Daily Archives: மார்ச் 22, 2008

பராக் ஒபாமாவின் புதிய விளம்பரங்கள் – பென்சில்வேனியா பிரச்சாரம்

1. “Opportunity

ஒபாமாவின் தாத்தா, பாட்டி, மற்றும் தனியாக விடப்பட்ட தாய் ஆகிய பின்னணியை விளக்கி, அறிமுகம் செய்கிறது. நடுத்தர வர்க்கத்திற்கான வரிவிலக்கை ஆதரிப்பவர், வேலைவாய்ப்பை பெருக்குபவர் என்று விரிகிறது.

இனம் குறித்த சர்ச்சை மிகுந்திருப்பதால், இந்த விளம்பரத்தில் ஒபாமாவும் அமெரிக்க சிந்தனையை உடையவர், நாட்டுப்பற்று மிக்கவர், சராசரி Caucasian பிரச்சினைகளை உணர்ந்தவர் என்பதை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆப்பிரிக்க – அமெரிக்கர்களை மட்டுமல்லாமல், தொழிற்சாலையில் வேலை பார்க்கும் வெள்ளை ஆண்களைக் குறிவைத்து அமைந்திருக்கிறது.

2. “Toughest”

வணிக நோக்கத்திற்கான குழுக்களுக்கு எதிராக செயல்படுகிறார் என்னும் விளம்பரம்:

3. “Carry”

‘பாரம்பரியவாதி, தாராளவாதி வாக்காளர் என்று அமெரிக்காவை பிரிக்காமல், அனைத்து சாராரையும் ஒருங்கிணைப்பவர் – பராக் ஒபாமா’ என்கிறது.

முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் ஆதரவு ஒபாமாவிற்கு கிடைத்தது

richardson_533.jpg

ஜனநாயகக் கட்சி வேட்பாளராகத் தேர்வு பெறுவதற்கான முயற்சியில், ஒபாமா இன்னொரு முக்கிய அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறார்.

ஹிஸ்பானிக் வாக்காளர்களிடம் அதிக செல்வாக்குப் பெற்றிருப்பதாகக் கருதப்படும் நியு மெக்ஸிகோ கவர்னர் பில் ரிச்சர்ட்சன், ஒபாமாவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

மேலும் விவரங்களுக்கு:

1. Richardson says Clinton phone call got 'heated' – First Read – msnbc.com

2. First a Tense Talk With Clinton, Then Richardson Backs Obama – New York Times

3. What Richardson's endorsement means for Obama. – By John Dickerson – Slate Magazine

ஒபாமாவிடம் மன்னிப்புக் கோரினார் ரைஸ்; ஜான் மெகெயின், ஹில்லரி கடவுச்சீட்டுகளும் அத்துமீறப்பட்டுள்ளன

அமெரிக்க அரசுத்துறைச் செயலர் கொண்டலிஸா ரைஸ் அம்மையார் அவர்கள், ஜனநாயக் கட்சி வேட்பாளராகத் தேர்வு பெற வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படும் பராக் ஒபாமாவிடம் மன்னிப்புக் கோரியிருக்கிறார்.

ஒபாமாவின் பாஸ்போர்ட் தகவல்களைப் பெறுவதற்காக, அரசுத்துறையின் ஊழியர்கள், கணினி பாதுகாப்பு விதிகளை மீறியதாக வெளியான தகவலை அடுத்து அவர் மன்னிப்புக் கோரியிருக்கிறார்.

ஒபாமாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், யாராவது தனது பாஸ்போர்ட் தகவல் கோப்புக்களைப் பார்த்திருந்தால் தான் மிகவும் கவலையடைந்திருப்பேன் என்று கூறியதாகவும் கொண்டலிஸா ரைஸ் தெரிவித்தார்.

நன்றி: பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. FACTBOX: Obama, Clinton, McCain passport files breached | Reuters

2. FAQ: The passport breach: What exactly is in those records?

3. State Dept. investigating passport-data snooping – USATODAY.com

ரஜினிக்கொரு ஹீரோயின் வேணுமடா (பாய்ஸ் பாட்டு மெட்டில் படிக்கவும்)

meera-nandhakumar5.jpg

புகைப்படங்கள்: தட்ஸ்தமிழ்

Dor (நூல்) – விமர்சனம்

நாகேஷ் குக்குனூர் ஏமாற்றவில்லை. பார்க்கவேண்டிய திரைப்படம்; நம்பக் கூடிய திரைக்கதை.

ஸ்பாயிலர்சுடன் சில சிதறல்:

  • dor-2006-5b-1_1188030619.jpgஜீனத் ஆக நடித்த குல் பனாக் (Gul Panag) மிஸ் இந்தியா பட்டம் பெற்றவர்.
  • பல மோசமான படங்களில் ஆயிஷா தகியாவை பார்த்து ‘நடிப்பு வராத பொண்ணு’ போல என்று நினைப்பை உருவாக்கி வைத்தவர். இந்தப் படத்தில் இவர் இன்னொரு சிம்ரன்!
  • ‘Dutch courage’ ஆக தண்ணியடித்துவிட்டு வந்து, ஜீனத்திடம் ‘ஐ லவ் யூ’ சொல்லும் ஷ்ரேயஸ் தல்பாடேவும் (Shreyas Talpade), அதை வெகு இயல்பாக எடுத்துக் கொள்ளும் தோழமையும்; கடைசியாக கல்லூரியில்தான் இந்த மாதிரி கோணங்கித்தனம் செய்து, வழியாமல், எதார்த்தமாக வாழ்க்கை தொடர்ந்தது. அதையே கிராமத்தில் பார்ப்பது ‘நடக்காது!’ என்று சாதாரணமாக எண்ண வைக்கும். ஆனால், ஜீனத்தின் அழுத்தமான கதாபாத்திர வடிவமைப்பு, அதை சரியாக உணரவைக்கிறது.
  • வசனங்கள்: எளிமை. ஆனால், உணர்ச்சி & எழுச்சி உண்டு. தினசரி பேசுவது போல் இருந்துகொண்டே பலநாள் வடிகட்டிய சாராம்சங்களைக் கொடுக்கிறது. நாவல் எழுத்தில் கிடைக்கும் அழுத்தம் கொண்டவை.
  • படத்திற்கு ஆதாரம் (அசல் கதை) மலையாளப் படமாம் (என்ன படம்?)
  • தமிழ்ப்பதிவர் எல்லாருக்கும் ஏதாவது தீனி இருக்கிறது: சவுதி அரேபிய இஸ்லாமிய ஷரியத்தை எதிர்ப்பவர்; ஆண்கள சார்ந்து இயங்கும் இந்து மதத்தின் விமர்சகர்; முதலாளித்துவத்தின் கூறுகளை தாக்கும் கம்யூனிஸ்ட்; ‘ராத்திரி பத்து மணிக்கு’ என்று காந்திஜியை மேற்கோள் காட்டும் பெண்ணியவாதி…
  • சினிமாத்தனம் இல்லாத வெற்றிப்படமா: கடைசியில் ரயில்வே ஸ்டேசன், தில்வானியா துலானியா லே ஜாயேங்கே

காதல் உண்டு; காமெடி உண்டு; திருமண பந்தமும், அந்த உறவின் பாசமும் உண்டு; நட்பு உண்டு; சென்டியும் இருக்கிறது… இருந்தும் மசாலாப் படம் பார்த்தபிறகு மனசு முழுக்க நிறைந்திருக்கும் ஏமாற்றம் மட்டும் இல்லை.

புகைப்படம்: யாஹு