Dinakaran survey – Feedbacks, Blog Posts: Maran vs Alagiri or Sun Network & DMK promotion?


dead_dinakaran_azhakiri_employees

dead_condolences+dianakaran_sun_tv_workers

maran_brothers_watching_dinakaran_victims_madurai

சற்றுமுன்…: ச: கருத்துக் கணிப்பு, தாக்குதல், கொலைகள் – விவாதம்

 • அதிமுக குறித்து கணிப்பு வெளியானவுடன் இப்படி எதுவும் நிகழவில்லை என்பதால் ‘கட்டுக்கோப்பான அதிமுக-வும் கருங்காலிக் கூடமான திமுக-வும்’ என்று ரைமிங்காக சொல்லலாமா 😛
 • ஜெயலலிதாவிற்குப் பிறகு அதிமுகவை தலைமை தாங்க கொடுத்துள்ள பட்டியலில் என் பெயரை விட்டுவிட்டார்கள்’ – மக்கள் டிவியில் விஜய்காந்த் வருத்தம்
 • ‘பாமக-வில் அடுத்த வாரிசு யார்’ என்று தினகரன் ஏன் சர்வே எடுக்கவில்லை? – ஜெயா டிவியில் முன்னாள் பா.ம.க. விஐபி பேராசிரியர் தீரன்
 • ‘சிவாஜி வெளியாகும் சமயத்தில் ‘அடுத்த வாரிசை’ நினைவூட்டுவது ரஜினியை தன் பக்கம் இழுக்கும் சூழ்ச்சியா!’ – விஜய் டிவியின் ‘நீயா நானா’ தலைப்பு

புகழ்பெற்ற நிறுவனத்தில் வேலை. சன் டிவியின் கம்ப்யூட்டர் பிரிவில் பணி. 30 வயது, 25 வயது. இந்த இருவரின் பெற்றோர் (மனைவி, குழந்தை உள்ளனரா என்று தெரியவில்லை) நிலை பரிதாபகரமானது. கடைநிலை சிப்பந்திகளான காவலாளி மற்றும் பார்சல் பிரிவில் ஊழியரின் நிலை அதனினும் துயரம் மிகுந்தது 😦

தீவிரவாதம், பயங்கரவாதம் என்கிறேன். அழகிரியா மாறனா ஸ்டாலினா என்பதுதான் விஞ்சி எல்லாவிடத்திலும் பரபரப்பு.

‘காயமடைந்தவர்கள்’ என்று அறிவிக்கப்படுபவர்கள், இறந்தவர்களைவிட பாவம். உடல் உபாதைகளினால் வேலை நிலைக்காது. தீப்புண்கள் ஆறுவதற்கு ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்ய இயலாத பொருளாதாரம். அதனால் நிகழும் தோற்ற மாற்றங்களுக்கு உளவியல் நிபுணரையும் அணுக முடியாத நிலை. செத்துப் போனவர்களுக்கு இடும் இரண்டு லட்சம் நஷ்ட ஈடு கூட கிடைக்காது.

காலம்: மனுநீதி சோழனாக மாறுகிறார் கருணாநிதி
சிபிஐ… நிலுவை… மேல் முறையீடு… எவனோ ஒருவன் போய் சரண்டர்…

 • அம்பை எய்து தூண்டி விட்ட தினகரன் & மாறன் சகோதரர்கள்; லாபம்: பத்திரிகை விற்பனை உயர்வு; நடுநிலை என்னும் பம்மாத்துப் பெயர்.
 • அம்பாக புறப்பட்டு பலரின் வாழ்க்கையை கொலை செய்து தன் பலத்தை நிரூபித்த மகன் அழகிரி; லாபம்: இருப்பை உணர்த்தல்; மேலிடத்துக்கு மிரட்டல்.
 • காவல்துறையை ஆளுங்கட்சி ஆதரவுடன் பயன்படுத்திய கழகம்; லாபம் – மத்திய அரசு மேல் பொறுப்பை ஒப்படைத்தல்; இமேஜ் பாதுகாத்தல்.

தட்ஸ்தமிழ் செய்தி படித்தேன்… உங்க கருத்து என்ன? முதலமைச்சர் + கட்சித் தலைவரால் சொந்த ஆட்சியிலே இவ்வளவு செய்தால் போதுமானது என்று நினைக்கிறீர்களா?

கருணாநிதி குடும்ப அரசியலில் பலியாகும் அப்பாவிகள் « சாரல் – TAMIL NEWS BLOG

கருணாநிதியின் கீழ்த்தர அரசியல் – ராமதாஸ் கடும் தாக்கு « சாரல் – TAMIL NEWS BLOG

(நான் செய்த குற்றங்களை) மறப்போம்; மன்னிப்போம்.
சொன்னதை செய்வோம். செய்வதை சொல்வோம்

ரவுடித்தனத்தின் எதிர்காலம்

Related… but unrelated:
ச்சும்மா: இப்படி கூட திருடலாமோ?

