ஆளவந்தான்


truth_vegas_one_way_multiple_paths_new_yorker_cartoon.jpg

தீபாவளிக்கு முந்தைய நாள் இரவு சன் டிவியில் ஆளவந்தான் போட்டிருக்கிறார்கள். தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை பார்த்து விடலாம் என்று பெரிய மனது செய்து, பதிவானவற்றை மேய்ந்ததில் தெரிய வந்தது.

அரை மணி நேரம்தான் கிடைக்கப்பெற்றேன். அடுத்த முறை இந்தியா போகும்போது மோஸர் பேயரில் வாங்கி வர வேண்டும்.

நந்து அறிமுகமாகும் காட்சியில் கூடவே குரங்கு தோன்றுகிறது. அது கடுவணா, மந்தியா என்றெல்லாம் யோசிக்காதவனாக நந்து வளர்ந்திருக்கிறான்.

‘கடவுள் பாதி மிருகம் பாதி’ பாடலின் ஆரம்பத்தில் வெளியே சுற்றும் குரங்கைத் துரத்தியடித்துவிட்டு ஆடிப் பாடுகிறான். போதையின் கிளர்ச்சியாக வரும் திரை மாற்றங்கள் தமிழ்ப்படங்களில் இது வரை யாருமே செய்யாதவை.

‘ராஜா சின்ன ரோஜா’வாக கார்ட்டூன் போடாமல், கோபத்தில் அடிதடி போடும் பொம்மை மனது. கம்பத்தைத் தேய்த்து காமாக்னியை தணித்துக் கொள்ளும் பாவம். விளையாட்டு மட்டையில் வெறியை உருட்டும் ஷோகேஸ்கள்.

நுழைவுச்சீட்டு வாங்கும் வரிசையில் நிற்கும் குழந்தையின் ஐஸ்க்ரீமை சார்லி சாப்ளின் கபளீகரம் செய்தால் சிரிக்கும் குழந்தையிடம் அதே செய்கையை செய்து, நிழல் நிஜமாவதின் யதார்த்தம்.

‘நீ பேசுவது புரியல’ என்று துணையெழுத்து படிக்கும் நக்கல். மனிதர்களே காட்சிப் பொருளாகவும் காட்சிப் பொருள்களே கனவாகவும் கனவுகளே வக்கிரமாகவும் நிற்பவை.

பச்சை வண்ணக் சொப்பனக் கலவை; சிவப்பு நிற வேகம்; நீல நிற குளிர் தாய்மை.

சாரு நிவேதிதாக்களுக்கு விளங்கவில்லையா? புரியாத மாதிரி வெறுப்பேற்றி காலந்தள்ளுகிறார்களா?

படம் பார்த்த அரை மணி நேரத்திலேயே சுஜாதாவின் கருத்துகள் தோன்றிப்போகிறது:

ஒரே படத்தில் பல விஷயங்களைச் சொல்ல வேண்டும், பல திறமைகளை தொழில்நுட்பங்களை காட்ட வேண்டும் என்கிற உங்கள் பரபரப்பினால் படம் நிச்சயம் பல இடங்களில் பாதிக்கப்படுகிறது. அவை இவை:

  • மாமாவின் தொண்டை கான்சரும், அதனால் அவர் கருவி மூலம் பேசுவதும் ஒரு அனாவசியமான கவனக் கலைப்பு.
  • கதையில் விஸ்தாரமாகக் காட்டப்பட்டு பயன்படுத்தப்படாத விஷயம் நந்து செத்துப் போய் விட்டான் என்று கடித்துக் குதறி, தலையை வெட்டி, அதிகாரிகளை விஸ்தாரமாக நம்ப வைப்பது விரயமாகி விடுகிறது. அடுத்த சீனிலேயே விஸய், ‘நந்து செத்து போயிருக்க மாட்டான்‘ என்று சொல்லிவிடுகிறான்.


சினிமா எடுப்பதின் மற்ற அவஸ்தைகளும் இடைவௌியில் தங்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சிகளும் மன உளைச்சல்களும் தாமதங்களும் முடிக்க வேண்டிய கட்டாயங்களும் காரணங்களாக இருக்கலாம்.

இதயம் பேசுகிறது ‘தாயம்’ தொடர்கதையை விட திரைக்கதை-வசனத்தில் கமல் நன்றாகவே செய்திருக்கிறார்.

