தேர்தல் செலவுகளைக் கணக்கில் கொண்டுவருவதே நம் ஊர்த் தேர்தலுக்கும் அமெரிக்கத் தேர்தலுக்குமுள்ள முக்கிய வித்தியாசங்களில் ஒன்று. அமெரிக்க பெடரல் தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, கடந்த 2004ஆம் தேர்தலுக்கு மொத்தமாக தேர்தல் பிரச்சாரக் குழுக்களால் வசூலிக்கப்பட்ட தொகை 800 மில்லியன் டாலர்கள், ஆனால் இந்த தேர்தலின் வசூல் ஏற்கனவே ஓரு பில்லியன் டாலரைத் தாண்டிவிட்டது.
மெக்கெய்ன் மற்றும் ஒபாமா இருவரின் தேர்தல் பிரசாரக் குழுக்களின் அக்டோபர் 15 வரையிலான அதிபர் தேர்தலுக்கான வசூலும் செலவுகளும்,
மொத்த வரவு | மொத்த செலவு | கையிருப்பு பணம் | கடன் நிலுவை | |
ஜான் மெக்கெய்ன் | $368,609,473 | $302,090,668 | $66,991,256 | $2,016,924 |
பராக் ஒபாமா | $521,869,310 | $498,894,922 | $65,762,929 | $2,302,457 |
( as per Federal Election Commision’s data :- http://www.fec.gov/finance/disclosure/srssea.shtml)
மேலும் FEC-யின் தகவலின்படி, இந்த தேர்தலில் ஜீஸஸ் பிலால் இஸ்லாம் முகம்மது (MUHAMMED, JESUS BILAL ISLAM ALLAH) என்ற வேட்பாளர் பெயரும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இங்கே சொடுக்கவும் http://herndon1.sdrdc.com/cgi-bin/cancomsrs/?_08+P80004070
இது தவிர நியூஜெர்சியைச் சேர்ந்த குடியரசுக் கட்சி உறுப்பினர் ராஜேஷ் சீனிவாச ராகவன் என்ற நம்ம ஊர்க்காரர் ஒருவரும் அமெரிக்க அதிபர் வேட்பாளருக்காக தனது பெயரைப் பதிவு செய்துத் தனது பணத்தில் $97 செலவு செய்த பின் (மொத்த செலவு $1097) அவர் தனது வேட்பாளர் பதிவையும் விலக்கியிருந்திருக்கிறார்!
http://herndon1.sdrdc.com/cgi-bin/cancomsrs/?_08+P80004336
FEC தவிர சில தன்னார்வக் குழுக்களும், தேர்தலுக்கான செலவினங்களைக் கண்காணித்து வருகின்றன, ஓபன்சீக்ரெட்ஸ்.காம் என்பதும் அதில் ஒரு குழு, அவர்களின் தளத்தில்
2008 அதிபர் தேர்தல் தொடர்பான பக்கம் http://www.opensecrets.org/pres08/index.php
2008 அதிபர் மற்றும் அவைத் தேர்தலுக்கான பக்கம் http://www.opensecrets.org/overview/index.php