Oldies Infested Congress – Dinamalar.com


பதவி சுகம் கண்ட பழைய முகங்கள்

“காங்கிரஸ் கட்சிப் பணிக்கு மூத்தவர்கள் வர வேண்டும். அரசியல் பதவிகள் புதியவர்களுக்கு தர வேண்டும்’ என்று காமராஜர் அறிவித்துவிட்டு, முதல்வர் பதவியை துறந்தார். அப்படிப்பட்ட வாய்ப்பில் தான் பக்தவச்சலம் முதல்வராக வர முடிந்தது.

எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம்: இவர் இரண்டு முறை எம்.எல்.ஏ., தேர்தலிலும், ஒரு முறை எம்.பி., தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர். ஒரு முறை எம்.பி., தேர்தலில் வெற்றி பெற்று மத்திய அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். மூன்று முறை (15 ஆண்டுகள்) எம்.எல்.ஏ., பதவியும் வகித்து தற்போது சட்டசபை தலைவராக பணியாற்றி வருகிறார்.

குமரி அனந்தன்: இவர் இரண்டு முறை எம்.பி., தேர்தலிலும், எம்.எல்.ஏ.,தேர்தலில் ஒரு முறையும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இவர் ஐந்து முறை எம்.எல்.ஏ.,வாக இருந்து மொத்தம் 19 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

டென்னிஸ்: ஆறு முறை எம்.பி.,யாக பணியாற்றி ஒரு முறை எம்.பி., தேர்தலில் தோல்வி அடைந்தவர். இவரும் 19 ஆண்டுகள் பதவியில் இருந்துள்ளார்.

நாகர்கோவில் மோசஸ்: ஒரு முறை ராஜ்யசபா எம்.பி.,யாகவும், மூன்று முறை எம்.எல்.ஏ.,வாகவும் பணியாற்றியுள்ளார். ஒரு முறை எம்.எல்.ஏ., தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார். இவரும் 19 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

கோவை வீ.கே.லட்சுமணன்: ஒரு முறை எம்.எல்.ஏ., தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார். மூன்று முறை எம்.எல்.ஏ.,வாக 15 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

ஊட்டி எச்.எம்.ராஜூ: இவர் ஒரு முறை எம்.எல்.ஏ., தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். மூன்று முறை எம்.எல்.ஏ.,வாக 15 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

யசோதா: மூன்று முறை எம்.எல்.ஏ.,தேர்தலில் வென்று 15 ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார்.

கே.ஆர்.ராமசாமி: திருவாடனையில் இவர் தொடர்ந்து நான்கு முறை எம்.எல்.ஏ.,வாக 17 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

வேலூர் ஞானசேகரன்: இவர் தொடர்ந்து மூன்று முறை எம்.எல்.ஏ.,வாக 15 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

நிலக்கோட்டை பொன்னம்மாள்: இவர் நான்கு முறை எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டு 17 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

ரிஷிவந்தியம் சிவராஜ்: இவர் ஒரு முறை எம்.எல்.ஏ., தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார். மூன்று முறை எம்.எல்.ஏ.,வாக 15 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

பாரமலை: இரண்டு முறை தோல்வி அடைந்து மூன்று முறை எம்.எல்.ஏ.,வாக 15 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

சுதர்சனம்: இவர் மூன்று முறை வெற்றி பெற்று 15 ஆண்டுகள் எம்.எல்.ஏ.,வாக பணியாற்றியுள்ளார்.

வள்ளல்பெருமான்: மூன்று முறை எம்.பி.,யாகவும் பணியாற்றியுள்ளார். இரண்டு முறை எம்.பி., தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார். தற்போது எம்.எல்.ஏ.,வாக பணியாற்றி வரும் வள்ளல் பெருமான், எம்.பி.,யாக மட்டும் 17 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

2 responses to “Oldies Infested Congress – Dinamalar.com

  1. மு. சுந்தரமூர்த்தி

    வேலூர் ஞானசேகரன்: இவர் தொடர்ந்து மூன்று முறை எம்.எல்.ஏ.,வாக 15 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

    மூன்று முறை எம். எல். ஏ.வாக இருந்தால் ஓல்டியா? பாத்தா இளமையாத் தானே இருக்கிறார்? வேலூரில் நல்ல பெயர் இருக்கிறது. வேலூர்க் கோட்டையை மீண்டும் தி.மு.க. பிடிக்கும் எண்ணம் இல்லாவிட்டால் இவரே போட்டியிட்டு வெற்றியும் பெற வாய்ப்புண்டு.

  2. குறும்பன்

    எல்லா அரசியல் கட்சிகளும் இளையோருக்கு & புதியவர்களுக்கு வாய்ப்பளிக்காத கட்சிகளே. “பழைய” பெரும் கட்சி காங்கிரஸ் பேருக்கு தகுந்த மாதிரி நடந்துக்குது. அ.தி.மு.க மட்டும் விதிவிலக்கு. இன்னைக்கு கட்சியில் சேர்ந்தால் கூட தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அ.தி.மு.க வில் மிக அதிகம். பழைய ஆளுங்களுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம். :-))

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.