முதலில் கதை.
பாஸ்டனில் இன்று அடித்த லேசான பனி போன்ற குளிர் இரவு. ஆனால், கதை நடப்பது பழைய தில்லி. இராஜாதி ராசா அக்பர் அலுங்காமல் குலுங்காமல் நடை பயிலுகிறார். வானத்தில் நிலா பளிச்சென்று பாடலுக்கு மேக்கப் போட்ட அசின் போல் சிரிக்கிறது. அரண்மனை சிற்றோடையில் அசின் தெரிவதாய் நினைத்து தொட்டுப் பார்க்க சில்லென்று காதலில் ஷாக்கடிக்காமல், கை உறைய வைக்கும் குளுமை.
சமாளித்துக் கொண்டு, ஜொள்ளைத் துடைத்துக் கொண்டு பாதுகாப்புக்கு ‘ஆமாம் அரசே‘ போடும் பொடியர்களிடமும், புத்திசாலியாக தன்னைக் காப்பாற்றும் வகை அறிந்த பீர்பாலிடமும் சவடால் விடுகிறார். ‘இந்தத் தண்ணீரில் பகலவன் உதயமாகும் வரை எவனாவது நிற்க முடியுமா?’
தான் எதற்கும் பொறுப்பேற்று தர்மம்/சங்கடம் போன்றவற்றில் மாட்டிக் கொள்ளாத மந்திரி தண்டோரா போடுகிறார். அரசருக்கும் எவனோ அகப்பட்டு இரா முழுக்க frozen to death ஆனது தனிக்கதை.
ஈழப்போரில் பிரபாகரனும் பீர்பால் போல் ‘கரும்புலியாவது யாரு’ என்று வினவ அப்பாவிகள் வந்து கொண்டேயிருக்கிறார்கள். அக்பர் சாலை போட்டார். அசோகர் மரம் நட்டார் மாதிரி விடுதலைப்புலிகள் ஏதாவது பாடம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
அடுத்தது புத்தகம்: One Day the Soldiers Came: Voices of Children in War – Charles London
கடைசியாக இரு தலைவர்கள்: சிட்டி க்ரூப்பும் மெர்ரில் லின்ச்சும் கொண்டாடிய சி.யீ.ஓ.க்கள்.
அமெரிக்காவில் கடன் கொடுப்பதில் எல்லோரும் தாராளமாக இருந்த காலம், கடந்த காலம். வீடு வாங்குவதற்காக வரவுக்கு மேலே பத்தணா கேட்கும் பத்திரங்கள் விற்று வந்தார்கள். அப்படி தாராளமாக திறந்து விட்டு, தங்கள் நிறுவனத்தின் வருவாயைப் பெருக்கிக் கொண்டார்கள்.
இந்த இருவர்கள் மட்டுமல்ல. அனைத்து நிதித்துறையும் செய்ததுதான். இருந்தாலும் இருவரும் பணால் ஆகி இருக்கிறார்கள்.
நேரடியாக களத்தில் இறங்கி தானப்பிரபுவாக அள்ளிவிடச் சொன்னது இவர்கள் அல்ல என்றாலும், பொறுப்பு என்றோ, கடமை என்றோ, பலிகடா வேண்டும் என்றோ, பிறருக்கு நம்பிக்கையூட்ட இன்னொருவர் தேவை என்றோ விலகிக் கொண்டிருக்கிறார்கள்.
தியாகம் என்று சொல்ல முடியாதபடி பல மில்லியன் வருவாயை வழித்துக் கொண்டு சென்றாலும், தவறான பாதையில் அழைத்து சென்றதற்காக நிறுவனத்தின் தலைவர்கள் பதவியிழந்தார்கள்.
பிராயசித்தமாக, பிறிதொரு பாதையில் செல்வதற்கு புது முகம் தேவை என்பதற்காக, மாற்றுவழியை உறுதியுடன் நம்புபவர் வேண்டும் என்பதற்காக கழற்றி விடப்பட்டார்கள்.
பங்குச்சந்தை ப்ரெஷருக்கு மட்டுமல்ல… உலக அரங்கிலும் நம்பிக்கையூட்ட பிரபாகரன் விலகினால்தான் ஈழத்துக்கு விடுதலை.
பின்னணி/தொடர்புள்ள பதிவுகள், செய்திகள்/தொகுப்பு: Snap Judgement: LTTE
//ஈழப்போரில் பிரபாகரனும் பீர்பால் போல் ‘கரும்புலியாவது யாரு’ என்று வினவ அப்பாவிகள் வந்து கொண்டேயிருக்கிறார்கள். அக்பர் சாலை போட்டார். அசோகர் மரம் நட்டார் மாதிரி விடுதலைப்புலிகள் ஏதாவது பாடம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.//
அப்பாவிகள்=?
//உலக அரங்கிலும் நம்பிக்கையூட்ட பிரபாகரன் விலகினால்தான் ஈழத்துக்கு விடுதலை.//
ஈழத்துக்கு விடுதலை= haX3
Related reading: அலைஞனின் அலைகள்: குவியம்: சற்றே �
Pingback: ஈழம், விடுதலைப்புலிகள், இலங்கை - தமிழ்நாடு தமிழனின் பார்வை « Snap Judgment
“பிரபாகரன் விலகினால் ஈழத்துக்கு விடுதலை” – பிரபாகரன் விலகுவதால் புலிகளின் மீதான உலகப் பார்வை எப்படி மாறும் என்று விலக்குவீர்களா? இல்லை, புலிகளும் இல்லாது போனால் தான் ஈழத்துக்கு விடுதலை என்கிறீர்களா? அதை யார் தங்கத் தாம்பாளத்தில் வைத்துப் பெற்றுத் தருவார்கள் என்றும் சொன்னால் நலம்..
