Category Archives: Hindi

Notable Hindi Songs – 2007 – Film Music: Top 13

2008 முடிவதற்கு முன்பாகவே பதிந்து வைக்க முடிகிறது 🙂

எந்த வரிசையிலும் இல்லை; என்றாலும்

 • ‘ஹே கண்பத்’, நோ ஸ்மோக்கிங் போன்றவை அடிக்கடி கேட்கும் பட்டியலில் இருக்கின்றன.
 • சக்தே இந்தியா, சீனி கம், குரு ஏற்கனவே நிறைய தடவை கேட்டிருப்பீர்கள்!
 • வெல்கம் படத்தின் குத்துப் பாடல், சிவாஜியோடு முட்டிய ஜூம் பராபர் ஆகியவை கேட்டிருக்காவிட்டால், பாப் கல்ச்சர் அறிய காது கொடுக்கவும்.
 • ‘ஹம் தோ அய்ஸே ஹை பையா’ பாடல் பால் மணம் மாறா பாலகனாக இருந்தபோது வந்த ‘ஃபிர் பீ தில் ஹை ஹிந்துஸ்தானி’ போல் துள்ளலாக இருக்கிறது; ‘காசிசென்றுவந்தவுடன் பார்த்ததாலோ என்னவோ தனிப் பாசத்துடன் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
 • படங்களை மொத்தமாக குறிப்பிட வேண்டும் (அல்லது) எந்தப் பாடலை சொல்வது என்னும் குழப்பத்தில் தீம் கோர்வைகளைத் தவிர்த்து, ஒரு படம் ஒருமுறைதான் இடம்பெறுமாறு அமைத்த பட்டியல் இது.
 • தமிழ்ப்படப் பாடல் பட்டியலுக்கு – Tamil Film Songs – Best of 2007 Movie Music « Snap Judgment
 1. சந்தா ரே (நிலாப் பாடல்) – ஏகலவ்யா
  • பாடியவர்: ஹம்ஸிகா ஐயர்
  • இசை: ஷாந்தனு மொய்த்ரா
  • பாடலாசிரியர்: ஸ்வானாந்த் கிர்கிரே
 2. சா ரஹா‘ராம் கோபால் வர்மா’வின் ஆக்
  • பாடியவர்: ஷ்வேதா பண்டிட், வினோத் ரதோட்
  • இசை: அமர் மொஹிலே, டிஜே அமித், கணேஷ் ஹெக்டே, நிதின் ரால்வாக்கர், பிரசன்னா சேகர்
  • பாடலாசிரியர்: ஜெய்தீப் சாஹ்னி
 3. ஹம்தோ அய்ஸே ஹேன் லகா சுனரி மே தாக்
  • இசை: ஷாந்தனு மொய்த்ரா
 4. ஜப் பீ சிகரெட் நோ ஸ்மோகிங்
  • பாடியவர்: அத்னான் சாமி
  • இசை: விஷால் பரத்வாஜ்
  • பாடலாசிரியர்: குல்சார்
 5. மௌலா மேரே லே லே மேரி ஜான் சக் தே இந்தியா
  • பாடியவர்: கிருஷ்ணா, சலிம் மெர்சன்ட்
  • இசை: சலீம் – சுலைமான்
  • பாடலாசிரியர்: ஜெய்தீப் சானி
 6. ஆஜா நாச்லே ஆஜா நாச்லே
  • பாடியவர்: சுனிதி சௌஹான்
  • இசை: சலிம் – சுலய்மான்
  • பாடலாசிரியர்: பியூஷ் மிஷ்ரா
 7. குர்தி மல்மல் திநிஷப்த்
  • பாடியவர்: அனுராதா போட்வால், கைலாஷ் கெர், ஸ்னேகா பந்த், சோனு நிகம், சுதேஷ் போஸ்லே
 8. கண்பத் ஷூட் அவுட் அட் லோகன்ட்வாலா
  • பாடியவர்: அன்ச்சல், மிகா
  • இசை: மிகா
  • பாடலாசிரியர்: மிகா
 9. சீனி கம் சீனி கம்
  • பாடியவர்: ஷ்ரேயா கோஸல்
  • இசை: இளையராஜா
  • பாடலாசிரியர்: சமீர்
 10. ஊன்ச்சா லம்பா வெல்கம்
  • பாடியவர்: ஆனந்த் ராஜ் ஆனந்த் & குழு
  • இசை: ஆனந்த் ராஜ் ஆனந்த்
  • பாடலாசிரியர்: ஆனந்த் ராஜ் ஆனந்த்
 11. மேரி ஜிந்தாரி கன்னா & அய்யர்
  • பாடியவர்: மதுஸ்ரீ, சுக்விந்தர் சிங்
  • இசை: தபுன் சூத்ரதார்
  • பாடலாசிரியர்: ராஜேஷ் ஜோரி
 12. ஜூம் பராபர் ஜூம் ஜூம் பராபர் ஜூம்
  • பாடியவர்: ஷங்கர் மகாதேவன், சுனிதி சவுஹான், ஜூபீன் கர்க்
  • இசை: சங்கர் – எசான் – லாய்
  • பாடலாசிரியர்: குல்சார்
 13. திருமணப் பாடல் காந்தி மை ஃபாதர்
  • பாடியவர்: பலர்
  • இசை: பியூஷ் கனோஜியா

