Category Archives: Thinathanthi

ஒரு கூடை ரீமேக்

சிலகம்மா செப்பந்தி‘ என்ற தெலுங்குப் படத்தில் ரஜினியும், ஸ்ரீபிரியாவும் ஜோடியாக நடித்தனர். இது ‘அடிமைகள்‘ என்ற மலையாளப் படத்தின் ரீமேக். மலையாளத்தில் சாரதா நடித்த கேரக்டரில் தெலுங்கில் ஸ்ரீபிரியா நடித்திருந்தார். கே.பாலசந்தர் மேற்பார்வையில் ஈரங்கி ஷர்மா டைரக்ட் செய்திருந்தார்.

இந்த தெலுங்குப் படமும் வெற்றி பெற்றது. இதையே தமிழில் கே.பாலசந்தர் உருவாக்கினார். தெலுங்கில் ரஜினி நடித்த கேரக்டரில் தமிழில் கமலஹாசனும், ஸ்ரீபிரியா நடித்த கேரக்டரில் ஷோபாவும் நடித்தார்கள். தமிழிலும் படம் வெற்றி பெற்றது.

எந்தப் படம்?

கொசுறு:

இந்தியில் “ராம் கு கா லட்சுமண்” என்ற பெயரில் ரந்திர்கபூர், சத்ருகன் சின்கா, ரேகா நடித்த படத்தின் தமிழ்ப் பதிப்பு வி.சி.குகநாதன் டைரக்ட் செய்த ‘மாங்குடி மைனர்‘. விஜயகுமார்தான் ‘மாங்குடி மைனர்’! இந்தியில் சத்ருகன் சின்கா ஏற்றிருந்த வேடத்தை தமிழில் ரஜினி ஏற்க, ரேகா கேரக்டரில் ஸ்ரீபிரியா நடித்தார்.

சிவாஜியினால் வாய்ப்பை இழந்த நடிகை

தமிழில் மட்டும் கிட்டத்தட்ட 150 படங்கள். சிவாஜியுடன் 20 படங்கள், ஜெய்சங்கருடன் 20 படங்கள், கமலுடன் 32 படங்கள், ரஜினியுடன் 30 படங்கள் என்று முன்னணி நட்சத்திரங்களின் நடித்தவர்.

ஜெமினி, ஏவி.எம். போன்ற பெரிய சினிமா நிறுவனங்களில் ஆஸ்தான நடனக் கலைஞர் என்ற அந்தஸ்துடன் இருந்த பிரபல நடனமேதை கே.என்.தண்டாயுதபாணி பிள்ளை, இவரின் பெரியப்பா. எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பராகவும் தண்டாயுதபாணி இருந்தார். நடன அமைப்பாளர்கள் சங்கத்தில் இப்போதும் கே.என்.தண்டாயுதபாணி பிள்ளையின் படம் இருக்கிறது.

பெரியப்பாவின் நடனப்பின்னணியில் இவரின் அப்பா பக்கிரிசாமியும் நடனக் கலைஞர். அம்மா கிரிஜாவும் நடனத்தில் தேர்ந்தவர்.

ஜெமினி தயாரித்த ‘மூன்று பிள்ளைகள்’ படத்தில் பக்கிரிசாமி நடன இயக்குனராக இருந்து, கிரிஜாவை நடனமாடச் செய்திருக்கிறார்.

டைரக்டர் பி.மாத வன் இயக்கிய ‘முருகன் காட்டிய வழி’ என்ற படம் மூலம்தான் சினிமாவில் அறிமுகமானார். நிஜப்பெயர் அலமேலு. சினிமாவுக்காக டைரக்டர் பி.மாதவன் சூட்டிய பெயர் என்ன?

வரலாற்றுச் சுவடுகள் : திரைப்பட வரலாறு (716)

Distributor & Operator becomes the Editor & Director

மதுரையில் எங்கள் வினியோகஸ்தர் நாகராஜ ராஜா என்பவர் அங்கே சினிப்ரியா தியேட்டரில் அந்தப் படத்தை, இடைவேளைக்கு பிந்தைய பகுதியை முன்னதாகவும், முந்தைய பகுதியை பின்னாலும் போட்டால் நன்றாக இருக்கும் போலிருக்கிறதே என்று கருதி அப்படியே மாற்றிப்போட ஏற்பாடு செய்தார். ஆனால் இப்படி மாற்றிப் போட்டது ரசிகர்கள் யாருக்கும் தெரியாது. அப்படிப்போட்டபோது அது ஒரிஜினல் படத்தைவிட அதிகமாக ரசிக்கப்பட்டதாகத் தெரிந்தது.

எந்தப் படம்?

Continue reading

சிவாஜி பாட்டை பாராட்டினார் இளையராஜா

பஞ்சு அருணாச்சலம் சார் “கவரிமான்” என்ற படத்தில் நடிக்க சிவாஜியை ஒப்பந்தம் செய்தார். நடிகர் திலகத்தின் பாத்திரப் படைப்பை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. (மனைவி சோரம் போகிற காட்சியை பார்க்கும் கணவனின் கேரக்டர்)

என் இசையில் முதன் முதலில் ஒரு தியாகராஜ கீர்த்தனை இடம் பெற்றது இந்தப் படத்தில்தான். “ப்ரோவ பாரமா?” என்ற கீர்த்தனையை ஜேசுதாஸ் பாட, டி.வி.கிருஷ்ணன் அவர்களின் வயலினும், டி.வி.கோபாலகிருஷ்ணனின் மிருதங்கமும் இணைந்தன.

சிவாஜி இந்தப் பாட்டுக்கு வாயசைத்ததை கண்டு வியந்து போனேன்.

ஆரம்பத்தில் ஜேசுதாஸ் ராகம்பாடி, தாளம் ஏதும் இல்லாமல் திடீரென்று `ப்ரோவபாரமா’ என்று தொடங்குமாறு பதிவு ஆகியிருந்தது.

ராகம்பாடி, `ப்ரோவ பாரமா’ தொடங்குவதற்கு இடையில் தாளத்தில் ஏதாவது வாசித்திருந்தால் நடிப்பவர்களுக்கு பாடல் தொடங்கும் இடம் சரியாகத் தெரிந்து வாயசைக்கலாம்.

ராகம்பாட, வெறும் தம்புரா மட்டும் போய்க்கொண்டிருக்க, அது எவ்வளவு நேரம் போகிறது என்று கண்டுபிடித்து, பாடல் ஜேசுதாஸ் குரலில் வரும் அந்த நொடியை எப்படியோ கண்டுபிடித்து சரியாக வாயசைத்தார்.

இதைப் பாராட்டி, அண்ணன் சிவாஜியிடம், “எப்படிச் செய்கிறீர்கள்?” என்று கேட்டேன்.

“என்னை என்னடா நினைச்சிட்டே? சும்மா ஏனோதானோன்னு சினிமாவுக்கு வந்தவன்னு நினைச்சியா? இதெல்லாம் முடியாட்டா ஏண்டா ஒருத்தன் நடிகனா இருக்கணும்?” என்று கேட்டார் சிவாஜி.

“நடிகர் திலகம்” என்று சும்மாவா பட்டம் கொடுத்தார்கள்?

நன்றி: தினத்தந்தி :: திரைப்பட வரலாறு 704 சிவாஜிகணேசனுக்கு இளையராஜா புகழாரம் (வரலாற்றுச் சுவடுகள்)