Steve Buscemi: Favorite Actors – List


தூக்கக் கலக்கத்தோடு பட்டியல்.

1. ஸ்டீவ் புசீமி

Steve Buscemi - Pencil on newsprint - digitally colored: Um Graphics

சமீபத்தில் பார்த்தது என்றால் ‘சொப்ரானோஸ்’. வாழ்க்கையை வாழ்ந்து காட்ட வேண்டும் என்று ஆரம்பித்து அரை நொடி சறுக்கலில், மீண்டும் அடியாளாக மாறும் குணச்சித்திரம். உழைத்துக் களைக்கும்போது சாதாரண போராட்ட மனிதனின் தோற்றம். தாதா ஆக உருமாற்றம்; பிரமிக்க வைக்கும் ஆளுமை. சொப்ரானோஸ் தொடரின் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருத்தர் இயக்குவார்கள். இவரும் இயக்கியிருக்கிறார்.

30 ராக்‘கில் போன வாரம் வந்திருந்தார். நகைச்சுவையும் கைவந்த கலைதான்.

திரைப்படங்களில் பிக்ஸரின் ‘மான்ஸ்டர்ஸ் இன்க்‘ வில்லன் கதாபாத்திரம் செய்திருக்கிறார்.

முதல் முதலாக ‘கான் ஏர்‘ படம் மூலமாக எனக்கு அறிமுகமானார். அந்த மசாலப் படத்தின் ஹீரோ/வில்லன்களை மிஞ்சி நினைவில் நின்ற மாந்தராக இருந்தார். அப்புரம் ஃபார்கோ.

நல்ல மனிதர். செப்டம்பர் 11 -ல் உலக வர்த்தக மையம் வீழ்ந்த அடுத்த நாள். இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்பதற்காக தன்னார்வலராக வந்திருக்கிறார். அனுதினமும் களத்தில் இறங்கி சுத்தம் செய்வதில், தீயணைப்பு வீரர்களுக்கு உதவுவதில், தன்னை வெளிப்படுத்தாமல் பன்னிரெண்டு மணி நேர ஷிப்ட்களில் வேலை செய்திருக்கிறார்.

நேர்காணல்: Steve Buscemi (I) | Interviews | Guardian Unlimited Film

“I don’t tend to think of these characters as losers [I play]. I like the struggles that people have, people who are feeling like they don’t fit into society, because I still sort of feel that way.”

இதே வரிசையில் இன்னும் சிலரை பட்டியல் மட்டும் போட்டு வைத்து, பிறகு தொடரும் எண்ணத்தில்:

2. வில்லியம் எச் மேஸி (William H. Macy)

3. நானா படேகர்

4. வுடி ஹாரல்ஸன் (Woody Harrelson)

5. ஷான் பென் (Sean Penn)

கடைசியாக சிலரைச் சொல்லாமல் இருக்க முடியாது:

10. டென்சல் வாஷிங்டன் (Denzel Washington)

9. மைக்கேல் டக்ளஸ் (Michael Douglas)

8. ஆல் பசினோ (Al Pacino)

7. ஜான் ட்ரவோல்டா (John Travolta)

6. டாம் க்ரூஸ் (Tom Cruise)

2 responses to “Steve Buscemi: Favorite Actors – List

  1. எனக்கு ஒரு பெயரில் உடன்பாடு இல்லை. அவர் திறமையான நடிகர் தான் ஆனால் இந்த லிஸ்டில் அவர் ஒட்டவில்லை ! ஆறாம் இடத்தில் இருப்பவர்.

  2. இவர், ஜிம் கேரி, ஆடம் சான்ட்லர், ராபின் வில்லியம்ஸ் என்று பட்டியல் இருக்கிறது. இந்தப் பெயர்களைக் கேட்டாலே, என்னுடைய நண்பர்கள் சிலர் காத தூரம் ஓடிவிடுவார்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.