ஃபிடல் காஸ்ட்ரோவின் நரபலிகள் ::
“க்யூபாவில் ‘வேட்டைப்படை’ எதுவும் கிடையாது. அரசியல் காரணங்களுக்காக ஒருவரைக் கூட காணாமல் போக்கியது கிடையாது. எவரையும் நாங்கள் துன்புறுத்தியது இல்லை. நாடு முழுக்க பயணம் செய்து, குடிமக்களிடம் கேட்டுப் பாருங்கள். ஒரு துப்பு கூட உங்களுக்குத் துலங்காது. எங்காவது ஓரிடத்திலாவது, ஒரு நபராவது அவ்வாறு அடக்குமுறைக்கு உள்ளாக்கப் பட்டிருந்தால், இனிமேல் பொதுவில் வாயைத் திறக்கவே மாட்டேன்” – ·பிடல் காஸ்ட்ரோ, ஏப்., 2001
(“There have never been death squads in our country, nor a single missing person, nor a single political assassination, nor a single victim of torture… You may travel around the country, ask the people, look for a single piece of evidence, try to find a single case where the Revolutionary government has ordered or tolerated such an action. And if you find them, then I will never speak in public again.”)
ஜனவரி 1, 1959 முதல் மார்ச் 15, 2005 வரை காஸ்ட்ரோ அரசினால் கொல்லப்பட்டவர்களின் பட்டியல்
படை வீரர்களினால் சாகடிக்கப்பட்டவர்கள் (Firing squad executions) : 5,640
சட்டத்துக்குப் புறம்பாக கொலை செய்யப்பட்டவர்கள்: 1,203
சிறைச்சாலை மரணங்கள்: 2,199
காணாமல் போனவர்கள்: 198
மொத்தம்: 9,240
“Balseros” (கடல் வழியாக தப்பிக்கும் பொழுது உயிரிழந்தவர்கள்) 77,833
மொத்தம்: 87,073
ஆதாரம்: The Cuba Archive | Free Society Project
உலகெங்கும் ‘டெத் ஸ்காவ்ட்’கள் பிரபலம். கிளர்ச்சியாளர்களை நசுக்குவதற்காக ஸ்டாலின் பிரபலப்படுத்திய ‘வேட்டைப்படை’ வீரர்களை சமீபத்திய ஈராக் வரை கூட பயன்படுத்துகிறார்கள். ஸ்டாலின் வழி வந்த ·பிடல் காஸ்ட்ரோ இன்றளவிலும் மிரட்சியை முன்னிறுத்தி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
‘Fog Facts’ என்னும் புத்தகத்தில் லாரி பென்ஹார்ட் (Larry Beinhart) அமெரிக்காவில் மூன்று விதமான மனிதர்கள் இருப்பதாக எழுதுகிறார். உலகெங்கும் பொருத்தமான பாகுபாடு அது.
முதலாம் பிரிவில் பொதுஜனம். நீதி, நியாயத்துக்கு அடிபணிந்து செல்பவர்கள்.
இரண்டாவது பிரிவில் பலிகடாக்கள். ஒரு வார்த்தை அதிகமாகப் பேசினாலோ, மறதியாக சாலையில் எச்சில் துப்பினாலோ கூட தீவிரவாதியாகக் கருதப்படுபவர்.
மூன்றாவது பிரிவில் சர்வ வல்லமை பொருந்தியவர்களாக, சட்டத்துக்குப் புறம்பானவர்கள். உங்களின் தொலைபேசியை இவர்கள் ஒட்டுக் கேட்கலாம்; தவறில்லை. அந்தரங்கங்களை ஆராய்வதுடன் நிற்காமல் அவதூறு கிளப்பலாம்; அதுதான் அவர்களின் வேலை.
க்யூபாவில் முதலாம் பிரிவு கிடையாது என்பதுதான் வருத்தமான உண்மை. அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளர் நார்மன் மெயிலர் (Norman Mailer), ஆப்பிரிக்க-அமெரிக்கர்களின் சக்திவாய்ந்த தலைவர் ஜெஸி ஜாக்ஸன் (Jesse Jackson), சி.என்.என். ஆரம்பித்து வெற்றியடைந்த டெட் டர்னர் (Ted Turner), இருத்தலியத்தின் புகழ்பெற்ற படைப்பாளி ழான் பால் சார்தர் (Jean-Paul Sartre) என்று பல துறைகளில் அனுதாபிகளைக் கொண்டிருப்பது, ·பிடல் காஸ்ட்ரோவின் வரப்பிரசாதம்.
