Daily Archives: மார்ச் 4, 2008

நீயும் நானுமா? – விடாக்கண்டர் ஹில்லரியும் கொடாக்கண்டர் ஒபாமாவும்

Obama Clinton Metro News Paper Comprison Numbers

நன்றி: Read metro: – Analysis: Decisive Moment for Democrats?


தொடர்புள்ள பத்திகள், பதிவுகள்:1. The people don’t want this primary to end, and that’s a rejection of Obama… | Buckeye State Blog – ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரை இன்றோடு அறியமுடியாது என்கிறார். ஒஹாயோவின் சிறப்பு வலைப்பதிவில் சுவாரசியமான மறுமொழிகளும் படிக்க வேண்டிய பதிவாக்குகின்றது.

2. For Democrats, a Pivotal Night, but in Which Direction? – New York Times: தற்போதைய நிலையில் ஏப்ரல் 22 வரை ஹில்லரி க்ளின்டன் தாக்குப்பிடிப்பார் என்றே எண்ணுகிறேன். ஓரளவிற்கு இது ஜனநாயகக் கட்சிக்கு நல்ல விஷயம். சென்ற தேர்தலில் வெகு சீக்கிரமே ஜான் கெர்ரி முடிவானது, அவருக்கு சாதகமான ஒன்றாக அமையவில்லை. இன்றைய தேதியில் ‘வெர்மான்ட்’ மாகாணம் தவிர வேறு எதுவுமே ஒபாமாவுக்கு கிடைக்காது போல் படுகிறது.

3. Surveying Ohio’s Democratic landscape – Los Angeles Times: “Geography, a popular governor and big-city mayors hold the keys to winning the primary.” – உள்கட்சி அரசியலைப் பார்த்தால் தமிழகக் கூட்டணியே எவ்வளவோ தேவலாம் போல் தோன்றுகிறது.

4. Drift away from Clinton frustrates many women – Los Angeles Times: “As they see her chances slipping, some feel old wounds: An older, more experienced woman is pushed aside to make way for a younger male colleague.” – தமிழில் ஒரு பழமொழி உண்டு: ‘கைக்கெட்டியது… வாய்க்கு எட்டவில்லை’; தொடர்பான தமிழ் சசியின் இடுகை: சசியின் டைரி: ஹில்லரி Vs ஒபாமா

5. In ’08 Politics, Rhode Island Defies Its Size – New York Times: கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது ஸைசு சின்னதாக இருந்தாலும் மகாத்மியம் பெரிதாக வாங்கிக் கொள்ளும் மாகாணம்.

சமீபத்தில் படித்த ‘நச்’ கருத்து

ஞாநி கட்டுரை: IdlyVadai – இட்லிவடை: “கலைஞர் டி.வி. மன்னிப்பு கேட்கவேண்டும்! என்ற தலைப்பில் ஓ-பக்கங்கள், குமுதம்.”

ஓ பக்கங்களுக்கு பின் தொடர்தல்: :-): மாலை மாற்றுதல் – லெஸ்பியன் ்- குமுதம் – ஞாநி அவதூறு!!

தலைப்பில் குறிப்பிட்ட கருத்து – பின்னூட்டம்: “ஏனோ இந்த பதிவை படித்ததும் ‘ஆடு நனைகிறது என ஓநாய் அழுததாம்’ என்ற பழமொழி நினைவிற்கு வ்ருவதை தவிர்க்க முடியவில்லை”

‘சவுன்ட் வுட்டாக்க வெட்டிடுவாங்க’ என அச்சுறுத்தும் கருத்து – லக்கிலுக் : “திமுக, பாமக போன்ற தலைமைகளை இதுபோல விமர்சித்திருந்தால் தமிழ்நாட்டில் பெரிய பூகம்பமே வெடித்திருக்கும்.”