Dor (நூல்) – விமர்சனம்

நாகேஷ் குக்குனூர் ஏமாற்றவில்லை. பார்க்கவேண்டிய திரைப்படம்; நம்பக் கூடிய திரைக்கதை.

ஸ்பாயிலர்சுடன் சில சிதறல்:

 • dor-2006-5b-1_1188030619.jpgஜீனத் ஆக நடித்த குல் பனாக் (Gul Panag) மிஸ் இந்தியா பட்டம் பெற்றவர்.
 • பல மோசமான படங்களில் ஆயிஷா தகியாவை பார்த்து ‘நடிப்பு வராத பொண்ணு’ போல என்று நினைப்பை உருவாக்கி வைத்தவர். இந்தப் படத்தில் இவர் இன்னொரு சிம்ரன்!
 • ‘Dutch courage’ ஆக தண்ணியடித்துவிட்டு வந்து, ஜீனத்திடம் ‘ஐ லவ் யூ’ சொல்லும் ஷ்ரேயஸ் தல்பாடேவும் (Shreyas Talpade), அதை வெகு இயல்பாக எடுத்துக் கொள்ளும் தோழமையும்; கடைசியாக கல்லூரியில்தான் இந்த மாதிரி கோணங்கித்தனம் செய்து, வழியாமல், எதார்த்தமாக வாழ்க்கை தொடர்ந்தது. அதையே கிராமத்தில் பார்ப்பது ‘நடக்காது!’ என்று சாதாரணமாக எண்ண வைக்கும். ஆனால், ஜீனத்தின் அழுத்தமான கதாபாத்திர வடிவமைப்பு, அதை சரியாக உணரவைக்கிறது.
 • வசனங்கள்: எளிமை. ஆனால், உணர்ச்சி & எழுச்சி உண்டு. தினசரி பேசுவது போல் இருந்துகொண்டே பலநாள் வடிகட்டிய சாராம்சங்களைக் கொடுக்கிறது. நாவல் எழுத்தில் கிடைக்கும் அழுத்தம் கொண்டவை.
 • படத்திற்கு ஆதாரம் (அசல் கதை) மலையாளப் படமாம் (என்ன படம்?)
 • தமிழ்ப்பதிவர் எல்லாருக்கும் ஏதாவது தீனி இருக்கிறது: சவுதி அரேபிய இஸ்லாமிய ஷரியத்தை எதிர்ப்பவர்; ஆண்கள சார்ந்து இயங்கும் இந்து மதத்தின் விமர்சகர்; முதலாளித்துவத்தின் கூறுகளை தாக்கும் கம்யூனிஸ்ட்; ‘ராத்திரி பத்து மணிக்கு’ என்று காந்திஜியை மேற்கோள் காட்டும் பெண்ணியவாதி…
 • சினிமாத்தனம் இல்லாத வெற்றிப்படமா: கடைசியில் ரயில்வே ஸ்டேசன், தில்வானியா துலானியா லே ஜாயேங்கே

காதல் உண்டு; காமெடி உண்டு; திருமண பந்தமும், அந்த உறவின் பாசமும் உண்டு; நட்பு உண்டு; சென்டியும் இருக்கிறது… இருந்தும் மசாலாப் படம் பார்த்தபிறகு மனசு முழுக்க நிறைந்திருக்கும் ஏமாற்றம் மட்டும் இல்லை.