மே 27, 1966-இல் நூற்றி அறுபத்தியாறு க்யூபாவினரை, சொந்த நாட்டினரை, போராடும் பொதுமக்களை மட்டும் தனியே நிற்கவிட்டு, சுற்றியிருக்கும் க்யூபாவின் படை வீரர்கள் சராமாரியாக குண்டு மழை பொழிந்தார்கள். அதன்பின், ஒவ்வொருவரிடம் இருந்து மூன்றரை லிட்டர் இரத்தத்தை உறிஞ்சினார்கள். அதற்குப் பின், இந்த இரத்தங்கள் போரில் சிக்கியிருந்த வியட்னாமுக்கு, ஐம்பது அமெரிக்க வெள்ளிகளுக்கு விற்கப்பட்டது. வியட்னாமும் க்யூபாவும் கம்யூனிஸ்ட் நாடுகளாக இருந்தபோதும், கறுப்புச்சந்தை மதிப்பீட்டுக்கே க்யூபா போராளிகளின் இரத்தம் ஏற்றுமதியானது.
யாஸர் அரா·பத் இறந்தபிறகுதான் பாலஸ்தீனத்தில் மாற்றம் ஏற்பட்டது. சுதந்திரமாகத் தேர்தல் நடத்தப்பட்டு மக்களின் விருப்பங்களை பூர்த்தி செய்பவர்கள் ஆட்சிக்கு அமர்த்தப்படுகிறார்கள். ஆனால், க்யூபாவில் ·பிடலின் தம்பி ரவுலின் (Raul) பராக்கிரமம் இரும்புப்பிடியாக இருக்கும். அண்ணனைப் போன்ற கம்யூனிஸக் கொள்கைப் பற்று எதுவும் கொண்டிராமல் இருப்பது, ரவுல் காஸ்ட்ரோவின் தனித்தன்மை.
அண்ணன் – தம்பி ஆட்சியில் இருந்து தப்பித்துச் செல்லும் வழியில் கிட்டத்தட்ட 78,000 ‘பால்செரோஸ்’கள் இறந்திருக்கிறார்கள். இவர்களின் இறப்பில் அமெரிக்காவுக்கும் பெரும்பங்கு உண்டு. அமெரிக்க மண்ணைத் தொடும்வரை அஞ்சி, பாதிக் கடலில் பிடிபட்டால், க்யூபாவுக்கே திருப்பி அனுப்பப்படுகிறார்கள். அமெரிக்கக் கரை கண்ணுக்கு எட்டும் தூரத்தில் தெரியும்போது, ஜனவரியின் குளிர்நீரில் நீஞ்சி வருபவர்களும் பத்திரமாக க்யூபாவுக்கே தூக்கியடிக்கப்பட்டு, காஸ்ட்ரோ நிர்வாகத்தினால் சாகடிக்கப்படுகிறார்கள்.
காஸ்ட்ரோவைப் போல் sweeping statements விடாமல், ‘க்யூபன் ஆர்கைவ் திட்டம்’, ஒவ்வொரு கொலையையும் சரிபார்க்க பெரிதும் மெனக்கிடுகிறது. இந்த முறைப்படி ஒவ்வொரு மரணத்தையும் ஒன்றுக்கு மேற்பட்ட ஆதாரங்கள் நிரூபிக்க வேண்டும். புகைப்படங்களின் மூலமாகவோ, நேரடியாக நிகழ்வைப் பார்த்தவர்களாலோ, உடன் இருந்தவர்களாலோ உறுதி செய்யப்பட வேண்டும்.
இறக்கடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மட்டும் கருத்தில் கொண்டு, இந்த அமைப்பு செயல்படவில்லை. ‘லா கபானா’ கோட்டையில் 1959-இல் சே குவேராவினால் கொல்லப்பட்ட 151 நபர்கள் ஆகட்டும்; 94 சிறுவர்களின் கொலைகள் ஆகட்டும். ஒவ்வொரு மரணத்தையும் மனிதராகப் பார்த்து, அவர்களின் ஊர், பெயர், வாழ்க்கை அனைத்தும் பதிவு செய்யப்படுகிறது.
