Daily Archives: ஒக்ரோபர் 21, 2007

புதுமை பூக்கும் புடவைகள்

சிறப்புக் கட்டுரை: நவீன புடைவைகள் பானுமதி (இந்தியா டுடே)
RMKV Sarees Nagasu Pattu Silk Pudavai 83 Diwali Special

ஐந்தரை மீட்டர் புடவையின் நிறத்தையும் டிசைனையும் மாற்றுவதைத் தவிர வேறு என்ன புதுமை செய்யமுடியும் என்று நினைப்பவர்களுக்கு ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன.

ஆர்.எம்.கே.வி முன்பு ரிவர்சிபிள் புடவையையும், 50,000கலர் பட்டுப்புடைவையையும் அறிமுகப்படுத்தியது. ஐந்து மாடி ஸ்ரீகுமரன் ஸ்டோர்ஸும் ‘டூ இன் ஒன்’ புடவைகளை அறிமுகப்படுத்தியது.

சமீபத்தில் ஐந்து மாடி ஸ்ரீகுமரன் ஸ்டோர்ஸ் ஜிப் அன்ட் மேட்ச் புடவைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த வகை புடவையோடு நான்கு பல்லுக்களைத் (முந்தானைகள்) தருகிறார்கள். எந்த பல்லு வேண்டுமோ அந்தப் பல்லுவை ஜிப் மூலம் புடவையுடன் இணைத்து அணிந்து கொள்ளலாம். ஜிப் அண்ட் மாட்ச் புடவைகள் ரூ. 20,000லிருந்து கிடைக்கிறது.

போத்தீஸ் நிறுவனம் பரம்பரா பட்டு, சாமுத்ரிகா பட்டு என்று அறிமுகப்படுத்தியது. ஸ்ரீகுமரனோ நிறம் மாறும் மாயப்புடவை, த்ரீ டி புடவை, டெனிம் பட்டு, ஜோடிப்பட்டு என்று புதுவரவுகள் பட்டுச்சந்தையை வண்ணமயமாக்குகின்றன.

மாயப்புடவை அணிந்துகொண்டு வெயிலில் சென்றால் புடவை வித்தியாசமான வண்ண நிறம் கொன்டதாகத் தெரியும். வீட்டுற்குள் வந்தால் அல்லது நிழலுக்கு வந்தால் அந்த வண்ணம் மாறித் தெரியும். இந்த மாயப்புடவைகள் ரூ.4,500லிருந்து ரூ.7,500 வரையிலான விலைகளில் கிடைக்கிறது.

Saravana Stores Atchaya Pattu Gold in Saree Deepawali Specialபண்களின் பட்டுப்புடவையில் செய்திருக்கும் அதே ம்பிராய்டரி டிசைனை ஆண்களுக்கான பட்டுச் சட்டையில் டிசைன் செய்து ஒரு செட்டாக ‘ஜோடிப்பட்’டை விற்கிறார்கள். எம்பிராய்டரி செய்யப்பட்ட பட்டு வேஷ்டியும் விற்பனைக்கு வந்திருக்கிறது. புடவை, வேஷ்டி, சட்டை கலெக்சன் ரூ. 12,000லிருந்து ஆரம்பிக்கிறது.

தமிழகத்தில் சேலை விற்பனை பற்றி எம்.பி.ஏ மாணவர்கள் பல மார்க்கெடிங் கேஸ் ஸ்டடிகள் செய்யுமளவிற்கு வருடாவருடம் பல உத்திகளைக் களமிறக்குகிறார்கள்.