—பிரபாகரன் விலகுவதால் புலிகளின் மீதான உலகப் பார்வை எப்படி மாறும் என்று விளக்குவீர்களா?—
புஷ் பதவி விலகியபின் அமெரிக்காவில் வரவு-செலவு பற்றாக்குறை, குடாப்போர்கள் போன்றவற்றில் நிலை வித்தியாசப்படும் என்கிறார்கள். ஒரு பேச்சுக்கு புஷ் என்பதை பிரபாகரனாகவும், அமெரிக்கா என்பதை விடுதலைப் புலிகளாகவும் வைத்துக் கொள்வோம்.
அமெரிக்கர் எல்லாருக்கும் weak dollar- இல் விருப்பமா? இராக் போர் உகந்ததா? புஷ் கட்சி பதவி இறங்கினால் பொருளாதார கொள்கையில் சிற்சில மாற்றங்கள் முதல் வேறு சிலவற்றில் மாபெரும் வித்தியாசங்களை உணர முடியும்.
ஆஸ்திரேலியாவில் ஆட்சி மாறும் வரை இராக் போர் குறித்த அந்த நாட்டின் நிலை மாறவில்லை.
இதுவரை விடுதலை வாங்கித் தர இயலாத strategy மீது மாறாப்பற்று உடையவர் பதவி விலகி, இன்னொருவர் வந்தால் ஒழிய ‘சண்டை மட்டுமே சுதந்திரத்துக்கான பாதை’ என்பதை வலியுறுத்துவதும் மாறப்போவதில்லை.
—புலிகளும் இல்லாது போனால் தான் ஈழத்துக்கு விடுதலை என்கிறீர்களா?—
ஈழத்துக்கு விடுதலை என்பது ஒரு நாளில் நிச்சயம் சாத்தியப்படாத ஒன்று என்பதை புரிய வைக்கலாம். முதலில் federal அமைப்பு அல்லது கூட்டாட்சி அமைப்பு; அதன் தொடர்ச்சியாக ஈழத்தில் நிலவும் ஜனநாயகத்தைப் பொறுத்து மேன்மேலும் சுதந்திர பிரகடனம் என்று timeline path, குறிக்கோள்கள் வைக்கலாம்.
சமீபத்திய உதாரணமாக அயர்லாந்தை எடுத்துக்கொள்வோம். இங்கிலாந்தோடு இணைந்து இருக்க விரும்பும் கத்தோலிக்க குடியரசுக்கும் எதிர் கட்சியான அயர்லாந்தோடு இணைய விரும்புபவர்களுக்கும் இடையே போட்டி. நடுநிலைவாதிகள் இருவரையுமே விரும்புவதில்லை.
எப்படி இந்தப் பிரச்சினை (ஓரளவு) முடிவுக்கு வந்துள்ளது?
—அதை யார் தங்கத் தாம்பாளத்தில் வைத்துப் பெற்றுத் தருவார்கள் —
வெற்று பிணக்கைத் தொடர்வதை விட, பொருளாதாரமும் உள்ளூர் சேவைகளும் மிளிர்வதை மக்கள் விரும்புகிறார்கள். இதை யார் பெற்றுத் தந்தாலும், தர வைப்பவர்களை தீர்த்துக் கட்டாமல் இருந்தாலும், தரவேண்டும் என்று நினைப்பவர்களைத் தோல்வியைத் தழுவச் செய்யாமல் இருக்கும் தலைவரும் இருத்தல் நலம்.
haX3
புரியலியே Dr.Sintok (கூகிள் செய்து பார்க்கணும்)
மருதமூரான்: பொது மக்கள் ஏன் இலக்கு வைக்கப்படுகின்றனர்?.
இந்த இருநாள்களிலும், கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்கள் யாருடைய இலக்கு? இவர்கள் உயிரிழப்பதால் அல்லது காயமடைவதால் தாக்குதல்தாரிகளுக்கு என்ன இலாபம் இருக்கின்றது. இந்த நிலையில் பொது மக்கள் ஏன் இலக்கு வைக்கப்படுகின்றனர்?. மோதல்கள் இடம்பெறும் நாடொன்றில் உயிரிழப்புக்கள் வழமையானவையொன்று சிலர் கருதலாம், ஆனால் ஏன் பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர். இவற்றால் என்ன பயன் விளைந்து விடப்போகிறது.
இவ்வாறு சர்வதேச அமைப்புக்கள் உடனடியாக கண்டனங்களை அல்லது அனுதாபங்களை மாத்திரம் வெளியிடும். இதனால் மக்களுக்கு என்ன விமோசனம் கிடைத்துவிடுகிறது?
மக்களை அச்சத்துக்குள்ளாக்குவதனால் என்ன பயன்? இந்த மக்கள் ஏன் இலக்கு வைக்கப்படுகின்றனர் என்று கேட்கத்தோன்றுகிறது.
மக்களுக்காக போராடுபவர்களாலும், மக்களைக் காப்பாற்ற யுத்தம் புரிபவர்களாலும் மக்கள் ஏன் இலக்கு வைக்கப்படுகின்றனர் என்பது இலங்கையில் முப்பது, நாற்பது வருடங்களாக புரியாத புதிராக இருந்து வருகின்றது. இவை எதிர்காலத்திலும் தொடரலாம். யார் கண்டது.
Sri Lanka | Burning bright | Economist.com: “The Tigers and the government match outrage with outrage”
தமிழர் பூங்கா: : “பிரபாகரனுக்கு பின்னால் புலிகள் அமைப்பு என்ன ஆகும்?”
Pingback: கருத்து சுதந்திரமா - லிட்டருக்கு எத்தன ரூபா?? « Snap Judgment