Daily Archives: திசெம்பர் 17, 2007

The Globalist Quiz

1. உலக சந்தையின் தலை எட்டில் இடம் பிடித்திருக்கும் நிறுவனங்களுக்குள், நான்கு நிறுவனங்கள் எங்கு அமைந்திருக்கிறது?

அ) அமெரிக்கா
ஆ) ஐரோப்பிய ஒன்றியம்
இ) ஜப்பான்
ஈ) சீனா
உ) இந்தியா (ஆசை… தோசை… 😉

விடை அறிய

1989-இல் ஜப்பானின் ஆறு நிறுவனங்கள் ஆக்கிரமித்திருந்தன.
1999-இல் ஆறு அமெரிக்க அமைப்புகள் இடம்பிடித்திருந்தன.

2. இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஐம்பது நாடுகளில் கிட்டத்தட்ட 130 கோடி மக்கள் இருக்கிறார்கள். இவற்றுள் எந்த நாடு 2006-இல் அதிக ஏற்றுமதி புரிந்தது?

அ) இந்தோனேஷியா
ஆ) சவூதி அரேபியா
இ) மலேசியா
ஈ) எகிப்து

விடை அறிய

விடைக்கான துப்பு: எண்பதுகளின் துவக்கத்தில் 113 பில்லியன் டாலராக இருந்த ஏற்றுமதி, தொண்ணூறுகளின் இறுதியில் வெறும் 38 பில்லியனாகியது. இப்போது மீண்டும் 209 பில்லியனைத் தொட்டு ஏறுமுகம்.