வாஷிங்டனில் நல்லதம்பியிடமிருந்து வந்த மின்மடலை ஸ்க்ரிப்டில் இங்கே சேமித்திருக்கிறேன்.
வாசிப்பதற்கு முன் எச்சரிக்கை: திராவிட எதிர்க்கருத்துகளைத் தவிர்த்து அமெரிக்க தேர்தல் கூட்டத்தை மட்டும் கருத்தில் கொள்வது நன்மை பயக்கும்.
வாஷிங்டனில் நல்லதம்பியிடமிருந்து வந்த மின்மடலை ஸ்க்ரிப்டில் இங்கே சேமித்திருக்கிறேன்.
வாசிப்பதற்கு முன் எச்சரிக்கை: திராவிட எதிர்க்கருத்துகளைத் தவிர்த்து அமெரிக்க தேர்தல் கூட்டத்தை மட்டும் கருத்தில் கொள்வது நன்மை பயக்கும்.
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
அம்மாடி! எம்புட்டுப் பெருசா எழுதி இருக்காரு!! எழுதின கையோட ஒரு தடவை படிச்சு எழுத்துப் பிழைகளையும் நீக்கி இருக்கலாம். கொஞ்சம் டெமாக்கிரெட்டிக் கட்சி சார்பா இருப்பாரு போல.
அது என்ன மன்மோகன் சிங் அத்வானி மீது பைலைத் தூக்கி எறிந்த மேட்டர்? ஞாபகமே இல்லையே.
சூப்பர் ஃபாஸ்ட் ஆக படித்துவிட்டு கேள்வியும் கேட்டுட்டீங்க… அந்த ஃபைல் தூக்கி எறிந்த விஷயம் குறித்து கூகிளில் எதுவும் அகப்படவில்லை.
வா.ந.யிடம் கேட்டபொழுதில் கிடைத்த பதில்…
என்கிறார்.
மன்மோகன் ஆட்சிக்கு வந்த புதிதில் அத்வானியும் பா ஜ க தலைவர்களும் அவர் அலுவலகத்திற்கு சென்று புகார் கொடுக்கச் சென்றனர். அப்பொழுது அவர்கள் மீது எரிச்சல் அடைந்த மன்மோகன் தன் கையில் இருந்த ஃபைலைக் கோபத்தில் வீசியெறிய அது சிதறி அத்வானி மேல் விழுந்தது. அத்வானி அதைப் பெருந்தன்மையுடன் பெரிது படுத்தாமல் விட்டு விட்டார். தன்னை இன்னும் ரிசர்வ் பாங்க் கவர்னர் ஒரு அதிகாரி என்றே நினைத்துக் கொண்டு பிறர் தன்னிடம் வேலை பார்க்கும் சப்ராசிகள் என்ற எண்ணம் மன்மோகனுக்கு என்றும் உண்டு. அந்த சம்பவம் மன்கோகன் பிரதமரான புதிதில் நடந்தது. அத்வானி அதை பெரிது படுத்தாமல் விட்டதால் பெரிய விஷயமாகப் பரவவில்லை
வாஷிங்டனில் நல்லதம்பி
கொத்தனார்
இத்தாம் பெரிய கட்டுரையை ஒரே மூச்சில் அடித்த பொழுது இகலப்பை பல இடங்களில் சொதப்பி விட்டது. சரி பார்க்கச் சோம்பேறித்தனம் பட்டு பாபாவுக்கு அனுப்பினால் அவ்ரும் அப்படியே வலையேற்றி விட்டார். மன்னிக்கவும். நான் டெமாக்ரடிக் கட்சி உறுப்பினர் அல்ல. நான் ரெண்டு மாநாடுகளையும் கூர்ந்து கவனித்ததில் எனக்குத் தோன்றியவற்றைச் சொன்னேன். அவ்வளவுதான். ஒபாமா பேச்சில் கூட சப்ஸ்டன்ஸ் இல்லை என்பதை சொல்லியிருக்கிறேன். பொறுமையுடன் படித்தமைக்கு நன்றி.
இப்படிக்கு
நல்லதம்பி
விரிவான பதிலுக்கு நன்றி வா.ந.