சரிகா – அன்றும் இன்றும்


திரைக்குப் பின் விருது

ஆண்டு: 2000

தேசிய விருது: சிறந்த ஆடை வடிவமைப்பு

படம்: ஹே ராம்

சரிகா & கமல் – பிரிவு: மார்ச் 24, 2002

திரைக்கு முன் விருது

ஆண்டு: 2006

தேசிய விருது: சிறந்த நடிகை

படம்: பர்சானியா

இந்தியன், நாயகன், மூன்றாம் பிறை படங்களுக்காக சிறந்த நடிகர் விருதை கமலஹாசன் பெற்றிருக்கிறார்.

17 responses to “சரிகா – அன்றும் இன்றும்

 1. ஒவ்வொரு பெண் முன் (மேடையில்) ஏறாமல் இருப்பதற்கும் ஒரு ஆண் காரணமாயிருக்கிறார் ???

 2. தோன்றியது இதுதான்… திருமணத்தில் இருக்கும் வரைக்கும் பெண்களுக்கேயுரித்தான வேலை என்பது மட்டும்தான் அவர்களால் செய்ய முடிகிறது. சரிகா கமல்ஹாசனாக இருக்கும் வரை கணவருக்கும், அவரின் படத்துக்கும் காஸ்ட்யூம் நிர்வகிப்பது மட்டுமே பொறுப்பாக அடைய முடியும்.

  பந்தத்தை விட்டு வெளியே வந்தபிறகுதான் கவனிப்பைப் பெறக்கூடிய வாய்ப்புகளை அடைந்து, சாதித்துக் காட்ட முடிகிறது.

  இன்னொரு ட்ரிவியா: ‘சிவாஜி’ ஆடை வடிவமைப்பும் பெண்தான்

 3. பத்மா அர்விந்த்

  //திருமணத்தில் இருக்கும் வரைக்கும் பெண்களுக்கேயுரித்தான வேலை என்பது மட்டும்தான் அவர்களால் செய்ய முடிகிறது// அப்படி இருக்க முடியாது பாலா. அவரவரின் முதன்மைதனத்தை ஒட்டி (what one feels as priority) இருக்கும். சிலரால் இரண்டிலும் சோபிக்க முடியும்.

 4. —what one feels as priority—

  பந்தத்தில் இருக்கும்வரை பந்தம்தான் ப்ரியாரிட்டி என்கிறார்கள் 🙂

 5. பத்மா அர்விந்த்

  பந்தம் என்பதே கூடுதல் சக்தி கொடுக்கும் நட்பு என்று பார்த்தால், மகிழ்ச்சியாக இன்னும் கூடுதலாக செய்ய முடியும் அல்லவா? நாம் பலரும் பந்தத்தை கடமையாக பார்க்கிறோமோ என்னவோ?ஆனால், பலரும் பந்தம் என்பதை சங்கிலியாக பார்ப்பதுதான் பிரச்சினை. இந்த வார விகடனில் பிரகாஷ்ராஜ் கட்டுரை குறித்து தங்கள் எண்ணம் என்னவோ? If a relationship demands compromise, then the relationship moves from pleasurable state to the dutiful state.

 6. //If a relationship demands compromise, then the relationship moves from pleasurable state to the dutiful state.//

  later when the burden exceeds relationship strains and breaks இல்லையா….

  ஆனால் இன்னும் இந்தியாவில் பல பெண்களுக்கு பந்தம் வெறும் சங்கிலியாகவே இருந்து வருவது மறுக்க முடியாத உண்மைதானே.