அபச்சாரம், அபிஷ்டு, ‘கெட்ட வார்த்தை பேசுறான்’ கருத்து: லக்கிலுக் – “ஆயினும் லெஸ்பியன் என்ற சொல்லை கலைஞர் டிவியே கூட பயன்படுத்தவில்லை. ஞாநி தான் பயன்படுத்தியிருக்கிறார்”

கருத்து சுதந்திரமும் கருத்தாக்கமும்

மாலனின் தினமணிக் கட்டுரை – எதிர்வினை மற்றும் திருமாவளவனுக்கு ஆதரவாக தொடர்பாக:

1.

கருத்துரிமை மீட்பு மாநாட்டில் பேசப்பட்ட விஷயத்தை மட்டுமே வைத்துக்கொண்டு அந்த மாநாட்டின் அடிப்படையில் ஒருவரைக் கைது செய்யவேண்டுமா, கூடாதா என்று பார்க்கவேண்டும்

விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம் என்ற காரணத்தாலேயே ஈழத்தமிழர்கள் மீதான படுகொலையைக் கண்டிப்பது, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்களின் சாவுக்கு இரங்கல் தெரிவிப்பது போன்றவற்றை யாரும் செய்யக்கூடாது என்று சொல்வது கருத்துரிமைக்கு எதிரானது என்றார்.

First Amendment என்று அமெரிக்காவில் பெருமையாக சொல்லிக் கொள்வது பாராட்டத்தக்கது. இஸ்லாமியர்களை புண்படுத்தும் டென்மார்க் கேலிச்சித்திரங்களை வெளியிடுவதாகட்டும்; வெள்ளை இனத்தவர்களே உயர்ந்தவர்கள் என்று பறை சாற்றி, கருப்பர்களை ஆப்பிரிக்காவிற்கே திரும்பப் போகச் சொல்லும் கூ க்ளூ க்ளானுக்கு (Ku Klux Klan) உரிமை தருவதில் ஆகட்டும்; இராக் போர் எதிர்ப்பை சுட்டிக்காட்ட, ஜனாதிபதி வீட்டின் முன் தர்ணா போடுவதாகட்டும்…

கருத்துகள் வெளியில் வர வேண்டும்; முட்டி மோதிக் கொள்ள வேண்டும்; அவர்களின் கேணத்தனத்தையோ புத்திசாலித்தனத்தையோ பொதுமக்களே தெரிந்து கொள்வார்கள். அதற்கேற்ப ஆதரவு பெருகலாம்; அல்லது வாதத்தின் செறிவற்ற தன்மை விளங்கிக் கொள்ளப்படும்.

தொடர்புள்ள பதிவு: Case of the Month October 1999

சுடச்சுட அலசப்படும் புத்தகம்: Amazon.com: Freedom for the Thought That We Hate: A Biography of the First Amendment: Anthony Lewis: Books

குறிப்பிடப்பட்ட தினமணி கட்டுரையின் பிரதி இங்கே கிடைக்கிறது: தடுமாறுகிறார் முதல்வர், ஏன்? – மாலன்

2.

தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டபோது அவர் போர் உடையில் இல்லை. போர் புரியவும் இல்லை

தமிழ்ச்செல்வன் கொலைக்கு ஏன் பரந்துபட்ட அனுதாபம் எழுந்தது?

‘ருஷியாவுக்கு புதிய அதிபர் வந்திருக்கிறார். இனி புடின் செல்வாக்கு செல்லாக்காசு’ என்று சொல்வது போல் இருக்கிறது இந்த போர் விவகாரம். இராணுவ உடை போட்டுக் கொள்ளவில்லை; அதனால் அவர் விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் பங்குபெற மாட்டார் என்பது 100% தவறு. அப்பொழுது வாசிக்க கிடைத்த நேரடி பதிவுகளில் தமிழ்செல்வன் கடைசி வரை போராளியாகவே, திரைமறைவு தாக்குதல் திட்டங்களில் ஈடுபடுத்தப்பட்டு வந்ததாகவும், அதையே விரும்பியதாகவும் பகிர்ந்தது கிடைக்கிறது.

