அங்காடித் தெரு, பார்ப்பனீயம், சாதி, பெண்ணியம் – திருமலை ராஜன்


தொடர்புள்ள செய்தி:

:: By NILANJANA S. ROY (NYT) – In India, thousands of women are participating in movements against the abuse of women in public spaces.
முந்தைய இடுகை :: ஜாதி: தேவையா? வேண்டாமா?

முதலில் அங்காடித் தெரு சினிமாவில் நீங்கள் வைத்திருந்த பிராமணப் பெண்ணின் பாத்திரம் உங்கள் கதைப் படி, கதையின் வலுவிற்குத் தேவையான ஒரு பாத்திரம் என்பதையும் அந்தப் பெண்மணியின் மூலமாகவே நீங்கள் மாத விலக்கைத் தீட்டாகவும் அதே நேரத்தில் புனிதமாகவும் கருதும் இந்து மதத்தின் இரு வேறு எல்லைகளை விளக்குவதற்கும் அதன் மூலம் சேர்மக்கனி பெறும் மன தைரியத்தை விளக்குவதற்கும் அந்தப் பாத்திரத்தை நீங்கள் படைத்திருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். நிச்சயம் உங்களது பாத்திரப் படைப்பிற்கு உள்நோக்கம் கற்பிக்கவும் மாட்டேன். அதன் நோக்கம் பற்றி நன்கு அறிந்தவன். மேலும் அந்த வழக்கத்தைக் கடைப்பிடிக்கும் ஒரு பிராமணப் பெண்ணைக் காட்டினால் மட்டுமே அந்தக் காட்சிக்கு யதார்த்தமும், நிஜத்தன்மையும் கிட்டும் என்பதற்காக நீங்கள் அதை வைத்திருக்கிறீர்கள் என்பதையும் நான் நன்கு அறிவேன்.

நிச்சயமாக நீங்கள் பிராமணர்களை இழிவு செய்யும் நோக்கத்தில் அந்தப் பாத்திரத்தை வைக்கவில்லை என்பதை நன்கு அறிவேன். அதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. ஒரு காட்சிக்கு அதன் களனும், அந்தப் பாத்திரங்களின் நம்பகத்தன்மையும், களனின் யதார்த்தமும், ஏன் பாத்திரங்கள் கையாளும் மொழியும் கூட முக்கியமானவை என்பதை மலையாளப் படங்களையும், பிற முக்கியமான உலகப் படங்களையும் தொடர்ந்து பார்ப்பவன் என்ற முறையில் இந்தக் காட்சிக்கு நீங்கள் பயன் படுத்தியிருக்கும் பாத்திரத்தின் ஜாதியின் முக்கியத்துவம் குறித்தும் நான் வேறு எவரையும் விட மிக நன்றாகவே அறிவேன்.

நம்பூதிரிகளைக் காட்டாமல் ஒரு பரிணயம் எடுக்கவியலாது. மீனவர்களைக் காட்டாமல் ஒரு செம்மீன் சாத்தியமேயில்லை. கம்னியுஸ்டுகளைக் காட்டாமல் ஒரு அரபிக் கதாவை எடுத்திருக்க முடியாது. நாயர்களைச் சொல்லாமல் ஈழவர்களைச் சொல்லாமல் பெரும்பாலான மலையாளப் படங்களை எடுத்திருக்கவே முடியாது. முஸ்லீம்களைச் சொல்லாமல் ஒரு மிழிகள் சாட்சி எடுத்திருக்க முடியாது. கிறிஸ்துவர்களைக் காண்பிக்காமல் ஒரு அச்சன் உறங்காத வீட்டையோ, ஒரு சின்சையோ தொட்டிருக்கக் கூட முடியாது.

ஆகவே ஒரு படைப்பில் அது சினிமாவாக இருந்தாலும் சரி, நாவலாக இருந்தாலும் சரி அந்தக் கதையில் ஒரு குறிப்பிட்ட இனக்குழுவைச் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டாலோ அதைச் சொல்லியே ஆக வேண்டும். அப்படிச் சொல்லாமல் மழுப்பினால் அது மணிரத்தினத்தின“இருவர்” சினிமா போல ஒரு வெளிறிப் போன ஒரு அபத்தமான படைப்பாகவே போய் முடியும். அந்தப் படைப்பின் நம்பகத்தன்மையே கேள்விக்குரியதாகி அந்தப் படைப்பே கேலிக்குரியதாகி விடும். ஆகவே ஒரு படத்திலோ ஒரு நாவலிலோ ஒரு ஜாதியோ, ஒரு கட்சியோ, ஒரு இனமோ, ஒரு மதமோ சொல்ல வேண்டிய தேவை அந்தக் கதைக்கு இருப்பின் அதைத் தயங்காமல் சொன்னால் மட்டுமே ஒரு நல்ல படைப்பு உருவாகும் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் ஆட்சேபணையும் கிடையாது.

அதே அடிப்படையில் எனக்கும் அங்காடித் தெரு படத்தில் நீங்கள் படைத்திருக்கும் பாத்திரங்களில் எந்தவித உள்நோக்கமும் கிடையாது என்பதை நான் நிச்சயமாகத் தயங்காமல் சொல்வேன். அப்படி எவ்வித சந்தேகமும் இருந்திருப்பின் மிக நீண்ட இரு பெரும் பதிவுகளை அந்தப் படம் குறித்து

http://solvanam.com/?p=7588
http://solvanam.com/?p=7575

நான் சொல்வனத்தில் எழுதியே இருக்க மாட்டேன்.

இரண்டாவதாக நான் எந்த ஜாதியின் பிரதிநிதியாகவும் என்னை நிறுத்திக் கொண்டு இங்கே எழுதவில்லை. முதலில் அப்படி நிறுத்திக் கொள்ளும் தகுதி எனக்குக் கிடையாது. அப்படியே நான் நிறுத்திக் கொள்ள முயன்றாலும் அதே ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்னைக் கல்லால் அடித்து இறக்கி விட்டு விடுவார்கள். ஆகவே அந்த சந்தேகமும் உங்களுக்கு வேண்டியதில்லை. நான் இங்கு என் சார்பாக மட்டுமே என் அனுபவத்தின் அடிப்படையில் விளைந்த சில கருத்துக்களை மட்டுமே இங்கு பகிர்ந்து கொள்கிறேனே அன்றி நான் யாரையும் எந்த ஜாதியின் பிரதிநிதியாகவும் பேசவில்லை என்பதை தெளிவாகச் சொல்லிக் கொள்கிறேன்.

வேறு எந்த ஜாதிக்கு வேண்டுமானாலும் ஒரு ஒற்றுமையான பிரதிநிதி இருந்து விட முடியும் ஆனால் பிராமணர்களுக்கு மட்டும் அந்த ஒற்றுமை உணர்வு சாத்தியமே இல்லை என்பது என் தீர்மானமான எண்ணம். அங்கு ஒரே ஒருவர் மட்டும் மிச்சம் இருந்தால் கூட நிச்சயம் இரண்டு விதமான கருத்து அந்த ஒருவரிடமிருந்தே கிளம்பும் அவ்வளவு ஒற்றுமையுள்ள சமூகம் அது. ஆகவே நான் எனக்காக மட்டுமே இங்கு பேசுகிறேன் என்பதையும் தெளிவு படுத்தி விடுகிறேன்.

