New Jersey Bloggers Meet – Tamil Blog Attendant


The test of a first-rate intelligence is the ability to hold two opposing ideas in the mind at the same time and still retain the ability to function. One should, for example, be able to see that things are hopeless yet be determined to make them otherwise.
– F. Scott Fitzgerald

நியூ ஜெர்சி சந்திப்பு – சில நினைவுகள்

 • ரசோய்‘ உணவகத்தில் பஃபே பிரமாதம். அதுவும் ‘பன்னீர் புருஜி‘ செய்திருந்தார்கள். ரொம்பவே yummy.
 • பன்னீர் புரிஜி தவிர பாவ் பாஜி, ஆலு டிக்கி சாட், மலாய் சிக்கன் ஆகியவையும் ருசிகரம்.
 • சனிக்கிழமையில் போக்குவரத்து ‘மாமா’க்கள் கார்-ஆட்டம் அதிகம் இல்லை. தைரியமாக 80+ ஓட்டலாம்; அபராத டிக்கெட் கிடைக்காது.
 • ஜார்ஜ் வாஷிங்டன் பாலத்தில் எந்த பொழுதில் சென்றாலும் கூட்டம் நெக்கும். தவிர்த்தல் நலம்.
 • கனெக்டிகட்-இல் பெட்ரோல் விலை அதிகம்; நியூ ஜெர்சியில் காரில் உட்கார்ந்தவாறே சொகுசாக கேஸ் போட்டு விடுகிறார்கள்; விலையும் குறைச்சல்.
 • இரவில் வண்டி ஓட்டினால் தூக்கம் வரும். பக்கத்தில் வெட்டிப்பயல், தென்றல் போல் எவராவது நகைக்க வைத்தார்களோ… பிழைத்தோமோ 😉
 • 80 ஜிபி ஐ-பாட்-இல் பாடல்கள் ரொப்ப வேண்டாம். மூன்றரை ஜிபி நிரப்பினாலே பத்து மணி நேரத்துக்குத் தாக்குப் பிடிக்கும்.
 • ஆஸி-இலங்கை ஆட்டம் ஒளிபரப்பாகும் என்று தெரிந்திருந்தால் சீக்கிரமே போய் சேர்ந்திருக்கலாம்.
 • சென்னையில் ஒரு பெண் பதிவர். இங்கே இருவர்.
 • (வீ)எஸ்.கே. மைசூர்பாகு, முறுக்கு, ராஜாவின் திருவாசகம் கொடுத்தார்.
 • சென்னப்பட்டணம் ‘சாகரன் அஞ்சலி மலர்’ வழங்கியது.
 • சூடான பாப்-கார்ன், சல்சாவுடன் சிப்ஸ், குளிர்ந்த பெப்சி, தாகத்துக்கு தண்ணீர் – நொறுக்ஸ் ஏராளம்.
 • அண்டத்திலேயே முதன்முறையாக பவர்பாயிண்ட் புல்லட் போட்ட முதல் பதிவர் அரங்கு.
 • அகில லோகத்திலேயே தென்றல் முதல்முதலாக கலந்துகொண்ட சந்திப்பு.
 • சேரியமாகப் கதைத்ததை, பதிவாக்க கேயாரெஸ் ரவி அல்லது வெட்டிப்பயல் பாலாஜி, இணையத் தமிழின் முதன்முதலாக minutes எழுதுவதாக வாக்களித்த சந்திப்பு.

The measure of success is not whether you have a tough problem to deal with, but whether it’s the same problem you had last year.
– John Foster Dulles

Advertisements

43 responses to “New Jersey Bloggers Meet – Tamil Blog Attendant

 1. நன்று. மைசூர்பாக், முறுக்கு, சிப்ஸ்,பாப்கார்ன்,சிக்கன், பன்னீர் புர்ஜி என சந்திப்பு சுவையாக போய் இருக்கிறது போலும்.

  😉

 2. நான் செய்தது அது மட்டும்தான் 😛

 3. க்ரீம் பிஸ்கெட்டுகளை பற்றிச் சொல்லாததற்குக் காரணம் அதில் இருந்த க்ரீமீ லேயரினாலாமே!!!