பூட்டோ இறந்தால் தீக்குளிப்பது முதல் சுகார்தோ மறைவு வரை தொண்டர்கள், தங்களுக்கு பணிக்கப்பட்டதை குழு மனப்பான்மையோடு துக்கம் அனுஷ்டிப்பதை வைத்து, ‘அய்யோ பாவம்… நாலு பேருக்கு நல்லது செய்ததால்தானே கண்ணீர் விடுகிறார்கள்’ என்பது போன்ற வாதமும் ஏற்றத்தக்கதன்று.

அதிகாரபூர்வமாக கன்சலேட், ஹை கமிஷன் போன்ற பெயர்களில் உளவு செய்தியை சேகரிப்பார்கள். ஈழம் தனி நாடு ஆகாத காரணத்தினால், அதிகாரபூர்மில்லாத 007 ஏஜென்டாக தமிழ்செல்வன் செயல்பட்டார். அங்கு தூதரக அதிகாரி என்னும் போர்வை; இங்கே சமாதான தூதுவர் என்னும் வெளிப்படுதல். அவர் ‘இறந்ததை வைத்து மேலும் காசு சம்பாதிக்கலாம்’ என்னும் பிரபாகரனின் திட்டமும் ஒத்துழைக்க தமிழ்செல்வன் பலிகடா ஆகிறார்.

என்னுடைய முந்தைய பதிவு: ஈ – தமிழ்: தமிழ்ச் செல்வனின் மரணம்

தொடர்புள்ள செய்தித் தொகுப்பு, பதிவுகள், வரலாறு, வலையகம்: Snap Judgement: LTTE

பெண்கள் வோட்டு எவருக்கு?

வலதுசாரி சித்தாந்த இதழில் இருந்து: O’Beirne, Kate | National Review: Voting and the single woman: the raw demographic truth in American politics

 • ஆண்; வெள்ளை கடந்த முப்பதாண்டு கால அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில், ஜனநாயகக் கட்சியை சார்ந்த எந்த வேட்பாளருமே வெள்ளை ஆண்களின் வாக்குகளை 43 % மேல் பெற்றதில்லை.
  • ஆல் கோர் (2000 தேர்தல்) – 36 %;
  • ஜான் கெர்ரி (2004 தேர்தல்) – 37 %
 • பெண்கள் : கெரி – 51.5%; புஷ் – 48.5%
 • பெண்; வெள்ளை : புஷ் – 55.5%; கெரி – 44.5%
 • மணமாகாத பெண்: கெரி – 62.5%; புஷ் – 37.5%
 • மணமாகாத பெண்: வாக்களித்தவர்கள் – 59%; வாக்குச்சாவடிக்கு செல்லாதவர்கள் – 41% (இருபது மில்லியன்)

பெரும்பாலும், திருமணமான பெண்டிர் குடியரசுக் கட்சியையும், மணமாகாத பெண்கள் ஜனநாயகக் கட்சியையும் ஆதரிக்கின்றனர்.

நான்கு சிறுகதை – வாசக அனுபவம்

‘இலக்கியச் சிந்தனை’யால் சிறந்த சிறுகதையாகத் தேர்வாகியுள்ள கதை: Marathadi : மீனாமுத்து: “யாத்தி”

அமெரிக்கா போன்ற சட்டதிட்டங்கள் ஓரளவு கடுமையாக, உடனடியாக நிறைவேற்றும் நாடுகளிலேயே, இந்தக் கொடுமை எளிமையாக, அன்றாடம் நடந்தேறுகிறது, ‘படித்தவர்கள் பண்பற்றவர்கள்’ என்பது போல் பல கேஸ்கள்; சமீபத்தில் கைராசியான நியு யார்க் மருத்துவ தம்பதியர்கள் கைதாகி, குற்றமும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

நிகழ்வை ஆர்ப்பாட்டமில்லாமல் எளிமையாகக் கண்முண் கொணருகிறார். அதிர்ச்சிக்காக மட்டும் இல்லாத நேர்த்தியான முடிவு. மிகவும் பிடித்திருந்தது.

மென்மையான எழுத்துக்களை தட்டச்சும்போது கூட என்னுடைய கீபோர்ட் சத்தமெழுப்பி, சிந்தையைக் கலைத்துப் பொடும். அது போல், சிறுகதையைப் படிக்கும்போது ஆச்சரியக்குறிகள் தொடர்வண்டியாக நடுவில் வந்து ஓசையெழுப்புகின்றன.


