Category Archives: Sivaji

கமல்ஹாசன் குறித்து சாரு நிவேதிதா – தப்புத் தாளங்கள்

தமிழர்கள் கமலை அந்நியனாகவே பார்க்கிறார்கள். அவர்களுக்கு அவர் ஒரு elite. அவ்வளவுதான். ஆளவந்தான் படத்தில் ‘he seems to be a necrophelic’ என்று ஒரு வசனம் வரும். புரிகிறதா?

மற்றொரு சம்பவம்: ஆளவந்தான் வந்த சமயம். என் நண்பரும் நடிகருமான ப்ரதாப் போத்தனும் நானும் அந்தப் படத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். படத்தைக் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்தார் ப்ரதாப்.

‘இதையெல்லாம் கமலிடம் சொன்னிர்களா?’ என்று கேட்டேன்.

‘நான் என்ன ஃபீல்டில் இருக்கிறதா, வேண்டாமா?’ என்றார் ப்ரதாப்.

‘பிறகு என்ன சொன்னீர்கள்?’

‘க்ளாஸிக் என்று சொன்னேன். “ம்… உங்களுக்கும் எனக்கும் தெரிகிறது. மக்களுக்குத் தெரியவில்லையே?” என்றார் கமல்’.

இதிலிருந்து தெரிவது என்னவென்றால், கமலிடம் யாருமே அவரது படங்களைப் பற்றி பேச முடியாது; பேசியதும் இல்லை என்பதுதான். கமலிடம் பேச்சு இருக்கிறது; செவிகள் இல்லை. எந்தளவு கமல் தனிமைப் பட்டுப் போயிருக்கிறார் என்பதற்கு இச்சம்பவம் ஒரு உதாரணம்.

முழுவதும் படிக்க: சிவாஜிக்கு வெளியே – சாரு ஆன்லைன்

சிவாஜி பாட்டை பாராட்டினார் இளையராஜா

பஞ்சு அருணாச்சலம் சார் “கவரிமான்” என்ற படத்தில் நடிக்க சிவாஜியை ஒப்பந்தம் செய்தார். நடிகர் திலகத்தின் பாத்திரப் படைப்பை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. (மனைவி சோரம் போகிற காட்சியை பார்க்கும் கணவனின் கேரக்டர்)

என் இசையில் முதன் முதலில் ஒரு தியாகராஜ கீர்த்தனை இடம் பெற்றது இந்தப் படத்தில்தான். “ப்ரோவ பாரமா?” என்ற கீர்த்தனையை ஜேசுதாஸ் பாட, டி.வி.கிருஷ்ணன் அவர்களின் வயலினும், டி.வி.கோபாலகிருஷ்ணனின் மிருதங்கமும் இணைந்தன.

சிவாஜி இந்தப் பாட்டுக்கு வாயசைத்ததை கண்டு வியந்து போனேன்.

ஆரம்பத்தில் ஜேசுதாஸ் ராகம்பாடி, தாளம் ஏதும் இல்லாமல் திடீரென்று `ப்ரோவபாரமா’ என்று தொடங்குமாறு பதிவு ஆகியிருந்தது.

ராகம்பாடி, `ப்ரோவ பாரமா’ தொடங்குவதற்கு இடையில் தாளத்தில் ஏதாவது வாசித்திருந்தால் நடிப்பவர்களுக்கு பாடல் தொடங்கும் இடம் சரியாகத் தெரிந்து வாயசைக்கலாம்.

ராகம்பாட, வெறும் தம்புரா மட்டும் போய்க்கொண்டிருக்க, அது எவ்வளவு நேரம் போகிறது என்று கண்டுபிடித்து, பாடல் ஜேசுதாஸ் குரலில் வரும் அந்த நொடியை எப்படியோ கண்டுபிடித்து சரியாக வாயசைத்தார்.

இதைப் பாராட்டி, அண்ணன் சிவாஜியிடம், “எப்படிச் செய்கிறீர்கள்?” என்று கேட்டேன்.

“என்னை என்னடா நினைச்சிட்டே? சும்மா ஏனோதானோன்னு சினிமாவுக்கு வந்தவன்னு நினைச்சியா? இதெல்லாம் முடியாட்டா ஏண்டா ஒருத்தன் நடிகனா இருக்கணும்?” என்று கேட்டார் சிவாஜி.

“நடிகர் திலகம்” என்று சும்மாவா பட்டம் கொடுத்தார்கள்?

