அல்செய்மர் ஆள்வதற்கு முன் நினைவில் நின்ற முகமூடிப் பதிவர் பட்டியல்:
1. முகமூடி, அனானி, பெயரிலி என்றவுடன் நினைவுக்கு வருபவர். யாஹு குழுமங்களில் உலாவிய டிஸ்கி பாவிக்கவும். நம்பிக்கைகளை விட்டுக் கொடுக்காமல் சுதந்திரமாக விமர்சித்தவர். இன்றும் ஏங்குவது: பதிவுக்கு பல்விதமாக செய்தி, வலைப்பூ, சிரிப்பான், இலக்கிய விமர்சனம், அமெரிக்க ஊடகம் தொட்டுக்காட்டியவர்.
2. சன்னாசி: ஆரம்பித்த புதிதில் இவரும் முந்தையவரைப் போலவே சாட்டையடி சுழற்சி சொல்லாட்சி கொண்டு சினிமா குறித்தும் கலை குறித்தும் வெளிப்படுத்திய வேகத்தில் ‘அவர்தான் இவரோ’ என்று எண்ணியது உண்டு. இன்றும் ஏங்குவது: ‘இது தேறாத கேசு’ என்று தட்டிக் கழிக்காமல் வாதம் பொறுமையாக வாதம் செய்யும் லாவகம்.
3. முகமூடி: பேசாப்பொருளை விவாத களத்தில் வைத்தவர். சுற்றி வளைத்துப் பேசுவதில் ஏற்கனவே சொல்லப்பட்டவர்களுக்கு சளைக்காதவர். இவரின் பதில் வாதங்கள் வாயடைத்துப் போக வைப்பவை.
4. குசும்பன்: புதிய குசும்பன் அல்ல. சில சமயம் அதிரடி; பல சமயம் ஊமைக்குசும்பு; அவ்வப்போது நக்கல், ஊசி குத்தல் நகைச்சுவை. அவரே பொறிப்புரை தந்தால் மட்டுமே புரியக்கூடிய பதிவும் உண்டு. இன்றும் ஏங்குவது: வண்ண வண்ணமாக வார்த்தைகளுக்குள் பூசியிருக்கும் வடிவு.
5. குழலி: பாட்டாளி மக்கள் கட்சியும் அன்புமணியும் இராமாதாசும் இணையத்திற்கு கொள்கை பரப்பு செயலாளர் நியமித்து விட்டார்கள் என்றே எண்ண வைத்தவர். இவர் வரும்வரை கடுமையான விமர்சனத்துக்கும் கேலிக்கும் உள்ளாக்கப்பட்ட பா.ம.க., குழலிக்குப் பின் நட்சத்திர அந்தஸ்து பெற்றது.
6. லக்கிலுக்: முந்தையவர் பா.ம.க. குறித்த எதிர்மறை எண்ணங்களை வாதத்தில் எதிர்கொண்டார் என்றால், இவர் திமுக, கலைஞர் குறித்த நேர்மறை இடுகைகளை முன்னிறுத்தினார். நாளடைவில் சகலகலா வல்லவனாலும் துவக்க மீட்டிங் கவரேஜும் நியாயப்படுத்தல்களும் ப்ராண்ட் நேமை நிலைநாட்டியது.
7. இலவசகொத்தனார்: முன்னவரைப் போலவே ஆரம்பத்திலேயே பலநாள் பதிவுகள் இட்ட மெச்சூரிட்டியும் சுவாரசியமான இடுகையின் சூட்சுமமும் அறிந்தவராய் வந்தார். தமிழ்மணத்தின் மறுமொழிப் பெட்டியைஹைஜாக் செய்தவர். இவரின் பின்னூட்ட எண்ணிக்கை கின்ன்ஸ், லிம்கா சாதனை.
8. சர்வேசன்: வெறும் கருத்துக்கணிப்பு என்று ஆரம்பித்தாலும் கருத்துகளை அவ்வப்போது பதிவாக இடுபவர். கதைப் போட்டி, புகைப்பட போட்டி, பதிவர் போட்டி என்று தொடர்ச்சியாக பல நல்ல மாற்றங்களை உருவாக்கியவர். இன்னும் முகமிலியாக உலா வருவது குறிப்பிடத்தக்க அதிசயம்.
