அமெரிக்காவில் இனவெறியா – ஒபாமா செய்திகள்


மேற்கு வர்ஜினியாவில் தேர்தல் நடந்து முடிந்தது. அது தொடர்பான விழியம்:

நன்றி: Obama Faces Racism in West Virginia Video – Metacafe

வெஸ்ட் வெர்ஜீனியாவில் எதிர்பார்த்தவாறே ஹில்லரி எளிதில் வென்றார். ஆனால், ஹில்லரி க்ளின்டனை விரும்பும் வெள்ளையின வாக்காளர்களைக் கவர்வதற்காக ஜான் எட்வர்ட்ஸை தன் பக்கம் இழுத்துள்ளார் பராக் ஒபாமா. லத்தீனோ வாக்கு தேவைப்படும் காலம் கடந்தபின் கிடைத்த ரிச்சர்ட்ஸன் ஆதரவு மாதிரி பாட்டாளி வர்க்க வோட்டுகள் தேவைப்படும் நேரம் கழிந்தபின்னே ஆற அமர தன்னுடைய சார்பை ஒப்புக்கு சப்பாணியாக ஜான் எட்வர்ட்ஸ் வெளிப்படுத்தி இருக்கிறார்.

கிட்டத்தட்ட ஹில்லரி க்ளின்டனின் ஆதர்ச ஆதரவாளர்கள் தவிர பெரும்பாலானவர்கள் பராக் ஒபாமாவிற்கு மாறியபிறகு கிடைத்திருக்கும் எட்வர்ட்சின் ஆதரவினால் அடுத்து வரும் கென்டக்கியில் ஹில்லரியின் வெற்றிவாய்ப்பு பாதிக்கப்படலாம்.

மேற்கு வர்ஜீனியா, கென்டக்கி போன்ற இவையெல்லாம் ஜனநாயகக் கட்சி நிச்சயம் தோற்றுவிடக் கூடிய இடங்கள் என்பதால் அதிக முக்கியத்துவம் தர வேண்டியதில்லை. எனினும், இந்த மாகாணங்களின் பிரதிநிதிகளைப் பெறுவதற்கான போட்டியாக இவை மாறியுள்ளதால், இந்தத் தேர்தல்களும் கவனிப்பைப் பெறுகின்றன.

முக்கிய கட்சிகளான ஜனநாயகக் கட்சிக்கும் குடியரசுக் கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவப்போகும் மாநிலங்கள்: Election Guide 2008 – Presidential Election – Politics – Electoral Map – The New York Times: “Here are what the Obama and McCain campaigns now consider the true battleground states going into the fall campaign, assuming — as both candidates now do — that Barack Obama is likely to win his party’s nomination. In addition to these states, both sides have states that they say (or rather hope) will come into play in the months ahead — think New Jersey for Republicans and Georgia for Democrats — but for the time being, this is where the action is going to be.”

தொடர்புள்ள அலசல் பத்தி Trailhead : Hard-Working White American Endorses Obama: “Edwards is still influential. Just look at the 7 percent of the vote he picked up in West Virginia—impressive for someone who dropped out more than three months ago. If Edwards supporters in Kentucky take his cue and vote for Obama…”

2 responses to “அமெரிக்காவில் இனவெறியா – ஒபாமா செய்திகள்

  1. இதுதான் நிஜ அமெரிக்கா.

  2. டாம் ஹேன்க்ஸ், டெய்லர் எல்லாம் கூட வந்தாலும் முடிவு சொன்னா மாதிரியே இருக்குங்க. சூப்பர் டெலிகேட்ஸ் கையிலதான் சாட்டை வரும்போல தெரியுது. புஷ் இன்னிக்கு அவரே கோதாவுல குதிச்சிருக்கிறது அம்மணி அவ்ளோதாங்கிற மாதிரி இருக்கே.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s