Daily Archives: ஜூன் 3, 2007

Arunagiri: Quotable quotes – Alternates on Global Warming

எல்லாவித சுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் பசுமைப் பாதுகாப்புக்கும் வசதியான overarching canvas-ஆக இன்று குளோபல் வார்மிங் உபயோகப்படுத்தப்படுகிறது. இது ஸ்ட்ராடஜிக்காக எதிர்மறை விளைவுகளையே உண்டாக்கும். இயற்கையும், சுற்றுச்சூழலும் மாசுபடுவதை அவற்றின் லோக்கலைஸ்டு நேரடி காரணிகளை முன்னிறுத்தி எதிர்க்கும் அணுகுமுறையையே நான் ஆதரிக்கிறேன்.

எப்பொழுதுமே மேற்கிற்கு ஒரு பிரம்மாண்ட எதிரி தேவைப்படுகிறது. இல்லாவிடில் உலகத்தில் அதற்கு தேவையான கவனம் கிடைக்காது. நிலப்பிரபுத்துவம், வர்க்கப்போராட்டம் என்ற பிரம்மாண்ட ஆனால் எளிமைப்படுத்தப்பட்ட கேன்வாஸ்களில் சிக்கலான லோக்கலைஸ்டு சமூக இயக்கவியல் மாற்றங்களை அடைத்து கருத்தியல் பிரம்மாண்டத்தை உருவாக்கிய மார்க்ஸிஸத்திற்கும், நேரடியாகக் காணக்கூடிய காரணிகளைக் கீழேதள்ளி குளோபல் வார்மிங் என்ற பிரம்மாண்ட கேன்வாஸில் அவற்றைப் புதைக்கமுனையும் அவசரத்திலும் நான் காண்பது ஒரே அணுகுமுறையையே. மார்க்ஸிசமும் குளோபல் வார்மிங்கும் மேற்கின் வயிற்றில் பிறந்தது தற்செயல் அல்ல.

குளோபல் வார்மிங் என்ற அறிவியல் கருதுகோள் இன்று அரசியல் லாபியாக மாற்றப்பட்டு விட்டது. இந்த நிலையில், புஷ் கூட்டம் சொல்வது என்பதற்காக மட்டுமே ஒரு விஷயத்தை விலக்குவது ad hominem அணுகுமுறையென்றே நான் காண்கிறேன். இதே புஷ் கூட்டம் குளோபல் வார்மிங் ஆதரவாளர்களாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதும் என் கணிப்பு.

குளோபல் வார்மிங் என்ற பெயரில் வரும் அத்தனை அழுத்தங்களையும் பாரதம் நிராகரிக்க வேண்டும் என்று உறுதியாகக் கருதுகிறேன்.

சூட்டு யுகப் பிரளயம் ! மாந்தர் பிழைப்ப தெப்படி ? « நெஞ்சின் அலைகள்

என் ஜன்னலுக்கு வெளியே…: கோடையில் ஒரு குழப்பம்

Global Warming – Alternate Perspectives due to Farming Shortage Crisis :: உயிர் எரிசக்தி மாயை-ஓர் அபாயம்! – ஆர்.எஸ்.நாராயணன்

Protecting the farmlands for Food Consumption – Environment, Ethanol, Ethics :: உணவு தானியத்துக்குப் பாதுகாப்பு & புவி வெப்பம்: சிக்கல்களும் தீர்வுகளும் – கொ. பாலகிருஷ்ணன்

Pa Ilankumaran: World Forests day – City Gardens & Wild woods :: துருவப் பகுதி வானிலையும் அதன் தாக்கமும் – இரா. நல்லசாமி

Global Warming – Environmental Pollution: Analysis, History, Current Developments – வேலியே பயிரை மேயும் நிலை! – ந. ராமசுப்ரமணியன்

Global Warming – Environmental Pollution: Reports, History, Current Developments :: உலக வெம்மை’ ஏமாற்று வேலையா? – ந.ராமசுப்ரமணியன்

India’s Rice production hampered by Global Warming :: சீதோஷணநிலை காரணமாக இந்தியாவில் நெல் உற்பத்தி பாதிப்பு

Environmental Impact – 10 More Years Left :: உலகம் பேரழிவைச் சந்திக்க இன்னும் பத்தே ஆண்டுகள்தான்! – கே.என். ராமசந்திரன்

Environment Issues Topples World Governments – N Ramasubramanian :: ஆட்சிகளைக் கவிழ்க்கும் சூழல் பிரச்சினை – என். ராமசுப்ரமணியன்

Quotable quotes – Observations on Tamil Nadu Politics (Author unknown)

ஒன்று கவனித்தீர்களா? தமிழ் நாட்டில் இவர்கள் எப்பொழுதும் ஏதாவது ஒரு விழா அல்லது ஏதாவது ஒரு பெருத்த கலவரத்தை எப்பொழுதும் நடத்திக் கொண்டே இருப்பார்கள். மக்கள் எதைப் பற்றி பேசுவார்கள்?

பொன் விழா, பிறந்த நாள் விழா, சங்கமம் விழா, தினகரன் எரிப்பு, தயாநிதி, கனிமொழி எம் பி ஆனது…

ஆக மொத்தத்தில் இவர்கள் செய்யும் ஆர்ப்பாட்டத்தில் உண்மையான பிரச்சினைகளும் ஆட்சியின் திறமையின்மையும் தந்திரமாகப் பின்னால் தள்ளப் பட்டு விடுகிறது. இது போன்ற விழாக்களையும் மக்களைத் திசை திருப்பும் நிகழ்ச்சிகளையும் இவர்கள் ஒரு ஸ்டிராடஜியாகவே செய்கிறார்கள். இப்பொழுது தி மு க முழு மூச்சாக டி வி நடத்தப் போகிறார்களாம், இவர்கள் என்றைக்கு அரசாங்கம் நடத்தப் போகிறார்கள் ?

அடுத்து மதுரை தேர்தல் அப்புறம் இன்னொரு விழா இப்படியாகவே தமிழ் நாட்டில் பொழுது கழிகிறது.