அடுத்து ஸ்விட்சைத் தட்டினால் டிசைன் மாறும் டிஜிட்டல் புடவை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நன்றி: இந்தியா டுடே (செப்., 19, 2007)

Suda Ragunathan Parampara Pattu Silk Sari Deepavali 2007

1000 மலர்களுடன் பரம்பரா பட்டு (தினமணி)ஆயிரம் அரிய மலர்களைக் கொண்ட பரம்பரா பட்டுச் சேலையை, போத்தீஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

Sudha Raghunathan Parampara Pattu Silk Sarees Diwali 2007இதுகுறித்து, போத்தீஸ் நிறுவனத்தின் பங்குதாரரான ரமேஷ், சென்னையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:

ஒவ்வொரு ஆண்டும் பண்டிகைக் காலத்தின் போது, புதுரக பட்டுச் சேலையை போத்தீஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டு 1000 பூக்கள் கொண்ட பட்டுச் சேலையை அறிமுகப்படுத்தி உள்ளோம். இதற்காக, 5 பேர் கொண்ட ஆராய்ச்சியாளர் குழு, ஒன்றரை ஆண்டுகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருந்தது.

இதன்பின்பு, கடந்த 6 மாதங்களாக பட்டுச் சேலை தயாரிப்புப் பணி நடைபெற்றது. 1 சேலை தயாரிக்க 40 நாள்கள் ஆனது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சம்பந்தம் என்பவர் தலைமையிலான 7 பேர் குழு நெசவுப் பணிகளை மேற்கொண்டது.

சேலையின் விலை ரூ.40,000. அதன் எடை 1 கிலோ 40 கிராம். இதுவரை பரம்பரா சேலைக்கு 10 பேர் ஆர்டர் செய்துள்ளனர். இதில், 9 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்றார் ரமேஷ்.

———————————————————————————————————————————————————————-

எங்கு பார்த்தாலும் புடவை கடைகளாகவே இருக்கு. ஆனால் புடவை கட்டுறவங்க

“”எங்கு பார்த்தாலும் புடவை கடைகளாகவே இருக்கு. ஆனால் புடவை கட்டுறவங்க ளைத்தான் காணோம். முன்பெல்லாம் சினிமாவில்தான் புடவை கட்றவங்க காணாமப் போயிருந் தாங்க… இப்போது ரோட்டிலேயும்…” என்று கலகல வென கமெண்ட் அடித்தபடியே சென்னை தி.நகர் ஐந்து மாடி குமரன் ஸ்டோரில் நுழைகிறது ஓர் இளை ஞர் கூட்டம். அவர்கள் பின்னாலேயே நுழைந்த நாம், இந்தக் கமெண்ட் பற்றி குமரன் ஸ்டோர்ஸின் பங்குதா ரர்களில் ஒருவரான ரவியிடம் கேட்டபோது, “”இரண்டு, மூன்று வருஷங்களுக்கு முன்னால் இந்த கமெண்ட்டில் நியாயம் இருந்தது. இப்போது இது பொருந்தாது.
எந்தத் தொழிலாக இருந்தாலும் புதுப்புது தாக்கங் கள் வருகிறபோது பழைய முறைகளின் பழைய பொருள்களின் மீதுள்ள மவுசு குறைந்ததுபோல் தோன்றும். ஆனால் மீண்டும் பழைமையே புகழ்பெ றும். அதைப்போலத்தான் புடவை விற்பனையும். சுரி தார், ஜீன்ஸ் போன்ற மாடர்ன் ஆடைகள் வந்தபோது சிறிது பின்னடைவு இருந்தது என்பது உண்மைதான்.

இப்போது அப்படியில்லை. புடவைகளின் விற்பனை தான் அதிகமாக இருக்கிறது. கல் லூரிப் பெண்கள்கூட விழாக் கள் என்றால் புட வைதானே கட்டுகிறார்கள்” என்றவரிடமிருந்து விலகி கடையை வலம் வந்தோம்.

பட்டாசையே கொளுத்திப் போட்டாலும் பதறமாட் டோம் என்பதுபோல கடையே புரட்டிப்போட்டு புடவை தேடிக் கொண்டிருக்கிறார்கள் பெண்கள்.