புகைப்படம்: யாஹு

Recent Movies

1. ஹஸாரோ க்வான்ஷேன் ஏஸி குறித்து ஏற்கனவே எழுதியாச்சு. எழுதுவதை விட செயலில் எதையாவது செய்யத் தூண்டும் படம். சஞ்சய் காந்தி, இந்திரா காந்தி எல்லாம் தெரிகிறார்கள். முக்கிய மூன்று பாத்திரங்களும் வாழ்ந்திருக்கிறார்கள். தவறவிடக் கூடாத படம்.

டெல்லி, புரட்சி, இளமை, காதல், நட்பு, பரிவு என்று நிறைய பழக்கமான விஷயங்களை, பழக்கமில்லாத விதத்தில் அறிமுகம் செய்து வைக்கிறார்கள்.

இந்தப் படத்தைப் பார்த்து முடித்தவுடன் இந்திரா பார்த்தசாரதியின் ‘சுதந்திர பூமி’யைக் கையிலெடுத்தால், தமிழகச் சூழலும் இந்திய நோக்கும் இடஞ்சுட்டி பொருள் கொள்லலாம்.

2. சீனி கம்: தபு அழகு என்றால், அமிதாப் அழகனாய் ஜொலிக்கிறார். ராட்டடூயி பார்த்த ஜோருடன் இன்னொரு சமையல் நிபுணர் குறித்த படம். இளையராஜாவின் இசை. பளிச் பளிச் வசனங்கள். தன்னைவிடப் பெரியவரை கல்யாணம் கட்டிக் கொள்ளப் போகிறேன் என்று மகள் சொன்னவுடன் தெளிவாகப் பதறும் பரேஷ் ராவல்.

உன்னாலே உன்னாலே கூட இவ்வாறு ஜொலித்திருக்க வேண்டிய படம். ஆனால், இங்கு்கு காணப்பட்ட ஆழமான விவாதங்களை வளர்க்கும் சிந்தனைகளுக்கு பதிலாக இன்டெர்னெட் ஜோக்குகளைத் தோரணம் கட்டியதால் எந்த வசனமும் எஸ்.எம்.எஸ். தாண்டி பயனற்றுப் போகிறது. சீனி கம்-மில் படம் முடிந்த பிறகும் தனக்குள்ளே எண்ணங்களைக் கிளப்பி அசை போட்டு சுவைக்க வைத்திருக்கிறார் பால்கி.

3. நகாப்: சிவா சொல்லி இருக்காரே… என்று குருட்டு நம்பிக்கையில் அச்சத்துடன் பார்க்க ஆரம்பித்த படம். இப்படித்தான்… முன்பொருமுறை, இணையம் சாராத நண்பர் ‘சுப் சுப்கே‘ பாருங்க என்று சொல்லி, (அது விவேக்கிடம் இருந்து ‘சொல்லி அடிப்பேன்’ என்று வருகிறதாமே!) பார்க்க ஆரம்பித்து நொந்த பயத்துடன் பார்க்க ஆரம்பித்தோம்.

ஏமாற்றாத திருப்பங்கள். சுவாரசியமான கடகட திரைக்கதை. அக்ஷய் கன்னா ரசிகன் என்பதால் எதற்கும் குறைவில்லாத கலக்கல் படம்.

பாவம்… கிட்டத்தட்ட இதே மாதிரி தடாலடி திருப்பங்களுடன் ஆக்சன் த்ரில்லர் கொடுத்தவர், ‘ஆன் தி லாட்‘ நிஜ நாடகத்தில் அமெரிக்கர்களிடம் வாக்கிழந்து, ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தயாரிப்பில் படம் இயக்கும் வாய்ப்பையும் கோட்டை விட்டார் Catch By: Mateen Kemet என்னும் அந்தத் திரைப்படத்தைக் காண இங்கு செல்லவும்). அவரை இந்தியாவுக்குக் கொண்டு வந்தால், என் போன்ற ரசிகர்களின் பேராதரவு கிடைக்கும்.

4. நான் அவன் இல்லை: ரொம்ப குறைவான எதிர்பார்ப்புடன் பார்க்க ஆரம்பித்த படம். அதனாலோ என்னவோ பிடித்திருந்தது. ஏற்கனவே எல்லாக் காட்சிகளும் சன் டிவியில் காட்டியிருந்தாலும் ஜாலியான படம்.