 7. //இரண்டிலும் சோபிக்க முடியும்//

  இதில்தான் எனக்கு ஒப்புதல் இல்லை. ஏன் இரண்டும்? வேலையில் மட்டும் சோபிக்கும் பெண்கள் ஏன் எப்பொழுதுமே குறைவாக மதிப்பிடப்படுகிறார்கள்? அதேபோல் குழந்தைகளின் வளர்ப்பில் பெண்களின் பங்கு முக்கியமாக எதிர்பார்க்கப்படுகிறது. குடும்பத்தை குழந்தைகளை கவனிக்காமல் தன் வேலையைக் கவனிக்கும் பெண்கள் வில்லியாக சித்தரிக்கப் படுகிறார்கள். 😦

 8. பத்மா அர்விந்த்

  Permalatha
  I only spoke for women who want to balance both. It is an individual choice. One can just be successful at career. Its all upto an individual. Personally, my priorities change time to time:))

 9. Personally, my priorities change time to time

  Good point… same pinch 😀

 10. vikadan article… Thanks Padma for the alert. I never bothered to read Prakashraj series; but looks like I am missing a lot 🙂

  …சொல்லாததும் உண்மை (50) பிரகாஷ்ராஜ்

  ‘‘நாங்கள் இனி நண்பர்கள்!’’

  ஸ்கூல்ல க்விஸ் போட்டின்னு மும்முரமா படிச்சுட்டிருந்தா என் பொண்ணு பூஜா.

  ‘‘பூஜா, இப்போ நாம் நம்ம வீட்டு க்விஸ் போட்டி ஒண்ணு வெச்சுக்கலாமா?”னு கூப்பிட்டேன். நான்தான் க்விஸ் மாஸ்டர்.

  ‘நம்ம வீட்டுக்கு பால் எத்தனை மணிக்கு வருது? வீட்டு எலெக்ட்ரிசிட்டி பில் எங்கே கட்டணும்? அப்பா, அம்மா, வேலைக் காரங்கன்னு யாருமே பக்கத்தில் இல்லேன்னா, உனக்காக நீ என்ன சமைச்சுக்குவே? உன் ஸ்கூல் ஃபீஸ் எவ்ளோ? கடைக்குப் போய்க் காசு கொடுத்துப் பொருள் வாங்கினா, மிச்சம் தர்ற சில்லறையைச் சரி பார்த்திருக்கியா…?’ & இப்படி அவ சம்பந்தப்பட்ட பல கேள்விகளுக்கு அவளுக்குப் பதில் தெரியலை. ‘இதெல்லாம் நான் ஏம்ப்பா தெரிஞ்சுக்கணும்? எனக்குத்தான் நீங்க எல்லாம் இருக்கீங்களே!’ன்னு குழந்தையாவே கேட்டா.

  ‘அடடா, என் பொண்ணுக்கு எப்படி வாழ்றதுன்னு நான் இன்னும் சொல்லிக்கொடுக்கலையே!’னு குற்ற உணர்ச்சி வந்தது. ‘‘உன் அப்பா ஒரு சினிமா நடிகன். நிறைய சம்பாதிக்கிறான். தேவையான வேலைகளைச் செய்து தர்ற நிறைய மனிதர்கள் இருக்காங்க. ஆனா, இவங்க எல்லாம் எப்பவும் நம்மோட இருப்பாங்கன்னு சொல்ல முடியாது பூஜா! யார் இல்லேன்னாலும்

  என் காபியை நானே போட்டுக்குவேன். எனக்குத் தேவையான சாப்பாட்டை நானே செஞ்சுக்குவேன். என் டிரெஸ்ஸை நானே துவைச்சுக்குவேன். நம்மோட தேவைகளை நாமே செய்துக்கப் பழகணும் பொண்ணு! சரி, இன்னியிலேர்ந்து ஒரு வாரம் உனக்கான காபியை நீயே போடு; உன் டிரெஸ்ஸை நீயே துவைச்சுக்கோ; ஸ்கூல் போறதுக்கு முன்னால் உன் டிபனை நீயே செய். ரெண்டு நாள் நான் ஹெல்ப் பண்றேன்!’னு சொன்னேன். சந்தோஷமா அதை ஏத்துக்கிட்டா பூஜா.