ஆனால் ஒருவர் ஒரு குழுவிற்காக பேசுவதில் எந்த தப்பும் இல்லை என்பது என் கருத்து. இஸ்லாமியத் தீவீரவாதத்தால் குண்டு வெடிப்புகளால் பாதிக்கப் படும் எந்தவொரு ஹிந்துவும் ஹிந்துக்கள் சார்பாகப் பேசினால் அதை நாம் தவறாக கருத முடியாது என்பதே என் எண்ணம்.

இன்று தமிழ் நாட்டில் ஏழை பள்ளி மாணவர்களில் கிறிஸ்துவர்களுக்கும், முஸ்லீம்களுக்கு மட்டுமே பண உதவி அரசாங்கத்தால் செய்யப் பட்டு வருகிறது. அதை விடக் கீழான ஏழ்மையில் இருக்கும் இந்து மாணவர்களுக்கு அந்தச் சலுகை மறுக்கப் படுகிறது. வருடத்திற்கு ஒரு கிறிஸ்துவ/முஸ்லீம் மாணவனுக்கு அரசாங்கமே கல்லூரிப் படிப்பிற்காக ஒரு லட்சம் ரூபாய்கள் வழங்குகிறது ஆனால் அதே வேளையில் கடும் ஏழ்மைச் சூழலில் வாழும் இந்து மாணவனுக்கு அது கிடையாது என்னும் பொழுது அந்த ஒரு லட்ச ரூபாய்க்காக அந்த ஏழை இந்து மாணவன் மதம் மாற வாய்ப்புகள் உண்டு.

ஆக அரசாங்கமே மதமாறத்தை ஊக்குவிக்கிறது என்ற அநியாயத்தைக் கருதி ஒரு இந்துவாக நான் குரல் கொடுத்தால் நிச்சயமாக அதை ஒரு குழுவின் பிரதிநிதியாக என்னைக் கருதிக் கொள்கிறேன் என்று நீங்கள் குறை சொல்ல மாட்டீர்கள் என்றே எண்ணுகிறேன். அப்படிச் சொன்னால் அது தவறு. ஆக ஒரு சில இடங்களில் பிரதிநித்த்துவக் குரல்கள் ஒலிப்பதில் தவறில்லை என்றே நான் கருதுகிறேன்

இந்த இரண்டு சுய விளக்கங்களுடன் என் கருத்துக்களை வைக்கிறேன்.

முதலில் தமிழ் சினிமக்களில் பிராமண ஜாதி பாத்திரங்கள் இழிவாகக் காண்பிக்கப் படுவது குறித்து சில கருத்துக்கள்.

தமிழ் சினிமா, இலக்கிய, கலைச் சூழலில் இன்று நீங்கள் எந்த ஜாதியையும், எந்த கட்சியையும் குறை கூறும் வகையில் சொல்லி விட முடியாது. ஆனால் அதற்கு ஒரே ஒரு விதிவிலக்கு பிராமணர்கள் மட்டுமே. பிராமணர்களை சினிமாக்களில் இழிவாகவும், கேலிக்குரியவர்களாகவும், ஆபாசமாகவும் காண்பிக்கப் படுவது எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் பல வருடங்களகாகத் தமிழ் நாட்டில் தொடர்ந்து வருகிறது. இதை ஆரம்பித்து வைத்தவர்களே பிராமண சினிமாக்காரர்கள் தான் என்பதையும் சொல்ல வேண்டும்.

சூர்யா போன்ற இயக்குனர்கள் பிராமணப் பெண்களைக் காட்டும் விதம் போல் வேறு எந்த விதப் பெண்களையும் பெயர் சொல்லிக் காண்பித்து விட முடியாது. சினிமாக்களில் மட்டும் அல்ல பத்திரிகைகள், இணைய தளங்கள், ப்ளாகுகள் ஆகிய இடங்களிலும் கூட இந்த ஆபாசம் தொடர்கிறது. அதற்கு எந்த விதமான நியாயத்தையும் சொல்லி விட முடியாது. ஒரே காரணம் அவர்கள் எண்ணிக்கையில் குறைவானவர்கள். எதிர்த்துப் பேச விருப்பம் இல்லாதவர்கள் அல்லது அதற்கான ஒற்றுமை இல்லாதவர்கள்.

ஏற்கனவே தமிழக அரசியலில் அவர்கள் கொடுமையானவர்களாகவும் ஆதிக்க ஜாதியினர்களாகவும் பெரும் வில்லன்களாகச் சித்தரிக்கப் பட்டவர்கள். ஆகவே அவர்களை எப்படி சித்தரித்தாலும் யாரும் எதிர்த்து கேள்வி கேட்க்க மாட்டார்கள், அப்படியே ஒரு சிலர் வந்தாலும் அவர்களை அடித்து விரட்டி விடலாம் என்ற எண்ணம் மட்டுமே இவ்வித சித்தரிப்புக்களுக்குக் காரணம். இதையே நான் எந்த ஜாதியைச் சேர்ந்தவனாக இருந்தாலும் சொல்லியிருந்திருப்பேன்.

ஒரு ஜாதியினரை ஒரு கதையின் நம்பகத்தன்மை கருதி காண்பிக்கக் கூடாதா என்றால் அதற்குப் எனது பதில் தாராளமாக காண்பிக்கலாம் காண்பிக்க வேண்டும் என்பதே. ஆனால் தமிழ் சினிமாக்களில் சமீப காலமாக அந்த வித யதார்த்த நோக்கம் கருதி பிராமணர்கள் காண்பிக்கப் படுவதில்லை. அவர்களது உடை, தோற்றம், மொழி ஆகியவற்றைக் கேலி செய்யும் நோக்கிலும் பெண்களை விரக் தாபத்தில் அலையும் பெண்களாகச் சித்தரிக்கும் நோக்கிலும் மட்டுமே அந்த ஜாதியினர் காண்பிக்கப் படுகிறார்கள் என்பதைத் தமிழ் படங்களைத் தொடர்ந்து பார்க்கும் எவரும் அறிவர்.

இதனால் உனக்கு என்ன? நீ ஏன் அவர்களது பிரதிநிதியாக வருகிறாய் ? என்று நீங்கள் கேட்க்கலாம்.

நான் யாருடைய பிரதிநிதியாகவும் இங்கு வரவில்லை. நான் என்னுடைய பிரதிநிதியாக மட்டுமே இங்கு பேசுகிறேன்.

ஒரு பிராமணப் பெண்ணை தொடர்ந்து தமிழ் சினிமாக்களில் விரக தாபம் மிக்க பெண்களாக சித்தரிப்பதன் மூலம் அந்த ஜாதிப் பெண்கள் தெருவில் வரும் பொழுது அவர்களைக் காணும் எந்தவொரு விடலைப் பையன்கள் மனதிலும், எந்தவொரு பொறுக்கியின் மனதிலும், எந்தவொரு லும்பன்களின் மனதிலும் அவர்களை கேலிப் பொருளாக எளிதில் வக்கிரமாகக் கைக்கொள்ளும் மனோநிலையே ஏற்படும். இதில் படிதவர்களுக்கும் தெருவில் சுற்றும் ரவுடிகளுக்கும் கூட வித்தியாசம் இல்லை.