சில விமர்சனங்கள்:

5. கோதாவரி: சாதாரண தெலுங்குத் திரைப்படம். இருந்தாலும் அரசியல்வாதியாக நேர்காணல். கல்யாணத்துக்கு முந்தைய மண-மனபயங்கள். முழு நிலவும் வெள்ளை ஆடையும் கொண்ட அக்மார்க் இந்திய சினிமாக் காதல். படகுப் பயணம். நாய் சொற்பொழிவாற்றல் என்று ஏதோவொன்று கனெக்ட் ஆகி கலக்கி இருக்கிறார்கள். தைரியமாக பார்க்கலாம். பத்ராசலம் cruise போகணும்னு ஆசை வரும்.

பாதியில் தூங்கிப் போனால் என்னைத் திட்ட வேண்டாம். நண்பர் இந்தப் படத்தை அனுதினமும் இரவில் போட்டு, கண்ணயர்ந்தால், சொப்பனங்களில் தெளிந்த நீரோடையாக நிம்மதி பிறக்கும் என்றார். பாடல்கள் அவ்வளவு ரம்மியம்.

Upcoming & Recent Hindi Movies list

The Week :: Season’s surprises : “A sneak peek into what’s cooking in Bollywood

 1. Namastey London
 2. Bheja Fry
 3. Chak De India (Shah Rukh)
 4. Jodha Akbar (Ashutosh Gowariker :: Aishwarya, Hrithik Roshan)
 5. Hanuman Returns
 6. Saawariya (Sanjay Leela Bhansali)
 7. Aaja Nachley (Madhuri Dixit)
 8. Halla Bol (Rajkumar Santoshi :: Ajay Devgan – Vidya Balan)
 9. Cash (Anubhav Sinha :: Ajay Devgan, Suneil Shetty, Esha Deol, Dia Mirza, Zayed Khan, Shamita Shetty)
 10. Naqaab (Abbas-Mustan :: Bobby Deol, Akshaye Khanna)
 11. Bhool Bhulaiyaa (Priyadarshan :: Manichithra ThazhuAkshay Kumar, Vidya Balan, Shiney Ahuja, Amisha Patel)
 12. Om Shanti Om (Farah Khan :: Shah Rukh, Anil Kapoor’s daughter Sonam and Rishi Kapoor’s son Ranbir)

Off-Beat

 1. No Smoking
 2. Black n White (Subhash Ghai :: Anil Kapoor)
 3. Gandhi My Father
 4. Ek The Power of One (Sangeeth Sivan :: Bobby Deol, Nana Patekar)
 5. RGV Ke Sholay (Amitabh Bachchan – Gabbar, Nisha Kothari – autorickshaw driver Basanti (originally played by Hema Malini) :: Ram Gopal Varma)
 6. Tasveer
 7. Taare Zameen Par
 8. Wednesday (Neeraj Pandey :: Anupam Kher, Naseeruddin Shah)
 9. Bow Barracks Forever (Anglo-Indian)
 10. Woodstock Villa
 11. Aap Ka Surroor (Himesh Reshammiya)
 12. Goal (John Abraham, Bipasha Basu)
 13. Laaga Chunri Mein Daag (Pradeep Sarkar :: Jaya Bachchan, Rani Mukherjee, Konkona Sen Sharma, Kunal Kapoor, Abhishek Bachchan)
 14. Tasveer (Nagesh Kukunoor :: Akshay Kumar)
 15. Taare Zameen Par (Aamir Khan’s directorial debut

Filmfare awards

அவார்டு ஷோ பார்ப்பதாக இருந்தால் கையில் பேனாவும், மடியில் துண்டு சீட்டும் இருக்கும். அப்படித்தான் இங்கேயும் ஆரம்பித்தது. ரெட் கார்ப்பெட்டில் போட்ட பிளேடு தாங்காமல், ஃபாஸ்ட் ஃபார்வர்ட் ஒரு கையிலும், இன்ஃபோவோர்ல்ட் இன்னொரு கையிலுமாக நிகழ்ச்சி பறந்ததற்கு இடையிடையே…

