Category Archives: Uncategorized

வெப்-உலகம்: நேர்காணல் – எஸ். ராமகிருஷ்ணன்

சந்திப்பு : ஆர். முத்துக்குமார்

கேள்வி : `விஷ்ணுபுரம்’ நாவல் குறித்த உங்கள் `contention’ என்ன?

எஸ். ரா : முதலில் அந்தத் தீமில் எனக்கு ஈடுபாடு இல்லை. காலம் என்பது சில பல வஸ்துக்களால் தீர்மானிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு காலமும் ஒரு `மனவளர்ச்சி’ கொண்டது. குறிப்பிட்ட பிரத்யேகமான பய உணர்ச்சி கொண்டது. ஒரு ஆதிகுடி குகைவாசிக்கு பகல் / இரவு என்பது தெரியாது. அவனுக்கு பொருள் தோன்றுகிறது / மறைகிறது அவ்வளவே. ஆனால் பகல் / இரவின் விளைவுதான் தோன்றுதல் மறைதல் என்பது எப்படி எழுதப்படுவது?

ஒரு கட்டத்தை எழுத்தில் நாவலாகக் கொண்டுவரும் போது அதன் `மனம்’ எப்படி புரியப்படவேண்டும் என்பதில்தான் பிரச்னை இருக்கிறது. இயற்கை மதங்கள் பல்வேறு பயங்களால் உருவானதே. தற்போது இருக்கும் மதங்கள் அதைப் `பயன்பாடா’ மாற்றிக் கொண்டது. இப்ப-நம்ம பாரம்பரியத்துல ஏகப்பட்ட பக்தி இலக்கியம்-பாசுரம், எல்லாம் இருக்கின்றன. ஆனால் நாயன்மார்களுக்கோ-ஆழ்வாக்ளுக்கோ அது ஒரு மார்க்கம், ஞான மார்க்கம், அல்லது ஏதோ ஒன்றை அடைவதற்கான ஒரு கருவி. ஆனால் நமக்கு அது இன்று ஒரு கவிதை மட்டுமே. திருப்பாவை பாடல்கள் இன்னிக்கு நாம கேட்டா அதன் கவிதைத் தன்மையை மட்டும்தான் எடுத்துக்குறோம் அவங்களோட வாழ்வியலுக்குள்ள நாம் போகமுடியாது.

`விஷ்ணுபுரம்’ நாவல் பழைய தத்துவம் / இலக்கியம் / வாழ்வு போன்றவைகளை நவீன காலக்கட்டப் பார்வையில் அணுகுகிறது. மேலும் பல இடங்கள் `சினிமாட்டிக்கா’ இருக்கு, இப்ப நாம யானைய பார்த்திருக்கோம், அதுக்கு மதம் பிடிக்கும்னு கேள்விப்பட்டுருக்கோம், தமிழ் இலக்கியத்துல உதயணன் கதையில் தான் யானை ஊரையே துவம்சம் செய்யும்னு கேள்விப்பட்டிருக்கோம், இவர் கதைல ஒரு யானை ஒரு ஊரையே காலி செய்கிறது. இது, சினிமாடிக் தனமாகும். நமக்கும் யானைக்குமான உறவுகள் அப்படி இல்லையே. மேலும் அவரால் `பவுத்தம்’ சம்பந்தப்பட்ட தீவிரத் தேட்டத்தை வைக்க முடியவில்லை. பவுத்த நபர்கள் வருகிறார்கள். பவுத்த தர்க்கம் இருக்கிறது. ஆனால் பவுத்த சாரம் இல்லை.

கேள்வி : அந்த நாவலின் முடிவில் வரும் `பிரளயம்’ என்ற `Apocalypse’ ஏற்புடையதா?

எஸ். ரா : மார்க்வெஸின் `நூறாண்டு காலத் தனிமை’ நாவலில் வரும் Apocalypse’ ஞாபகம் என்பதன் நாட்டியமாக இருக்கிறது. அந்தப்பகுதி நாவலையே வேறுவிதமாக வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. ஜெயமோகனின் நாவலில் அது ஒரு `condition’ என்பதாக வருகிறது. மேலும் நம் தத்துவ புராண மரபு பிறப்பு / இறப்பு , படைப்பு / அழிவு என்பதை தொடர்ச்சியானதாக சர்க்குலராகப் பார்க்கிறது. பிரம்மாவிற்கும் சிவனுக்கும் இதுதான் வேலை. இவர் கதையில் இது ஒரு `வீழ்ச்சி’ என்பதாக முன்வைக்கப்படுகிறது. `வீழ்ச்சி’ என்பது கிறித்தவ மத விவகாரம்.