அதனால்தான் அமெரிக்காவில் பி எச் டி செய்யும் பொறுக்கிகள் கூட இணையத்தில் பாட மறுக்கும் பாப்ப்பாத்திகள் என்று எளிதாக எழுதி விட்டு முற்போக்குப் பட்டமும் வாங்கிக் கொண்டு போய் விட முடிகிறது.

சினிமாக்களில் மட்டும் அல்லாமல் ஒவ்வொரு தெருமுனை தி க, தி மு க, தனித் தமிழ் கூட்டங்களிலும் இதே விதமான வக்கிரப் பிரச்சாரமே தமிழ் நாட்டில் கடந்த அறுபது வருடங்களாக அவிழ்ந்த்து விடப் பட்டிருக்கிறது. இவ்வாறான ஒரு சூழலில் சினிமாக்களும் சேர்ந்து கொள்ளும் பொழுது பிராமணப் பெண்களும் ஆண்களும் தெருவில் செல்லும் பொழுது ஏற்படுத்தப் படும் அவமானகரமான செயல்பாடுகளுக்கு இந்த விதமான சினிமாக்களே பொறுப்பாகின்றன. இதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் தமிழ் இணைய ப்ளாகுகளையும் அதில் வெளியிடப் படும் பின்னூட்டங்களையும் ஒரு நாள் உலாவிப் பார்த்தாலே புரிந்து விடும்.

பிராமணப் பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் கூட கடுமையான கேலிக்கும் தாக்குதலும் அடிக்கடி உள்ளாகின்றனர். ஆவணி அவிட்டம் என்ற பிராமணர்களின் பூணூல் அணியும் சடங்கு முடிந்து அவர்கள் வீடுகளுக்குத் திரும்புகையில் தாக்கப் படுவதும் ஆபாசமாகக் கிண்டல் செய்யப் படுவதும் இன்றும் தமிழ் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்குகளில் நடை பெறுகின்ற ஒரு காட்சியே. ஒரு முஸ்லீம் பெண் பர்தா அணிந்து வரும் பொழுது செய்யப் படாத ஒரு கிண்டல், ஒரு முஸ்லீம் குல்லா போட்டு வரும் பொழுது, மீசையை மழித்து விட்டுத் தாடி மட்டும் வைத்துக் கொண்டு செல்லும் பொழுது செய்யப் படாத ஒரு கேலி, ஒரு சர்தார் தாடி வைத்து, டர்பன் வைத்துக் கொண்டு போகும் பொழுது செய்யப் படாத அவமானம், ஒரு பாதிரியார் பாவாடை அணிந்து கொண்டு போகும் பொழுது செய்யப் படாத ஒரு ஏளனம், ஒரு பிராமணப் பெண் மடிசார் கட்டிக் கொண்டு போகும் பொழுதும், ஒரு பிராமணப் புரோகிதர் குடுமி வைத்துக் கொண்டு செல்லும் பொழுதும், ஒரு பிராமணர் பூணூல் அணிந்து கொண்டு போகும் பொழுது மட்டுமே செய்யப் படுவதன் காரணம் என்ன? தமிழ் நாட்டின் இன வெறுப்பு அரசியல் மற்றும் ஆபாச சினிமாக்கள் இரண்டுமே காரணம் என்று நான் சொல்கிறேன்.

இதை நீ ஏன் சொல்கிறாய் என்று கேட்டால் என் மனைவியோ, அம்மாவோ, அப்பாவோ, மகளோ செல்லப் படும் பொழுதும் இதே அவமானத்திற்கும் தாக்குதலுக்கும் உள்ளாகக் கூடிய சாத்தியங்கள் இருப்பதினால் சுயநலம் கருதி நான் இவற்றைக் கடுமையாக எதிர்க்கிறேன். கண்டனங்களைப் பதிவு செய்கிறேன்.

இதனால் பாதிக்கப் படாத இந்த நிலைகளையெல்லாம் அறிய நேராத நீங்களோ வேறு எவருமோ இதையெல்லாம் வெற்றுப் புலம்பல் என்று கருதி மிக எளிதாக இடது கையால் ஒதுக்கி விட்டுப் போய் விடலாம் அல்லது ஒரு குழுவின் பிரதிநிதியாக தன்னைக் கருதிக் கொண்டு அநாவசியமாகப் புலம்புகிறான் என்று மிக எளிதாக ஒதுக்கி விடலாம். உண்மை அதுவல்ல இன்றும் இவை போன்ற அவமானத் தாக்குதல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன அதற்குப் பெரும் அளவில் நம் அரசியல் கட்சிகளும், ஆதிக்க ஜாதியினரின் பழியைப் பிறரிடம் தள்ளி விடும் போக்கும், சினிமாக்களுமே காரணம் என்று நான் கருதுகிறேன். அந்தக் காரணங்களினால் நான் சொந்த வாழ்வில் நானும் என் குடும்பத்தாரும் பாதிக்கப் படும் பொழுதும் அவ்வாறு பாதிக்கப் படும் சாத்தியம் இருக்கும் பொழுதும் அதற்கான காரணங்களை ஒது தனிப்பட்ட ஒரு அநாதயான குரலாகவேனும் ஒரு சிறிய பலவீனமான எதிர்ப்பையாவது பதிய முயல்கிறேன்.

இப்படி சினிமாக்களில் பிராமணர்களை அவமானப் படுத்தும் போக்குகளை ஒரு ஞாநியோ, ஒரு தி ஹிந்து ராமோ ஒரு கமலஹாசனோ கேள்வி கேட்க்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்களின் சுய அடையாளங்களை மறைப்பதற்கே அவர்கள் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்கிறார்கள்.

மேலும் ஒரு கமலஹாசனின் குடும்பப் பெண்களோ, ஒரு பாலச்சந்தரின் குடும்பப் பெண்களோ டவுண் பஸ்ஸில், தாம்பரம் பீச் ட்ரெயினில் செல்பவர்கள் அல்லர், ரேஷன் அரிசிக்காக க்யூவில் நிற்கும் பிராமணர்கள் அல்லர், தனியார் வேலைக்குச் செல்பவர்கள் அல்லர். ஆகவே அவர்களுக்கு இது குறித்து எவ்விதக் கவலையும் கிடையாது, மாறாக ஒரு ஜெயமோகனை தலித்துக்களை அவமானப் படுத்தி விட்டார் என்று சொன்னால் அவர்களுக்கு முற்போக்கு பட்டம் கிட்டும் அவர்களின் ஜாதி அடையாளத்தை மறைக்க உதவும் அதனால் அதை வேகமாகச் செய்வார்கள்.