9. தருமி: இயல்பாய் எதார்த்தமாய் உள்ளே வந்து தக்க சமயத்தில் வெளிப்படுத்தி முகமிலி இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டாய் வைத்துக் கொள்ளலாம்.
10. ஞானபீடம்: அவ்வப்போது வருவார்; கொஞ்ச நாள் கழித்து நெடு விடுமுறை எடுப்பார். தமிழ்மணம் சார்ந்த அரசியல்நெடிப்பதிவுகள் பாட்டு, குத்துடன் நிறைய இருக்கும்.
11. அப்பிடிப்போடு: அரசியல் கிடைக்கும். அதிகம் படித்ததில்லை. தற்போது காணவில்லை.
12. யோசிங்க: எனக்கு மிகவும் பிடித்த பதிவுகளில் ஒன்று. To the point. அம்புட்டுதான். வினாவாக இருக்கட்டும்/சிந்தனையாக தோன்றட்டும்… ஷார்ட்டா முடிப்பார்.
13. இட்லி – வடை: இவ்வளவு காலமாகத் தாக்குப்பிடிப்பது மலைக்க வைக்கும் ரகசியம். இவரா, அவரா, மரத்தடியில் இருக்கிறாரா, சென்னையா, வயதானாவரா, நுட்பம் அறிந்தவரா, இலக்கியவாதியா, இருவரா என்றெல்லாம் தெளிவாகக் குழப்புபவர்.
14. ரோசாவசந்த்: சொந்தப் பதிவில் எழுதுவதில்லை. என்ன பெயரில் எங்கிருக்கிறாரோ!
15. அனாதை ஆனந்தன்: ரோசா என்றவுடன் ஏனோ நினைவுக்கு வருபவர். இன்றும் அவ்வப்போது தெளிவாக, முக்கியமான கருத்துகளுடன் மாற்று சிந்தனை என்றால் எப்படி/என்ன/ஏன் என்று உணர்த்துபவர்.
16. பொறுக்கி: அனாதை போலவே வித்தியாசமான விஷயங்களை நேரடி மொழியில் பதிபவர். அனுபவத்தையும் வாசிப்பையும் அவசரமில்லாமல் நேர்மையாகப் பகிர்வதில் தனித்து தெரிபவர்.
17. விசிதா: வாடிக்கை மறந்ததும் ஏனோ? இந்த மாதிரி பதிவர்கள் அமுத விருந்தை நிறுத்தியதும் ஏனோ?
18. டிஜே தமிழன்: பதிவுகள் மையத்தில் முதலில் படித்தது. இன்றளவும் சுடும் விவாதப் பொருளையும் இலக்கியத்தையும் தவறவிடக்கூடாத முறையில் கொடுக்கிறார்.
19. நேசகுமார்: முதன்முதலாக கொலை மிரட்டல் பெற்றவர்.
20. வவ்வால்: நவீன திருவிளையாடலில் சுவாரசியம் குறையாமல் இருக்க வைப்பவர். ‘இவர் யார்?’ என்பது புரிந்து கொள்ள முடியாத ரகசியம்.
இன்னும் நிறைய பேர் இருப்பார்கள்… விடாது கருப்பு, இரவுக்கழுகு, பெடியன்’கள், இளவஞ்சி, பச்சோந்தி – வண்ணக்குழப்பம், கல்வெட்டு, கொழுவி, ஈழநாதன், ஜொள்ளுப்பாண்டி, சனியன்…
இன்றைக்கு சட்டென்று தோன்றியவர்கள் இவர்கள் மட்டும்தான்
சாகரனும் கூடத்தான்.
சுவாரஸ்யமான அலசல் 🙂
//3. முகமூடி: பேசாப்பொருளை விவாத களத்தில் வைத்தவர். //
:))))))))))))))))))))))
சில பதிவுகள் இருந்தன என்பதை தெரிந்து கொண்டேன்.
அந்தப் பதிவர்களே அதை மறந்திருக்கலாம்.
குந்தவை…
பூடகமா சிரிக்கறீங்க? கொஞ்சம் விளக்கமா சொன்னால் நானும் சேர்ந்துப்பேன் இல்லியா
(அசல்) ‘ஆப்பு’ பதிவை விட்டுவிட்டேன் என்று தனிமடலில் நண்பர் கோபித்துக் கொண்டார்
பாபா..
