Category Archives: NBA

லெப்ரான் ஜேம்ஸ்

எந்த முகூர்த்தத்தில் கடைசி ஐந்து நிமிடம் பார்த்தால் பார்த்தால் போதும் என்று அருள்வாக்கினேனோ… தடாலடியாக கடைசி ஐந்து நிமிடத்தில் லெப்ரான் ஜேம்ஸ் மட்டும் ஆடிய க்ளீவ்லாண்ட் அணி, ஐந்து பேர் கொண்ட டெட்ராயிட் பிஸ்டன்சுக்கு சமமாக ஆடி, ஸ்கோரை சமநிலைக்குக் கொண்டுவந்துவிட்டார்கள்.

அடுத்து இன்னொரு ஐந்து நிமிடம் எக்ஸ்ட்ரா-டைம் கொடுத்தார்கள்.

மீண்டும் கவாலியர்சின் லெப்ரானுக்கும் டெட்ராயிட்டின் ஐவருக்கும் போட்டி. நடுவர்களுக்கு பஞ்சாயத்து செய்து அலுத்திருக்கும் போல. மேலே விழுந்து அடித்தால் கூட, ‘தப்பாட்டம்’ என்று அழைக்காமல், கண்டும் காணாத பரபிரும்மமாகவே இருந்தர்கள்.

ஐந்து நிமிட நீட்டிப்புக்குப் பின் மீண்டும் இரு அணியும் tie.

இன்னொரு ஐந்து நிமிடம். இப்பொழுது ரவுடி ஆட்டத்தை டெட்ராயிட் குறைத்துக் கொண்டு, கூடைப்பந்து ஆடினாலும், பம்பரமாக சுழன்று ஆடிய இளவயது பீஷ்ம பிதாமக லெப்ரானுக்கு முன்னால் பஞ்ச பாண்டவராலும் ஈடுகொடுக்க இயலவில்லை.

கடைசியில் கவாலியர்ஸ்தான் கெலித்தார்கள்.

லெப்ரானுக்கு 48 புள்ளிகள். ஆட்ட இறுதியில் க்ளீவ்லாண்ட் எடுத்த 25 புள்ளிகளும் அவரால் எடுக்கப்பட்டது.

மூன்று புள்ளி பின்தங்கியிருக்கிறோமா… எடுத்துக்கோ… தொலைதூரை கூடையின் மூலம் மூன்று.

ஆட்டத்தை வெல்ல நான்கு நொடிகளில் இரண்டு புள்ளி தேவையா? எங்கிருந்தோ நுழைந்து, எப்படியோ மல்லுக்கட்டி, தனியொருவனை ஐவர் சுற்றி வளைத்தாலும் கூடைக்குள் நுழைத்து, வெற்றிமுகம்.

சும்மாவா தொண்ணூறு மில்லியன் டாலரை நைக்கி காலணி நிறுவனம் கொடுத்திருக்கும்!

It is tough to write about French players

கடந்த சில நாள்களாக ஃப்ரென்ச் ஓப்பன் மாலைகளை ஆக்கிரமிக்கிறது. சாதாரணமாக என்.பி.ஏ கூடைப்பந்தின் அடியொட்டி செல்லும் பருவம்.

  • ஆனால், சான் ஆண்டானியோ ஸ்பர்சும் டெட்ராய்ட்டும் நிச்சயம் இறுதிச்சுற்றுக்கு வந்துவிடும் என்பது ஒரு புறம் தோன்றுவதாலோ…
  • அல்லது க்ரிக்கெட் குறித்து லைலா சூர்யாவிடம் சொல்வது போல் ‘எல்லாம் மேட்ச் ஃபிக்சிங்’ என்னும் ஞானம் பிறந்ததாலோ…
  • நாலு க்வார்ட்டருக்கு மூச்சு முட்ட ஆடினாலும், கடைசி விநாடியில் ‘ஹே ராம்’ சொல்லி சொர்க்கத்திற்கு நுழைவுச்சீட்டு போடுவது போல், அந்த இரண்டு வாய்தாக்களில் வெல்வதாலோ…

டென்னிசுக்கு மாறச்சொல்லி விட்டது. விம்பிள்டன் போல் பந்து போட்டவுடன் பாயிண்ட் விழாமல், இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் எதிரும் புதிருமான ஆட்டம் தனிச்சுவை. முடிவு தெரியாத ஹைலைட்ஸ் என்பதால் அலுக்காத மேட்ச்கள்.

மெக்கென்ரோவுக்குப் போட்டியாக சாஃபின் மட்டையை சுழற்றி வலையின் மேல் அடித்து நொறுக்குவதும் காட்டுகிறார்கள்.

அதெல்லாம் விடுங்கள். Loit என்னும் பெயரை எப்படி உச்சரிப்பீர்கள்? அந்த அம்மணிதான் மரியா ஷரபோவாவுடன் ஆடினார்.

ஜெயிப்பது என்பது அதிமுக்கியமான தருணங்களில் சிரத்தையாக ஆடுவது. எப்போதும் நன்றாக கடமையாற்றுவதினால் யாதொரு பயனுமில்லை. எமிலீ லுவா (அப்படித்தான் Loit-ஐ விளிக்கணும்) ஒழுங்காக பந்து போட்டார். திறம்பட திருப்பி அடித்தார். இரண்டு மூன்று தடவை கொஞ்சமே கொஞ்சம் அசிரத்தையில் சறுக்கினார்.

அந்த இரண்டு புள்ளிகளில் ஷரபோவா ஆட்டத்தைக் கைப்பற்றினார். எப்படி ஆடுகிறோம் என்பதை விட எப்போது பரிமளிக்கிறோம் என்பதுதான் மேட்டர்.

லுவா போன்ற உச்சரிப்புகளை அறிய ஃப்ரென்சுக்காரர்கள் சொல்லித் தருகிறார்கள்.

சென்ற வருடம் ஷரபொவா நாமாவளி செய்ய இயலவில்லை. அதற்கும் முந்தைய வருட பதிவு.