Google Page rank – Tamil News


அமெரிக்கா வருவதற்கு தயாராகிக் கொண்டிருந்த நேரம். அலுவலில் இருந்து அழைப்பு. அப்பொழுதெல்லாம் வேலைக்கு சேருவதற்கு, நல்ல நிறுவனமாக இருந்தால் கணிப்பொறியாளர்களுக்குப் போதாது. ஹ்யூமன் ரிஸோர்சஸில் க்ளோசப் விளம்பரம் கொடுக்கத் தகுந்த பல்வரிசையுடன், பாரதிராஜா கண்ணில் பட்டால் ‘ர’ வரிசை நாயகியாகும் அபாயம் வாய்ந்த மேலாளர் வாய்க்க வேண்டும்.

அப்படிப்பட்ட நிறுவனத்தில்தான் நானும் இருந்தேன். ‘அமெரிக்கா போகப் போறோம், வெட்டிப்பயல் கதைகளில் வருவது போல் காதல் மலர்ந்திருக்குமோ!?’ என்னும் பயிர்ப்பு கலந்த துள்ளும் மனத்துடன் சென்றேன்.

நேர்காணல் அன்று பளீரிட்ட அதே பற்பசை சிரிப்பு. போகியன்று வீட்டுக்கு வெள்ளையடிப்பதை, நாள்தோறும் ‘வைட்டனர்’ போடுவதை அறியாத வயது. அமெரிக்கா குறித்து துப்புகள் கொடுக்க ஆரம்பித்தாள்.

அவற்றில் இன்றும் கடைபிடிக்க, கால் கட்டைவிரலை கார்பெட்டில் சுழித்து நாணிக் கோணுவது: ‘சுயதம்பட்டம்‘.

தற்பெருமை கூடாது என்று வளர்ந்த அறிவு. இளைய தளபதி வேறு ‘அடங்காம ஆடினே தலை இருக்காது’ என்று மிரட்டி வைத்திருந்தார். கைக்கெட்டும் கனவு (கன்னியா இல்லையா என்றறியேன் பராபரமே) HR ‘கொட்டு முரசே’ என்றது. பஸ்மாசுரனாக மோகினியிடம் அக அழகை முன்வைக்கலாம் என்னும் எண்ண விமானத்தை, சடன் ப்ரேக் இட்டு, அமெரிக்க விமானக்குதிரையை முடுக்கிவிட்டேன்.

ஆட்டோ ரிக்ஷாவில் குறைந்தபட்சமாக இருபது ரூபாய் கேட்பது போல், அமெரிக்காவில் அனைவருமே தங்கள் performance appraisal-களில் 20% லாபத்தைக் கூட்டியதற்கு உதவியதாக உட்டாலக்கடி போடுகிறார்கள். அனைவரின் மதிப்பு கூட்டு சதவிகிதத்தைக் கணக்கிட்டால், கம்பெனிக்கு 200 கோடி% லாபம் அதிகரித்திருக்க வேண்டும்.

வலை வந்தபிறகும் இந்த அன்புத்தொல்லையை சகபதிவர்கள் செவ்வனே நிறைவேற்றினார்கள். ‘நான் பதிவு எழுதிக் கொண்டிருக்கிறேன். சிறிது நேரம் விழித்திருக்கவும்.‘ என்று வருமுன் காப்போன் மின்மடல் வரும். கொஞ்ச நாள் கழித்து ‘நான் பதிவு போட்டு விட்டேன். படிக்கவும்.‘ என்று மாற்று செய்தியோடை அறிவிப்பு வரும். இன்னும் கொஞ்ச மாதம் கழித்து ‘நான் பதிவு எழுதினேனே! படித்து முடித்து ஒழுங்கு மரியாதையாக மறுமொழி போடவும்.‘ என்று செல்லக் கொஞ்சல் வந்து சேரும்.

சுயம் பேசுவதை நிலைநிறுத்த இத்தனை முஸ்தீபு எதற்கு?