  :))))

 4. கொத்தனார்தான் பவர்பாயிண்ட் கொடுத்து அசத்தினார்னா, இங்கே நீங்களும் புல்லெட் பாயிண்ட் கொடுத்து ஜமாய்க்கறீங்களே!
  :))

 5. பன்னீர் புரிஜி தவிர பாவ் பாஜி, ஆலு டிக்கி சாட்

 6. பத்மா அர்விந்த்

  நான் எல்லாத்தையுமே மிஸ் பண்னியாச்சு, பவர் பாயிண்டும், சுவையான உணவும்..

 7. //பன்னீர் புரிஜி தவிர பாவ் பாஜி, ஆலு டிக்கி சாட்…// –

  இவங்கல்லாம் யாருங்க, பாபா? இந்தப் பதிவர்களைப் பற்றியெல்லாம் நான்கேள்விப் பட்டதே இல்லையே 🙂

 8. பத்மா,

  அவங்க சொல்றது அவங்க மீட்டிங் முன்னாடி சாப்பிட்டுட்டு வந்ததை!! இப்போ தெரியுதா பாபா ஏன் அவ்வளவு சைலண்டா இருந்தாருன்னு!! :))

  மீட்டிங் முடிஞ்ச உடனே சாப்பிடாம கூட கிளம்பிட்டானுங்க இந்த பாஸ்டேனியங்க.

  ஆனா அது பத்தி விவரமா நம்ம கே.ஆர்.எஸ் சொல்லுவாரு பாருங்க!! :))

  பவர் பாயிண்ட் பத்தி யாராவது சொல்லுவாங்கன்னு நானும் நம்பறேன்!! :))

 9. எஸ்.கே.

  ஒரு பாயிண்டு சொன்னாலும் வெயிட்டு பாயிண்டா சொல்லிட்டீங்க. இப்படி பாயிண்டைக் கரெக்ட்டாக பிடிச்சு அதையும் ஒரு பாயிண்டாகச் சொன்ன உம்மை இனி பாயிண்டைப் பிடித்தார் கசடறத்தார் என்ற பட்டத்தாலே அறியப்படுவீர்.

 10. அடா, அடா, அடா!
  என்ன ஒரு அருமையான ஆதிக்க சக்தியைப் பற்றிய சரியான புரிந்துணர்வு, கொத்தனாரே!
  மெய் சிலிர்க்குது!
  வழக்கமா, இப்படியெல்லாம் கேக்கறவங்களைப் பார்த்து, வழக்கமா கேக்கற கேள்வி ஒண்ணு உண்டு!
  ‘இதையெல்லாம் ரூம் போட்டு சிந்திப்பீங்களாய்யா”ன்னு!

  ஆனா, உங்களை அதுவும் கேக்க முடியாது!
  ஏன்னா, நீங்க இப்ப தனியா ரூம் போட்டுகிட்டுதானே இதையெல்லாம் எழுதறீங்க!

  :)))))))))))

 11. பாபா,

  நீங்க எழுதின பதிவுக்கு சுட்டி குடுத்து நான் எழுதின பதிவுக்கு நீங்கள் எழுதின அந்த பதிவிலேயே சுட்டி குடுத்து இருக்கும் உங்கள் சுட்டித்தனம் பத்தி நான் என்னத்தை சுட்டிக் காமிக்கிறது!! :))

  சுட்டி சுட்டதடா………

 12. யோவ் எஸ்.கே.

  இப்போ என்னய்யா ஆதிக்க உணர்வைக் கண்டீரு? சரியாப் போச்சு உம்மோட.

  சரி இதை ஒரு நேயர் விருப்பமா எடுத்துக்கிட்டு அடுத்த பின்னூட்டத்தில் என் புரிந்துணர்வைக் காமிக்கறேன். அப்போ என்ன சொல்லப் போறீருன்ன்னு பார்க்கலாம்.

 13. புருஜி விஷயம் முன்னாடியே தெரிஞ்சிருந்தா ………………….