தடாலடியாக வெற்று சவடால் பேசும் காஸ்ட்ரோவின் கூற்றை மறுப்பதற்காக, சத்தமேயில்லாமல், அவர்களினால் கொல்லப்பட்ட 9,240 பேர்களின் கதைகளையும் நம் முன் வைத்துவிட்டு ஒதுங்கிவிடுகிறார்கள்.
தீவிரவாத அமைப்பின் வெற்றி அது உண்டாக்கும் பயத்தில் இருக்கிறது. புரட்சியாளர்களை நசுக்கும் ஆதிக்க அரசுகளின் வெற்றி, சொந்த சகோதரர்களின் இழப்பை பார்த்து மனம் வெதும்புவதில் இருக்கிறது.
காஸ்ட்ரோவுக்கு எதிராக குரல் எழுப்பிய சாண்டாமாரியா (Haydee Santamaria), மரியல் துறைமுக (Port of Mariel) வெளியேற்றத்தில் பாதிக்கப்பட்டவர்களை ஆஸ்பத்திரியில் பார்த்தபின், மனம் பாதிப்படைந்து தற்கொலை செய்து கொண்டதில், க்யூபாவின் அராஜக வெற்றி மிளிர்கிறது.
இவ்வளவு நிகழ்வுகள் வெளிப்படையாக இருந்தபோதிலும், உலக மத்தியில் புரட்சியாளர் பிம்பத்தை காஸ்ட்ரோ தக்கவைத்துள்ளார். நாற்பத்தியேழு ஆண்டுகளாக அரியணை சுகம் அனுபவித்தாலும் அரசியல் அரங்கில் அர்ஜெண்டைனாவின் ஜனாதிபதி போன்றோரிடையே ‘மனித உரிமைக் காவல’ராக கொண்டாடப்படுவதின் ரகசியம் தெரிந்தால் சொல்லுங்கள்.
இந்தக் கட்டுரைக்கு பாஸ்டன் க்ளோபும் வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் வெளிவந்த பத்திகளும் உதவியது.
தொடர்புள்ள வலையகம்: பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை கதை
உலகம் | க்யூபா | தமிழ்ப்பதிவுகள்











13 பதில்கள் இது வரை ↓
à®à®¿à®±à®¿à®²à¯ ஠லà¯à®à¯à®¸à¯ // பெப்ரவரி 1, 2006 இல் 3:43 பிற்பகல் |
பாத்து பாலா… நம்ம இடதுச்சாரீங்க கோச்சுகப் பொறாங்க.
நல்ல தகவல்கள். இவர் செய்வதைத்தான் போர் என்ற பெயரில் புஷ் செய்ராரே
à®à¯à®¤à®°à¯à®à®©à¯ // பெப்ரவரி 1, 2006 இல் 4:25 பிற்பகல் |
ஓ! இவ்வளவு நடந்திருக்கிறதா?
அமெரிக்காவிற்கு தண்ணி காட்டுவது ஒன்று போதுமே அவருக்கு புரட்சியாளர் என்ற பெயரை கொடுக்க!
Srikanth // பெப்ரவரி 1, 2006 இல் 7:28 பிற்பகல் |
முக்கியமான தகவல்கள், கட்டுரை; நன்றி.
அமெரிக்க எதிர்ப்பு என்ற ஒற்றைப்பார்வை கொண்டவர்களாலேயே காஸ்ட்ரோ பெரிதும் கொண்டாடப்பட்டு வருகிறார் – எதிரிக்கு எதிரி நண்பன் ஃபார்முலாப்படி (தற்போது ஹிந்து பத்திரிக்கை ஈரானைக் கொண்டாடுவதும் இவ்வகையில் சேர்த்தி தான்). நம்ம முற்போக்கு சிந்தனைவாதிகளின் கட்டுடைப்புகளெல்லாம் அவர்களின் வசதிப்படி தான். காஸ்ட்ரோ, சே குவெரா (இவரைப் பற்றிய ஸ்லேட் கட்டுரை நினைவிருக்கிறதா?) இவர்களெல்லாம் (I hate using this pilfered metaphor) புனிதப்பசுக்கள் தாம்.
Boston Bala // பெப்ரவரி 1, 2006 இல் 8:23 பிற்பகல் |
Muthu Tamil Weblogs … !
போலந்து நாட்டில் கம்யூனிஸம் வித்தியாசமாக நடைமுறையில் இயங்கியதாகப் படித்திருக்கிறேன். இ.பா.வின் ‘யேசுவின் தோழர்கள்’ படிக்கலாம்.