கேள்வி : ஏன் இதுலயும் பிரளயத்துலேந்து `நீலி’ புறப்படுகிறாளே?

எஸ். ரா : கொஞ்சம் Tribes மரபு, கொஞ்சம் – ரிலிஜன் – மரபு இது எல்லாத்தையும் அப்படிஅப்படியே அடுத்தடுத்து வைக்கிறார். ஆனா `நீலி’ என்பது அவரது Nostalgia சம்பந்தப்பட்ட விஷயம். அவருக்கு `உக்கிரமான பெண்’ என்பது ஏதோ ஒரு விதத்தில் தேவைப்படுகிறது. அவருக்கு `உக்கிரம்’ மேல் ஒரு obsession இருக்கு.

கேள்வி : `விஷ்ணுபுரம்’ நாவலை ஒரு அழகியல் வேலைப்பாடாக ஏற்கிறீர்களா?

எஸ். ரா : நாவல் என்ற மிகப்பெரிய வகையினத்தில் `விஷ்ணுபுரம்’ நிச்சயமாக ஒரு முக்கியமான வேலைப்பாடுதான். ஆனால் ஒரு மரபார்ந்த மனம்தான் அதில் ஆப்ரேட் ஆகிறது. ஆனால் நடை மரபு ரீதியானதாக இல்லை.

கேள்வி : ஜெயமோகனின் `பின்தொடரும் நிழலின் குரல்’ நாவலின் கம்யூனிச எதிர்ப்பு களம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

எஸ். ரா : நமக்கு அறிமுகப்படுத்தப்பட்ட `கம்யூனிசம்’ வைத்துதான் நாம் அதை அறிந்து கொண்டுள்ளோம் :

மேலும் படிக்க —> வெப்-உலகம்

Australia Day & Republic Day

குடியரசு தினம் (படிக்க: Republic « Tamil News). பாராட்டினால் இந்திய ராணுவத்தின் நேனோமீட்டர் குறைபாடுகளை கிகாமீட்டராக முன்னிறுத்தி, மகிழ்ச்சியான நிகழ்வை இகழ்ந்து தள்ளுவார்களோ (படிக்க: Military « Tamil News) என்னும் காபந்து.

எனவே, இனிய அவுஸ்திரேலியா தின வாழ்த்துகள்.

‘No Worries’ என்பது ஆஸ்திரேலிய தாரக மந்திரம். தமிழில் ரெஹ்மான் பாட்டுடைத்தது போல் ‘முஸ்தஃபா, முஸ்தஃபா டோண்ட் வொர்ரி முஸ்தஃபா‘ என்று குருபாயாக (Guru – Digest & My Views : ஈ – தமிழ்) சாதிக்கச் சொல்லி உற்சாகமூட்டும் தினம்.

இரு நாடுகளிலும் மகிழ்ச்சியும் களியாட்டமும், அவற்றை மறுக்கும் சுதந்திர கருத்தோட்டமும் தொடரட்டும்.


| | |

Fraunhofer lines

சிறில் அலெக்ஸின் (பார்க்க: தேன்: தீபாவளி ஜப்பானியத் திருவிழாவா? அல்லது கூகிள் வீடியோ) பதிவைப் பார்த்தவுடன் அஞ்சலில் கிடைத்த கிண்டல் (சிற்சில கூட்டல் கழித்தலுடன்)