நன்றி: தினத்தந்தி :: திரைப்பட வரலாறு 704 சிவாஜிகணேசனுக்கு இளையராஜா புகழாரம் (வரலாற்றுச் சுவடுகள்)

’00s Tamil Movies with 50’s Cliches – Sannasi

உலகத் திரைப்படம் பார்ப்பவனெல்லாம் ஏதோ தோஷிரோ மிஃபுனேவும் லிவ் உல்மனும் திரையில் வந்ததும் பேப்பர் கிழித்து பறக்கவிடும் கான்ஃபெட்டி கந்தசாமிகள் மாதிரியான உங்களது இதுபோன்ற கருத்துக்களை இதற்கு முன்பும் பார்த்த நினைவு. உலகத் திரைப்படங்களிலும் குப்பைகளைத் தாண்டித்தான் நல்ல படங்கள் என்று முடிவெடுக்கவேண்டியிருக்கிறது.

Continue reading

Karaintha Nizhalgal – Asokamithiran (1)

அவர் பேச்சு முடிந்தபிறகு, காலி கப்-சாஸர்கள், தட்டுகள் அகற்றப்பட்ட பிறகு  விருந்தினர் பார்ப்பதற்காகவென்று முந்தைய ஆண்டு ஜனாதிபதி வெள்ளிப் பதக்கம் பெற்று, சினிமா விசிறிகள் சங்கம் (ரிஜிஸ்டர்), தலை சிறந்த படம் என்று நற்சான்றிதழ் வழங்கிய தமிழ்ப்படம் ஆரம்பித்தது.

…..

ராம்சிங் அந்தப் பாராட்டை அப்படியே அங்கீகரித்துக் கொண்டான்.

‘சோக அம்சம்தான் கொஞ்சம் அதிகமாக இருந்தது’ என்று செக்காரர் சேர்த்துக் கொண்டார்.

இப்போது ராம்சிங்குக்கும் சிறிது சந்தேகம் வந்தது. ஜகன்னாத்ராவ் கண்களில் ஓரளவு தெரியுமளவுக்கு விஷமம் தென்பட்டது. அந்தப் படத்தில் ஆரம்பத்தில் நன்றாகப் பாடி விளையாடிக் கொண்டிருந்த வாலிபக் கதாநாயகனுக்குக் கைபோய், கல்யாணமான பிறகு தாய், சொத்து, பிறந்த குழந்தை இவை எல்லாம் போய் குருடனாகவும் ஆகிவிடுகிறான்.

‘வாழ்க்கையே சோகம்தானே’, என்று ராம்சிங் சொன்னான்.

‘எங்களுக்கு (நாஜி) ஆக்கிரமிப்பு இருந்தது. லட்சக்கணக்கான பேர் நசித்துப் போனார்கள். அப்படியும் எங்கள் கதைகளை விட உங்களுடையதில் சோகம் அதிகமாகத்தான் இருக்கிறது.’

திரவியம் ஏனிந்தப் பேச்சைத் தொடங்கினோம் என்ற சங்கடம் தெரிய நின்றுகொண்டிருந்தார்.

செக்காரர் இறுதியாக ஒன்று கூறி முடித்தார். ‘நானும் மூன்று இந்தியப் படங்களைப் பார்த்து விட்டேன். உங்கள் கதாநாயகர்களுக்கு பெண்மை சிறிது அதிகமாக இருப்பதாகப் பட்டது. அதிலும் உங்கள் படத்து நடிகர் எல்லாவற்றுக்கும் அழுது விடுகிறார்.’

எல்லோரும் லேசாகச் சிரித்தார்கள். உலகத்திலேயே தலைசிறந்த நடிகர் என்று நாட்டில் ஒரு சிலரால் கொண்டாடப்படும் அந்த நடிகர் வலுவான சுவாசம் பெற்றவர்.

நன்றி: கரைந்த நிழல்கள் – அசோகமித்திரன் 

சிவாஜி: பெயர் வைத்ததில் பின்னுள்ள மதவாத அரசியல்

நன்றி: உணர்வு வார இதழ் 11:42

Sivaji name controversy islam Tamil religion fans Page 10

Unarvu Sivaji name controversy Muslim in Tamil Nadu - Hindutva

அதிரவில்லை!

குருஜியின் அரசியல் வம்பு தும்பு…

From Dinamani

“அதிருதில்ல…?”

“எங்கே சிஷ்யா அதிருது, பட்டணத்தில் அதுவும் பெரிய மல்ட்டிப்பிளக்சில்தான் அதிருதே தவிர மற்ற இடங்களிலெல்லாம் காற்றல்லவா அடிக்குது…?”