நேரடி அனுபவங்களைப் பகிர்ந்ததற்கு நன்றிகள். டாக்டர்களுக்கு சம்பளம் குறைவாகக் கொடுத்துவிட்டு, எண்ணெய்க்காக அவர்களை வெனிசுவேலாவிற்கு ஏற்றுமதி செய்வது என்று பல முரண்களை அடுக்கலாம். இவ்வளவு நாள் கம்யூனிஸம் இருந்துவிட்டு திடீரென்று ஒரு நாள் ஜனநாயகத்துக்கு மாறுவதும் க்யூபாவினருக்கு பெரும் சிரமத்தைத் தரும்.
காலைப் பிடித்து க்யூபா மன்றாடவேண்டும் என்று அமெரிக்காவுக்கு ஆசை; ருஷியா போல் ஆக்கிக் கொண்டு மக்களை சிரமப்படுத்தக் கூடாது என்று ஆட்சியாளருக்கு ஆசை…
விடாக்கண்டன் & கொடாக்கண்டன்
(பின்னூட்டக்காரர்களுக்கு __/\__
bsubra // அக்டோபர் 4, 2007 இல் 2:27 மு.பகல் |
கியூபாவின் மனிதாபிமானம் « சிறு�
bsubra // அக்டோபர் 4, 2007 இல் 2:27 மு.பகல் |
Ten Wealthy Rulers « Snap Judgment: “ஃபிடல் காஸ்ட்ரோ – ஜனாதிபதி – க்யூபா – $900 மில்லியன்”
bsubra // ஜனவரி 28, 2008 இல் 3:55 பிற்பகல் |
உலகின் புதிய கடவுள்: 373.அழித்தொழி�
கம்யூனிசத்துக்கு ஸ்டாலின்; கமர்ஷியலிசத்துக்கு சுகார்தோ « Snap Judgment // ஜனவரி 29, 2008 இல் 6:29 மு.பகல் |
[...] சரியான அக்கவுண்டிங் தாக்கலாகவில்லை. ஃபிடல் காஸ்ட்ரோவை விட அதிக அளவு சேர்… அகில லோகத்தின் தலை பத்து பணக்காரராக, [...]
bsubra // பெப்ரவரி 19, 2008 இல் 7:18 பிற்பகல் |
பிடல் காஸ்ட்ரோ பதவி விலகுவதாக அறிவிப்பு
பதவியில் இருந்து விலகுவதாக கியூப அதிபர் பிடல் காஸ்ட்ரோ அவர்கள் அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் புஷ் உட்பட பலர் இதனை வரவேற்றுள்ளார்கள்.
உலகில் கம்யூனிஸம் இறங்குமுகத்தில் இருந்தபோதிலும், கியூபா அதிலிருந்து தப்பித்துக்கொள்ள காரணமாக இருந்தவர் காஸ்ட்ரோ.
ஆனால், 2006 ஆம் ஆண்டில் அவர் குடல் சம்பந்தப்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டதை அடுத்து அரச பொறுப்பு, அவரது சகோதரரான, ராவுல் காஸ்ட்ரோவிடம் தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டது.
பிடல் காஸ்ட்ரோ அரசியல் அரங்கில் இருந்து வெளியேறுவதால், அங்கு கம்யூனிஸ ஆட்சிக்கு முடிவு வந்துவிடும் என்று அப்போது எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றந்தான் ஏற்பட்டது.
கியூபாவில் இருந்து வெளியேறி, மயாமியில் அஞ்ஞாதவாசத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் காஸ்ட்ரோவின் அறிவிப்பைக் கொண்டாடினாலும், அரசியல் மாற்றம் கேட்கும் ஆர்ப்பாட்டங்கள் எதுவும், ஹவானாவின் தெருக்களில் இடம்பெறவில்லை.
மாற்றுக் கருத்தாளர்களை ஆட்சியாளர்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள், அரசியல் எதிரிகள் சிலரை அவர்கள் இன்னமும் சிறையில் வைத்திருக்கிறார்கள் என்பவை இதற்கு ஒரு காரணமாக இருந்தாலும், மாற்றம் நடந்தால், மயாமியில் இருந்து பெருமளவு இடம்பெயர்ந்தவர்கள் அதீத எண்ணிக்கையில் திரும்பி வந்து குவிந்துவிடுவார்கள் என்று கியூபாவில் இருப்பவர்கள் கருதியதும் இதற்கு மற்றுமொரு முக்கிய காரணமாகும்.