ஆகவே பாதிக்கப் படுபவர்கள் மட்டுமே இது குறித்து ஏதேனும் சொல்ல முடியும். நான் இந்த விஷயத்தில் மிகக் கடுமையாகப் பாதிக்கப் பட்டவன். சிறு வயதில் நான் அனுபவதித்த ஒரு கொடூரமான தாக்குதலின் பயங்கரத்தில் இருந்து இன்றும் மீள முடியாத கடுமையான கசப்பில் உழல்பவன் என்ற முறையில் இவை போன்ற சினிமாக்களை ஒரு தனி மனிதனாக கண்டித்தால் அது தவறு ஏதும் இருக்க முடியாது என்றே கருதுகிறேன்.

சினிமாவில் பிராமணப் பெண் அலைவதாகக் கவர்ச்சி மதிப்பு கருதி மட்டும் காண்பிக்கப் படும் பொழுது அதைப் பார்க்கும் ரோட்டில் அலையும் ரவுடிக்கு அவன் காணும் பிராமணப் பெண்களின் இடுப்பைக் கிள்ளச் சொல்லும் தைரியத்தை அளிக்கிறது. சினிமாவில் குடுமி வைத்த ஒரு புரோகிதர் இழிவு செய்யப் படும் பொழுது ரோட்டில் அதே போலச் செய்யும் ஒரு புரோகிதர் அசிங்கமாக ஏசப் படுகிறார் சமயங்களில் தாக்குதலுக்கும் உள்ளாகிறார். இவையெல்லாம் நடக்கின்றன, நானே கண்டிருக்கிறேன். உங்கள் சூழலில் நடக்கவில்லை என்பதினால் இப்படி நடப்பதேயில்லை என்று சொல்லி விடாதீர்கள்.

ஏன் தமிழ் நாட்டில் தலித்துக்கள் அவமானப் படுத்தப் படுவதில்லையா, கொடுமைக்குள்ளாவதில்லையா நீ அவமானப் பட்டால் என்ன உன் முன்னோர் செய்த பாவத்திற்கு நீ கொடுக்கும் விலை இது என்பது அடுத்த பதிலாக வரும். நிச்சயமாக ஒடு தலித் படும் வேதனைக்கும் அவமானத்திற்கும் வேறு எந்த அவமானமும் ஈடு இணையாகாது. ஆனால் அவர்களை சினிமாவில் அப்படிச் சித்தரிக்க யாரும் துணிவதில்லை.

கட்சி மேடைகளில் யாரும் பேசுவதில்லை. அவர்கள் படும் அவமானம் அந்தந்தப் பகுதிகளில் வாழும் பிராமணர்கள் அல்லாத பிற ஜாதியினரால் உண்டாக்கப் படுவது மட்டுமேயன்றி சினிமாக்கள் காரணமாக இருப்பதில்லை.

எனக்கு ஜெயமோகனைத் தெரியும், ஒரு சினிமாவிலோ ஒரு படைப்பிலோ தேவை கருதி ஒரு ஜாதியோ ஒரு இனமோ, ஒரு மதமோ ஒரு கட்சியோ சித்தரிக்கப் பட வேண்டுமானால் அதன் அவசியம் குறித்து நன்கு தெரியும். ஆகவே அங்காடித் தெருவில் நீங்கள் எந்த வித உள்நோக்கமும் இன்றி அந்தக் கதையின் நம்பகத்தன்மைக்காகவும், அதன் நிஜத்தன்மைக்காகவும் மட்டுமே அந்தக் காட்சியை வைத்திருக்கிறீர்கள் என்பதும் நன்கு தெரியும்.

ஆனால் உங்களை அறியாத உங்கள் எழுத்துக்களைப் படித்தறியாத, உங்கள் நோக்கங்களை அறிந்திராத, தமிழ் சினிமாவில் வழக்கமாக பிராமணர்கள் சித்தரிக்கப் படுவதைக் கண்டு வெறுப்பும், அவநம்பிக்கையும் கொண்ட அதனால் பாதிக்கப் பட்ட ஒரு சராசரி பிராமணப் பெண்ணோ ஆணோ, அப்படிச் செய்யும் சினிமாக்காரர்களையும் உங்களையும், வசந்த பாலனையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கவே செய்வார்கள். அது புரியாமல் உங்களைப் பற்றி அறியாமல் செய்யும் ஒரு செயலாகவே நான் கருதுவேன்.

அடுத்து அடையாளம் குறித்து. எனக்கு அடையாளங்கள் ஏதும் கிடையாது. எனக்கு அடையாளங்களின் அவசியமும் தேவையும் கிடையாது. எந்த பிராமணர்களிடத்தும் போய் எதற்காகவும் கெஞ்சி நின்றதும் கிடையாது. ஜாதி என்பது உறவுகளைப் பேணவும் உணவு, சடங்குகள் போன்ற ஒரு சில கலாச்சார அடையாளங்களை தொடர்வதற்காகவும், ஒருவருக்கு ஒருவர் தேவைப் பட்டால் கஷ்டப் படுவதற்கு உதவுவதற்காகவும் வேண்டுமானால் ஜாதிகள் தேவைப் படுமே ஒழிய அவற்றை மீறி அதன் தேவைகள் ஏதும் இல்லை என்ற கொள்கைகள் உடையவன்.

மேலும் ஒருவர் எந்த ஜாதியில் பிறந்தாலும் பிறப்பின் அடிப்படையில் அவர்கள் யாருக்கும் உயர்வானவர்களோ தாழ்வானவர்களோ கிடையாது என்ற நம்பிக்கையும் உடையவன். ஆனாலும் நான் பிறந்த குழுவின் அடிப்படையில் என் மீது நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சில அடையளங்கள் திணிக்கப் படுகின்றன. அதற்கு நான் பொறுப்பாக முடியாது, நீ இந்த ஜாதி ஆகவே இப்படித்தான் நடந்து கொள்வாய் என்ற தெளிவான முன் தீர்மானங்கள் கொண்டே இன்று தமிழ் நாட்டில் எவரும் அணுகப் படுகிறார்கள்.

ஆகவே என் மீது திணிக்கப் படும் ஜாதி சார்ந்த அடையாளங்களுக்கு நான் பொறுப்பாக முடியாது. ஆகவே ஒரு ஜாதியின் அடையாளமாக நான் இதைச் சொல்லாமல் தனிப்பட்ட அளவில் பாதிக்கப் பட்ட பாதிக்கப் படும் வாய்ப்புள்ளவன் என்ற அளவில் மட்டுமே நான் இதை அணுகுகிறேன் என்பதை மீண்டும் ஒரு முறை தெளிவு படுத்திக் கொள்கிறேன்.