  எல்லாரும் எப்பவும் கூடவே இருப்பாங்கன்னு நம்புவதுதான் பெரிய அறியாமை. கூடுவதும் பிரிவதும் பிறப்பு & இறப்பு மாதிரி மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத விஷயம். எதற்குக் கூடினோம், எப்படிப் பிரிந்-தோம்கிறதுதான் முக்கியம். ஏன்னா, மனுஷனோட வாழ்க்கையில் தொடக்கமும் முடிவும் தனிமைதான்!

  ‘கணவன் & மனைவி உறவை ரத்து செய்துட்டு, நண்பர்களா வாழ்ந்தா என்ன?’ & இதுதான் இப்போ எங்க வீட்டில் நானும் என் மனைவியும் அனல் பறக்க ஆரோக்கி யமா பேசிட்டிருக்கிற ஹாட் டாப்பிக். எங்க-ளுக்குள் சண்டையோ, சொத்துத் தகராறோ, துரோகமோ நடக்கலை. 14 வருஷம் சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கையில் இப்போ சோர்வு தெரியுது. சேர்ந்திருக்க வேண்டிய கட்டா-யத்தில் இருக்கோமோனு தோணுது. பிரிய-வேண்டிய நேரம் வந்த பிறகும் பிரியாமல் இருந்தா, அது ஐஸ் பாக்ஸ்ல வெச்சுப் பாதுகாக்கிற டெட்பாடி போல ஆகிடும்னு தோணுது.

  நம்ம தேசத்தில் பல தம்பதிகள் பிரிவது எப்படின்னு தெரியாம, உலகத்துக்காக நடிச்சுட்டிருக்கிறவங்கதான். கட்டாயத்தின் பேரில் சேர்ந்தே இருக்கிற உறவு ஒவ்வொண் ணும் கொடுமையான தண்டனை. ஒவ்வொ ருத்தர் வாழ்க்கையிலும் சின்னதும் பெரிதுமா பிரிதல்கள் இருந்துட்டே இருக்கு. வாழ்க்-கையை ஜீவனுள்ளதாக்குவதும் அதுதான். கூட்டைப் பிரிகிற பறவைக்குத்தானே வானம் சொந்தம்!

  ‘நாங்கள் இருவரும் இனி நண்பர்கள்… எங்கள் குழந்தைகளுக்குப் பெற்றோர்’னு உலகத்துக்கு அறிவிச்சுட்டு, ஒரே வீட்டில் தனித்தனியா நண்பர்களா வாழ்றதைப் பற்றி யோசிச்சிட்டிருக்கோம். ஒரு புது வீடு கட்டுகிற ப்ளானைத் தயார் பண்ணிட்டிருக்-கோம். கீழ்த் தளம் என் மனைவியின் ரசனை-யில் இருக்கும். மாடியில் என் ராஜாங்கம். அவங்க தேவைகள், ஆசைகள்படி அவங்க இடத்தில் அவங்க வாழ்வாங்க. என் இடத்தில், என் கனவுகளுக்கும் கற்பனைகளுக்கும் றெக்கை கட்டி நான் பறப்பேன். எங்க-ளுக்குப் பிடிச்ச இடத்தை நாங்களே டிஸைன் பண்றபோது, எங்களுக்கிடையில் எவ்வளவு வேறுபாடுகள் இருக்குன்னு பார்த்து அதிர்ந்துட்டேன். என் ரசனைகள் அவங்களுக்குப் புரியாமலோ, பிடிக்காமலோ இருக்கு. அவங்களோட சில விருப்பங்கள் எனக்கு அலர் ஜியா இருக்கு. 14 வருஷம் சேர்ந்து வாழ்ந்திருக்கோம். ஆனா… வேற வேற கனவுகள்!

