மே 27, 2009 குமுதம் இதழில் இருந்து:
பரவசத்தில் மனுஷ்யபுத்திரன்
‘உன்னைப் போல் ஒருவன்’ படத்தின் முக்கியமான பாடலை நீங்கள்தான் எழுதவேண்டும் என்றார் கமல். எனக்கு இன்ப அதிர்ச்சி.
நான் பாடல் எழுதுவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. அதுவும் கமலஹாசன், மோகன்லால் என இரண்டு பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படத்தில் அறிமுகம் என்றால் எப்படி இருக்கும்?! அதிர்ஷ்டம் என்றுதான் தோன்றுகிறது.
ஷ்ருதி, அவர் பாடிப் பதிவு செய்த ஒரு சரணத்தைக் கொடுத்து, பாடலின் இயல்பைப் பற்றிக் கூறினார். ஹிந்தியில் இருந்த அந்த சரணத்தின் அர்த்தம் கூட எனக்குத் தெரியாது. ஆனால், ஷ்ருதி அதைப் பாடிய விதத்தில் வெளிப்படுத்திய ஆழ்ந்த துயரம் மனம் கசியச் செய்தது.
ஷ்ருதியின் அற்புதமான இசையில் கமல் அந்தப் பாடலைப் பாடியபோது எனது வரிகளைத் தாண்டி அது மனதை கரையச் செய்யும் வேறொரு கலைப்படைப்பாக மாறுவதைக் கண்டேன். என் கண்களில் நீர் தளும்பியது.