அங்காடித் தெருவில் அந்த பிராமணர் பாத்திரம் குறித்தும் பக்தியுள்ள இந்துக்கள் வில்லன்களாக காண்பிக்கப் படுவதும் குறித்தும் நீங்கள் உள்நோக்கம் கருதி அவற்றை வைக்காவிட்டாலும் கூட வக்கிரம் புரையோடிப் போன நம் தமிழ் சூழலில் அவை எவ்வாறு புரிந்து கொள்ளப் படும் என்ற என் அச்சத்தை எனது அங்காடித் தெருவின் சமூகப் பார்வை என்ற கட்டுரையில்

http://solvanam.com/?p=7588

ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். குறை உங்களிடம் இல்லை நம் பார்வையாளர்களிடம் உள்ளது என்பதைச் சொல்லியிருக்கிறேன். நீங்கள் ஒரு பிராமணப் பெண்ணை அப்படிச் சித்தரிப்பதினால் எல்லா பிராமணப் -பெண்களுமே அப்படித்தான் என்று சொல்ல வரவில்லை. நீங்கள் ஒட்டு மொத்த ஜாதியையும் சொல்ல வரவில்லை என்பதை ரப்பர் படித்த, பி தொ நி குரல் படித்த, காடு படித்த, அனைத்து கட்டுரைகளையும் படித்த, ஜெயமோகனுடன் நெருங்கிப் பழகி நேரில் அறிந்த நான் நன்கு அறிவேன். அதில் எனக்கு எவ்விதச் சந்தேகமும் கிடையாது.

ஆனால் இதை அறியாத பொதுவாகவே கடந்த அறுபது எழுபது வருடங்களாக தமிழ் நாட்டில் நிலவி வரும் கடுமையான பிராமணக் காழ்ப்புச் சூழலில் வளர்ந்த பிராமணர்கள் என்றாலே கொடூரமான வெறியர்கள் என்று சொல்லி வளர்க்கப் பட்ட தமிழர்களில் பலருக்கும் இந்தக் காட்சி பிராமணர்களை கடுமையாக வெறுக்க மற்றும் ஒரு காரணத்தைக் கற்றுக் கொடுக்கும் அது போன்ற குரோத மனப்பான்மைக்கு தூபம் போடும்.

இது சினிமாவில் அதை வைத்த உங்கள் நோக்கம் வேறு ஆனால் அது பெரும்பான்மை தமிழர்களிடம் ஏற்படுத்தும் விளைவு வேறு. நீங்கள் அறியாமலேயே விளைவது அந்தக் குரோதம். இந்தச் சூழல் கேரளாவில் கிடையாது. அங்கு படம் பார்ப்பவனுக்குத் தெரியும். சினிமாவில் ஒரு நம்பூதிரியோ, ஒரு முஸ்லீமோ, ஒரு கிறிஸ்துவனோ மோசமாக காண்பிக்கப் பட்டால் அது அதே இனத்தைச் சேர்ந்த அனைவரின் ஒட்டு மொத்தக் குணமும் கிடையாது என்பதை ஒரு எளிய மலையாள ரசிகன் கூட புரிந்து கொள்வான்.

ஆனால் தமிழ் நாட்டில் அந்த நிலை இல்லை. ஆகவேதான் தமிழ் சினிமாக்களில் ஜாதிகளை வெளிப்படையாகக் காண்பிப்பதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. இங்கு நிலவும் சூழலில் ஒரு கட்சியையோ, ஜாதியையோ, தலைவர்களையோ படைப்பின் யதார்த்தம் கருதி கூட அப்படியே காண்பித்து விட முடியாது என்பதுதான் தமிழ் நாட்டு யதார்த்தம். ஆனால் பிராமணர்களை காண்பிக்கலாம் அதற்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்கள் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலோனோர் அதை உரிய விதத்தில் புரிந்து கொள்வார்கள். கையை, தலையை வெட்ட வரமாட்டார்கள்.

உண்மைதான்.

அதனால் உங்களைப் போன்ற ஒரு சில படைப்பாளிகள் நேர்மையான காரணங்களினால் ஒரு சின்ன சுதந்திரம் எடுத்துக் கொள்கிறீர்கள் அதில் தப்பும் இல்லை. ஆனால் அந்த சின்ன சுதந்திரம் கூட அப்படிப் பெருந்தன்மையுடன் புரிதலுடன் அமைதி காக்கும் ஒரு தரப்பாருக்கும் கூட எதிர் மறையான விளைவுகளையே ஏற்படுத்துகின்றன என்பதே என் ஆதங்கம்.

இன்றைய தமிழ் சூழலில் ஒரு சிவாஜி, ஒரு எம் ஜியாரை விமர்சிக்க முடியாது. பிராமணர்களைத் தவிர வேறு எந்தவித ஜாதியினரையும் பெருமைப் படுத்துவது அன்றி வேறு எந்த விதமாகவும் விமர்சித்து விட முடியாது. பா ஜ க போன்ற ஒரு சில கட்சிகளைத் தவிர வேறு எந்த கட்சியினரையும் சினிமாவில் விமர்சித்து விட்டு உயிரோடு இருந்து விட முடியாது.

இப்படியாகப் பட்ட ஒரு சூழலில் படைப்புச் சுதந்திரம் கருதி எதிர்ப்புத் தெரிவிக்காத ஒரு சமூகத்தை மட்டும் எப்படியும் காண்பிக்கலாம் என்பது நிச்சயம் படைப்பாளிக்கு எந்த வித எதிர்ப்பையும் ஏற்படுத்தாது ஆனால் அந்த சமூகத்தின் மீது தமிழ் நாட்டுச் சூழலில் ஒரு வித புரிதல் இல்லாத எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்த அவை போன்ற யதார்த்தம் கருது உள்நோக்கமின்றி வைக்கப் பட்ட காட்சிகள் காரணமாகி விடுகின்றன என்று கருதுகிறேன்.

இன்றைய சூழலில் தமிழ் நாட்டில் நான் ஒரு சினிமா இயக்குனராக இருந்தால், ஒரு சமுதாயம் அல்லது ஒரு கட்சி மட்டுமே தன் பலவீனம் காரணமாகவோ, எண்ணிக்கை காரணமாகவோ, பெரும் தன்மை காரணமாகவோ, சரியான புரிதலின் காரணமாகவோ அல்லது வேறு எந்த விதமான காரணமாகவோ தன்னைப் பற்றிய நேர்மையான, ஆபாசமான, கேலியான, உள்நோக்குள்ள்ள, இல்லாத அனைத்து விதமான சித்தரிப்புகளையும் பொறுமையுடனும் புன்னகையுடனும் அனுமதிக்கிறது என்றாலும் கூட என் படைப்புகளில் நான் அந்த சமூகத்தை மட்டுமே பயன் படுத்த மாட்டேன். என்று எனக்கு எல்லாவிதமான சமூக அமைப்புகளையும், ஜாதிகளையும்,கட்சிகளையும், தலைவர்களையும் ஒரே விதமாக விமர்சிக்கும், சித்தரிக்கும் உரிமை மறுக்கப் படுகிறதோ அந்தவிதமான ஒரு விஷச் சூழலில் நான் ஒரு சமூகத்தை மட்டும் அது அனுமதிக்கிறது அல்லது அது அனுமதிக்கும் அளவிற்கு பலவீனமாக இருக்கிறது அல்லது பெருந்தன்மையாக இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக என் படைப்புகளில் அந்தச் சமூகத்தைப் பயன் படுத்திக் கொள்ள மாட்டேன் என்பதே என் நிலைப்பாடாக இருக்கும்.

