Category Archives: Feeds

மாற்று – ஆலோசனை (aka) விழைப்பட்டியல் (aka) அடுத்த கட்டம்

தமிழில் எழுதும் பதிவுகளில் சுவையானதை மாற்று தவறாமல் சேமித்து வருகிறது. பல விஷயங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதை இப்போது பட்டியல் போடும் எண்ணம் இல்லை.

மாற்று அல்லது மாற்று போன்ற புதிய தளங்கள் எதை நிறைவேற்றலாம்?

1. மாற்று! குறித்து, கொள்கைகள் போன்றவை ‘வலைப்பக்கம் காணக்கிடைக்கவில்லை‘ என்று பிழை காட்டுகிறது. வலையகத்திற்கு முதன்முறையாக வருபவர்கள் ‘about us’ படிக்க விரும்புவார்கள்.

2. பங்களிப்பாளர்களின் இடுகைகளைக் குறிப்பிடாமல் தவிர்க்கிறார்கள். ‘பரஸ்பர முதுகு சொறிதலை இந்த கொள்கை தவிர்க்கிறது‘ என்பதற்காக இருக்கலாம். இருந்தாலும், ஏதோ இடறுகிறது. பதிவை எழுதியவரே, சுட்டிக் கிடங்கில் சேர்த்தால் கூட பொருத்தமானதாக இருந்தால்தான் சேர்ப்பார் என்னும் நம்பிக்கை வேண்டும்.

3. சுட்டியின் மேல் எலியைக் கொஞ்ச நேரம் உட்காரவிட்டால், எந்த ‘வகை’யில் சேர்த்திருக்கிறார்கள் (டூல்டிப்ஸ்) என்பதை அறிய முடிகிறது. அதனுடன் பதிவின் முதல் வரிகளையும் கூட சேர்த்து காண்பித்தால், முன்னோட்டமாக இருக்கும். இதன் மேர்சென்று விருப்பங்களைத் தேர்வு செய்து பயனர் கணக்கு (preferences, personalization & customization) கொணரலாம்.

4. ‘சூடான இடுகைகள்‘ போல் எத்தனை பேர் மேற்சென்று க்ளிக் செய்து, படித்தார்கள் என்பதை அறியத் தரலாம். ‘நட்சத்திர தாரகைகள்’ என்பது பகிர்பவரின் விருப்பம் என்றால், மெய்யாலுமே வாசகரின் மவுஸ் எங்கே செல்கிறது என்பதை அறிய முடியும்.

5. புகைப்படங்கள்: பதிவுகளில் வந்த நிழற்படங்களின் சுருக் வடிவத்தைக் கொடுத்து தூண்டில் இட வேண்டும்.

6. கடந்த முறை நான் வந்தபோது கடைசியாக வந்திருந்த பதிவு எது? நினைவில் வைத்திருந்து வேறுபடுத்தி காட்டினால் பயனாக இருக்கும்.

7. திண்ணை, நிலாச்சாரல், தென்றல், ஆறாம்திணை, தமிழோவியம், பதிவுகள், பூங்கா எக்ஸ்க்ளூசிவ்கள், கீற்று, அப்புசாமி ஆகிய இதழ்களையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளலாம். (ஏற்கனவே வரலாறு.காம் போன்றவை அவ்வப்போது வந்து கொண்டிருக்கிறது.)

8. வகைவாரியாக பார்க்க முடிவது போல், தேதிவாரியாக புரட்ட வசதி செய்து தரலாம். அன்றாட வாரத்தின் தாரகைகளுக்கு முகப்பு பக்கத்தில் இடம் கொடுக்கலாம். மாதம்/வாரம்/நாள்வாரியாக #4 கணக்கை காட்டி, வாசகரின் தானியங்கித் தேர்வுகளை காட்டலாம்.

9. தேடலை விரிவாக்குதல்: பதிவர் பெயர் தவிர, தலைப்பு, குறிச்சொற்கள் ஊடாக தேடுவது, உரலைப் பொறுத்து தேடுவது என்று ஆடம்பர (அட்வான்ஸ்ட்) வசதிகள் செய்து தரலாம்.

10. விளம்பரங்கள்: எம்.எஸ்.என். தமிழ், யாஹூ தமிழ், தினமலர் போன்ற தளங்களில் விளம்பரம் தந்து மாற்று.காம் முகவரியை பிரபலப்படுத்தலாம்.

கடைசியாக, கடந்த சந்திப்பில் மாற்று குறித்த விமர்சனமாக நண்பர்கள் சொன்னது:

அதிகம் அறியப்பட்ட, குறிப்பிட்ட சில பதிவர்கள்தான் திரும்பத் திரும்ப தேர்ந்தெடுக்கப்பட்டு பகிரப்படுகிறார்கள். இதுதான் வரும் என்பது போல் கணிக்கமுடிந்ததையே வெளியிடுகிறார்கள்.

இதற்கு பதிலாக இரண்டு வழிகளை சொன்னேன்:

(i) தற்போது உள்ளது போலவே தொடர்வது: ஆனால், தமிழ்மணம்/தேன்கூடு/வோர்ட்பிரெஸ் மூலமாக புதிதாக எழுத ஆரம்பித்த பதிவர்களை இன்னும் நிறைய கோர்க்கலாம்.

(ii) சற்றுமுன்னின் ‘அறிவியல் இன்று’, மா சிவக்குமார், மதி, பத்ரி போன்ற எப்போதும் வருபவர்களை பாப் யூரெல்ஸ்ஸில் வருவது போல (quickies என்னும் தலைப்பில்) இணைப்பது. தவறவிடக்கூடாதவர்களுக்கு இந்த செமி-நிரந்தர இடம். ஓடையைப் பொறுத்து தீர்மானிக்கும்படி செய்யலாம்.் க்வாலிடி குறைந்தால், மற்றவர்கள் போல் ஆக்கிவிடலாம்.