ஆனால் கியூபாவில் ஒரு நிதானமான அரசியல் மாற்றம் தேவைப்படுகிறது என்றே எமது செய்தியாளர் கூறுகிறார். அத்துடன் இதனைச் செய்ய வேண்டியவராகவும் ராவுல்தான் இருக்கிறார் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
இராணுவத்தின் தலைவரான ராவுல், கடந்த ஒன்றரை வருடமாக அரசுக்கு விசுவாசமாக இராணுவத்தை பேணுவதிலும், வெற்றி கண்டுள்ளார்.
அவர் பதவியேற்றது முதல் இதுவரை பெரிய கொள்கை மாற்றங்கள் ஏதும் ஏற்படவில்லை.
கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சி எந்த விடயத்திலாவது பலமாக இருக்கிறது என்று எடுத்துக்கொண்டால், அதற்கு, அந்தக் கட்சியை மிகவும் செயற்திறன் உள்ளதாக்க, அதில் ராவுல் செய்த பல மறுசீரமைப்புகளும், பல ஊழல் அதிகாரிகளை அவர் நீக்கியதுந்தான் காரணம் என்று கூறப்படுகின்றது.
கியூப அரசியலைப் பொறுத்தவரை இன்னமும் தொடருகின்ற ஒரு சக்தியாகவே பிடல் காஸ்ட்ரோ இருக்கப்போகிறார்.
இவரிடம் இருந்து யார் பொறுப்புக்களை நிரந்தர அடிப்படையில் பெறப்போகிறார்கள் என்பது குறித்தே இனிமேல் அனைவரின் கவனமும் குவியப் போகிறது.
இந்த விடயம் தொடர்பாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கியூப நாடாளுமன்றம் வாக்கெடுப்பை நடத்தவுள்ளது.
ராவுல் காஸ்ட்ரோதான் வெற்றிபெறுவார் என்பதுபோன்று தென்படுகின்ற போதிலும், துணை அதிபரான கார்லோஸ் லாகேயும் அதற்கான வேட்பாளராக இருக்கிறார்.
கியூபப் புரட்சியின் போது 8வயதாக இருந்த கார்லோஸ், கியூப அரசியல்வாதிகளில் புதிய தலைமுறையைப் பிரதிநிதித்துவம் செய்கிறார்.
இருவருமே கட்சியின் மிகுந்த விசுவாசிகள். இவர்களால் முன்னெடுக்கப்படக் கூடிய எந்த மறுசீரமைப்பும் கம்யூனிஸ முறைமையை மேலோட்டமாகச் சீர் செய்வதாக இருக்குமே ஒழிய, அதனை ஒட்டுமொத்தமாக உடைத்துவிடுவதாக இருக்காது.
bsubra // பெப்ரவரி 25, 2008 இல் 10:53 பிற்பகல் |
Fidel’s Farewell: Comment: The New Yorker
இன்றைய உலகம் & சுதந்திரம் & தணிக்கை - சிந்தனை « Snap Judgment // பெப்ரவரி 26, 2008 இல் 4:14 மு.பகல் |
[...] வேண்டா‘ – முப்பத்திரண்டு வயதில் ஃபிடல் காஸ்ட்ரோ, க்யூபாவின் பிரதம மந்திரியானார். ஒரு [...]
கருத்து சுதந்திரமா - லிட்டருக்கு எத்தன ரூபா?? « Snap Judgment // மே 5, 2008 இல் 1:14 மு.பகல் |
[...] ரௌல் காஸ்ட்ரோ: கியூபா [...]
SnapJudge // ஜனவரி 28, 2009 இல் 3:30 பிற்பகல் |
Martha Roque: ‘The European Union treats Cuban opposition like dirt’ – the European magazine ~ Cafebabel: “Martha Beatriz Roque, 62, an economist by trade and resident of Havana, is one if the leaders of the political opposition in Cuba. The dissident is a member of the ‘Pro tempore secretariat of the agenda for transition’, a coalition which denounce attacks against freedom of speech, support human rights on the island and the arrival of democracy. She has been imprisoned twice by the ‘Castro’ regime. In April 2003 Roque was sentenced to twenty years imprisonment. However, she was freed due to pressure from outside of Cuba and her own ailing health. What are the politics of the European Union towards Cuba?”