Thinnai: “ஒரு நாள் உணவை… – ரெ.கார்த்திகேசு”

குழந்தைகளை கம்பேர் செய்யக்கூடாது; சுஜாதாவையும் சுரதாவையும் ஒப்புமையாக்கி தராசு எல்லாம் கூடாது என்று எண்ணுபவன் நான். இருந்தாலும், முந்தைய கதையில் முழுநீள வாழ்க்கையே விவரித்திருக்க, இங்கு சம்பவம் விரிகிறது.

விவரணப்படம் போல் ஆகிவிடும் அபாயம் இருந்தாலும், அவ்வாறு போரடிக்காத சஸ்பென்ஸ் நோக்கிய விறுவிறுப்பு. மணமான இல்லறத்தில் நிகழ்வதை படம் பிடித்து ஓடவிடும் லாவகம்.

நான் என்ன நினைக்கிறேன் எனக் கேட்டுவிட்டு என் பதிலுக்குக் காத்திராமல், அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி 10-15 நிமிடம் பேசுவார்கள். சிலர் நம் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டே பேசுவதால் அகலவும் முடிவதில்லை.

போன்ற களையான பிரதேசங்கள்.

தவறவிடக்கூடாத ஆக்கம்.


அ.முத்துலிங்கம் எழுதி விரைவில் வெளிவரப்போகும் சுயசரிதைத் தன்மையான நாவலின் ஓர் அத்தியாயம்தான் மேலே தந்திருப்பது.

என்று பீடிகையுடன் முடிகிறது: Thinnai – யுவராசா பட்டம் – அ.முத்துலிங்கம்

விமர்சிக்கலாம் என்று படிக்க ஆரம்பிக்கும் ஆணவம், தொலைந்து போக வைக்கும் சாமர்த்தியம். ‘நிஜம்தானோ!’ என்னும் பிரமிப்பு. ‘அச்சச்ச்சோ’ என்று தொடரும் பரிதவிப்புடன் பதற வைத்து எழுத்துக்குள் மூழ்க வைக்கிறார்.


நுனிப்புல்: ஐந்தும் ஆறும் – புனைவு என்பது உணர்ச்சிகளை சித்தரிப்பது; கேள்விகளை எழுப்புவது.

‘நந்தா’ திரைப்படத்தில் பல காட்சிகள் சிறப்பாக இருந்தாலும், அந்த துவக்க காட்சியில் நடக்கும் பிரதோஷ உபன்யாசம் மறக்க முடியாதது. எள்ளல்தன்மையுடன் தொடரும் திரைக்கதையில் வீட்டில் நடப்பதைக் காட்டி லெக்சர் மகிமையை சிந்திக்கவைப்பார்கள். திருக்குறள் என்னதான் கலக்கலாக இருந்தாலும், அதைப் போல் போதனை இலக்கியம் எனக்கு அசூயையே தருகிறது.

ஒரு வேளை.. ‘பெண்ணெழுத்தின் நாடித்துடிப்பு பெண்ணிற்குத்தான் புரியும்’ என்னும் மங்கையர் மலர் கால ஃபீலிங்குடன் மனைவியிடம் கொடுக்க, அவரோ லாஜிக்கலாக கேள்விகளை எழுப்பும் அடுத்த கட்டத்துக்கு சென்றுவிட்டார். ‘எலக்கியம்னா அனுபவிக்கனும்; நோ க்வெஸ்டின்ஸ்’ என்று மகளுக்கு ஈசாப் நீதிக்கதைகளை வாசிப்பதுடன் அனுபவம் முடிந்தது.

வலைப்பதிவுகள் – அடுத்த கட்டம்

தமிழ்ப்பதிவுகளுக்கு அடுத்த கட்டம் என்ன ஏது என்றெல்லாம் ஸ்பஷ்டமாக விளக்குமாறு கொக்கிப் பிடி போடாவிட்டால், ஐந்தாவது ஆண்டில் இருக்கும் தமிழ் தட்டச்சும் நல்லுலகம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விட்டதாகவே தோன்றுகிறது.