The Second Innings

Kamal always predicts Future:
தீர்க்கத்தரிசி கமல் « அலசல் ==>
முகமூடி: குடும்ப சண்டையும் பொதுமக்களும்

Life imitates art far more than art imitates Life?

Sathia

Third Round:

thiruvilaiyadal_sivaji_karunanidhi_DMK-maran_sun_dinamani.jpg

ஏராளமான கேள்விகளை மனதில் ஏற்படுத்திய சம்பவம். உண்மையில் மதுரையில் யாருடைய ஆட்சி நடக்கிறது? எந்தப் பதவியிலும் இல்லாத அழகிரிக்கு அவ்வளவு செல்வாக்கு எப்படி வந்தது? அந்த மாவட்டத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள், பதவியில் உள்ள அரசியல்வாதிகள் அத்தனை பேரும் அழகிரியின் உத்தரவின்படி நியமிக்கப்பட்டவர்களா? மேயரின் தலைமையில் ஒரு வெறி பிடித்த ரவுடிக் கூட்டம் பத்திரிகை அலுவலகத்தில் நுழைந்து வன்முறை ஆட்டம் போட்டு படுகொலைகளில் ஈடுபடும் போது, காவல் துறை கைகட்டி வாய் பொத்தி வேடிக்கை பார்த்ததை புகைப்படங்களும் வீடீயோக்களும் உறுதி செய்கின்றன. அப்படியென்றால் தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா? ரவுடிகளின் ஆட்சியா? சம்பவம் நடந்த அன்று அப்பாவிகள் படுகொலை, அநியாயம், அக்கிரமம், பத்திரிகை சுதந்திரம் போச்சு, அழகிரி ஏவிவிட்ட ரவுடிகளின் கொடுஞ்செயல், இதைச் சும்மா விடப்போவதில்லை, ஆய், ஊய் என்றெல்லாம் கூப்பாடு போட்ட சன் டிவி அடுத்த நாளே வாயை மூடிக் கொண்டு மெளனமாகி விட்ட மாயம் என்ன? பட்டப்பகலில் பொதுச்சொத்தை சேதம் செய்து கொலை வெறியாட்டம் போட்ட கும்பலின் பின்புலம் அழகிரிதான் என்று அந்த டிவி செய்தி கூவிக் கூவி சுட்டிக்காட்டிய பிறகும் அவரை போலீஸ் விசாரித்து நடவடிக்கை எடுக்காதது ஏன்? பத்திரிகை சுதந்திரத்துக்கும், ஜனநாயக அமைப்புக்கும் இவ்வளவு பயங்கரமான ஆபத்து தன்னுடைய மகனால் ஏற்பட்ட அடுத்த இரண்டாவது நாளே தன்னுடைய சட்டமன்ற பொன்விழா நிகழ்ச்சியை ஆடம்பரமாக நடத்த முதல்வருக்கு எப்படி மனம் வந்தது?

 • IdlyVadai – இட்லிவடை: கலைஞர் அவர்களே, கழகத்தைக் காப்பாற்றுங்கள்! – ஞாநி
 • சினிமாக்காரர்களோ, கவிஞர்களோ… புகழுரைகளைக் கொட்டிக் குவிக்கும் விழாக்களுக்குப் போய் நீங்கள் இளைப்பாறுவதுகூட, குடும் பத்தில் சிலரால் ஏற்படும் மன உளைச்சல்களுக்குத் தற்காலிக மருந்து தேடத் தானோ என்று எனக்குத் தோன்றுவதுண்டு. மதுரையில் உங்கள் குடும்பத்தின் இரு பிரிவினருக்கு இடையே நடந்த மோதல் வன் முறையில் மூன்று அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்ட சமயத்தில், சென்னை நகரத் தெருவெல்லாம் வாழை மரம் கட்டி வண்ண ஜாலங்கள் செய்துகொண் டாடப்பட்ட சட்டமன்றப் பொன்விழாவில் நீங்கள் கலந்துகொண்டீர்கள். ஒன்றல்ல, வரிசையாக மூன்று பாராட்டு நிகழ்ச் சிகள் உங்கள் மன வலி யைக் குறைக்க உதவி யிருக்குமோ என்னவோ!

  பத்திரிகை, டி.வி என்று தன் தொழிலைப் பார்த்துக்கொண்டு இருந்த தயாநிதியை நீங்கள் தானே திடீரென்று எம்.பி. ஆக்கி, அடுத்த நாளே மத்திய அமைச்சரும் ஆக்கினீர்கள்? கழகத்தில் வேறு தகுதி உள்ள இளைஞர்கள் இல்லையா என்று கேட்டபோது, ‘விளையும் பயிர் முளையிலேயே தெரியும். குழந்தையாக இருந்தபோதே தயாநிதியின் திறமையைக் கண்டிருக்கிறேன்’ என்றீர்கள். ‘கட்சி விரோத’ வேலைகளில் ஈடுபடக்கூடிய குழந்தை அது என்பது முளையிலேயே உங்களுக்குத் தெரியவில்லையா?