  எனக்கு இப்போ 43 வயசு. உடம்புக்குச் சராசரியா தர வேண்டிய தேவையான ஓய்வை நான் இதுவரை தந்ததே இல்லை. 55 வயசு வரைக்கும் உடம்பு என்ன உழைக்குமோ, அதை நான் இப்பவே பிழிஞ்சு எடுத் துட்டேன். ஒரு நாளைக்கு நாலஞ்சு மணி நேரம்தான் தூக்கம்னு பத்து வருஷத்துக்கு மேல வாழ்ந்துட்டிருக்-கேன். என் கணக்குப்படி எனக்கு இன் னொரு பத்து வருஷம்தான் வாழ்க்கை. கடைசி அஞ்சு வருஷம் வாக்கிங் ஸ்டிக்கோட இன்னொருத்தர் துணை யோட நடக்க வேண்டிய அவசியம் வரலாம். அப்போ எனக்குப் பெண்டாட்டியா இருந்துதான் தோள் தரணும்னு இல்லை; தோழியாவும் தர முடியும். நானும் புருஷனா இருந்-தால்தான் அக்கறை காட்டுவேன்னு கிடையாது; நண்பனாவும் செய்ய முடியும்.

  குழந்தைகளுக்கு நல்ல பெற்-றோரா இருக்க வேண்டிய பொறுப்பு-தான் தட்டிக்கழிக்க முடியாத, தட்டிக் கழிக்கக் கூடாத விஷயம். அது கடமை இல்லை; பொறுப்பு!

  நான் என் மனைவியிடம் சொன் னேன்… ‘இப்ப ரெண்டு பேரும் நமக்கே உண்மையைச் சொல்லாம நண்பர்களாதான் இருக்கோம். காமம் ரெண்டு பேருக்கும் அடிப்படைத் தேவையா இல்லை. வீட்டுக்குள்ள ஒரு டி.வி&யை வெச்சுக்கிட்டு எனக்கு விட்டுக்கொடுக்கிறேன்னு நீ சீரியல் பார்க்காம இருப்பதும், நான் உனக்-காக டென்னிஸ் மேட்ச் பார்க்காம இருப்பதும் யாரை ஏமாத்துற விஷயம்? கீழ்த் தளத்தில் ஒரு டி.வி. பார்த்துட்டு உனக்குப் பிடிச்ச வீட்டில் நீ இரு. மேலே ஒரு டி.வி&யில் எனக்குப் பிடிச்ச மேட்ச்சை நான் பார்க்கிறேன். மேட்ச் போரடிக்கும்போது நான் கீழே வர்றேன். சீரியல் போரடிச்சா நீ மாடிக்கு வா! ரெண்டு பேரும் அவங்கவங்க வாழ்க்கையை வாழ்-வோம். சோர்வு தட்டின உறவோட நீயும் நானும் இருந்துக்கிட்டு, ஒற்று-மையா வாழ்வதா ஏன் குழந்தைகளை நம்பவைக்கணும்? நாம புருஷன் பெண்டாட்டி இல்லைன்னு உலகத்துக்குச் சொல்லிட்டு, நண்பர்களா வாழ்வோம்!’

  ‘பசங்களுக்காக, பெத்த-வங்க தங்களின் வாழ்க்கை-யைத் தியாகம் பண்ணித்-தானே ஆகணும்’னு ஏன் குழந்தைகளைக் கடன்-காரங்களா ஆக்கணும்? தேவையில்லாத தியாகங்-கள் அவசியமே இல்லை. என் அப்பன் தவற-விட்டது அதுதான். என் அம்மா சொல்லிக் கொடுத்ததும் அதுதான். இப்ப என்-னிடம் சில கோடிகள் பணம் இருந்தாலும், அதை வெச்சு வட்டிக்கு விடாம, மூங்கிலில் குடில் செய்து வாழ்க்கையை அனுபவிக்கிறது எப்படின்னு நான் யோசிக்கக் கத்துத் தந்தது என் அம்மா வாழ்ந்த வாழ்க்கை.