ஏன்?

 • ஏற்கனவே பதிவுகள் என்ற அளவில் உள்ளே வந்து, புண்ணூட்டங்களில் – சிறு பத்திரிகையை மிஞ்சும் அளவிலும், உள்ளடக்கத்தில் – நாப்கினைக் கூட நிரப்பாத அளவிலும் மறுமொழி வாங்கி; ஒதுங்கிய ‘பெரியவர்கள்’ மீண்டு, தங்களுக்கென வலையகம் அமைத்திருப்பது. (பாரா | எஸ் ரா)
 • தினமலர் எல்லாம் பதிவை எடுத்து உதாரணம் காட்டி அச்சு ஊடகத்துக்குக் கொண்டு சென்றாலும், செக்சுக்கு நிகராக அலைந்து விழும் கூட்டத்தை, பதிவுலகத்துக்கு இட்டுக் கொண்டு வந்த விகடனின் கைங்கர்யத்தாலும் அதற்கு நிகராகத் தொடரும் ஜெயமோகனின் க்வாலிடியாலும்!
 • பதிவுகளில் எழுதியதே புத்தகமாக வருவது தவிர, பிரத்யேகமாக எழுதிக் கொடுக்க வல்லுநர்களை உருவாக்கித் தந்திருக்கிறது. குப்புசாமி செல்லமுத்து போன்றோரை சொல்லலாம்.

மாற்று மெச்சூர் ஆகிவிட்டது, தமிழ்மணம் தடுக்காமல் தரவுதளமாகிவிட்டது என்று அடுக்கிக் கொண்டே போக ஆசை.

நிதர்சனமாக நண்பர்களைக் கூப்பிட்டு சில காரியங்களை கடந்த வாரத்தில் சோதித்துப் பார்த்தேன்.

 1. தமிழ் வோர்ட்பிரெஸில் பதிவைத் தொடக்குவது (என்னுடைய உதவி இல்லாமல்; கணினி நிரலாளர்/பயனர்கள்)
 2. ஜெயமோகன்.இன், தமிழ் கணிமை போன்ற இடங்களுக்கு செல்ல வைத்து, தொடர்ந்து செல்வாயா/செல்கிறார்களா என்று கவனிப்பது
 3. குமுதம்.காம், தட்ஸ்தமிழ் ஆகியவற்றுடன் எம்.எஸ்.என், ஏஓஎல், யாஹூவை ஒப்பிடுதல்
 4. தமிழ்மணம், தேன்கூடு புரட்ட வைத்தல்

ஆசிரியர் பாடம் எடுப்பது போன்ற கசப்புடனே பெரும்பாலோர் அணுகினார்கள். வோர்ட்பிரெஸ் தமிழாக்கம் புரிந்துகொள்ள சிரமப்பட்டார்கள். ஆங்கில இடைமுகம் கண்டபின் பரவசமானார்கள்.

‘எம்.எஸ்.என், யாஹூ எல்லாம் அதே செய்திகளைத்தானே… தமிழ்ப்படுத்தியிருக்கிறது? நாங்க சன் நியூஸே பார்த்துக்கிறோம்’ என்றார்கள்.

குமுதம் வீடியோ நேர்காணல் போல் எங்கு கிடைக்கும் என்று தேடிப் பார்த்தார்கள். சின்னப்பையன் போன்ற விஷயங்களை மேலும் தரும் இடங்களை வினவினார்கள். ‘பிரமிட் சாய்மீரா மாதிரி குமுதமும் விகடனும் கூட வலைப்பதிவு கொடுக்கிறதா? அதற்கு வழிகாட்டேன்…’ என்று பிரியப்பட்டார்கள்.

மொத்தத்தில் ‘தானாகக் கனியாத பழத்தை தடி கொண்டு பழுக்க வைக்கலாகாது’ என்பதற்கேற்ப ஸ்பூன் ஃபீடிங்கை நிறுத்திவிட்டு இந்தப் பதிவை எழுத ஆரம்பிக்க வேண்டியதாயிற்று.