 1. தீபாவளி ஜப்பானியர் திருவிழா என்கிறார் சிறில்? பார்க்க : கில்லி – Gilli
 2. Diwali, Deepavali, Deepavalli, Dance, Japan, Performance, Video, Watch Stage, Show, Kids : Snap Judgement
 3. ஜப்பானியர்கள் – ஆர்யர்களா? திராவிடர்களா? : விடாது கருப்பு
 4. ஜப்பானியர்கள் – பிராமணர்களே : விட்டுது சிகப்பு
 5. எனது ஜேப்பனீஸ் நண்பன் : ‘ஒரிஜினல்’ டோண்டு
 6. எனது ஜேப் ‘பன்னீ’ ஸ் நண்பன் : போலி டோண்டு
 7. நோக்கியா, சாம்சங்கில் வேலைக்கு ஆள் வேண்டும். தலைப்பில் தமிழ்மணம் என்று இடவும். : செந்தழல் ரவி
 8. ரஜினி படங்கள் மட்டும் ஜப்பானில் ஓடுவது எப்படி? : மு. கார்த்திகேயன்
 9. ஜப்பானின் இந்திய தீபாவளி அமெரிக்காவால் சின்னாபின்னப்படும் : உள்ளும் புறமும் வெங்கட்
 10. ஷா ல லா – Gilli – Lyrics : ப்ரியமுடன் கேபி
 11. ஜப்பானிய வீடியோவின் ஃபோட்டோஷாப் ரகசியம் – கழுகார் தகவல் : IdlyVadai – இட்லிவடை
 12. நேயர் விருப்பம் சர்வே – கில்லியா? டோக்யோ-வா?.. வந்து குத்துங்க சாமிகளா!! – Surveyசன் -ஆக்கியவன் அல்ல அளப்பவன். Free Surveys!

கொஞ்ச நாள் முன்னாடி கண்ட பதிவு: பினாத்தல்கள்: கனவில் வந்த தமிழ்மணம் (10 Jan 2007)

தலைப்புக்கும் பதிவுக்கும் பொருத்தம் அறியாதவர்கள் இங்கு (Fraunhofer lines: Definition and Much More from Answers.com) செல்லவும்.


| |

Plus Two Tamil & Current Thamil

இன்றைய தினமணியில் பிளஸ் டூ தமிழ் பொதுத் தேர்வுக்கான மாதிரி (Dinamani.com – TamilNadu Page) வினாக்களை கேட்டிருக்கிறார்கள்.

பதில் தெரிகிறதா?

 1. யாருமில்லை தானே கள்வன்
  தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
  (கூகிள் பிட் அடிக்கவும்)
  • பாடல் இடம் பெற்ற நூல் எது?
  • இப்பாடலின் ஆசிரியர் யார்?
  • ‘கள்வன்’ யார்?
  • இப்பாடல் யார் யாருக்குச் சொன்னது?
 2. நீயடா வெதிர் நிற்பதோ மதம் பொழ கரிமேல்
  நாயடா வினை நடத்துமோ?
  (கூகிள் பிட் அடிக்க முடியாது)
  • இப்பாடல் வரி இடம் பெற்ற நூல் எது?
  • இப்பாடலின் ஆசிரியர் யார்?
  • யார் யாரிடம் கூறியது?
  • ‘கரி’ என்பதன் பொருள் யாது?

 3. ‘காலத்தினால்’ எனத் தொடங்கும் குறளையும், ‘செயல்’ என முடியும் குறளையும் அடிபிறழாமல் எழுதுக.
 4. உறுப்பிலக்கணம் தருக.
  • வேண்டேன்
  • களையாத
  • கேட்டி
  • ஏகுவாய்
  • பொறுத்தல்
  • சொல்லுமின்
 5. இலக்கணக் குறிப்பு எழுதுக.
  • கயன்முன்
  • திரைகவுள்
  • கூர்ம்படை
  • படூஉம்
  • சிறைப்பறவை
  • வல் விரைந்து
 6. புணர்ச்சி விதி தருக.
  • வினைத்திட்பம்
  • பெருந்தேர்
  • வீறெய்தி
  • நிறைஉடைமை
  • இற்பிறப்பு
  • சின்னாள்
 7. பொதுவியல் திணை – சான்று தந்து விளக்குக.
 8. தற்குறிப்பேற்ற அணியை விளக்குக.