  ‘பிரிஞ்சுட்டா, இதுவரைக்கும் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லையே?’னு நண்பர்கள் கேட்கி றாங்க. அண்ணன், தம்பி, அக்கா, தங்கையெல்லாம் நமக்கு கடமைக்கான உறவுகள். காதலிக்காம செய்துக் கிற கல்யாணமும் கடமைக்கான உறவுதான். காதலும் நட்பும் நாம் தேர்ந்தெடுக்கிற உறவுகள். இதில் சேர்ந்தே இருக்க வேண்டிய எந்த நிர்பந்தமும் இல்லைங்கிறதுதான் அழகே! கட்டாயத்தின் பேரில் உறவு அமையாமல், விருப்பத்தின் பேரில் அமைவதுதான் அர்த்தமுடையது.

  எல்லோருமே தவறு செய்பவர்கள்தான். தவறுகளை மன்னிப்பதிலும் திருத்திக்கொள்வதிலும்தான் உறவு களின் உயிர்ப்பு இருக்க முடி-யும். யார் மன்னிப்பது, யார் திருத்திக்கொள்வது என்கிற ஈகோவுக்கு ஜீவனுள்ள பல நல்ல உறவுகளைப் பலியிடு-கிறோம். அடுத்தவங்க ஒப்புக்க மாட்டாங்கன்னு யாருக்கோ பயந்து நான் காதலிச்ச உறவும், என்னைக் காதலிச்ச உறவும் நிர்பந்தமா மாற வேண்டாமே! நிறைய பிரிவு-களைக் கடந்து வந்த-தால்-தான் நான் இப்ப இருக்-கிற மனைவியைக் கல்யாணம் பண்ணேன். அதே மாதிரி அவங்களுக்கும் இருக்கலாம். பிரிவு, வருத்தமான விஷயம் தான்… ஆனா, விருப்பம் இல்லாம இணைந்திருப்பது அதைவிடப் பெரிய துன்பம்!

  என் அம்மா பெங்களூருவில் என் தங்கையுடன் இருக்காங்க. அவங்களை மூணு மாசத்துக்கு ஒரு-முறை நான் போய்ப் பார்த்தா, பெரிய விஷயம். மன வருத்தம் இல்லாம பிரிஞ்சிருக்கிற அம்மாவுக்கும் மகனுக்குமான உறவில் எந்த பாரமும் இல்லை. எப்போ சந்திக்கிறோமோ, அப்போ ரெண்டு பேருக்குள்ளேயும் அன்பு ஊற்றெடுக்குது. யாரும் யாரையும் ஏமாத்திக்-காம இருப்பதால், எங்க சந்திப்பு சந்தோஷ-மாகிடுது. பிரிய வேண்டிய நேரத்தில் கடமை-யைக் காரணமாக்கிப் பிரியாம இருந்தா, நிறைய இழப்பு இருக்கு. நியாயமான காரணங்-கள் இருந்தால், அந்தப் பிரிவு துயரமாவ-தில்லை.

  பிரிவை விட பிரிக்கிற காரணமும், பிரிக்கிற விதமும் மிக முக்கியம். பிரிவை ஒரு கப் டீ பகிர்தலுடன் நிகழ்த்துகிற பக்குவம் நமக்கு வாய்த்துவிடுமேயானால், நாம் அதிர்ஷ்டசாலி-கள். நானும் என் மனைவியும் அதிர்ஷ்டசாலி-களாவதைப் பற்றிப் பேசிட்டிருக்கோம். ‘நாங்க கணவன் மனைவி இல்லை, நண்பர்-கள்!’னு சொல்ற உண்மையை உலகம் அதிர்ச்சியா பார்க்குமேனு எல்லாரும் பயப்படுறாங்க. நிஜத்தில் நாங்க யாருக்கும் தெரியாம நண்பர்-களா இருக்கிறதைப் பற்றிப் பிரச்னை இல்லை. ஆனா, அந்த உண்மையை வெளிப்-படியா ஒப்புக்கொண்டால், பிரச்னையாம். இது அசிங்கம் இல்லையா?