“அதைத்தான் சொல்ல வருகிறேன் குருவே..போட்ட முதல் கிடைக்காது என்று புலம்பித் தீர்க்கிறார்கள் நூற்றுக்கணக்கான திரையரங்க உரிமையாளர்கள். பத்தாவது நாளே முக்கால்வாசி தியேட்டர்கள் காற்றடிக்கத் தொடங்கி விட்டதாம். இவர்களது கூக்குரலால் திரையரங்க வட்டாரமே அதிருதுன்னுதான் சொல்ல வந்தேன்..’

“எப்படியும் ஓட்டுவார்கள் என்று சொல்லு..”

“அவரவர் திரையரங்குகளில் ஓட்டிக் கொள்ளலாம். மற்றவர்கள் பாவம் ஓடத்தான் வேண்டும் போலிருக்கிறது. சூப்பர் என்றார்கள். ஒரு முறை பார்க்கலாம் என்றார்கள். இப்போது ஓசையே அடங்கிவிட்டது போலிருக்கிறது.”
Continue reading

Boss of Sivaji Spoilers – Fult(h)an Boston

 • தமிழ் கலாச்சாரம் என்கிறார்கள். கோவிலில் தொழுவது, தாவணி போடுவது என்று சொன்னாலும்… தமிழரின் கலாச்சாரம் திரையரங்குதான் என்பது போல் பாஸ்டனில் மட்டும் பதினைந்து காட்சிகள் நிறைவரங்காக திரள்கிறார்கள். ஆன்மிகமாக விவேக் தேட சொல்கிறார். தமிழ்ப் பெண்களைத் தேட வேண்டிய இடம் சினிமா கொட்டகை.
 • ‘யு’ என்று போட்டாலும் ஷிட் என்று எஸ்-வோர்ட் வருவதால் ஆங்கிலத்தில் ஆரே போட்டு விடுவார்கள்.
 • ஓவர் டு சில வசனங்கள்
  • காசு கொடுக்கலேன்னா கக்கூஸ் கூட கட்ட முடியாது.
  • தமிழ்நாட்டில், கற்பை பத்தியும் கறுப்பை பத்தியும் பேசக் கூடாது
  • பால் சாப்பிட்டு வளர்ந்த மாதிரி தெரியலியே! டிகாஷன் சாப்பிட்டு வளர்ந்த மாதிரி இல்ல இருக்கு.
  • (மிளகாயாக விழுங்குவதைப் பார்த்து) பில்லி சூனியம் கேள்விப்பட்டிருக்கேன்… இது சில்லி சூனியம்
  • பழக பழக என்று வரவேற்கிறோம்!
  • (பல அர்த்தத்தைக் கொடுக்கவல்ல) ஆரம்பத்தில் எல்லாரும் இப்படித்தான் சொல்வாங்க
  • காட்டிக் கொடுக்க சொல்றீங்களா?
   இல்ல… நட்டைக் காப்பாத்த சொல்றேன்!
 • இடைவேளைக்கு முன் சுமன் சொல்லும் அண்ணாமலை பால், பாட்சா ஆட்டோ, உழைப்பாளி கூலி உதிர்ப்பு… சீரியஸ் காமெடி
 • சென்னையில் ஜே-7 காவல் நிலையத்தில் தமிழ்ச்செல்வி செய்த புகாரின் அடிப்படையில் தலைவர் கைதாகிறார். J-7→ வேளச்சேரி. இது எம்.ஜி.ஆருக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் இடம்: அங்கேதான் உள்ளாட்சித்துறை அமைச்சர் முக ஸ்டாலின் வசிக்கிறார்.
 • படையப்பா‘வில் வாட் எ மேன் சொல்லவைத்த அசம்பாவிதம் போல் எதுவும் இல்லாமல் நெஞ்செல்லாம் நிமிர்த்தி வைத்திருக்கிறார்கள்.
 • ஆதியின் பதுக்கல் பணத்தை கறக்கும் காட்சி, திருவிளையாடல் ஆரம்பத்தில் பிரகாஷ்ராஜ் x தனுஷ் கல்லறைப் பணப்பெட்டி பரிமாற்றத்தை நினைவுறுத்தினாலும், தி.ஆ காட்சியமைப்பு மச் மச் பெட்டர்.
 • ஷங்கருக்கு லாஸ் வேகாஸ் ரொம்பப் பிடிக்கும் என்று தெரிகிறது. டிஸ்னி, யூனிவர்சல் என்று சுற்றுலாவும் சென்றிருக்கிறார் என்று அறியப் பெறுகிறோம்.
  • வேகாசின் மிராஜ் ↔ வாஜி வாஜி;
  • பெலாஜியோ ↔ சஹானா;
  • எம்.ஜி.எம். டிஸ்னி சண்டைக்காட்சிகள் ↔ ட்ரைவ் – இன் கார் துரத்தல்
 • வியன்னா-வின் முகமூடிகளும், முதுமை நீங்கிய முக்காபலாவின் கலைவையுடனும் ‘அதிரடி மச்சான்!’ – ரொம்ப நாளைக்கு பேர் சொல்லும் பாடல்
 • ஜெயா டிவி மைக் கூட சிவாஜி முன் நீட்டப்படுகிறது. படம் தாமதம் ஆன வேகத்தில் ஆட்சி கூட மாறிவிடலாம் என்னும் பாதுகாப்பு கலந்த புரிந்தூனர்வு போல.
 • மேலும் ஒரு முக்கிய தகவல்: நயந்தாராவுக்கு innie; ஷ்ரியாவுக்கு outie.

