Category Archives: Pets

Dog Fightings, ASPCA, Euthanasia

தமிழ், ஹிந்தி, ஆங்கில சினிமாக் காட்சிகளுடன் பதிவுகளுக்கு பிள்ளையார் 786ப்பது சாஸ்திரோப்தமாக சிலாக்கியம்.

இராணுவ வீரன்‘ படத்திற்கு வில்லன் சிரஞ்சீவி, தேசிய நாட்டம், மேலாக்குப் போடாத ஸ்ரீதேவி எல்லாம் காவியமோ என்று மெச்சும் அளவுக்கு பண் பாடவைப்பார்கள். கள்ளோ என்று மிரளும் அளவுக்கு மதுவருந்திய சேவல் சண்டைகளும் நிறைந்த படம்.

“Part of the psychology of dog fighting is the same as other forms of animal cruelty – a lot of it is about power and control. The dog fighter sees his dog’s victory as having a direct reflection on his strength and manliness, which I think is one of the reasons that we see brutal treatment of animals that don’t perform well.”

BBC NEWS | Americas | Brutal culture of US dog fighting

‘இராணுவ வீரன்’ ரஜினி போல் ஸ்ரீதேவி ரம்பைகளை கவர் செய்ய நினைத்தோ; சிரஞ்சீவி சகாக்களைப் பந்தாட நினைத்தோ; மில்லியன் மட்டுமே வருமானமாகக் கொண்டதை உடைத்து சூதாட்டங்களின் மூலம் பில்லியனாக்க மேற்படியை எதிர்பார்த்தோ; அமெரிக்க கால்பந்து வீரர் மைக்கேல் விக் நாய்களுக்கிடையே இல்லாத கொம்பை சீவிவிட்டு புல் டாக் பந்தயம் நடத்தி வந்து மாட்டிக் கொண்டும் விட்டார்.

செய்திகளும் தொடர்பான அலசல்களும் படித்தவுடன் எழுந்த கேள்விகள்:

  1. குதிரைகளை ஓட்டப்பந்தயத்தில் ஓட விடுகிறார்கள். ஓடி ஓடி களைத்துப் போய் அசந்தர்ப்பமாக கால் முறிந்தால் தீர்த்துக் கட்டும் குதிரை உரிமையாளர்களுக்கும் இந்த மாதிரி நாய்ச்சண்டை ரசிப்பவர்களுக்கும் என்ன வித்தியாசம்?
  2. விதவிதமாக மார்பு, கை, கால் என்று வறுத்து, அவித்து ருசித்து சாப்பிடுவதற்காகவே கோழிப்பண்ணை வைத்திருப்பவர்களுக்கும்; ரசனைக்காக மோதவிட்டு வேடிக்கை பார்த்து குதூகலிப்பவர்களுக்கும் என்ன வித்தியாசம்?
  3. நிறைய செல்லப்பிராணிகளை மீட்டெடுத்து விட்டால், அனைத்தையும் பராமரிக்கப் போதிய இடம்/பொருள்/ஏவல் இல்லாததால் கருணைக் கொலை செய்வதைப் பரிந்துரைக்கும் மனேகா காந்தி/அமலா க்ரூப்புக்கும் விக் போன்ற விளையாட்டுப் பிள்ளைகளுக்கும் என்ன பெரிய வித்தியாசம்?

அவங்க ‘அச்சச்சோ… பாவம்’னு கத்தி போடுகிறார்கள். இவர்கள் ‘ஆஹா… கலக்கல்’னு பேஷ் கொட்டுகிறார்கள்.
தமிழ், ஹிந்தி, ஆங்கில சினிமாக் காட்சிகளுடன் பதிவுகளுக்கு கைநாட்டு இலச்சினையிடுவது ‘மண் வாசனை’ விஜயனுக்கு வைராக்கியம்.

நேற்று நாங்கள் கிளி வாங்கினோம்

ரொம்ப நாளாகவே வேண்டுகோள் பட்டியலில் இருந்தது. நேற்று நிறைவேறியது.

சக்கர வளையத்தில் சுற்றித்தீர்க்கும் வெள்ளெலி, பொசுபொசு மொசக்குட்டி, சாம்பல் நிறத்திலொரு பூனை, அடக்கி வாசித்து மிரட்டும் உம்மணாம்மூஞ்சி நாய்; எல்லாவற்றுக்கும் நடுவே ஃப்ரென்ச் கிஸ் அடுத்துக் கொண்டு கிளிக்கூண்டு.

இரண்டு கிளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஒன்று மஞ்சள் கலந்த பச்சை. மற்றொன்று வெளிர் நீலம்.