  உடனே சொல்லிட்டா எங்கே வயிறு வலிக்குமோன்னு அதெல்லாம் ஜீரணமாகும்வரை
  காத்திருந்து, இப்பப் பதிவு போடறீரா? :-)))))

 14. கொத்தனார், என்ன சாமி நம்ம அய்ட்டம் எதுவும் கண்ணுலே காட்டலியா?

 15. சென்னை ச்ந்திப்புகளை மிஸ் பண்ணிட்டேன் என நினைத்தேன் .. ஆனால் இங்கு நடந்ததையும் அறிந்து கொள்ளாமல் இருந்து விட்டேன்…

  அடுத்த சந்திப்பிலாவது கலந்து கொள்ள முயற்ச்சிக்கிறேன்.

  அன்புடன்
  தனசேகர்

 16. தருமி,

  //இவங்கல்லாம் யாருங்க, பாபா? இந்தப் பதிவர்களைப் பற்றியெல்லாம் நான்கேள்விப் பட்டதே இல்லையே :)//

  1) அப்போ இட்லி வடை பத்தி நீங்க கேள்விப்பட்டதை எங்களுக்கும் சொல்லுங்களேன். :))

  2) இட்லி வடை பற்றி கேள்விப் பட்டிருக்கும் நீங்கள், பன்னீர் புரிஜி, பாவ் பாஜி, ஆலு டிக்கி சாட் பற்றி அறிந்து கொள்ள முற்படாதது உங்கள் ஆழ்மனத்தில் புரையோடி இருக்கும் வட நாட்டு எதிர்ப்புணர்வை வெளிக்காட்டுவதாகவே இருக்கிறதே!

  பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டதோ?

  3) இன்றைக்கு நாம் எல்லாரும் ஒரு குறிப்பிட்ட ஆதிக்க சக்தியின் முகமாகவே பார்க்கும் இட்லி வடை பற்றி அறிந்து கொள்ள ஆர்வப்பட்ட பேராசிரியருக்கு பிற்படுத்தப்பட்ட பதிவர்களான பன்னீர் புரிஜி, பாவ் பாஜி, ஆலு டிக்கி சாட் பற்றி அறிந்து கொள்ள முற்படாதது, ஆதிக்க சக்தியின் வீச்சில் அவரும் விழுந்துவிட்டதையே தெள்ளத் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது.

  4) புரிஜி, பாஜி என எழுதிய பாபா சாட்ஜி என எழுதாதமல் போனதின் பின்புலம் நமக்கெல்லாம் தெரியாதா என்ன? ஆனால் அதனை ஏன் பேராசிரியர் தட்டிக் கேட்க வில்லை? டிக்கி என்றால் அவருக்கும் இளப்பமாகப் போய்விட்டதா?

  5) பன்னீர் புர்ஜி – பாபாவின் சாதீயக் கூறு

  பேசாம இது பத்தி தனிப்பதிவே போடலாம். போட்டா கடைசி வரி இப்படி இருக்குமோ?

  இன்னமும் சாப்பிடும் உணவை அடிப்படையாக வைத்து கேள்விப்படும் முறை மாறவில்லை, இப்படியான நேரத்தில் அம்மாதிரியான ஒரு உணவு வகையைக் காண்பித்து இப்படியாக பேசியிருப்பது சாதிய கூறு அல்லாமல் வேறென்ன? ;)))

  6) இவற்றை எல்லாம் பற்றி கேள்வி கேட்கத் தெரிந்த பேராசிரியர் உப்புமா பற்றி ஒண்ணுமே சொல்லவில்லையே. அப்படின்னு பெனாத்தல் உப்புமா பதிவு ஒண்ணு போட்டுடப் போறாரு. அதுக்குள்ள உப்புமா பத்தி ஒரு வார்த்தை சொல்லிடுங்க சாமி.

  ஜெட்லேக் ரொம்பவே ஜாஸ்தியா இருக்கு போல. அடங்குடா மவனேன்னு சொல்லறதுக்கு முன்னாடி ஐயாம் தி எஸ்கேப்.

  (எஸ்.கே. இப்போ என்ன சொல்றீங்க, இப்போ என்ன சொல்றீங்க!)