சுட்ட செய்திகளைத் தொகுத்து வைக்கும் Tamil News பதிவிற்கு கூகிள் பக்க மதிப்பில் 6/10 கிடைத்திருக்கிறது.

நிலாச்சாரல், திண்ணை, தமிழோவியம் போன்ற ஆதிகால அசல் தாதாக்களும், தேன்கூடு, தமிழ்மணம் போன்ற இக்கால கல்லடி கணை வாங்கும் வலைமாந்தர்களும் கூட 5/10 என்று கூகிளாண்டவரால் அருள்பாலிக்கப்பட்டிருக்கும் இக்காலத்தில், ஆறு போட்டது பெருமைக்குரியது.

சொர்ணமால்யா, ஐஸ்வர்யா ராய் போன்றவர்களைத் தேடித்தான் பலரும் வருகிறார்கள். சாத்தான் கேட்டது போல்

Prashanth – Grahalakshmi : Counseling to avoid Divorce – A quick end to the Cine Star’s marriage life « Tamil News: இவ்வளவு நேரத்தையும் உழைப்பையும் செலுத்தி இந்த வலைப்பதிவை நடத்திவருகிறீர்கள். இந்த மாதிரி முக்கியமான செய்திகளைத் தவிர்த்து அதில் கிடைக்கும் நேரத்தில் இந்த வலைப்பதிவில் கூடுதல் அம்சங்களைச் சேர்க்கலாமே

தோன்றினாலும், நாளொன்றுக்கு நமீதா ரசிகர் மன்றத்தையும் நீலிமா நாயுடுவையும் வைத்துதான் 1,500 வாடிக்கையாளர்கள் கிடைக்கிறது. எத்தனை பேர் ‘படம்’ பார்க்க வருகிறார்கள், எத்தனை பேர் ஞானம் பெற வருகிறார் என்பதெல்லாம் புள்ளிவிவரங்களில் அறியமுடிவதில்லை.

ஏதோ கூடிய சீக்கிரம் சேமநல நிதியை நம்பாத மாதிரி, இணைய வங்கியில் ஓவர்ஃப்லோ ஆகுமாறு, லஷ்மி வந்து சேர்ந்தால் சரி.


உங்களின் பக்க மதிப்பை அறிய இங்கு செல்லவும்: Google Page Rank Checker – FREE PageRank Calculator

கூகிள் வலைமதிப்பு நுட்பம் குறித்து அறிய: PageRank – Wikipedia

உங்களை நீங்களே முன்னிறுத்திக் கொள்வதாக இருந்தால் கீழ்க்கண்டவற்றை கடைபிடிக்கலாம்:

1. உங்களை நீங்களே எள்ளல் செய்து நிதர்சனத்தை ஒப்புக் கொள்ளவும். Shameless self-promotion என்று மறுப்புக் கூற்று இடலாம். தினமணி, மாலைமலர், பிபிசி தளங்களின் முதுகில் சவாரி செய்து திருட்டுத்தனமாக பெற்றது என்று ஒப்புக் கொள்ளவும்.

2. நண்பர்களுக்கு அனுப்பும் மின்னஞ்சலில், ஒவ்வொருவரையும் தனிப்பட விளிக்கவும். பொத்தாம் பொதுவாக கூட்டாஞ்சோறு To: அடித்தால், பயனில்லை.

3. மற்றவர்களைக் கவர, அவர்களின் சுட்டி கொடுத்தாலே போதுமானது. ‘உன்னைப் பற்றி கூட, நடுவில் ரெண்டு வார்த்தை சொல்லியிருக்கேன்‘ என்று சொன்னாலே, பலரும் விழுந்தடித்து வந்து படித்துவிடுவார்கள்.