நிறுவனத்துக்கு கணினி வேலை நேர்காணலுக்குத் தேர்வாகுவதற்கு, முதல் படியாக பரீட்சை வைப்பார்கள். நான்கைந்து வருடங்களுக்கு ஒரு முறை சி#, ஜாவா, டேட்டாபேஸ் தேர்வுகளை எழுதி 70+ மதிப்பெண் எடுத்தால்தான் ஸ்திரமான வேலையில் நிரலி தட்ட முடியும்.

நல்ல வேளை.

வலைப்பதிவு நுழைவதற்கு இலக்கண வினாக்கள் படிக்கல்லாக இல்லை. ‘நான் படிக்கிற காலத்தில்’ என்று பெற்றோர் ஆரம்பிப்பது போல் அந்தக்கால மதிப்பெண்ணை வைத்தே காலத்தை ஓட்ட முடிகிறது.

விடை தெரியாதவர்களுக்காக மாற்றுத் வினாத்தாள்:

 1. தேவதை புன்னகை செய்தால்
  சிறு தேய்பிறை முழு நிலவாகும்
  • பாடல் இடம் பெற்ற படம் எது?
  • இப்பாடலின் ஆசிரியர் யார்?
  • ‘தேய்பிறை’ எது?
  • இப்பாடல் யார் யாருக்குச் சொன்னது?
 2. கடல் கொண்ட நதியோ முகம்தன்னை இழக்கும்
  நான் உன்னில் கலந்தால் புதுமுகம் கிடைக்கும்
  • இப்பாடல் வரி இடம் பெற்ற படம் எது?
  • இப்பாடலின் ஆசிரியர் யார்?
  • யார் யாரிடம் கூறியது?
  • ‘புதுமுகம்’ என்பதன் பொருள் யாது?

 3. ‘விடுகதையா’ எனத் தொடங்கும் துண்டுப்பாடலையும், ‘கனாக்கண்டேன்’ என முடியும் பாடலையும் அடிபிறழாமல் எழுதுக.

 4. உறுப்பிலக்கணம் தருக.
  • ரஜினி விரல்
  • விஜய் காலணி
  • கமல் மார்பு
  • அஜீத் தல
  • கவுண்டமணி கால்

 5. புணர்ச்சி விதி தருக.
  • வில்லன் – நாயகனின் தங்கை
  • வில்லன் – கதாநாயகி
  • கதாநாயகன் – கதாநாயகி
  • கதாநாயகன் – கவர்ச்சி நாயகி
  • இராம நாராயணன் – பிராணி
 6. ஹீரோயின் சப்ஜெக்ட் – சான்று தந்து விளக்குக.
 7. அரசியல் தமிழை விளக்குக.


| | |

Celebrities Pokkiri Pongal

நான் ஒரு முறை முடிவெடுத்துட்டா என் பேச்சை நானே கேக்க மாட்டேன்!

இது ‘போக்கிரி‘ வசனம்.

 1. சோனியா காந்தி: நான் ஒரு முறை முடிவெடுத்துட்டா மன்மோகன் பேச்சை நானே கேக்க மாட்டேன்!
 2. ஷாரூக்கான்: நான் ஒரு முறை நிகழ்ச்சி நடத்திட்டா, என் KBC-ஐ நானே பார்க்க மாட்டேன்.
 3. ஷில்பா ஷெட்டி: நான் ஒரு முறை திட்டு வாங்கிட்டா, என் காசை நானே எண்ண மாட்டேன்.
 4. ஐஸ்வர்யா ராய்: நான் ஒரு முறை நடிக்க ஆரம்பிச்சுட்டா, என் படத்தை நானே பார்ப்பேன்.
 5. கங்குலி: நான் ஒரு முறை ஆடி அடிச்சுட்டா, என் மாட்ச் ஃபிக்சிங்க நானே கண்டுக்க மாட்டேன்.
 6. அரசியல்வாதி: நான் ஒரு முறை மசோதாவை நிறைவேற்றிட்டா, என் சட்டத்தை நானே கடைபிடிக்க மாட்டேன்.
 7. சானியா மிர்சா: நான் ஒரு பந்தை போட்டுட்டா, என் ரிடர்னை நானே திரும்ப எடுக்க மாட்டேன்.
 8. தீவிரவாதி: நான் ஒரு முறை குண்டு போட தொடங்கிட்டா, என் வாழ்வை நானே மதிக்க மாட்டேன்.
 9. வலைப்பதிவர்: நான் ஒரு முறை திட்ட ஆரம்பிச்சுட்டா, என் பதிவை நானே நிறுத்த மாட்டேன்.


| |

Images, Imaginations


பார்த்ததும் கிடைத்த பாடல் வரிகள்… (படம் என்ன தெரிகிறதா?)

 • வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்
 • கண்ணிமைக்கும் வேளை; வானவில்லின் வாழ்க்கை
 • உனக்கென்ன வேண்டும்? உணர்ந்திடு தம்பி

  நியூ யார்க்கர் கொடுத்த தலைப்பு Good shrink; Bad shrink.

  எனக்குத் தோன்றியது சில…

 • குரு x ஜெண்டில்மேன்
 • எதிரணி x ஆளுங்கட்சி
 • விமர்சகர் x களப்பணியாளர்

  வேறு என்ன உங்களுக்குத் தோன்றுகிறது?


  பேட்ட ராப்பில் வரும், ‘உன் சான்ஸ்… உன் கையில் எல்லாமே இருக்குதடா


  | |

 • African-American music performers harassed by Canada

  கனடா குடிபுகல் அதிகாரிகளின் இனப்பாகுபாட்டு விழுமியம்

  1. TheStar.com – artsentertainment – Not alone in border hassles: Rapper

  2. globeandmail.com: Black stars harassed, suit alleges

  3. Bloomberg.com: Canada

  கனடாவை நிறப்பிரிகை இல்லாத நாடாக சொல்லலாம்?

  வெற்றி பெறுவதற்காக வெறி கொண்ட வார்த்தைகளை உதிர்த்ததாக இங்கிலாந்தில் இனவெறி குற்றச்சாட்டு. (படிக்க: கில்லி – Gilli » Big Brother, Shilpa Shetty & Racism). அதைத் தொடர்ந்து கனடாவைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த இந்த வழக்கு ஜெரோம் (Jerome Almon) மூலம் தொடுக்கப்பட்டிருக்கிறது.

  கறுப்பராக இருந்ததால் ‘சிறப்பு கவனிப்பு’ கிடைத்திருக்கிறது என்கிறார். ராப் பாடகராக இருந்ததினால், கனடாவுக்குள் நுழைவதற்கான ஆவணங்கள் சரிபார்த்தல் முதல் கார் பரிசோதனை வரை நீண்டு, நெடிய காத்திருத்தலாக மாறியிருக்கிறது. இனவெறி சொற்றொடர்களுக்கும் ஆளாகியிருக்கிறார்.

  டொரண்டோ, வான்கூவர் நகரங்களில் தன்னுடைய இசை நிகழ்ச்சிக்கு தாமதமாக செல்ல வகைசெய்யும்விதமாக இவை அரங்கேறியிருக்கிறது. கருப்பின ராப் நட்சத்திரங்கள் கனடாவுக்குள் நுழையத் தடை விதிக்கும் சதித்திட்டத்தின் ஓர் அங்கமாகவே இந்த பாகுபடுத்தலையும் அவதானிக்கிறார்.

  முந்தைய சம்பவங்கள் சில:

 • டிசம்பர் 2005 – வன்முறையை ஆராதிப்பதாக 50 செண்ட்ஸ், கனடாவுக்குள் நுழையத் தடைவிதிக்க முயற்சி.
 • மார்ச் 2003 – ஏற்கனவே அனுமதி மறுக்கப்பட்ட, DMX-இற்கு மீண்டும் கனடா நிராகரிப்பு. இசை நிகழ்ச்சியில் பாடமுடியாமல் ரத்து செய்கிறார்.
 • ஏப்ரல் 2001 – மாட்லி க்ரூவின் முன்னாள் அங்கத்தினர், டாமி லீ-யினால் இசை வாரக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்கு, கனடாவினுள் நுழைய அனுமதி கிடைக்கவில்லை.

  சட்டத்தின் துணையுடன் அதிகாரிகளின் மனக்கற்பனைகள் மாற முயற்சி எடுக்கும் வேளையில், தன்னுடைய மனசஞ்சலத்துக்கு ஈடாக $900 மில்லியன் தொகை கேட்டிருக்கிறார்.


  | | | | | |