 17. என்னாத்தை நா ஸொல்றது?
  அதான் ஆணி அடிச்ச மாரீசாதீயக் கூறைப் புட்டு புட்டு வெச்சுட்டீங்களே!
  [புட்டு சந்திப்பில் பரிமாறப்பட்டதா என ஒரு அசட்டுக் கேள்வி கேட்கக் கூடாது!]

  எத்தனை ‘ஜீ’க்கள் வந்திருந்தாலும், எல்லாரும் ‘பாகாய்’ உருகியதை மறக்க வேண்டாம்!
  🙂

  ‘முறுக்கா’ய் கிளம்பியவர் கூட,
  ‘பாப்கார்னா’ய் வெடித்தவர் கூட,
  ‘சிப்ஸா’ய் நொறுங்கிப் போனதை மறக்க வேண்டாம்!

  கூடவே …,, ‘போண்டா’வை ஒருநாளும் மறக்க வேண்டாம்!

 18. :))))) …
  Loved the shoes and the cap!

 19. சிறப்பாக ஒரு துள்ளளோடு உள்ளது உங்கள் சந்திப்பு பதிவு…!!!! சூப்பர்…

 20. Pingback: New Jersey Bloggers Meet « கில்லி - Gilli

 21. ஐயா அய்யாமார்களே,

  அங்கிட்டுப் போனாலும் நம்ம இட்லி, வடை, போண்டாவை விட மாட்டீங்களா..? சரி.. சரி.. எனக்கெதுக்கு பொறாமை..

  ‘மாமா’ இல்லேன்னு 80ல போறதெல்லாம் வைச்சுக்காதீங்க ஸார்.. எப்ப போனாலும் சூதானமா பார்த்து போயிட்டு பத்திரமா வந்து சேருங்க..

  அடுத்த சென்னைப் பதிவர்கள் மாநாட்டை புதுஜெர்ஸில நடத்துறதுக்கு ஏதாச்சும் ஸ்பான்ஸர்ஷிப் கிடைக்குமான்னு பாருங்க. அதே மாதிரி புதுஜெர்ஸி அண்ணாத்தைகளின் மாநாட்டை மெட்ராஸ் மெரீனா பீச்ல நடத்துறதுக்கு நாங்க ஏற்பாடு பண்றோம்.. சர்ரீங்களா..

  வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்..

 22. //சேரியமாகப் கதைத்ததை, பதிவாக்க கேயாரெஸ் ரவி அல்லது வெட்டிப்பயல் பாலாஜி, இணையத் தமிழின் முதன்முதலாக minutes எழுதுவதாக வாக்களித்த சந்திப்பு.//

  பாபா…
  இந்தாங்க போட்டாச்சு!

  // கால்கரி சிவா
  கொத்தனார், என்ன சாமி நம்ம அய்ட்டம் எதுவும் கண்ணுலே காட்டலியா?//

  கொத்ஸ் அண்ணே…
  சும்மா…பயப்படாம சொல்லுங்க!
  ஆமா…பதிவர்களுக்கு ஜிகிர் தண்டா சப்ளை பண்ணலாம்-னு ஒரு ஐடியா கொடுக்க மறந்துட்டீங்களே! 🙂

 23. dont forget to address our meet via webcam on 20th. try your hand in skype ( http://skype.com ) or we can manage with yahoo IM

 24. sorry the above comment is from me- Chella 🙂 I am the web publisher for Pamaran – osai chella

 25. ஏங்க பா பா குருஜி

  அது பன்னீர் புருஜியா அல்லது பனீர் புருஜியா ..

  பின் குறிப்பு

  ரோஜா பூவிலிருந்து தயாராகும் அத்தரை தமிழில் பன்னீர் என்பார்கள் :))

  பாலிலிருந்து தயாராகும் ஒரு வகை பாலாடைக் கட்டியை ஹிந்தியில் பனீர் என்பார்கள் :))

  அன்புடன்…ச.சங்கர்

 26. சங்கர்
  —ஹிந்தியில் பனீர் என்பார்கள்—

  எனக்கு ஹிந்தி சரியாத் தெரியாதுங்களே 😛

 27. செல்லா
  —meet via webcam on 20th—

  இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு என்றும், எப்படி ஸ்கைப் அல்ல்து யாஹூ மூலம் கலந்துகொள்வது என்றும் வழிகாட்டல் பதிவு ஒன்று இடுங்களேன். அவசியம் பங்கு கொள்கிறேன்.