கடைசியாக Tamil News குறித்த சில புள்ளிவிவரங்கள்:

இதுவரை மொத்த பார்வையாளர்கள்: 122,064

ஒரே நாளில் மிக அதிகமாக வந்தவர்கள்: 1,810

நகலெடுத்து, சுராதாவில் எழுத்துரு மாற்றி பதிந்த செய்திகளின் எண்ணிக்கை: 750

அவற்றின் தொடர்ச்சியாக வந்த மறுமொழிகள் (பெரும்பாலானவை என்னுடையது): 233

இடுகுறிச் சொற்கள் (Tags): 5,316


| |

37 responses to “Google Page rank – Tamil News

 1. Congrats !!! PR of 6 is amazing !!!
  I dont see any monetizing in this blog. Am i missing anything?

 2. Great !!!! Congrats…!!!

  – Senthazal Ravi

 3. Dinamalar, Kumudam kooda 5/10 than.

  great job !

 4. 6 ரொம்ப நல்ல மதிப்பு. வாழ்த்துக்கள். யாரோட வலைத்தளங்க அது? உங்களுடையதா?

  http://internetbazaar.blogspot.com

 5. Google (http://www.google.com) has a page rank of 10 in this website 😉

 6. —Google (http://www.google.com) has a page rank of 10—

  ஆமாம். தனக்குத் தானே திட்டம்.

  ஆனால், நடுநிலையாக http://nyt.com, http://microsoft.com போன்ற வேறு சிலருக்கும் பத்துக்கு பத்து போட்டிருக்கிறார்கள்.

 7. ஊசி

  —dont see any monetizing in this blog—

  Adsense and other Ads « WordPress.com

  How can I put Advertisement in my blog? « WordPress.com Forums

  எந்த நல்ல strategy-உம் வருவாயில் கொண்டு போய் விட வேண்டும் என்பது உண்மை. தற்போதைக்கு எனக்கு அதற்கான அத்தியாவசியம் இல்லை என்பது ஒரு புறம். தேவை இருந்தாலும், விளம்பரங்களை இட முடியாது என்பது இன்னொரு புறம்.

  இன்றைய நிலையில் ‘மிகப் பெரிய தகவல், செய்தி வலையகம்’ என்று ஆக்குவதுதான் குறிக்கோள். எதைத் தேடினாலும், அதன் ஆதியந்தம் கிடைக்கலாம், என்ற நிலை உருவானபிறகு, பணம் ஈட்டும் வழியை யோசிக்க உத்தேசம்.

 8. —யாரோட வலைத்தளங்க அது—

  செய்திகள் வெளிவந்த இடங்கள்: தினமணி, மாலைமலர், பிபிசி (தொட்டுக் கொள்ள குமுதம், விகடன், தினமலர்)
  ஒவ்வொன்றுக்கும் பொருத்தமான தேடுகுறிச்சொற்கள், கவர்ச்சியான தலைப்பு, தொடர்ச்சியான இற்றைப்படுத்தல் செய்வது: அடியேன்

 9. —Dinamalar, Kumudam kooda 5/10 than.—

  ஓ… ஒருங்குறியில் அமையாதது அவற்றின் முதல் குறை.
  Tags, ஆங்கிலத் தலைப்புகள், கூகிள் தேடலுக்கேற்ப வளைந்து கொடுக்கும் லாவகம் போன்றவை இல்லாதது இன்னொரு மிகப் பெரிய குறை!

 10. @செந்தழல் நன்றி.

 11. கலக்கல் பாபா!!!

  வாழ்த்துக்கள்!!!

 12. @வி.பி நன்றி.

 13. super… ennodathu 2 thaan :-((..
  etamil – 5….

  vaazthukkal… miha periya seithi talam aavatharkku ennudaiya vaazthukkal…

  ur page is taking too much time to load 😦 konjam gavaninga… naan rendu thadava kaduppaahi thamizmanamla irunthu matha linka paaka aarambitchutten…

 14. pona anony comment ennodathu 🙂

  antha vettipaiyal matter super :))

 15. சூப்பர்.. புது வார்ப்புரு நல்லா இருக்கு..

