ஓபாமா- கிளிண்டன் – மெக்கயின் – யார் வந்தால் இந்தியாவிற்கு அதிக நன்மை? நாம் இவ்ர்களில் யாரை விரும்புகிறோம்?


இங்கே இந்தியர்கள் கிட்ட தட்ட 3 மில்லியன் பேர் இருக்கிறார்கள். இங்குள்ள எத்னிக் (ethnic ) க்ருப்பில் மூன்றாவது. ஒரளவு பணக்காரர்கள். இவர்கள் யாரை ஆதரிக்கிறார்கள்? எல்லோரும் அமெரிக்காவை மட்டும் நினைக்க நாமோ, இரண்டு நாடுகளையும் நினைக்கிறோம்!
இங்கே பெரும்பாலன இந்தியர்கள் டெமாக்ரட் கட்சியியே அதரவு செய்கிறார்கள். போன தேர்தலில் கிட்டதட்ட 80% சதவிகிதம் இந்தியர்கள் ஓட்டு டெமாக்ரட் கட்சிக்கு கிடைத்தது. நான் அறிந்தவரை ரிபப்ளிகன் கட்சிக்கு மிக மிக பணக்காரர்கள் ஆதரவு இருக்கிறது.

பெரும்பாலோர் immigration கொள்கை காரணம்மாக Democrat party support ஆதரவு என நினைக்கிறேன். இப்போது நிலைமை மாறி ஒரளவு ரிபப்ளிகன் கட்சிக்கும் ஆதரவு உள்ளது.

Louisiana கவர்னராக ஒரு Republican இந்தியர் தேர்ந்து எடுக்கப்பட்டது தெரிந்து இருக்கும். .

அது தவிர White houseல் Deepavali கொண்டாடுகிறார்கள்! கிட்ட தட்ட நாமும் ஒரு Factor என பெருமை பட்டு கொள்ளலாம்! New york, California, New Jersey state ல் கணிசமான வாக்குகள் உள்ளன.

Super Tuesday- இல் நம்முடைய பங்கு பற்றி oru sample article:
************************************************************

Washington, February 6: The three million-strong Indian- American community is believed to have swung the electoral fortunes of major US Presidential hopefuls, including Senators Hillary Clinton and Barack Obama, in the primaries of ‘super Tuesday’.

For Democratic Senators Hillary Rodham Clinton and Barack Obama, the community has not only played a crucial role in the run-up to the primaries both by way of physical and financial support but also with their huge concentrations in big and diverse states may have played even a “swing” role.

Indian-Americans are well dotted across the states of New York and New Jersey, the two major states going to Clinton last night; and Illinois, the home state of Obama, also has a large population of the community that has for the most part thrown its weight behind the son of the soil.

In California, especially where the Indian American community is present in large numbers, their voting impact has certainly helped Clinton get this huge state that offered as many as 441 delegates to the national convention.

There is no saying what would have happened to Clinton if she had lost California.

Exit polls in California showed that Clinton did very poorly among the White and African American population but did spectacularly well with the Asian American community by a three-to-one margin and with the Hispanic community by a two-to-one margin.

****************************************************************************
ஆக பெரும்பான்மை ஜனங்கள் கிளிண்டனையே ஆதரித்து இருக்கிறார்கள்!

ஓபாமா- கிளிண்டன் – மெக்கயின் – யார் வந்தால் இந்தியாவிற்கு அதிக நன்மை?

அணு ஒப்பந்தம்:

முதலில் மெக்கயின்: பெரும்பாலும் புஷ்ஷின் கொள்கைகளே இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஓபாமா- கிளிண்டன் : இந்தியாவுடனான அணு ஒப்பந்தம் குப்பை கூடையில் போட chance அதிகம். ஆனால் அதற்கு முன்பு நாமே குப்பை கூடையில் போட்டு விடுவோம் எனத் தோன்றுகிறது.

