அறிவியல் மாறலாம்; வாழ்க்கை மாறுமா?


சிறில் அலெக்ஸ் நடத்தும் போட்டிக்கு 45+ கதை கட்டியிருக்கிறார்கள். நூற்றாண்டுகளாக மாறும் அறிவியலில் இருந்து மாறாத வாழ்க்கை தருணங்கள்:

 1. அன்று ஓலைச்சுவடியைக் கிழித்தெறிந்தார் ஒட்டக்கூத்தர்; இன்று இணையப் பதிவுகளை நீக்குகிறார் பெயரிலி/மரவண்டு; நாளையும் இன்னொருத்தர் டெலீட்டுவார்.
 2. அன்று அண்ணா, பெரியார் பேச்சை வாய்பிளந்து வாக்களித்தார்கள்; இன்று சாரு நிவேதிதா, சோ எழுத்துக்களை காசு கொடுத்து படிக்கிறார்கள்; நாளையும் வித்தியாசமான சிந்தனையை முன்வைக்கும் எவரின் அனைத்து அட்சரத்தையும் கண்மூடித்தனமாக…
 3. அன்று குறுநில மன்னர்களுக்கும் இராஜாதி ராஜாவுக்கும் இடையேயான மல்யுத்தப் போர்களை மைதானத்தில் மேட்ச் ஃபிக்ஸ்; இன்று இந்தியா x பங்களாதேஷ் கிரிக்கெட்; நாளையும் கணினி வலையில் நடக்கும் அடையாள யுத்தத்தில் சூது முடிவு.
 4. அன்று இறந்தபின் அசோகனும் பாபரும் உத்தமர்; இன்று எமெர்ஜென்சி இந்திராவும் அத்வானியின் செல்லப்பிள்ளை ஜின்னாவும் மகாத்மா; நாளையும் ஜார்ஜ் புஷ், ஃபிடல் காஸ்ட்ரோ சரித்திர உலக நாயகர்கள்.
 5. அன்று வந்ததும் அதே நிலா; இன்று உள்ளதும் இதே சாந்த் ; நாளை ‘ஜஸ்ட் மூன்’
 6. அன்று குடவோலையில் கடமுடா; இன்று குடியரசு களேபரம்; நாளையும் குல்லா, ஹல்லா.
 7. அன்று இஸ்ரேல் பிரச்சினை; இன்று அமெரிக்க நாட்டாமை; நாளையும் பாலஸ்தீனம் தொடரும்
 8. அன்று ஆன்மிகம்; இன்று அறிவியல்; நாளையும் சான்றோர்.
 9. அன்று சங்கப்பலகை நக்கீரன் + பாண்டியன் போட்டி; இன்று வலைப்பதிவு சிறில் + ஜெமோ மீம்; நாளையும்?
 10. அன்று ஃபிலிப் கே டிக் பயந்தார்; இன்று மைக்கேல் க்ரிக்டன் பயமுறுத்துகிறார்; நாளையும் எவராவது சாவார்.

7 responses to “அறிவியல் மாறலாம்; வாழ்க்கை மாறுமா?

 1. இதனால் தாங்கள் சொல்ல வருவது? 🙂
  பாலா! நக்கலெல்லாமில்லை! இது உங்களுடயை கவனிப்பா இல்ல வேற ஏதாவது உள்குத்தா? தெரியலியேப்பா…?

 2. சொல்ல வருவதா 😛
  உள்குத்தா 😉

  ரெண்டுத்துக்கும் ‘ஒண்ணுமில்லையேப்பா’ என்பது பதில்.

 3. பாபா உயன்யாச மூடிலிருக்கிறார் 🙂

 4. இன்று இணையப் பதிவுகளை நீக்குகிறார் பெயரிலி/மரவண்டு

  ஆனாலும் கூகுள் cache இருக்கிறதல்லவா ?

 5. 45 + ஆ ?? 100 க்கு மேல இருக்கும் போல 😉 ஏண்டா ஒத்துகிட்டோம்ன்னு ஜெய மோகன், பய மோகனாகி இருப்பதாகக் கேள்வி 😀

 6. ரவி ஸ்ரீனிவாஸ், நன்றி __/\__

  —கூகுள் cache இருக்கிறதல்லவா—

  இதில் இருந்தும் எடுத்துவிடுங்கள் என்று கூகிளுக்கு மனுப்போடலாம். மனுப் போட்டால், எடுத்தும் விடுவார்கள்.

  நாளடைவில் cacheம் காணாமல் போய்விடும்.

 7. சேவியர்,
  எல்லாவற்றையுமா ஜெமோ படிக்கப் போகிறார் 😉
  வெற்றி பெற தகுதியானவை என்று முதற்கட்ட குழு வடிகட்டியதை மட்டுமே வாசிப்பார் என்று பட்சி சொல்கிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.