Category Archives: Moral

எப்பொழுது கருத்து சொல்லலாம்? பார்வை ஒன்றே போதுமே

அசல் & நன்றி: தினமணிக் கதிர்

ரயில் பெட்டியின் ஜன்னலோரம் உட்கார்ந்திருந்தான் அந்த இளைஞன். ரயில் புறப்பட்டதும் “அப்பா அப்பா மரமெல்லாம் பின்னாடி போகுதுப்பா” என்று பரபரப்பாய் ஆச்சர்யப்பட்டான். அவனருகே அமர்ந்திருந்த அவனுடைய தந்தையும் அவனுடைய ஆச்சர்யத்தை தலையசைத்து ரசித்தார்.

அதே பெட்டியில் அமர்ந்திருந்த கல்லூரி மாணவர்களுக்கு இது எரிச்சலூட்டியது. இந்த வயதில் ஓர் இளைஞனுக்கு இதில் எல்லாம் ஆச்சர்யமா என்று இருந்தது. சிறிது நேரத்தில் மழை பெய்தது. “அப்பா… அப்பா மழை பெய்கிறது” என்றான் இளைஞன்.

கல்லூரி மாணவன் ஒருவன் பொறுமை இழந்துபோய், “இந்த வயதில் இப்படியெல்லாமா ஆச்சர்யப்படுவார்கள்” என்றான்.

அந்த இளைஞனின் தந்தை “மன்னிக்கவும். பிறந்ததிலிருந்து இவனுக்குக் கண்பார்வை இல்லாமல் இருந்தது. இன்றுதான் பார்வை கிடைத்து மருத்துவமனையில் இருந்து ஊருக்குப் போய்க் கொண்டிருக்கிறோம்.” என்றார்.

நீதி: அவசரப்பட்டு அபிப்ராயங்கள் சொல்லக்கூடாது.

Parzival myth – The Holy Grail story

Host unlimited photos at slide.com for FREE!
நவீன புராணங்களில் முதன்முதலில் தோன்றியதாக பார்சிவல் கதையை சொல்லலாம். பன்னிரெண்டாம் நூற்றாண்டில் நடந்ததாக நம்புகிறார்கள்.

தேடலில் உள்ள பலரும் தங்கள் தேடல் எது, விசாரணையின் எந்த கட்டத்தில் எப்படி இருக்கிறோம் என்று அறியாமல் தேடலை மட்டும் படு சிரத்தையாக தொடர்பவர்கள்.

பார்சிவல் வாழ்க்கையை விவரிக்கிறார்கள். அந்தக் கால அரசர்களுக்கேயுரிய எதிர்பார்க்கக் கூடிய திடீர் திருப்பங்களும் சுவாரசியங்களும் நிறைந்த கர்ணபரம்பரைக் கதை. இளைய தளபதி படம் போல் சண்டை, காதல், குடும்பம், மீண்டும் மோதல், காமம் என்று வாழ்க்கை ஓடுகிறது. வில்லன் யார், எந்த குறிக்கோளுக்காக வில்லனை துவம்சம் செய்ய நினைக்கிறான் என்று மசாலாப் பட நாயகன் மறந்து போவது போல் புறப்பட்டபோது இருந்த இலட்சியம் மறந்தே போச்சு.

தமிழ்ப்படங்களில் சேர வேண்டிய தாயும் சேயும் என்று நமக்குத் தெரிந்தவர், கதாபாத்திரங்களுக்கு புலப்படமாட்டார்கள். அப்பொழுதே உணர்ந்து கொண்டு விட்டால், எல்லாம் சுபமாக அப்பொழுதே முடிந்துபோகும். பார்சிவல் நிலையும் இப்படித்தான்.

குருட்டாம்போக்கில் சென்றாலும் ராஜாதி ராஜாவை சந்திக்க நேரிடும் முக்கிய தருணத்தில் கூட ‘கேட்கவேண்டிய கேள்வி’யை கேட்கவில்லை. கேட்டிருந்தால் மன்னனுக்கு மோட்சமும், மக்களுக்கு சுதந்திரமும், பார்சிவலுக்கு இராஜாங்கமும் உடனடியாக வாய்த்திருக்கும்.

அதை விட்டு விட்டு, இடைவெளிக்குப் பின் சுழன்று திரியும் திரைக்கதை போல் எங்கெங்கோ போகிறான். விக்கிரமாதித்தன் கதை மாதிரி வேதாளமாய் பல சுவையான நிகழ்ச்சிகள். இத்தனை அனுபவங்களுக்கும் மனித அறிமுகங்களுக்கும் முத்தாய்ப்பாக கட்டாங்கடைசியில் அந்த சக்தி வந்து சேர்கிறது. அடுத்தவர் மனதில் என்ன உணர்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும் நெஞ்சம் வாய்க்கப் பெறுகிறான்.

மீண்டும் கோட்டைக்கு வந்து, ‘தங்களை வாட்டுவது யாதோ’ என்று இராஜாவை வினவ, இராச்சியம் அவனை சேர்ந்தடைகிறது.

நீதி என்ன? எப்படி இது சாத்தியமாகிறது என்கிறது கதை? உறவுகளினால் சாத்தியக்கூறுகள் தென்படுகிறது. மற்றவர்களின் பரிச்சயங்களால் பாலம் அமைக்கிறான்.

அனுபவம் + திரைகடலோடும் உழைப்பு + ஏதில் தாவடி பயணங்கள்.

மேல் விவரங்களுக்கு:

1. Parzival – Wikipedia | 2. Wolfram von Eschenbach: Parzival

Self Introspection & Tamil Blogs

From Dinamani Kathir

அந்த ஹோட்டல் முதலாளி ராபர்ட்டிடம் கேட்டார்: “உன்னால் ஒரு நாளைக்கு எத்தனை தவளைகள் சப்ளை செய்ய முடியும். ஒரு தவளைக்கு 10 ரூபாய் தருகிறேன்.”

“எங்கள் வீட்டுப் பக்கத்தில் இருக்கும் குளத்தில் இரவுப் பொழுதில் ஒரே தவளை சத்தம். ஒரு நாளைக்கு ஆயிரம் தவளைகள்கூட சப்ளை செய்ய முடியும்” என்றான்.

மறுநாள் இரண்டே தவளைகளோடு வந்தான் ராபர்ட், “இந்த இரண்டே தவளைதான் அவ்வளவு சத்தத்துக்கும் காரணம்” என்றான் சலித்துக் கொண்டு.

நீதி: வெற்றுக்கூச்சலை வைத்து ஆளைக் கணக்குப் போடாதே!