Tag Archives: Jihad

Leaderless Jihad – Terror Networks in the Twenty-First Century: Marc Sageman

இந்த வாரம் முழுக்க சில சுவாரசியமான சமீபத்திய புத்தக (விமர்சனங்கள்) குறித்த பதிவுகள்.

அஹ்மது ஓமர் சயீத் ஷேக் ரொம்ப சமத்து. லண்டன் மின்வண்டி தடத்துக்குள் தடுக்கி விழுந்த முகந்தெரியாத சகபயணியை, குருதிப்புனலில் ட்ரெயினுக்கு முன் கமல் குதிப்பது போல், பாய்ந்து, கை கொடுத்து உயிரைக் காப்பாற்றியவர்.

ஆனால், அவரே 1994- இல் பிணைக்கைதியை பிடித்து, கப்பம் கட்டாவிட்டால் தலையை சீவிடுவேன் என்று யூ ட்யூபியவர்.

மேலே குறிப்பிடப்பட்ட பிணை உயிர் பிழைத்துவிட்டார். ஏஞ்சலினா ஜோலி நாயகியாக நடித்து திரைப்படமும் ஆன டேனியல் பேர்ல் தப்பவில்லை. அவரை கடத்தியவர்களில் முக்கிய குற்றவாளியாக ஒமார் சையது இருக்கிறார்.

சக ஹிருதயருக்காக உயிரைப் பணயம் வைத்தவர்; மேற்கத்திய உலகில் குப்பை கொட்டியவர்; நடுத்தர வர்க்கத்தின் பிரதிநிதி. எங்கே, எப்படி, எவ்வாறு இஸ்லாமிய தீவிரவாதி ஆகிறார்?

‘சாது மிரண்டால்’ என்கிறார் மார்க் சேஜ்மென்.

கலகக்காரர்கள் எப்போதும் ஒத்துழையாமை என்று முழங்கி தலைமைக்குக் கட்டுப்பணியாமல் சிதறுண்டு போகிறார்கள். அகமதுவைப் போல் இலட்சிய நோக்கோடு சட்டத்திற்குக் கட்டுப்பட்டு புத்திசாலித்தனமாக செயல்படுபவர்கள்தான் தீவிரவாத இயக்கங்களுக்குத் தேவை.

  • பாலஸ்தீனம் பக்கம் முன்னாள் ஜனாதிபதி கார்ட்டர் எட்டிப்பார்த்தாலே ஜாதிபிரஷ்டம்;
  • இராக் மட்டுமல்ல… இரானும் நிர்மூலம் என்று அறைகூவும் இன்னாள் ஜனாதிபதி வேட்பாளர்கள்

இஸ்லாமுக்கு எதிராக உலகமே திரண்டிருக்கிறது என்று எண்ண காரணங்கள் ஸஹஸ் ர கோடி இருக்கிறது.

அல் க்வெய்தாவுக்கு உள்ளே நுழைவதற்கு புனிதப்பலி தேவைப்படுகிறது. தங்கள் உண்மையான நேசவெறியர்கள் என்றுணர்த்த காவு கொடுக்கிறார்கள். தலைவர் யாரென்று தெரியாது. ஆனால், அந்த தெரியாத அரூபத்துக்கு காணிக்கை தேவை.

191 பேரைக் கொன்ற ஸ்பெயினின் மத்ரித் குண்டுவெடிப்பு கூட வெற்று பலிபீடத்தில் உயிர்களை நிரப்பி, நிரூபித்துக் காட்டத்தான் அரங்கேறியிருக்கிறது.

இப்படி சுயம்புவாக, இரத்தபீஜனாக முளைக்கும் அமெச்சூர் அல் க்வெய்தாக்களை நிறுத்துவது எப்படி என்றும் கோடிட்டு காட்டியிருக்கிறார்.

  • பாலஸ்தீனியர்களுக்கு வளமும் செழிப்புமான வாழ்க்கையும் சுதந்திரமும்
  • இராக்கில் இருந்து அமெரிக்க படை விலகல்
  • தலை பத்து பயங்கரவாதிப் பட்டியல் வெளியிட்டு, ஹீரோக்களை உருவாகும் வேலையை அமெரிக்கா நிறுத்துதல்
  • ஏதாவது குறுக்கு சந்து ரவுடியைப் போட்டுத் தள்ளினால் கூட, கொன்டலீசா ரைஸ் ஆரம்பித்து அடிப்பொடி வரை ‘ஊடகவியலாளர் சந்திப்பு’ என்று பிரஸ்தாபித்து வெறுப்பை உமிழும் பிரச்சாரப் போக்குகளுக்கும் முற்றும் போடுதல்

இதெல்லாம் நடக்கிற காரியமா என்கிறார் டைம்ஸ் விமர்சகர்.

ஆனால், ‘ஏன்/எப்படி தீவிரவாதம் வளர்கிறது’ என்பதை புத்தகம் தெளிவாக முன்னிறுத்துகிறதாம்!

மேலும் சில பார்வைகள்:

1. David Ignatius – The Fading Jihadists – washingtonpost.com

2. Jihad and 21st Century Terrorism | The New America Foundation – MP3 பேச்சு & பவர்பாயின்ட் (வழி)

3. Foreign Affairs – The Myth of Grass-Roots Terrorism – Bruce Hoffman: “Leaderless Jihad: Terror Networks in the Twenty-first Century. Marc Sageman. University of Pennsylvania Press, 2008, 208 pp. $24.95.”