தொடர்புள்ள ஆங்கில வலையகங்கள், திரட்டிகள், சேமிப்புக் கிடங்குகள், பரிந்துரை பக்கங்கள், வலைப்பதிவுக் களங்கள்:

Tamilveli.com – Some UI Thoughts

தமிழ்வெளி – இன் user interface குறித்து பயனராகத் தோன்றியவை:

1. உரல் (http://www.tamilveli.com/) ரொம்ப எளிதில் தட்டி்சி செல்லும்விதமாக இருக்கிறது. +1

2. எழுத்துக்களுக்கிடையே போதிய இடைவெளி இல்லை. வார்த்தை, வரி, பத்தி என்று எல்லாவற்றுக்கும் இடையே வெள்ளை நிறம் நிறைய வேண்டும். தற்போதைக்கு பார்த்தவுடன் மயக்கமா… கலக்கமா… குழப்பமா! -1

3. ‘அச்சு மாதிரி‘ அமர்க்களம். வேண்டிய பதிவுகளை தேர்ந்தெடுத்து, ஹாயாக பக்கங்களைப் புரட்டலாம். +1

4. சுட்டி செல்லாமல், அங்கேயே காட்டும் தேடல் அருமை +1ஆனால், ‘முன்னோட்டம் மட்டும்‘ அல்லது ‘முழுமையான இடுகை‘ என்று இரண்டு தேர்வுகளை வாசகர்களிடமே விடலாம். மொத்தமாக் காட்டுவதால், தேடல் முடிவுகள் வருவதற்கு தாமதமாகிறது. -1

பழையதிலிருந்து புதிதுக்கு‘ & ‘புதியதிலிருந்து பழையதற்கு‘ மக்கர் செய்வதால் -1.

5. திடீரென்று மாமல்லபுர ஓவியம் எட்டிப் பார்க்கிறது. பல பக்கங்களில் வேறு இலச்சினைகள் வருகிறது. இடைமுகத்தை நிலையாக நிறுத்தலாம். (0)

6. உரல்களை சுட்டினால், தேன்கூடு, தமிழ்மணம் போல் இங்கும் புத்தம்புதிய சாளரங்களை (அல்லது tabs) திறந்து, இடுகையைக் காண்பிக்கிறார்கள். அதே சாளரத்தில் வலைப்பதிவை படிக்கும் வசதி வேண்டும். பயனரே விருப்பப்பட்டால், தனியாக திறந்து கொள்வார் என்று அவரின் இச்சைக்கே விட்டுவிடும் இடைமுகம் வேண்டும். (0)

7. பக்கத்தின் முடிவுக்கு சென்றவுடன் ‘முந்தைய இடுகைகள்‘ என்றோ, ‘பழைய பதிவுகள்‘ என்றோ, ப்ளாக்ஸ்பாட் (அல்லது) வோர்ட்பிரெஸ்.காம் தளத்தில் ‘Older Posts‘ என்று தூண்டில் இழுப்பது போல் போட்டு வைக்கலாம். மீண்டும் மவுசைத் தூக்கிக் கொண்டு, ஹோம் செல்ல நேரிடுவதால் -1

8. ‘இதர வகை பதிவுகள்‘ என்று சோத்தாங்கைப் பக்கம் வருவது எந்த வகை? எப்படி அங்கு இடுகைகள் இடம்பிடிக்கின்றன? (0)

9. ‘பின்னூட்டங்கள்‘ என்னும் பகுதியில் பழைய மறுமொழிகளின் நிலவரங்களை எவ்வாறு பார்ப்பது? பின்னூட்ட எண்ணிக்கைக்கு பக்கத்தில் – 0, 1, 2 என்று எண்கள் வருகிறதே… அது எதைக் குறிக்கிறது?

(எத்தனை பேர் அழுத்தி உள்ளே சென்றார்கள் என்னும் எண்ணிக்கை என்றால், பின்னூட்டங்களில் இந்த எண்ணைத் தவிர்த்து விடலாம். இடுகைகளிலும் இந்த எண் காணப்படுவது, பரபரப்பான பதிவுக்கு செல்ல வழிகாட்டுவது வசதிதான் என்றாலும், மறுமொழிப் பட்டியலில் குழப்பம் கொடுக்கலாம்.)

10. #8, #9 போல் எழும் வழமையாக கேட்கும் கேள்விகளுக்கு FAQ போட்டு, உதவிப் பக்கங்களைப் பார்க்க சொல்லலாம்.

  • தேன்கூடு என்றால் ‘பல மரம் கண்ட தச்சன்‘ போல் அகரமுதலி, சொந்த விருப்பு வெறுப்புக்கு ஏற்ற personalization + customization;
  • தமிழ்மணம் என்றால் ‘சூடான இடுகைகள்’, பூங்கா தேர்ந்தெடுப்புகள்;
  • என்பது போல் தற்போதைக்கு தமிழ்வெளிக்கு அடையாளங்கள், USP இல்லாதது மீண்டும் மீண்டும் வரத் தூண்டாமல், எப்பொழுதோ மட்டுமே வரவைக்கிறது.

ஏற்கனவே இருப்பதோடு திருப்திப்பட்டுக் கொள்ளாமல் தமிழ்ப்ளாக்ஸ்.காம் போல் புதியவை வருவது மகிழ்ச்சியைத் தருகிறது. மாற்று முயற்சிகளை முன்னெடுத்து செல்லும் தமிழ்வெளிக்கு பாராட்டு கலந்த வாழ்த்துக்கள்.