருகிறேன்.

‘ஏதோ… புத்தகக் கடை! பதிந்து வைத்துக் கொண்டால், நாலு புத்தகம் படித்த மாதிரி சீன் காட்ட உபயோகப்படும்’ என்னும் ஆர்வத்தில் நானும் செல்பாரியில் இணைத்துக் கொண்டேன். இந்த லிங்க்ட் – இன், ஃபேஸ்புக் மாதிரி மின்னஞ்சல் புத்தகத்துக்குள் நுழைய அனுமதியும் கொடுத்து வைத்தேன்.

அவர்கள் எல்லாம், யாருக்கு அனுப்பவேண்டும் என்று கேட்பார்கள். ஒரு வாட்டிக்கு, ரெண்டு வாட்டி யோசிக்க வைப்பார்கள்.

ஷெல்பாரி அப்படி எல்லாம் முன் வைத்த காலை பின் வைக்க வாய்ப்பு எதுவும் கோராமல், தொடர்ச்சியாக அனுதினமும் அனைத்து மின்னஞ்சலுக்கும் ‘சேர்ந்தாச்சா? சேராட்டி நாளைக்கும் படுத்துவேன்!’ என்று கழுத்தில் கத்தி நீட்டுகிறது.

பல வருடமாக மறந்து போனவர்கள் ‘சௌக்கியமா?’ என்று தொலைபேச வைத்திருக்கிறது. பதினெட்டு மாதம் முன்பாக, அரை பாட்டில் மது உள்ளே மிதக்கும் தருணத்தில் அறிமுகமான சிலரிடம் இருந்து ‘உன்னை எனக்கு எப்படித் தெரியும்?’ என்று நலம் விசாரிப்புகளை முடுக்கி விடுகிறது. சுருக்கமாக, பலரை வாட்டி எடுக்கிறது.

தீர்வாக, என்னுடைய ஷெல்பாரி கணக்கை நீக்கி பிராயசித்தம் தேடிக் கொண்டிருக்கிறேன்.

இந்த பர்த்டே அலார்ம், லைப்ரரி திங் எல்லாம் இல்லாத ‘சார்… போஸ்ட்’ காலத்துக்கு செல்ல வேண்டும். பத்து பிரதியெடுத்து அனுப்பி இருப்பார்கள்.

கொசுறு:

Vacation Beggar Alms Compensation

5 responses to “Shelfari Spam

  1. என்னோட ஆபீஸ் மெயில் ஐடிக்கெல்லாம் வந்துச்சுங்க 🙂 கடேசில ஸ்பாம் தானா?

  2. நோ ப்ராபளம் 🙂 . நான் சீரியஸா சொல்லலை 🙂

    நைஜீரியாவிலே புதையல், தபால் மூலம் பிஎச்டி, வீரிய மருந்து, ஒரு ரூபாவுக்கு அமெரிக்கன் ஏர் டிக்கெட்டு போன்ற கச்சடாக்களுக்கு மத்தியில் புஸ்தகம் படிக்கத்தானே ஸ்பாம் அனுப்பறாங்க.. பரவாயில்லை

  3. ஹிஹி… அந்த புண்ணியத்தை நாங்களும் கட்டிக்கிட்டோமில்ல!

  4. // ‘ஏதோ… புத்தகக் கடை! பதிந்து வைத்துக் கொண்டால், நாலு புத்தகம் படித்த மாதிரி சீன் காட்ட உபயோகப்படும்’ என்னும் ஆர்வத்தில் நானும் செல்பாரியில் இணைத்துக் கொண்டேன்.

    இப்டியா பப்ளிக்ல என்னை பத்தி எழுதறது 🙂

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.