மற்ற எந்த விஷயதிலும் பெரும் வித்தியாசம் இருக்கும் எனத் தெரியவில்லை. ஆனால் இந்தியாவுடன் ஆன நல்லுறுவு republican time ல் ஆரம்பித்தது என எண்ணுகிறேன். இதற்கு அப்பொதைய காலகட்ட compulsion ம் கூட! [I remember George Bush senior after taking oath, took time to call Rajiv Gandhi and opened a new era in the bilateral relations].

நம்மை அவ்வளவு சுலபாமாயி ஒதுக்கி தள்ள் முடியாது. யார் வந்தாலும் நமக்கான உரிய மரியாதை கிடைக்கும் !!

please opinion your voice…

6 responses to “ஓபாமா- கிளிண்டன் – மெக்கயின் – யார் வந்தால் இந்தியாவிற்கு அதிக நன்மை? நாம் இவ்ர்களில் யாரை விரும்புகிறோம்?

 1. /please opinion your voice…/
  ஓபாமா !!

  /பெரும்பாலோர் immigration கொள்கை காரணம்மாக Democrat party support ஆதரவு என நினைக்கிறேன்./

  இப்போதைக்கு அதுதான முக்கியமான factorஆ இருக்குது……

  /Louisiana கவர்னராக ஒரு Republican இந்தியர் தேர்ந்து எடுக்கப்பட்டது தெரிந்து இருக்கும். ./

  நம்மதான் அப்படி சொல்லிகிட்டு இருக்கோம். அவருக்கு நினைவில் இருக்கிறதானு தெரியலை…

  //ஆக பெரும்பான்மை ஜனங்கள் கிளிண்டனையே ஆதரித்து இருக்கிறார்கள்!
  //
  “நம்ம மக்களுக்கு” கொஞ்சம் soft corner அதிகமோ?

 2. நுகர்வோர் பண்டங்கள் மலிவு விலையில் சீனா முதலிய நாடுகள் தயாரித்து வருவதால், அமெரிக்கா போன்ற நாடுகளின் பொருளாதாரம் ஹை டெக் மற்றும் பாதுகாப்பு தளவாடங்கள், அணுசக்தி இயந்திரங்கள் முதலியவற்றையே பெரிதும் நம்பி இருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவின் பொருளாதாரம் மேம்படுவதற்காக தயாரிக்கப்பட்ட இந்த
  Agreement 123 எனப்படுகின்ற அணுசக்தி ஒப்பந்தத்தைப் படித்துப் பார்த்தால், அதில் NSG (Nuclear Suppliers Group) என்கிற குழுமம் என்னவென்ன இயந்திரங்களை நமக்குச் சப்ளை செய்யத் தயாராக இருக்கிறது என்பது பற்றி நிறையச் சொல்லி இருக்கிறார்கள். ரஷ்யாவுடன் இருக்கும் உறவுமுறையை வைத்துப் பார்த்தால், இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டாலும் அதைத் தொடர்ந்து ஆலை இயந்திரங்களை ரஷ்யாவிலிருந்தே இறக்குமதி செய்யும் (கூடங்குளம் அணு ஆலையைப்போலே) என்றே நான் நினைக்கிறேன். அதனால் அமெரிக்காவிற்கு ஒரு பயனும் இருக்காது என்றும் நம்புகிறேன்.

  அணுமின் சக்தி நிறுவனம் ஒன்றின் கட்டுமான செலவுகளை, (ஒருமெகாவாட் அணுமின் திறனுக்குச் செலவிடும் தொகை எவ்வளவு என்று கணக்கிட்டுப் பார்த்தால்) அமெரிக்க(Westinghouse), கனடாவின்(AECL), பிரான்ஸின்(Areva) இவற்றோடு ரஷ்ய டெக்னாலஜியோ, உக்ரைன்(முந்தைய USSR ) டெக்னாலஜியோடு ஒப்பிட்டுப் பார்த்தால், இவ்விரண்டு நாடுகளிலிருந்து கிடைக்கும் டெக்னாலஜி மிகவிம் மலிவான விலையுடையாதாக இருக்கிறது. இந்த Agreement 123 ஒப்பந்த்தினால் அமெரிக்காவிற்கு ஒரு லாபமும் இருக்காது என்பது என் கணிப்பு.