“”எடுக்கப் போறது ஆயிரம் ரூபாய் சில்க் புடவை தான். இருந்தாலும் பத்தாயிரம் பதினைந்தாயிரம் ரூபாய் புடவையெல்லாம் புரட்டிப் பார்க்கணும். கட் டிப் பார்க்கணும். இந்த சான்ûஸவிட்டா கிடைக்குமா? ” என்று தோழிகளிடம் கமெண்ட் அடித்தபடியே ஒரு காலேஜ் பெண் கடைக்காரர் எடுத்துப் போடப் போட புடவை எடுத்து மேலே கண்ணாடியில் பார்ப்பதும், பிடிக்காததுபோல உதட்டைப் பிதுக்கி நடிப்பதையும் பார்த்தபோது சிரிப்பு வந்தது. கை நோக எடுத்துப் போட்ட கடைக்காரரைப் பார்க்கத்தான் பாவமாக இருந்தது.

“ஜிப் அண்ட் மேட்ச்’ என்று வந்துள்ள புடவையைச் சுற்றிப் பெண்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. ஒரு புடவையில் நான்கு முந்தானை. ஒரே நாளில் நாலு புட வைகளைக் கட்டிய சந்தோஷத்தை இந்த ஒரு புடவை யைக் கட்டுவதன் மூலம் பெறலாம். இதன் விலை இரு பதாயிரம் ரூபாய். இதைப்போல ஃப்ளோரா என்கிற பெயரிலான எம்ப்ராய்டரி புடவைகளுக்கு பெண்கள் மத்தியில் நல்ல மவுசு இருக்கிறது. மூவாயிரம் ரூபாயி லிருந்து இந்தப் புடவையின் விலை தொடங்குகிறது.

வெளிநாட்டிலிருந்து வந்து புடவை கட்டத் தெரியா மல் கதாநாயகி முழிப்பார். அப்படி இப்படி என்று கதா நாயகன் புடவை கட்டிவிடுகிற காட்சி பத்துநிமிடம் ஓடி பாடல் ஓடத் தொடங்கும். இக்காட்சி இல்லாப் படங்கள் குறைவாகத்தான் இருக்கும். இயக்கு நர்களின் வழக்கமான இந்தக் கற்பனைக்கு முடிவு கட்டுகிறாற்போல் ஒரு புடவை வந் திருக்கிறது. அந்தப் புடவையின் பெயர் “ஒன் மினிட்’ புடவை. இது ரெடிமேட் புடவை. மடிப்பு பி டி க் க வேண்டிய அவசியமெல்லாம் இல்லை. மடிப்போடு தயாராக இருக்கும். புடவை கட்டத் தெரியாத பெண்க ளுக்காகவே தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் புடவையை ஃபாரின் பெண்கள் சிலர் வாங்கிச் சென்றபோது, “தீபா வளி சீசன் பாதிப்பா? புடவை பாதிப்பா?’ என்று புரிய வில்லை.

நல்லி சில்க்ஸில் நுழைந்தோம். மற்ற கடைகளில் கிடைப்பதுபோல போலியான “தாம்தூம்’ வரவேற்பு நுழைகிறபோது கிடைக்காது. ஆனால் புடவைகளில் தரம் நமத்துப் போகாத லட்சுமி பட்டாசுபோலவே இருக்கும்.

ஏகப்பட்ட டிசைனர் கலெக்ஷன் புடவைகள் இருக் கின்றன. தீபாவளியையொட்டி பிரத்யேக டிசைனர்க ளைக் கொண்டு புதுப்புது டிசைன்களைத் தருவித்தார் கள். எல்லாம் அசத்துகிற டிசைன்கள். ஐநூறு அறுநூறு புடவைகளிலிருந்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேலான பட்டுபுடவைகள் வரை அனைத்திலும் வித்தியாசம்.

கடையில் பெயருக்கேற்ப சில்க் புடவைகளே இங்கு களை கட்டியது.