  அழைப்புக்கு நன்றியும் வணக்கமும்

 28. கேயாரெஸ் சந்திப்புக்கு வர இயலாதவர்களுக்கு படம் பிடித்துக் காட்டும் அருமையான பதிவு. நன்றி

 29. வீயெஸ்கே
  —புல்லெட் பாயிண்ட் கொடுத்து—

  ஏதோ ‘சொ’ மாதிரி உயிரை வாங்கினேன் என்று உண்மை விளம்பாதவரைக்கும் சரி 🙂

 30. பத்மா
  —நான் எல்லாத்தையுமே மிஸ் பண்னியாச்சு,—

  தென்றல்/ரவி பதிவுகளைப் பார்த்தால் சக்திப்புள்ளி விவரம் கிடைக்கும் 😉
  எனது பதிவில் சாப்பாடு 😛

 31. தருமி, இ.கொ., செந்தழல், துளசி __/\__

 32. இ.கொ.
  —உங்கள் சுட்டித்தனம் பத்தி நான் என்னத்தை சுட்டிக் காமிக்கிறது—

  இருங்க… இன்னும் ஸ்னாப்ஜட்ஜ்.ப்ளாக்ஸ்பாட் & டெல்.இசி.யஸ் முடிக்கவில்லை. சேர்த்துட்டு வச்சுக்கறேன் 😉

 33. கா. சிவா
  —நம்ம அய்ட்டம் எதுவும் கண்ணுலே காட்டலியா?—

  கால்கரியிலிருந்து நீங்க வந்தாத்தான் என்று விரலை மறுத்து ஆட்டிட்டாங்க 😦
  தண்ணீரும் கம்பலையுமாக
  – அபலன்

 34. தனசேகர்
  —சென்னை ச்ந்திப்புகளை மிஸ் பண்ணிட்டேன் என நினைத்தேன் .. ஆனால் இங்கு நடந்ததையும் அறிந்து கொள்ளாமல்—

  நீங்க எந்த ஊரு? சென்னையா… ஜெர்சியா?
  கோவையில் அடுத்த சந்திப்பை பதிவர் பட்டறையாக நிகழ்த்தவிருக்கிறார்களே…

 35. மதுரா

  மேற்கோள்களுக்கு நன்றி 🙂

 36. உண்மைத்தமிழன்
  —சென்னைப் பதிவர்கள் மாநாட்டை புதுஜெர்ஸில நடத்துறதுக்கு ஏதாச்சும் ஸ்பான்ஸர்ஷிப் கிடைக்குமான்னு பாருங்க. அதே மாதிரி புதுஜெர்ஸி அண்ணாத்தைகளின் மாநாட்டை மெட்ராஸ் மெரீனா பீச்ல—

  இது மட்டும் நனவாயிடுச்சுன்னு வச்சுக்குங்க… எல்லாரும் வேலையை விட்டு விட்டு பறந்து பறந்து பதிவர் சந்திப்புக்கு வருவார்கள் 😛

 37. எப்படியோ ஆடிப் பாடிப் பேசி
  ப்ளாகர்ஸ் மீட் சிறப்பாக நடத்திட்டீங்க.
  கொஞ்சம் முறுக்கு,மைசூர்பாகு எடுத்துவைக்கணும்னு, யாருக்கும் தோணலியா.
  வராதவங்களுக்கு அடுத்த மீட்டிங்கிலேயவது ஆறுதல் பரிசாக,
  வீடியோ,பாப்கார்ன்,
  பெப்சி எல்லாம் பரிமாறும்படி பார்த்துக் கொள்ளுங்க. ஆமாம் சொல்லிட்டேன்.
  🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.