Advertisements

8 responses to “ஆளவந்தான்

  1. இவ்வளவு நாள் கழித்து ஆளவந்தான் விமர்சனமா? ஆச்சரியமாக இருக்கிறது.

    பஞ்சு அருணாசலம் சொன்னார் என்று கேள்விப்பட்டேன் – “நந்துவின் சாவை உருக்கமாக ரசிகர்கள் ஒரு சொட்டு கண்ணீர் விடுமாறு எடுத்திருந்தால் நிச்சயம் படம் வெற்றி பெற்றிருக்கும்…” என்று. அது சரி என்றே தோன்றுகிறது.

  2. —இவ்வளவு நாள் கழித்து ஆளவந்தான் விமர்சனமா?—

    ரொம்ப லேட் ஆயிடுச்சோ 😉

    சமீபத்தில் படித்த Cliff Evans’s video installation Empyrean குறித்த விமர்சனம் (Apocalypse now – Arts – The Phoenix) ஆளவந்தானுக்கும் பொருந்தும்:

    A dense web of associations is conjured.

    It’s impossible to take in all in at once. The videos are mostly flat planes of imagery drifting across one another, and some limited animation.

    The scenes seep into your brain. The images feel familiar, but if you try to place them, they’re elusive. What is real and what is fiction becomes slippery, a reflection of our synthetic double-speak era. “If someone has violence done to them in the pieces, those are initially from simulations” .

    Each time I watched it, I found new images, new layers, new connections.

  3. //இதயம் பேசுகிறது ‘தாயம்’ தொடர்கதையை விட திரைக்கதை-வசனத்தில் கமல் நன்றாகவே செய்திருக்கிறார்//

    அப்ஜக்சன் மைலார்ட்… தாயம் நல்லா இருக்கும் 🙂

    ரொம்ப சிம்பிளான கதையிலே தேவை இல்லாத பிரம்மாண்டத்தை நுழைத்தால் என்ன ஆகும் என்பதற்கு ஆளவந்தான் ஒரு உதாரணம் ( விஜயகுமாரை, கொமாண்டோ வாக இல்லாமல், ஒரு அசிஸ்ட்டண்ட் கமிஷனராகக் காட்டியிருந்தாலே நல்ல இம்பாக்ட் கிடைச்சுருக்கும்)

    ஆக்ஷன் காட்சிகளிலும் , சில தொழில்நுட்பங்களிலும், இன்னும் ஆளவந்தானை ஒரு படமும் தாண்டலை….

    காஸ் சிலிண்டரை கட்டி பிடிச்சு தற்கொலை செஞ்சுக்கறதுக்கு முன்னாலே, நந்து, விஜயகுமாரை பார்த்து ‘ அந்த பொண்ணுகிட்டே ( ரவீணா டண்டண்) சாரி சொன்னேன்னு சொல்லிடு’ ன்னுவார், எல்ல்லாத்தையும் தூக்கி சாப்பிடற வசனம் அது.

  4. பிரகாஷ்,
    அப்பொழுது வந்தது, கத்தரித்து, தைக்கப்பட்டு வீட்டுக்குள் எங்காவது இருக்கும். ஆளவந்தான் இரண்டாம் தடவை பார்க்கும்போது பிடித்த மாதிரி, அது இன்னும் லயிக்கலாம். படிக்கிறேன் 🙂

  5. திடீரென ஆளவந்தான் பார்க்கவேண்டுமென torrent மூலம் தரவிறக்கம் செய்து பார்த்து முடித்துததும் இதே எண்ணங்கள்.. அட்டகாசமாய், Stylishஆய் வரவேண்டிய படம்.. அதுவும் கடைசி துரத்திலில் ஆரம்பித்து (பலூனில் விழுவதில்) கிளைமேக்ஸ் வரை பிண்ணணி இசையென்று ஒன்றுமே இல்லை..

  6. யாத்ரீகன், __/\__

    படத்தை அவசியம் வாங்கவேண்டும். வருகைக்கு நன்றி!

  7. Pingback: படைப்பின் உச்சம் எது? ‘நான் கடவுள்’படமா! நாக்க முக்க பாடலா? « Snap Judgment

  8. Pingback: கமல் மீது என்ன கோபம்? « Snap Judgment

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.