  அணு ஒப்பந்த்தில் கையொப்பம் இடச்செய்து விட்டோம் என்று வேண்டுமானல் பெருமை பட்டுக்கொள்ளலாமே தவிர வேறு ஒன்றும் சிறப்பாகக் கூறிக்கொள்ள அமெரிக்காவிற்கு ஏதுமில்லை. மெக்கெயினோ அல்லது ஒபாமா/கிளிண்டன் வந்தாலும் ஒரு வேற்றுமையும் இந்தியாவிற்கு இருக்காது.

 3. Soundararaajan:
  Agreement 123 அணுசக்தி ஒப்பந்த்தில் அமெரிக்காவிற்கு ஒரு பெரிய பலன் இல்லை. { இன்னொரு ஆளையும் நம்மோட டீமில் சேர்த்தாகிவிட்டாச்சு என்ற அற்பத் த்ருப்தி மட்டுமே]. ஆனால் இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கு நல்லதே என்று நினைக்கிறேன்]. இந்தியாவிற்கு ரொம்ப விட்டு கொடுத்துவிட்டார் புஷ் என்று பேச்சு.
  இன்னொரு விஷயம்… செனட்டில் இந்த தீர்மானத்திற்கு கிளின்டண் ஆதரவாத்தான் ஓட்டு போட்டு இருக்கிறார்!ஒரு வேற்றுமையும் இந்தியாவிற்கு இருக்காது.

 4. தென்றல், …..//ஆக பெரும்பான்மை ஜனங்கள் கிளிண்டனையே ஆதரித்து இருக்கிறார்கள்!
  //
  “நம்ம மக்களுக்கு” கொஞ்சம் soft corner அதிகமோ?//
  இன்றைக்கு That’s tamil news படி, ஒபாமாவிற்கும் நம்ம மக்கள்ஸ் தயாராகிவிட்டார்கள். see the link below…

  http://thatstamil.oneindia.in/news/2008/02/18/world-prominent-indians-back-obama-on-eve-of-2.html

 5. India Abroad என்ற இதழுக்கு ஒபாமா கொடுத்த பேட்டியில் சொன்னது:
  “Instead of policies that make Indian-Americans feel targeted or excluded from the American story, I will be a President who draws upon the energy and expertise of the Indian American community,” Obama said. “Together, we can restore and revitalise America’s innovation-based economy so that we can create jobs and meet our most pressing domestic challenges”.

  மேலும் ‘Change’ என்று சொல்வது என்ன மாதிரி change; அதாவது ‘transformational change’ என்பதையும் விளக்குகிறார்.
  “In my life, I have always looked to Mahatma Gandhi as an inspiration, because he embodies the kind of transformational change that can be made when ordinary people come together to do extraordinary things,”

  Obama says he is inspired by Mahatma Gandhi.

  “That is why his portrait hangs in my Senate office; to remind me that real results will not just come from Washington, they will come from the people,”

 6. இந்திய அமெரிக்கர்கள் ஒரு மாடல் IMMIGRANTS [வந்தேறிகள்?] . தனி நபர் வருமானத்தில் முதல் ஒன்று-இரண்டு இடங்களில் இருக்கிறார்கள். நல்ல மரியாதயும் கூட. இவற்றுக்கு இங்கு கடந்த பத்து-பதினைந்து வருடமாய் வேலை பார்க்கும் இந்தியர்கள்; சம்பளம் இல்லாமல் தூதர்களாக (India’s ambaasadors) வேலை பார்க்கிறார்கள்!
  Link below for Obama’s interview details.

  http://www.ddinews.gov.in/Homepage/Homepage+-+Other+Stories/Obama+says+he+is+inspired.htm

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.