  இந்தத் தொடரில் பல உண்மைகளைப் பகிர்ந்துக்கிட்டதாலேயே நான் பலவிதங்களில் தண்டிக்கப்பட்டிருக்கேன். இங்கே எதையும் வெளிப்படையா பேசுறதே பிரச்னையா இருக்கு. எல்லாரும் உண்மை தன் பக்கம் இருக்கணும்னு விரும்புவாங்க. நான் உண்மையின் பக்கம் இருக்-கணும்னு யோசிச்சதால் நிறைய இழப்புகள். ஆனா, பெற்ற அனுபவங்கள் அதிகம்.

  சொன்ன உண்மைகளின் அளவு கையளவு மழை… சொல்லாத உண்மைகளின் அளவு ஆகாய நட்சத்திரங்கள்!

  எண்ணுபவர்களின் பொறுமைக்கு ஏத்த மாதிரி இருக்கு, உண்மையின் வெளிச்சம்!

  \ தொகுப்பு: த.செ.ஞானவேல்

 11. ஆண்களுக்கு அந்த பிரச்சினையே இல்லையே. என்னா choice னு என்னைக்காவது யோசிக்கவேண்டியதாவது இருக்குதா?

  எந்த ஆம்பிளைக்காவது இப்படி (following) கேள்விகள் வருமா?
  1) நானும் வேலைக்குப் போனா, குழந்தையை வேறவங்க கிட்ட விட்டுட்டுப் போனா அதன் வளர்ப்பில் என் பங்கு என்ன?
  2) I want my child to think and develop in certain ways. How I am going to achieve that if the child is raised by someother person when I am working?
  3) well, etc etc…
  எப்பவுமே, working woman/momக்கும் stay at home wife/momக்கும் வர்ற விவாதங்கள் ஆண்களுக்குள்ல இல்லையே!

  Our society sucks.

  (inlfuenced by regular arguements between stay at home moms and working moms in english (indians) blog world. )

  (balaji, உங்களோட பெரீய்ய பின்னூட்டத்தைப் படிக்கவில்லை. I have ADHD or dyslexia (you choose) when it comes to long long posts/comments. )

 12. பிரகாஷ்ராஜின் கட்டுரை ஒரு வேறுபட்ட பார்வையாக இருக்கிறது.

  ‘திருமணம்’ என்ற ஏற்பாடு உண்மையில் காமம் என்ற தேவையைக் கடந்து வேறெதையும் நிறைவேற்றுவதாகத் தெரியவில்லை. Marriage is an equal-opportunity oppressor என்று எங்கோ படித்த நினைவு 🙂

 13. பத்மா அர்விந்த்

  பாலாஜி
  எனக்கு பிடித்திருந்தது. குறிப்பாக இந்த வரிகள் //நம்ம தேசத்தில் பல தம்பதிகள் பிரிவது எப்படின்னு தெரியாம, உலகத்துக்காக நடிச்சுட்டிருக்கிறவங்கதான். கட்டாயத்தின் பேரில் சேர்ந்தே இருக்கிற உறவு ஒவ்வொண் ணும் கொடுமையான தண்டனை. ஒவ்வொ ருத்தர் வாழ்க்கையிலும் சின்னதும் பெரிதுமா பிரிதல்கள் இருந்துட்டே இருக்கு. வாழ்க்-கையை ஜீவனுள்ளதாக்குவதும் அதுதான்//
  எஸ் ரா எழுதும் கேள்விக்குறி கூட வாரா வாரம் மிக சிறப்பாகிக்கொண்டே இருக்கிறது. சின்ன கேள்விகள், நிறைய நேரம் யோசிக்க வைக்கும் கேள்விகள்.
  பிரேமலதா: I understand what you are saying. The irony is some stay at home men are mocked at by the stay at home women, even if the couple have no problem with that arrangement.

 14. இருவர் நீண்ட நாள் காதலிக்கிறார்கள், இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு நடக்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் திருமணம் செய்யும் போது, தாலி கட்டும் வினாடிக்கு முன்னும் பின்னும் அவர்களின் அன்பில் எந்த வித மாற்றமும் இருக்க முடியாது. ஆனால் அந்த நொடிப் பொழுதில் சமுகத்தின் பார்வைதான் மாறிவிடுகிறது.