 1. ஷாரூக் நன்றாகவே பேசினார். சுய எள்ளல் & தரமான நகைச்சுவை. எழுத்து: கரன் ஜோஹர்.
 2. அவரும் சிறப்பாகவேத் தொகுத்தளித்தார். மனுசன் ஹீரோவா நடிக்கலாம். என்ன ஸ்மார்ட்!
 3. கரீனாவின் ஆடைத் தேர்வு அமர்க்களம். அவரின் உடை மட்டுமே, ஏனைய பிறரின் புடைவை இன்ன பிறவில் இருந்து அசத்தல் + மாறுதல்.
 4. ஸ்ரீதேவி இன்னும் அப்படியே இருக்கிறார். ஹிந்தியில் உரையாட முடியாமல், ஆங்கிலத்தில் அளவளாவினார்.
 5. மாதவன் ஹிந்தியில் பொளந்து கட்டினார்.
 6. ஆமிர் கான் ஆஸ்காருக்கு மட்டுமே வருவது ஷாருக்கிற்கு கோபம் ஏற்படுத்தி இருக்கும். ஆனால், இது போன்ற சராசரி விருது விழாக்களுக்கு வராமல் இருப்பதில் ஆமிரின் நியாயம் தெரிகிறது.
 7. அரங்கம் அளித்த மகாபிரபு, தானம் கொடுத்த தன்யவான் என்று யாஷ் சோப்ராவை சோப் போட்டுத் தேய்த்தார்கள்.
 8. ஸ்ரீதேவி பம்பரமாய் சுழன்று சுழன்று ஆடினார். எப்பங்க ரீ-எண்ட்ரி? ‘லகே ரஹோ’ தமிழில் ரஜினிக்கு ஜோடி கட்டுங்களேன்…
 9. ‘கிருஷ்’ தந்திரக்காட்சிகள் எவ்வளவு கஷ்டம் என்பதை நடித்துக் காட்டி, ஹ்ரித்திக் ரோஷனுக்கு அப்ளாஸ் வாங்கிக் கொடுத்தார் ஷாரூக்.
 10. விருதை வழங்க வந்தவர்கள் ஏதோ வந்தார்கள்; உறையை நீவினார்கள்; யார் படிப்பது என்று குழம்பினார்கள்; சொல்வதற்கு குழறினார்கள்; ஃபிலிம்ஃபேர் சிலை கொடுப்பதற்கு முரண்டினார்கள்.
 11. ஒவ்வொரு விருதிற்கும் ஒரு பெருசை அழைப்பது; அவரே சில் வார்த்தை சொல்லி, பரிந்துரைப் பட்டியலை அறிமுகம் செய்து, விருது வழங்குமாறு (அதாவது ஆஸ்கார் மாதிரி) சிம்பிளாக, அழகாக, பவ்யமாக முடித்திருக்கலாம்.
 12. விழா முழுக்க சமாஜ்வாதி கட்சி மயம். முன்னால் லோக் சபா எம்பி அமிதாப் பச்சனுக்கும் முன்னாள் ராஜ்ய சபா எம்பி ஜெயா பாதுரிக்கும் நடுவில் அமீர் சிங். நல்ல வேளை… ஐஷ்வர்யாவிற்கும் கரீனாவிற்கும் இடையில் சீட்டு வேண்டும் என்று கேட்கவில்லை.
 13. சான்ஸ் கிடைத்த போது படு கேசுவலாக அமீரின் பெண் மோகத்தை வார ஷாருக் தவரவில்லை. ஷாரூக் கலக்கினார்.
 14. ஷாரூக்கை விட டைமிங்காக நிகழ்ச்சியில் ஜோக்கடித்தவர் – ஜூஹி சாவ்லா
 15. ப்ரீத்தி ஜிந்தாவிற்கு சம்பளம் போதவில்லை அல்லது பேசிய தொகை கொடுக்கவில்லை என்று நினைக்கிறேன். செம கடுப்பாக ‘என் லெவலே வேற’ என்பது மாதிரி பந்தா காட்டினார். அதற்கு, விழாவிற்கு வந்து சலித்துக் கொள்ளாத ஆமீர் எவ்வளவோ தேவலாம்.
 16. ரெட் கார்பெட்டில் பேசியவர் ‘அன்புடன்’ கௌதமியின் தங்கச்சி போல், இண்டெர்வ்யூ எடுக்க ரொம்பவே சிரமப்பட்டார். காபி வித் அனு மாதிரி யாரையாவது போட சொல்லணும்.

Black Friday – Quick Review

படத்தைக் குறித்து மூன்று வார்த்தை

1. ஜவ்வு (அ) தூக்க மாத்திரை
2. நடுநிலை (அ) இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு மிகுதல்
3. புதுசா என்ன சொல்றீங்க (அ) சமகாலத்தவருக்கு விஷயம் ஏதுமில்லை