Category Archives: Energy

Food for Thought

இது நத்தார் விழாக்காலம். வாரந்தோறும் விருந்து. அளவளாவும்போது வழக்கமான குசலங்கள் முடிந்தவுடன் பேசுவதற்கு அவல் வேண்டுமா? உணர்ச்சிகரமான பேச்சைத் துவக்கி வைக்க உணவைக் குறித்தே உரையாட ஆரம்பிக்கலாம்.

உலகத்திற்கு எது உகந்தது?

பிரேசில் இருந்து வரும் அங்கக (ஆர்கானிக்) தக்காளி உட்கொள்வதா அல்லது பக்கத்து தெருமுக்கில் செயற்கை உரம் போட்டு வளர்த்ததா?

சுதந்திரமாக புல்வெளியில் உணவருந்தி கன்றுகளுக்கும் வயிறு முட்ட கொடுத்தபின் தரும் கறவைமாட்டுப்பாலா அல்லது பார்த்து பார்த்து உணவூட்டப்பட்ட, தானியத்தைத் தவிர்த்து பிறிதொன்றும் தவிர்க்கப்பட்ட அங்கக பசும்பாலா?

கோடி கணக்கில் ஏக்கரா வைத்திருக்கும் அங்கக நிலச்சுவாந்தாரிடம் தயாரான காய்கறிகளை வாங்குவதா அல்லது உள்ளூரில் சிரம் ஜீவனம் நடத்தும் ஏழை விவாசாயிடம் சென்று ‘உரம் போட்டியா; அங்கக வழிமுறை பின்பற்றினாயா’ என்று தொணதொணக்காமல் வாங்குவது மேலான விஷயமா?

நிறுவனங்களுக்கும் கூட்டுறவு சங்ககளுக்கும் நடுவில் – உடல்நலம், உணவு, சமூகப் பொருளாதாரம், சுற்றுச்சூழல் எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு முடிவுகளை எடுக்க வாடிக்கையாளர்களுக்குண்டான கேள்விகள் இது.

இன்னொரு கேள்வி. ஏன் அரிசி விலை ஏறுகிறது? இந்தியா போன்ற நாடுகளில் அது எப்படி நிலச்சுவாந்தார்களிடம் மட்டுமே லாபமாகிப் போகிறது?

பெட்ரோல் போட்டு குடா நாட்டு சண்டைகளை வளர்ப்பதை விட எத்தனால் போட்டு சுற்றுச்சூழல் ஆர்வலராகக் காட்டிக் கொள்வது மேலா?

According to the World Bank, the grain needed to fill up an SUV would feed a person for a year.

முழு அலசல் இங்கே: Food prices | Cheap no more | Economist.com

தொடர்புடைய கருத்துப் பதிவு: Dedicated to all Organic Nutheads « Snap Judgment

Communist Condemnations & Nuclear Energy or Political Bombs

ஏப்ரல் 26, 2006 செர்னோபில் அணுஉலை வெடிப்பின் 20வது ஆண்டு. சாவுக்கணக்குகள் பற்றி பல்வேறு தகவல்கள் இருக்க கிரின்பீஸ் அறிக்கையின் படி 92,000 பேர் கொல்லப்பட்ட இவ்விபத்தில் உருவான கதிரியக்க மேகங்கள் ஐரோப்பாவின் பெரும்பகுதியிலும் உக்ரைனிலும் பத்து நாட்கள் வரை நீடித்தது. நார்வேயின் இறந்துபோன மானின் இறைச்சியில் கதிரியக்க பாதிப்பு இருந்தது.

  • தைராய்டு சுரப்பியின் கோளாறுகள்,
  • புற்றுநோய்,
  • ரத்தப் புற்று

  உள்ளிட்ட நோய்கள் பாதிக்கப்பட்ட பல நாட்டு மக்களை இன்னமும் வாட்டுகிறது. கதிரியக்கம் 1600கி.மீ. சுற்றளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. கதிரியக்கத்தின் விளைவாக சாவுகள் இன்றும் தொடர்கின்றன.

  1. அணு ஆயுத கப்பலை எதிர்க்க வாருங்கள்! & அமெரிக்க அணு அரக்கனே சென்னைக்குள் நுழையாதே!
  2. சீன அதிபரின் இந்திய விஜயம் (நவம்பர் 20, 2006): ஹூவின் வருகைக்குச் சரியாக 5 தினங்கள் முன்பு, சீனத் தூதர் சன் யுக்ஸி ‘அருணாசலப் பிரதேசம் சீனாவிற்குச் சொந்தமானது’ என்கிறார்.
  3. அருணாசலப் பிரதேசம் எங்களுடையதே: சீனா (மே 27, 2007): வடகிழக்கு மாநிலங்களில் நடக்கும் போராட்டங்களுக்கு சீனா நிதியுதவி செய்கிறது.
  4. கேரளாவில் மார்க்சிஸ்டுகளின் மூளைச்சலவை (காலச்சுவடு கடிதம்)
  5. சமூக சேவகி மேதா பட்கர் கைது: அன்றைய ஜெயலலிதாவின் காவல்துறையையும், நரேந்திர மோடியின் காவல்துறையையும் விட புத்ததேவின் காவல்துறை நடவடிக்கை மோசமானது.
  6. கலியுகக் கண்ணன்‘ ஜோதிபாசு: மகாபாரதத்தில் கிருஷ்ணன் எப்படியோ அதுபோல மார்க்சிஸ்ட் கட்சிக்கு தலைவர் ஜோதிபாசு கலியுகக் கண்ணனாக இருக்கிறார்.
  7. வஞ்சித்த செர்னோபில் :: அசுரன் (விழிப்புணர்வு & கீற்று)
  8. அணுசக்தி மூலம் மின்சாரம் :: கூடங்குளம் பயங்கரம் (கல்கி – 24.06.2007) – ஜி.எஸ்.எஸ்.
  9. அணுசக்தி உடன்பாடும் தாராப்பூர் அணுமின் நிலையமும் (சந்திப்பு & தீக்கதிர்): யுரேனியத்தை இந்தியாவுக்கு வழங்கவும் அமெரிக்கச் சட்டம் இடம் தராது; ரஷ்யாவிடமிருந்து வாங்கினால் அது உடன்பாடு மீறல்; வாங்காவிட்டால் தாராப்பூர் அணுமின் நிலையத்தை மூடவேண்டியதுதான்.
  10. ‘இருளாற்றலை’ விளக்கும் புதிய அறிவியல் கொள்கை :: சி.இ. சூரியமூர்த்தி