அதற்குத் தேவையான உணவு; காலைக்கடன்களை மறைக்க சோள வஸ்து; விளையாட கிண்கிணிகள்; அடைத்து வைக்க கூண்டு. மேலும் சில விநோதப் பொருட்கள் வாங்கப்பட்டது.

கடையில் இருந்தவரை ‘லவ் பேர்ட்ஸ்… லவ் பேர்ட்ஸ்‘ பாடல் போல் ‘கீக்கீக்கீ’வென்று கத்திக் கொண்டிருந்ததாக எண்ணம். வீட்டுக்கு வந்தவுடன் ‘குயிலப் பிடிச்சு கூட்டில் அடைச்சு கூவச் சொல்லுகிற உலகம்‘ பிரபு மாதிரி இறுக்கமாக, இல்லாத இறக்கையை படபடத்து, உணவை சீந்தாமல், தண்ணீர் பருகாமல் சத்தியாகிரக கோலம்.

நிறைய பூனை வளர்த்திருக்கிறேன். நாய் வைத்துக் கொண்ட அனுபவமும் உண்டு. ஐந்து மீனை தொட்டியில் நீந்தி மகிழ்வதைப் பார்க்க நினைத்து, நாளுக்கு இரண்டாக சாகடித்து, மீன் எலும்புகளைப் பொறுக்கியதும் நிகழ்ந்திருக்கிறது.

கிளியை வளர்த்துப் பூனை கையில் கொடுக்கும் பழமொழியை நான் மனைவியிடம் நினைவு கூற, அவளும் ‘என் விஷயத்தில் கிளியை வளர்த்து யானை கையில் கொடுத்துட்டாங்க’ என்கிறாள்.

சாப்பாடு புத்தம்புதுசாகப் போட்டால்தான் சீந்துகிறார்கள். ஒரு மணி நேரம் வட்டிலில் காய்ந்துவிட்டால் ஃப்ரிட்ஜில் வைக்காத பழைய சோற்றை சீந்தாத என்னுடைய அந்தக்காலத்தை நினைவுறுத்தும் பட்சிகள்.

பழியாய் பவளவாய் கண்டது போதும் என்று மின்னஞ்சல் பக்கம் பார்க்க சென்றால், நண்பரிடமிருந்து ‘கிருஷ்ணம்மாளுக்கு பணம் கொடுக்கறேன்னியே… அனுப்பியாச்சா?’ என்னும் நினைவூட்டல். ‘பூனை நாயும் கிளியும் கூட மனிதர் மடியிலே‘ என்று கமல் பாடும் நேரம் இது.

Hazaaron Khwaishein Aisi பார்த்தால் கூட அன்னப் பறவையாக சித்ரா சிங்கை மட்டும் பால் பிரித்து மேயும் மனப்பான்மை, சுயவிமர்சனம் செய்தவுடன் அடங்கிப் போகிறது. அதை வைத்துப் பதிவெழுதும் எண்ணம் உதிக்கிறது.

இப்போதைக்கு தீராத வினா: ’24×7 தேமேயென்று தனியே வாளாவிருக்கும் இரண்டும் என்ன யோசிக்கும்?’

  • நம்மை ஏன் கூண்டு விட்டு கூ(ண்)டு மாற்றுகிறார்கள்?
  • பழைய தோழர்(கள்) என்னவானார்?
  • பக்கத்தில் உட்கார்ந்து பார்ப்பதில் இவனுக்கு என்ன கிட்டுகிறது?
  • வெளியே போனால் சோறு கிடைக்குமா?

தொடர்பான இன்றைய நியு யார்க் டைம்ஸ் பத்தி:

Should Most Pet Owners Be Required to Neuter Their Animals? – New York Times

By VERLYN KLINKENBORG
When it comes to pets, Americans are lost in a seemingly endless act of transference.

We expect to find as much innocence in our pets as we do in newborn children, which may be one reason why so few older pets are adopted from shelters.

We want the pleasures of neoteny — the adorable sustained appearance of infancy — in part because it helps us forget how much responsibility is involved in owning and training.

Americans are consumers of pets just as we are consumers of everything else.


1. Mapping a political era2. An Ideological Reading of Hazaaron Khwaishein Aisi

3. Join the fight

4. lazygeek.net: Hazaaron Khwaishein Aisi

5. Hazaaron Khwaishein Aisi (Hindi) « One Small Voice

6. The Meltdown Chronicles: Hazaaron Khwaishein Aisi

7. Sen’s Spot: Hazaaron Khwaishein Aisi(Thousand Desires such as this) – part1

8. Ruminations of a meandering mind: Hazaaron Khwaishein Aisi

9. As you like it…: Hazaaron Khwaishein Aisi (HKA) *****