அடுத்து நாம் நுழைந்தது போத்தீஸ். சாமுத்திரிகா லட்சணத்தோடு சாமுத்திரிகா பட்டைக் கட்டிக் கொண்டு மீரா ஜாஸ்மின் தெருவில் உள்ள பேனர்க ளில் உட்கார்ந்து கொண்டிருக்க, கடைகளில் மீரா ஜாஸ்மின் கனவோடு பல பெண்கள். பத்தாயிரத்திலி ருந்து 20 ஆயிரம் ரூபாய் வரை இந்தப் புடவைகளின் விலை இருந்தாலும் குறைவில்லாக் கூட்டம். இதைப் போல வஸ்தரக்கலா பட்டு, சுபமங்கலா சில்க்ஸ், காஞ் சிபுரம் சில்க்ஸ், முக்கிய நிகழ்ச்சிகளுக்குப் போகிற போது கட்டிக் கொள்வதற்கென்றே பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட புடவைகள் பக்கமும் கூட்டம் அலை மோதுகிறது.

புடவை எடுக்கிற பெண்கள் உடன் வந்திருக்கும் பெண் குழந்தைகள் தமக்கும் புடவை வேண்டும் என்று தொந்தரவு கொடுப்பதைப் பார்த்திருப்போம்.

இங்கு போனால் பெண் குழந்தைகளுக்கும் புடவை எடுத்துக் கொடுக்கலாம். இதுவும் ஐந்து கஜம் புடவை.
அம்மாக்கள் தாங்களே கட்டிக் கொள்ளலாம் என்று நினைக்க வேண்டாம். சிறு குழந்தைகள் கட்டிக் கொள் வதற்கென்றே தயாரிக்கப்பட்ட புடவைகள். விலை நாலாயிரத்திலிருந்து இருக்கிறது.

போத்தீஸ் கடையில் உள்ள மற்றொரு சிறப்பு. ஒரு நாள் என்ன இரண்டு மூன்று நாள்கூட மனைவிகள் தொடர்ந்து புடவை தேடிக் கொண்டிருந்தால்கூட கண வர்கள் கவலைப்படாமல் கூலாக இருப்பதற்கு ஏற் பாடு செய்திருக்கிறார்கள். நீர்மோர், பாதம்கீர் போன் றவை இலவசமாகவே கொடுக்கிறார்கள். சிலநேரங்க ளில் வெண்பொங்கல்கூட கிடைக்கிறது. அடுத்து நாம் சென்றது ஆர்எம்கேவி.
56 ஆயிரம் வண்ணங்கள் புடவை, ரிவர்ஸிபல் புடவை எனச் சாதனைப் புடவைகளைத் தயாரித்து சாதனை படைத்த கடைக்காரர்களின் புது வரவு நகாசு எம்போஸ் பட்டு. புடவையில் பொறிக்கப்பட்டிருக்கிற பூக்களைத் தடவிப் பார்க்கிறபோது நிஜப் பூக்களையே தொடுவது போன்ற உணர்வைக் கொடுக்கும். இந்தப் புடவை வாங்குகிறவர்களின் எண்ணிக்கையேபோல வெறுமனே தொட்டுப் பார்த்துவிட்ட செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம். இந்தக் கடைகள்போலவே நாயுடு ஹால், விபா, கோ-ஆப்டெக்ஸின் கடைகளில் பெருத்த கூட்டம் மோதிக்கொண்டே இருக்கிறது.
“பேண்ட், சர்டோடு எங்களுடைய பர்சேஸ் முடிந் துவிடுகிறது. உனக்கு புடவை, ஜாக்கெட், பொட்டு, வளையல், நகை என எவ்வளவு வாங்க வேண்டியி ருக்கிறது…” என்று மனைவியை ஒரு கடை வாயிலில் ஒருவர் திட்டிக்கொண்டிருந்தார்.
“”வருஷத்துக்கு ஒருதரம்தான் நாங்க எடுக்கிறோம்.

நீங்க வருஷம்பூரா எடுக்கிறீங்க… ஏன் உங்க அம்மா வுக்கு எடுத்துக் கொடுக்கலை…?” என்று மனைவி பட் டாசாய் வெடித்துக் கொண்டிருந்தார். வீட்டு ஞாபகம் வர விட்டோம் ஜூட்! பெயல்