பள்ளியில் இருந்து வந்த மகள் என்னிடம் ‘அப்பா ஒரு ரகசியம்’ என்றாள்.

மிரட்சியுடன் ‘பத்திரமா வச்சுக்கறேன்… சொல்லு’ என்றேன்.

‘S-இல் ஆரம்பிக்கும் ரெண்டு கெட்ட வார்த்தை கத்துண்டேன். யாரிடமும் சொல்லக்கூடாதவை’ என்கிறாள்.

‘எனக்கு ஒண்ணுதானே தெரியும்!’

“They are very bad words pa.”

“What are they!!?”

“One is ‘Shut-up’ and the other is ‘Stupid'”!

‘ஓ…’! கொஞ்சம் சிரிப்பு & பெருமூச்சு.

செய்தித்தாளில் F***, B*****d என்று போட்டு பலுக்கப் பிழையில்லாமல் புரிந்துகொள்ள வசதிப்படுத்துவது போல் ஆதி… நீ ஒரு *தி… என்று சொல்ல வந்தேன்; ஆனால் கபோதி என்று மூடிக்கிறார்கள்.

பலரும் சொல்வது போல் படம் நெடுக பாடல் காட்சியில் மட்டுமே சங்கர் ‘உள்ளேன் அய்யா’. மற்ற இடங்களில் அந்நாளில் ‘அண்ணாமலை‘ இயக்கப் பணித்தபோது வசந்த் சொன்னது போல் ‘ரஜினி படத்துக்கெல்லாம் இயக்குநர் எதுக்குய்யா! குப்பத்து ராஜாவில் இருந்து ரெண்டு சீன்; இன்னும் அங்கே இங்கே என்று பீராஞ்சாலே போதுமே’ என்று டபாய்த்திருக்கிறார்.

‘அன்னிய’னின் நேரு ஸ்டேடியம், ‘இந்திய’னின் நிழல்கள் ரவி லைவ் ரிலே, ‘ஜென்டில்மேன்’ நீதிமன்றம், ‘முதல்வன்’ இன்டெர்வ்யூ எல்லாம் கேட்கவில்லை. மினிமம் கியாரண்டியாக ‘பாய்ஸ்’ பெற்றோர் மீட் கூட அமையாதது ரஜினியின் பயந்தாங்கொள்ளித்தனமாகக் கூட இருக்கலாம்.

துடிக்கும் கரங்க‘ளில் ஜெய்சங்கர் வில்லனாக பணம் பறக்கவிட்டு ஏழைச் சிறுவனை இடைவேளைக்கு முன் சாவடித்து அகமகிழ்வார். இங்கே வில்லன், பணத்துக்காக மிதிபட்டு மரணமுறுவதை மொட்டை பாஸ் சிரித்து புளகாங்கிதமடைகிறார்.

தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷின் Republican கட்சியின் தாரக மந்திரம்:

 • வரியைக் குறைப்போம்; வருமான வரியே போடாத நிலைக்கு இட்டுச் செல்வோம்!
 • அரசாங்கம் ஒதுங்கி நிற்கும்; சேவைகளை சமுதாயமே தன்னிறைவாக்கிக் கொள்ளும்!
 • மக்களே அனைத்துக்கும் முனைப்பெடுக்க வேன்டும்;
 • முதலாளிகளை முன்னிலைப்படுத்தும் முகமாக பொதுப்பணித்துறை அடக்கி வாசிக்கும்.
 • எல்லாவற்றுக்கும் ஆட்சியாளர்களை சார்ந்திராத நிலையை உருவாக்கித் தருவோம்!

சிவாஜி சொல்வதும் அதுதான்.