எமர்ஜென்சியின் பொழுது யாரும் இந்திராவையோ அவரது கட்சியையோ ஆட்சியையோ விமர்சிக்க முடியாது. கடுமையான சென்சார், கடுங்காவல் எல்லாம் அமுலில் இருந்தது. அப்பொழுது கவிழ்க்கப் பட்ட தி மு க ஆட்சியும் ஒன்றும் யோக்யமான ஆட்சி அல்ல அது மாநில அளவில் எதோச்சிகாரமும் ஊழலும் அராஜகமும் செய்து கொண்டிருந்த கட்சிதான் (இன்றைக்கும் அதே கதைதான்) அப்பொழுது சோ வுக்கு கருணாநிதியையும் அவர் ஊழல்களையும் விமர்சிக்க முழு உரிமையும் அனுமதியும் இருந்தது.

அன்று சோ தனது துக்ளக்கில் தாராளமாகக் கருணாநிதியை விமர்சிக்கலாம் ஆனால் இந்திராவை விமர்சிக்க முடியாது. அப்பொழுது சோ ஒரு தீர்மானம் எடுத்தார் எப்பொழுது என்னால் ஒரு கட்சியை விட்டு விட்டு இன்று கவிழ்க்கப் பட்டு பலவீனமாக இருக்கும் மற்றொரு கட்சியை மட்டுமே விமர்சிக்க முடிகிறதோ அப்பொழுது நான் கருணாநிதியையும் விமர்சிக்கப் போவதில்லை. என்று என்னால் இந்திராவை விமர்சிக்க எனக்கு அனுமதியும் பேச்சுரிமையும் மீண்டும் கிடைக்கிறதோ அன்றுதான் நான் கருணாநிதியையும் விமர்சிப்பேன் என்று கூறினார்.

சோவின் நிலைப்பாடே என் நிலைப்பாடாகவும் இருக்கும்

என் அச்சங்கள் தேவையற்றதாகவும், அதீதமானதாகவும் நீங்கள் கருதலாம். பாதிக்கப் படாத யாரும் அவ்வாறே கருதுவார்கள். நான் சொல்வது என் அனுபவத்தின் அடிப்படையில் நான் கண்ட சம்பவங்களின் அதன் காரணங்களாக நான் கருதுபவற்றின் அடிப்ப்டையில் அமைந்தவை மட்டுமே. இதையே நான் மலையாள சினிமா சூழலுக்குச் சொல்ல மாட்டேன். அங்கு இயக்குனர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் எல்லா ஜாதியினரைப் பற்றியும், மதத்தினரைப் பற்றியும், கட்சியினரைப் பற்றியும் துணிவுடன் விமர்சிக்கும் சுதந்திரம் நேற்று வரை இருந்தது. இன்று கைகள் வெட்டப் பட்ட கிறிஸ்துவ கல்லூரி ஆசிரியருக்குப் பின்னால் கேரளத்திலும் கூட தமிழகத்தில் நிலவும் சூழல் வந்து விட்டிருக்கிறதோ என்ற அச்சம் நிலவுகிறது.

இருந்தாலும் நேற்று வரை இருந்த மலையாள படைப்புலகச் சூழலில் எந்த ஜாதியினரை விமர்சிப்பதிலும் யாரும் தயக்கம் இருந்ததில்லை அதற்கான தேவையும் பெரும்பாலும் இல்லை. ஆனால் தமிழ் நாட்டின் சூழல் வேறு. இங்கு கருணாநிதியையும், எம் ஜி யாரையும் குறிப்பிட்டு ஒரு சாதாரண சினிமா கூட எடுக்க முடியாத சூழல் தான் நிலவுகிறது. மலையாள அரபிக் கதாவில் சர்வ சாதாரணமாக பிரணையில் விஜயனும், அச்சுதானந்தனும் பேசப் படுகிறார்கள். போப்பும், நம்பூதிரிகளும், சங்கராச்சாரியர்களும் மிகச் சுதந்திரமாக விமர்சிக்கப் படும் சூழல் உள்ளது. அங்கு தாராளமாக படைப்புச் சுதந்திரத்தைப் பயன் படுத்தலாம்.

ஆனால் புரையோடிப் போயிருக்கும் தமிழ் நாட்டுச் சூழலில் வேறு விதமாகச் செயல் பட வேண்டிய கட்டாயமே எந்தவொரு படைப்பாளிக்கும் நிலவுகிறது. அந்த சூழல் மாறும் ஒரு காலம் வரும் பொழுது என்று எல்லா ஜாதியினரையும் சமமாக விமர்சிக்கலாம் என்ற காலம் வரும் பொழுது, என்று எல்லா கட்சியினரையும் அரசியல்வாதிகளையும் எவ்வித அச்சமும் இல்லாமல் பகிரங்கமாக நேர்மையாக விமர்சிக்கலாம் என்ற நிலை வரும் பொழுது பிராமணர்களையும் அவர்களில் பலரது சிறுமைகளுக்காகவும், ஆணவங்களுக்காகவும், ஜாதி மேலாண்மைக்காகவும், தீண்டாமைக்காகவும் கட்டாயம் கடுமையாக விமர்சிப்பதில் எந்த வித ஆட்சேபணையும் இருக்க முடியாது.

13 responses to “அங்காடித் தெரு, பார்ப்பனீயம், சாதி, பெண்ணியம் – திருமலை ராஜன்

  1. Good and balanced is the article by you explaining in detail the depiction of a particular caste in movies and public forums.Peace be with you , all will pass in its own time, Nature is great in balancing things, individuals and parties will vanish and blown to smithereens when Nature raises and shows its ‘Vishvaroopam’ But inevitably and ineluctably one or a group has to suffer with patience when demons play the rule till the savior comes.Savior will sure come when the misrule and abuse continue to its peak.Sure indeed this is.

  2. இந்த படத்தை இன்னும் பார்க்கவில்லை.

    //இந்தச் சூழல் கேரளாவில் கிடையாது. அங்கு படம் பார்ப்பவனுக்குத் தெரியும். சினிமாவில் ஒரு நம்பூதிரியோ, ஒரு முஸ்லீமோ, ஒரு கிறிஸ்துவனோ மோசமாக காண்பிக்கப் பட்டால் அது அதே இனத்தைச் சேர்ந்த அனைவரின் ஒட்டு மொத்தக் குணமும் கிடையாது என்பதை ஒரு எளிய மலையாள ரசிகன் கூட புரிந்து கொள்வான்.//

    அதே போலதான் இந்த படத்தையும் நீங்கள் எடுத்துக் கொள்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா? 🙂

  3. சீனு

    கொஞ்சம் எழுதியதைப் படித்து விட்டு புரிந்து கொண்டு விவாதித்தால் இருவருக்கும் பயனாக இருக்கும். ஆம் அப்படித்தான் நான் இந்தப் படத்தையும் எடுத்துக் கொண்டிருக்கிறேன் ஆனால் தமிழ் ரசிகர்கள் அப்படி எடுத்துக் கொள்பவர்கள் அல்ல என்பதை விபரமாகச் சொல்லியிருக்கிறேன்

  4. ராஜன்,

    உங்களின் இந்த பதிவோடு ஒத்து போகிறேன் என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.

