Daily Archives: ஓகஸ்ட் 4, 2007

Recent Movies

1. ஹஸாரோ க்வான்ஷேன் ஏஸி குறித்து ஏற்கனவே எழுதியாச்சு. எழுதுவதை விட செயலில் எதையாவது செய்யத் தூண்டும் படம். சஞ்சய் காந்தி, இந்திரா காந்தி எல்லாம் தெரிகிறார்கள். முக்கிய மூன்று பாத்திரங்களும் வாழ்ந்திருக்கிறார்கள். தவறவிடக் கூடாத படம்.

டெல்லி, புரட்சி, இளமை, காதல், நட்பு, பரிவு என்று நிறைய பழக்கமான விஷயங்களை, பழக்கமில்லாத விதத்தில் அறிமுகம் செய்து வைக்கிறார்கள்.

இந்தப் படத்தைப் பார்த்து முடித்தவுடன் இந்திரா பார்த்தசாரதியின் ‘சுதந்திர பூமி’யைக் கையிலெடுத்தால், தமிழகச் சூழலும் இந்திய நோக்கும் இடஞ்சுட்டி பொருள் கொள்லலாம்.

2. சீனி கம்: தபு அழகு என்றால், அமிதாப் அழகனாய் ஜொலிக்கிறார். ராட்டடூயி பார்த்த ஜோருடன் இன்னொரு சமையல் நிபுணர் குறித்த படம். இளையராஜாவின் இசை. பளிச் பளிச் வசனங்கள். தன்னைவிடப் பெரியவரை கல்யாணம் கட்டிக் கொள்ளப் போகிறேன் என்று மகள் சொன்னவுடன் தெளிவாகப் பதறும் பரேஷ் ராவல்.

உன்னாலே உன்னாலே கூட இவ்வாறு ஜொலித்திருக்க வேண்டிய படம். ஆனால், இங்கு்கு காணப்பட்ட ஆழமான விவாதங்களை வளர்க்கும் சிந்தனைகளுக்கு பதிலாக இன்டெர்னெட் ஜோக்குகளைத் தோரணம் கட்டியதால் எந்த வசனமும் எஸ்.எம்.எஸ். தாண்டி பயனற்றுப் போகிறது. சீனி கம்-மில் படம் முடிந்த பிறகும் தனக்குள்ளே எண்ணங்களைக் கிளப்பி அசை போட்டு சுவைக்க வைத்திருக்கிறார் பால்கி.

3. நகாப்: சிவா சொல்லி இருக்காரே… என்று குருட்டு நம்பிக்கையில் அச்சத்துடன் பார்க்க ஆரம்பித்த படம். இப்படித்தான்… முன்பொருமுறை, இணையம் சாராத நண்பர் ‘சுப் சுப்கே‘ பாருங்க என்று சொல்லி, (அது விவேக்கிடம் இருந்து ‘சொல்லி அடிப்பேன்’ என்று வருகிறதாமே!) பார்க்க ஆரம்பித்து நொந்த பயத்துடன் பார்க்க ஆரம்பித்தோம்.

ஏமாற்றாத திருப்பங்கள். சுவாரசியமான கடகட திரைக்கதை. அக்ஷய் கன்னா ரசிகன் என்பதால் எதற்கும் குறைவில்லாத கலக்கல் படம்.

பாவம்… கிட்டத்தட்ட இதே மாதிரி தடாலடி திருப்பங்களுடன் ஆக்சன் த்ரில்லர் கொடுத்தவர், ‘ஆன் தி லாட்‘ நிஜ நாடகத்தில் அமெரிக்கர்களிடம் வாக்கிழந்து, ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தயாரிப்பில் படம் இயக்கும் வாய்ப்பையும் கோட்டை விட்டார் Catch By: Mateen Kemet என்னும் அந்தத் திரைப்படத்தைக் காண இங்கு செல்லவும்). அவரை இந்தியாவுக்குக் கொண்டு வந்தால், என் போன்ற ரசிகர்களின் பேராதரவு கிடைக்கும்.

4. நான் அவன் இல்லை: ரொம்ப குறைவான எதிர்பார்ப்புடன் பார்க்க ஆரம்பித்த படம். அதனாலோ என்னவோ பிடித்திருந்தது. ஏற்கனவே எல்லாக் காட்சிகளும் சன் டிவியில் காட்டியிருந்தாலும் ஜாலியான படம்.

சில விமர்சனங்கள்:

5. கோதாவரி: சாதாரண தெலுங்குத் திரைப்படம். இருந்தாலும் அரசியல்வாதியாக நேர்காணல். கல்யாணத்துக்கு முந்தைய மண-மனபயங்கள். முழு நிலவும் வெள்ளை ஆடையும் கொண்ட அக்மார்க் இந்திய சினிமாக் காதல். படகுப் பயணம். நாய் சொற்பொழிவாற்றல் என்று ஏதோவொன்று கனெக்ட் ஆகி கலக்கி இருக்கிறார்கள். தைரியமாக பார்க்கலாம். பத்ராசலம் cruise போகணும்னு ஆசை வரும்.

பாதியில் தூங்கிப் போனால் என்னைத் திட்ட வேண்டாம். நண்பர் இந்தப் படத்தை அனுதினமும் இரவில் போட்டு, கண்ணயர்ந்தால், சொப்பனங்களில் தெளிந்த நீரோடையாக நிம்மதி பிறக்கும் என்றார். பாடல்கள் அவ்வளவு ரம்மியம்.

Twenty Questions Game

ஆல் கோரை நினைத்து கொண்டேன். 28 கேள்விகளில் விடையைக் கண்டு பிடித்தது.

ஐஷ்வர்யா ராயை 18 கேள்விகளில் சொல்லிவிட்டது.

புத்திசாலிதான்! நீங்களும் விளையாடிப் பாருங்களேன்.