இஒரு வித்தியாசமான பார்வையை பதிந்துள்ளீர்கள்.
நானும் முயற்சி செய்கிறேன்.
நீங்கள் கடைசியாக எழுதியுள்ள நபர் யார் என்பது தெரிய ஆவலாக உள்ளேன். உங்களுக்காச்சும் தெரியுமா?
—நீங்கள் கடைசியாக எழுதியுள்ள நபர் யார் என்பது தெரிய ஆவலாக உள்ளேன். உங்களுக்காச்சும் தெரியுமா?—
உங்களுக்குத் தெரியாதா… அவரின் பெயர் வவ்வால் 😀
ஈழநாதன் முகமூடிப் பெயர் என்று எனக்கே இன்றுதான் தெரியும்
சந்திக்காத வரைக்கும் (புகைப்படத்திலாவது 😉 முகமூடி என்று சொல்லித் தப்பித்துக் கொள்கிறேன் ஈழநாதன் 🙂 (மன்னிக்க… தட்டச்சு ஸ்லிப்பில் தங்களையும் சேர்த்துவிட்டேன் 😀
Publish at your own risk 🙂
கூகுளில் சும்மா என் பேரைத் தேடி இங்கே வந்தேன். அடக் கடவுளே
இன்னுமா என்னை(யெல்லாம்)
நினைவு வைத்திருக்கிறார்கள்?.
அல்சைமர் மருந்திற்கான தீவிர ஆராய்ச்சியில் இருப்பதால்
பதிவு எழுத மறந்து போகிறது :).
அல்சைமர் வரும் வயதில் பதிவு எழுதினால் உங்களை உதவிக்கு அழைக்கிறேன் :). நீங்கள் இன்னும்
அச்சு ஊடகத்திற்கு தாவவில்லையா?.
தீவிர ஆராய்ச்சியில் இருந்தால் அல்சைமர் வரும் வயது தள்ளிப் போகும் என்பது சமீபத்திய ஆராய்ச்சி முடிவு 😉
—அச்சு ஊடகத்திற்கு தாவவில்லையா?.—
பத்திரிகை ஆரம்பிக்க வீட்டு அம்மிணி ஒத்துக்க மாட்டேங்கறங்க 😀
பாபா, உங்களுக்குமா பத்திரிகை ஆரம்பிக்கும் ஆசை ?. இப்போதுதான் பத்திரிகைகள் பல வருகின்றனவே. அவற்றில் எழுத வேண்டியதுதானே. ஒபாமாவுடன் ஒட்ஸ், காண்டலிசாவுடன் காப்பி,
என்று தலைப்பு தந்துவிடலாம் :).
பத்திரிகை ஆரம்பித்தால் எழுத்தாளர்களின்
பாராட்டு,வசவு இரண்டும்
இலவசமாகக் கிடைக்கும் :).
கீதையெல்லாம் படிக்காமலே
மனது எல்லாவற்றையும்
சமமாக கருதும் நிலையை
அடையும் 🙂
—அவற்றில் எழுத வேண்டியதுதானே.—
அவற்றில் எழுத புரவலராக இருக்கவேண்டும் அல்லது எடிட்டருக்கு உங்களைத் தெரிந்திருக்க வேண்டும் 🙂
—கீதையெல்லாம் படிக்காமலே
மனது எல்லாவற்றையும்
சமமாக —
தண்ணியடிக்காமலே கிக்கா… கேக்க நல்லாத்தான் இருக்கு 😀
”தண்ணியடிக்காமலே கிக்கா… கேக்க நல்லாத்தான் இருக்கு ”
சிலருக்கு
நமீதா படத்தைப் பார்த்தால் கிக்
சிலருக்கு நமீதா பேரை கேட்டால் கிக்
சிலருக்கு நமீதாவை நினைத்தாலே கிக்
என்று இருப்பதில்லையா. அது போல்
நீங்கள் எந்த லெவலில் இருக்கிறீர்களோ அதையொட்டி
கிக் கிடைக்கும்/அமையும்.
இதை நான் பி.ந.கீதையில்
அத்தியாயம் 12 SMS 18 ல்
சொல்லியிருக்கிறேனே
Pingback: Top Tamil Bloggers in 2008 « Snap Judgment