  ஆகவே திருமணம் என்பது சமூகத்திற்காகவே தவிர, இருவர் இணைந்து வாழ அன்பும் புரிதலும் இருந்தால் மட்டுமே போதும். “கலாச்சாரச் சீரழிவு” என்று சிலர் சொல்வார்கள், ஆனால் மேற்கத்திய நாடுகளில் போல் திருமணம் செய்யாமல் இருவர் கணவன் மனைவியாக வாழ்வதை சமூகம் ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை வேண்டும். அதன்பின் திருமணம் என்பது காமத்தை அங்கிகரிக்கும் முத்திரையாக பார்கப்படாமல், ஆயிரம் காலப் பயிராக உணரப்படலாம் (அதாவது உண்மையில் நீண்ட காலம் ஒருவருடன் ஒருவர் வாழ நினைப்பவர்கள் மட்டுமே திருமணம் செய்வார்கள்).

 15. ஆஹா..நாலு வரி இடுகைக்கு இவ்வளவு பெரிய மறுமொழிகளா 🙂 இத்தனை நாள் உங்க பதிவை கூகுள் ரீடரில் படிப்பதால் மறுமொழிகளைக் கவனிப்பதில்லை. இனி அதையும் கவனிச்சுக்கிறேன். பிரகாஷ்ராஜ் சொல்றது சரி தான்.

 16. பல விதங்களில் மனதிற்கு ஆறுதல் அளித்த பின்னூட்டங்கள், புரிதல்கள்..ஹ்ம்ம் நன்றி.. இது போல ஆரோக்கியமான விவாதமும் விளக்கமும்…..தேவை

  பல பெண்களுக்கு அவங்களுக்கு முன்னாடி இருக்குற options தெரியாம இருக்குறதும் வேதனைதான்…

  ஆனா அதே நேரத்துல எத்தன options இருந்தாலும்
  கட்டாயத்தின் பேரில் காம்ப்ரமைஸ் பண்ணீட்டு ஒரு சாய்ஸே இல்லாம இருக்குறதும் இன்னைக்கும் நடக்கும் உண்மை தானே… பலருக்கு அவங்க வாழ்க்கையே கம்ப்ரமைஸ்ல தான் ஓட்டிட்டு இருக்குறதுங்கறதே தெரியாம இருக்கு….ஹ்ம்ம்

  நன்றி பாலா

 17. கல்யாண வாழ்க்கை பெண்களுக்கு ஒரு கட்டுப்பாடுதான்.குடும்பத்தை விட்டு எந்த காலத்திலும் வெளியில் வருவது கடினம்தான். பல சிக்கல்கள் இருக்கின்றன.கல்யாணம் என்பது இரன்டு பேர் சம்பதப்பட்டது இல்லாமல் பல பேர் சம்பந்தப்பட்டதக இருக்கிறது. ரொம்ப சீக்கிர‌ம் முடிவெடுக்க முடியாது. எனக்குப் பிடித்ததைச் செய்கிறேன் என்று பிடிவாதமாக நிற்க முடியாது. இப்போது பல பெண்கள் நிற்கிறார்கள்.சரியா தவறா தெரியவில்லை. குழந்தைகள் மண வாழ்க்கைக்கு தயாராகாமல் தாங்கள் நினைப்பதை முடிவெடுக்கப் பழகுகிறார்கள்.அதைப் பெற்றோர்களும் ஊக்குவிக்கிறார்கள். இதன் பரிமாணம் எப்படி இருக்கும் என்று ஊகிக்கமுடியவில்லை.
  பெண்கள் பெரிதாக சாதிக்க வெண்டும் என்றால் கல்யணம் செய்து கொள்ளாமல் இருப்பது நல்லதுதான்.இதை சொந்தமாகவெ நான் உணர்ந்திருக்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.