    //. ஆம் அப்படித்தான் நான் இந்தப் படத்தையும் எடுத்துக் கொண்டிருக்கிறேன் ஆனால் தமிழ் ரசிகர்கள் அப்படி எடுத்துக் கொள்பவர்கள் அல்ல என்பதை விபரமாகச் சொல்லியிருக்கிறேன்//

    நான் சொல்லியிருப்பது, நீங்களும் சராசரி தமிழ் ரசிகன் போலத்தான் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று சொல்கிறேன். (விலாவரியாக சொல்லாததால் இந்த குழப்பம் என்று நினைக்கிறேன்) 😉

  5. அன்புடையீர்,
    நானும் ஜெயமோகனின் தீவிர வாசக வட்டத்தைச் சேர்ந்தவள்தான்.
    எனினும் அங்காடித் தெருவில் அந்த இடம் எனக்கு மிகவும் இடறியது.
    காரணம் அப்படி நடந்து கொள்ளும் பார்ப்பனர்கள் இன்று ஒரு சதம் கூட இருக்க மாட்டார்கள்.
    மற்றொன்று அந்தப் பெண்ணுக்கு ஆதரவளிக்கும் செவ்வாடைப் பக்தர்களும் கூட அதைத் தீட்டாக விலக்கவில்லையே தவிர ஒரு பெண் கருவுற உகந்தவள் என்பதற்கான அடையாளமாகத்தான் அதைப் போற்றுகிறார்கள்.பெண்ணிய நோக்கில் பார்த்தால் அதுவும் பிழையே.
    தங்கள் வாதங்கள் மிகப் பொருத்தமாகவும்,தருக்க பூர்வமாகவும்,எவரையும் புண்படுத்தாமலுமே முன் வைக்கப்பட்டிருக்கின்றன.இப்படி இவற்றைச் சொல்லவும் ஒரு நபர் தேவைதான்.
    ஜெயமோகன் போன்ற மிக ஆழமான எழுத்தாளர்கள் எதற்காக அதைக் கையாண்டிருக்கிறார்கள் என்பதை உள் வாங்காமல் மேம்போக்காகத் தரும அடி கொடுக்கக் கூட்டங்கள் காத்துக் கொண்டுதான் இருக்கின்றன.
    பிராமணர் என்ற அடையாளத்தைத் தூக்கிப் போட நினைத்தாலும் பிறப்பை வைத்து அதே அளவுகோலில் எல்லோரையும் மதிப்பிடும் சமூக மனோபாவம் மாறாத வரை தீண்டத்தகாத நிலை இந்தப் பக்கம் வந்து விடுகிறது.
    பாரதி,வ.ரா.,மாதவையா ஆகியோரைப் போலத் தான் சார்ந்த இனத்தையே தைரியமாக விமரிசித்துக் குறைகளை
    முன் வைக்கும் துணிச்சல் வேறு யாருக்கிருந்தது.
    இந்த சாதியைச் சாராமல் வேறு சாதியைச் சார்ந்தவனாக இருந்திருந்தாலும் இதைக் கேட்டிருப்பேன் என எழுதியிருந்தீர்களல்லவா.
    இதே வசனத்தைக் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன் என் துறைத் தலைவரிடம் – பொதுவான இடத்தில் பார்ப்பனக் கிண்டலோடு கூடிய நாடகம் போட்டதற்காக – நான் பேசியிருக்கிறேன்.
    சாதி ,இன ,குழு சார்பற்று
    வெறும் மனுஷி மாத்திரமாய் நான் மாறிப் பல நாளாச்சு;என்னைச் சுற்றியுள்ள உலகம்தான் இன்னும் அந்தக் கண்ணாடி வழியாகவே என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
    தங்கள் நடையும் வாதத் திறனும் சிறப்பாக உள்ளன.ஆனால் உங்கள் பிற படைப்பு,மற்றும் சுயவிவரம் தெரிய உங்கள் வலையில் வாய்ப்பில்லையே.அதைக் கூடிய விரைவில் எதிர்பார்க்கிறேன்.

  6. Rajan!

    So many words to convey a single opinion: that is, Tamilians can be noseled to judge real life based on reel life. Paranoid opinion!

    No one is going to look at parpanar women – I never call anyone a brahmanan – with dishonourbale intention merely because a film has a character of loose sexual morals who belongs to parpnar caste.

    How many rapes have been committed? How many men jostled and pawed a parpnar woman in buses or in streets ? How many were dragged and raped in a moving car?

    Such incidents are common in Delhi and other metros. Not in TN. In Delhi, a north east woman was raped in a moving car. Yesterday, a college girl was dragged in and raped in a moving car. Please read today paper to know that. A medical college student was raped and the rapist was punished in a court after 10 years.

    Do the rapists know which caste these women belong to?

    You should back up your argument with data from police records. Else, all are exaggerated fears that come only from your mind. Check up with a psychiatrist immediately.

    You say, dalits are not portrayed in films negatively. They are , as gangsters, hired killers, muscle men of dadas, rapists too. They are portrayed having black skin and alcholics and wife beaters. Only mercy the film folks show is that they dont mention the caste in dialogues. But no one will mistake the portrayel.

    Dalits have no voice. They dont enter jeyamohan blog to write long snivelling or plaintive notes. They are too innocent to do that; or, too naive to know they are depicted negatively; or, may think they deserve the negative portrayel. Finally, they dont have word power like you or heyram.

    Next, why do you cunningly exploit this opportunity to sow the seeds of hindutva, that is, seeds of animus against Christians and Muslims?

    Why dont you stick to the point at issue?

  7. Next, you compare a muslim with muslim identities and a christian with a christian identies with a paarppnar with paarppanar identities. Here I ought to use the word brahmanan. The right words are: a parppnar with a brahmanan identieis.

    Remember the basic fact here: A Christian does not have a caste identities when he or she wears a crucifix on her or his next; or make a corss sign on seeing a church, or going with a bible in his hands. He does all these things as a Christian.
    Similarly, a Muslim. All his identities are not unique to a segment of a Muslim population, or a group. All Christians have uniform identities. They dont differ from group to group among themselves.

    What about you? You go with identities that your religion has categorically said, and that have been reiterated from generation to generation, that they are for a brahmanan, not to anyone else. If at all anyone else wants to have those identities, he or she must deserve them first.

    Deserve before you desire.

    But parpnars of TN have usurped the identities and today they call them their own, just to make themselves look and behave different from others.

    In the past, such identities helped you to look holier than others. Why is avani avittam for you? Read Subramania bhrati. He heckles at avani avittam paarppnars. You have forgotten to add him in your hate list. Why?

    Today, the same identities let you down: people heckle at them.

    This is the reason you are hated. Not KB, or Hindu ram or Kamalahasan or 6 decades of periyarsits efforts.