Conclusions, Post-mortem, Theories

கட்டுரை: பிறக்கும் ஒரு புது அழகு
அரசியல், ஊடக வன்புணர்ச்சியின் கதை :: கண்ணன்

5 responses to “Dinakaran survey – Feedbacks, Blog Posts: Maran vs Alagiri or Sun Network & DMK promotion?

 1. Pingback: Dinakaran, Sun TV & Dayanidhi Maran - Complete Coverage « கில்லி - Gilli

 2. #5. சன் டிவி, தினகரன், தமிழ் முரசு, குங்குமம் போன்றவை இனி நடுநிலை நாளிதழ், ஊடகங்கள். செய்திகளை கட்சி சார்பின்றி வெளியிடும் பத்திரிகைகள்.
  #6. டாடா மிரட்டல் போன்றவற்றால் ஏற்பட்ட பின்னடைவுகளை (ஊழல் குற்றச்சாட்டுகளின் போது பதவியில் இல்லை போன்றவற்றையும்) சமாளிக்க உதவும்
  பெருசு கண்ணா பெருசு…
  அரசியல் சூழ்ச்சிகள்
  பெருசு கண்ணா பெருசு?!
  உண்மைத் தமிழன்: கலைஞரின் சி.பி.ஐ. விசாரணை உத்தரவு-படம் காட்டும் உண்மை
  கருத்துக்கணிப்பு வெளியிட்டவங்களை மந்திரி பதவியை விட்டு விலகச் சொன்னது சரி.
  அதே போல் மதுரை மாநகராட்சி மேயர் கோ.தேன்மொழி, துணை மேயர் பி.எம்.மன்னன், மாநகராட்சிக் கவுன்சிலர்கள் உள்ளிட்டோரையும் ‘கட்சிக் கட்டுப்பாட்டை’ மீறி வன்முறையில் இறங்கியதற்காக ராஜினாமா கோரலாம்.
  ஏன் இன்னும் அவ்வாறு திமுக ‘செயற்குழு’ தீர்மானம் எதுவும் நிறைவேற்றவில்லை?
  மேயர் கோ.தேன்மொழி தலைமையில் மதுரை பெரியார் பஸ் நிலையம் கட்டபொம்மன் சிலை அருகே அரசு பஸ்களை சேதப்படுத்தியது எல்லாம் கண்டும் காணாமல் ‘சட்டம் தன் கடமையை செய்யும்’.
  கணிப்பு வெளியிட்டது குற்றம் என்றால், பொது சொத்துக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரே ஊறு விளைவித்தாலும் கட்சித்தலைமை ‘சிபிஐ’ முடிவுகளுக்கு காத்திருப்பதுதானே பொருத்தம் 😉
  —————————————————————————————
  IdlyVadai – இட்லிவடை: அழகிரி கேள்வி – முதல்வர் டென்ஷன்

 3. Pingback: Dayanidhi Maran & North Indian Media « Prakash’s Chronicle 2.0

 4. உண்மைத் தமிழன்: கலைஞரின் சி.பி.ஐ. விசாரணை உத்தரவு-படம் காட்டும் உண்மை

  கருத்துக்கணிப்பு வெளியிட்டவங்களை மந்திரி பதவியை விட்டு விலகச் சொன்னது சரி.

  அதே போல் மதுரை மாநகராட்சி மேயர் கோ.தேன்மொழி, துணை மேயர் பி.எம்.மன்னன், மாநகராட்சிக் கவுன்சிலர்கள் உள்ளிட்டோரையும் ‘கட்சிக் கட்டுப்பாட்டை’ மீறி வன்முறையில் இறங்கியதற்காக ராஜினாமா கோரலாம்.

  ஏன் இன்னும் அவ்வாறு திமுக ‘செயற்குழு’ தீர்மானம் எதுவும் நிறைவேற்றவில்லை?

  மேயர் கோ.தேன்மொழி தலைமையில் மதுரை பெரியார் பஸ் நிலையம் கட்டபொம்மன் சிலை அருகே அரசு பஸ்களை சேதப்படுத்தியது எல்லாம் கண்டும் காணாமல் ‘சட்டம் தன் கடமையை செய்யும்’.

  கணிப்பு வெளியிட்டது குற்றம் என்றால், பொது சொத்துக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரே ஊறு விளைவித்தாலும் கட்சித்தலைமை ‘சிபிஐ’ முடிவுகளுக்கு காத்திருப்பதுதானே பொருத்தம் 😉

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.