  8. பாஸ்டன் பாலா, நீங்களும் இதைப் போட்டிருப்பது தெரியாமல் போய்விட்டதே! நானும் இதை போட்டிருக்கிறேன் – http://awardakodukkaranga.wordpress.com/2010/08/05/அங்காடித்-தெரு-ராஜனின்-எ/ அதுவும் அதே நாளில்!

    இப்போது ராஜனுக்கு ஒரு எதிர்வினையும் எழுதி இருக்கிறேன், http://awardakodukkaranga.wordpress.com/2010/08/09/அங்காடித்-தெருவின்-ஜாதீய/ முடிந்தால் படித்து பாருங்கள்!

  9. கயல்விழி

    உங்கள் மடலுக்கும் புரிதலுக்கும் நன்றி. நான் வலைப் பதிவு எதுவும் வைத்துக் கொள்வதில்லை. தொடர்ந்து எழுதுபவனும் கிடையாது. சாதாரண வாசகன் மட்டுமே. எப்பொழுதாவது எனக்குத் தோன்றுபவையை கட்டுரை வடிவில் எழுதியதை http://www.solvanam.com, http://www.tamilhindu.com, http://www.thinnai.com ஆகிய இணைய இதழ்களிலும் கூட்டாஞ்சோறு, இட்லி வடை, ஸ்நாப்ஜட்ஜ் போன்ற நண்பர்கள் ஒரு சிலரின் ப்ளாகுகளிலும் பதிவது உண்டு.

    அன்புடன்
    ராஜன்

  10. தங்கள் மறுமொழிக்கு நன்றி.முடிந்தால் மின் அஞ்சல் முகவரி தாருங்கள்.

  11. //இன்று தமிழ் நாட்டில் ஏழை பள்ளி மாணவர்களில் கிறிஸ்துவர்களுக்கும், முஸ்லீம்களுக்கு மட்டுமே பண உதவி அரசாங்கத்தால் செய்யப் பட்டு வருகிறது. அதை விடக் கீழான ஏழ்மையில் இருக்கும் இந்து மாணவர்களுக்கு அந்தச் சலுகை மறுக்கப் படுகிறது. வருடத்திற்கு ஒரு கிறிஸ்துவ/முஸ்லீம் மாணவனுக்கு அரசாங்கமே கல்லூரிப் படிப்பிற்காக ஒரு லட்சம் ரூபாய்கள் வழங்குகிறது// Rajan, can u give me the statistics of how many students got 1 lakh for this year and on which scheme? And what about SC/STs,BC&MBC reservations, scholarships? Are they not Hindus?Instead of asking so called govt aids for poor brahmins, don’t tell lies like Hindu fanatics.

  12. ரசூல்

    நான் சொல்வதில் எந்தவிதப் பொய்யும் இல்லை. ஒரு லட்சம் என்பது தவறான தகவலாக இருக்கலாம் ஆனால் கொடுக்கப் படும் பணம் ஏழை எஸ் சி மாணவர்களுக்குக் கொடுக்கப் படுவதை விட அதிகமானது. மேலும் வருடத்திற்கு 2 லட்சம் பெறும் முஸ்லீம்களும் (இவர்களில் பாதி கணக்குக் காட்டுபவர்கள் இல்லை, பர்மா பஜாரில் கள்ளச் சாமான்கள் விற்பவர்கள் எல்லாம் ஏழைகள் பிரிவில் வருவார்கள்) அது ஒரு ரூபாயாக கூட இருக்கட்டுமே? சிறுபான்மையினரில் உள்ள ஏழைகளுக்கு மட்டுமே ஒரு பொதுவான அரசு தனியாக காசு கொடுக்கும் என்றால் அது அராஜகம். அது மத ரீதியான காழ்ப்பை மேலும் வளர்க்கவே உதவும். நிச்சயம் தமிழ் நாடு அரசு ஓட்டுப் பொறுக்குவதற்காக பிரிவினையையும் மத மாற்றத்தையும் வளர்க்கிறது. ஏழைகளில் என்ன கிறிஸ்துவன், முஸ்லீம் என்ற பேதம்? எல்லா ஏழைக்கும் உதவி செய்.

    எந்தவொரு ரிசர்வேஷன் ஸ்காலர்ஷிப்பும் இந்த அளவுக்கு பணம் கொடுப்பதில்லை. இதைப் பற்றி மிக விரிவாக வந்த கட்டுரைகளைப் படித்து விட்டு பேசவும். தமிழக அரசு செய்வது பச்சை அயோக்யத்தனம், மனசாட்சி இல்லாம நீங்கள் அதை ஆதரிக்கிறீர்கள். உங்களைப் போன்றவர்களினால்தான் மதக் கலவரங்களும் பரஸ்பர வெறுப்பும் பரவுகின்றன.

    மிகத் தெளிவான புள்ளி விபரங்களைக் கீழ்க்கண்ட பதிவுகளில் படித்து விட்டு மேலும் அதே தளத்தில் உங்கள் விவாதத்தினை தொடரவும். மக்களிடையே பிரிவினையை வளர்க்கும் அராஜக சட்டத்தை நான் எதிர்ப்பதினால் நான் ஃபனடிக்காக இருந்தால் அவ்வாறு இருக்கவே விரும்புகிறேன். இந்த தந்திரமான திட்டம் மூலம் உங்களைப் போன்றவர்களின் ஓட்டுக்களைப் பொறுக்க அரசாங்கம் போடும் அயோக்யத் திட்டம். உங்களுக்கு இப்படி மதத்தின் பெயரால் இந்துக்களை வஞ்சனை செய்து இந்தக் காசைப் பெறுவது அவமானமாகத் தெரியவில்லையா? இந்துக்களின் வரிப்பணத்தில் அவர்களை ஏமாற்றி விட்டுத் தரப்படும் இந்த வஞ்சகமான லஞ்சம்,அராஜகமான ஒரு பிச்சைப் பணம் என்று குரான் சொல்லித் தரவில்லையா? மக்கள் மனதில் பிரிவினையையும் மத மாற்றத்தையும் தூண்டும் ஒரு திட்டம் மூலமாக நிதி பெறுவது கேவலமான ஒரு செயலாகக் கூடவா உங்களுக்குத் தெரிவதில்லை?

    கருணாநிதியின் இந்து விரோத மதமாற்ற பிரிவினை வளர்க்கும் இந்த திட்டத்தை நான் கடுமையாக எதிர்க்கிறேன். கீழ்க்கண்ட விபரங்களைப் படித்து விட்டு உங்கள் மனசாட்சியிடம் கேட்டுக் கொள்ளுங்கள் இது நியாயமா என்று. நியாயம் என்று நீங்கள் கருதினால் உங்களிடம் பேச எனக்கு ஏதுமில்லை.

    http://www.tamilhindu.com/2010/07/nagerkovil-bjp-protest-july-2010-a-report/

    http://www.tamilhindu.com/2010/07/tn-bjp-july-struggle-for-the-rights-of-hindu-poor/

    http://ezhila.blogspot.com/2010/08/blog-post.html

  13. Your views in the article are right. Politicians always wanted to play caste, religion card to secure their victories.

    One major flaw in our society is there is no tolerance among people. We never have rights to mock at politician;s policies in a movie, in a play.

    A good one.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.