  நான் எப்படி உங்க நியூஸ் பதிவைப் பார்க்காம விட்டேன்னு தெரியலை. பார்த்துட்டு வந்து சொல்றேன்..

 16. இலவசக்கொத்தனார்

  விஷயம் ஒண்ணும் புரியலைங்க. ஆனா நல்ல விஷயமாட்டுந்தான் இருக்குது. அதனால நானும் வாழ்த்திக்கறேனுங்க.

  நீங்க குடுத்த சுட்டிய வெச்சுப் பாத்தேனுங்க. அதுப்படி நீங்க சிவன்னா நானு பார்வதிங்க. அதாவது உங்கள்ள நானு சரி பாதிங்க!

 17. ஒரு நிமிஷம் திகைச்சு போயிட்டேன். இப்படி ஒரு நிமிஷத்துக்குள்ள load ஆகுதே, e-tamilக்கு பதில் வேறு எங்காவது வந்துதோடமானுதான். ;). புது Template நல்லாவேயிருக்கு. அதைவிட வேகமா இருக்கு 🙂

 18. —புது Template நல்லாவேயிருக்கு. அதைவிட வேகமா இருக்கு 🙂 —

  நன்றிப்பா 🙂

  கூடிய சீக்கிரமே நிறைய ஸ்க்ரிப்ட், படம், பெரிய சி.எஸ்.எஸ் எல்லாம் சேர்த்து, மெதுவாக வருமாறு செய்துவிட உத்தேசம். எல்லாம் ப்ளாகர் சித்தம் 😛

 19. —புது வார்ப்புரு நல்லா இருக்கு..—

  நன்றி 🙂

  உங்களின் வார்ப்புருவில் இருந்தும் சுட்டது கொஞ்சம் அங்கே இங்கே இருக்கலாம் 😉

 20. @ஜி,

  —vettipaiyal matter super—

  எப்படி எல்லாம் சின்னப்பசங்கள உள்ள இழிக்கிறாங்க பார்த்தீங்களா 😛

  —ur page is taking too much time to load—

  ப்ளாகருக்கு மாறியாச்சு!! இப்ப பரவாயில்லையா?

  —ennodathu 2 thaan—

  SEO (search engine optimization) என்று இதற்கென்றே சில பக்கங்கள், டிப்ஸ் இருக்கிறது.

  ஒன்றிரண்டு (முக்கியமானவை):

  1. Tags/Labels அதி முக்கியம். பொருத்தமானதாகத் தேர்ந்தெடுக்கவும். ஆங்கிலக் குறிச் சொற்களை பயன்படுத்தலாம்; தவறில்லை. (உங்க பதிவொன்றில் பூடாக்ஸ் ஆங்கிலத்தைப் பார்த்துதான் தமிழ்ப் பதிவுக்குள் நுழைந்ததாகப் படித்த நினைவு. அதே போல், ஆங்கில லேபிள்களை அடியொற்றி, தமிழ் படிக்க வருவார்கள்; வருகிறார்கள்).

  2. டெக்னோரட்டி நிரலித்துண்டை சேர்க்கவும்

  3. அலெக்சா கருவிப்பட்டையை நிறுவவும்

  4. நண்பர்களிடம், உங்களின் பதிவுக்கு சுட்டியை சேர்த்து விடுமாறு அன்பாக மிரட்டவும் (கூகிள் பேஜ் ராங்க் கூட இதுவும் முக்கியம். எத்தனை பேர் உங்களின் வலையக முகவரிக்கு லிங்க் கொடுத்திருக்கிறார்கள்?)

  5. கூகிள் தேடல் பெட்டியை கொடுக்கவும்

 21. @சந்தோஷ் __/\__

 22. நன்றி கொத்ஸ்!

  —நீங்க சிவன்னா நானு பார்வதிங்க. அதாவது உங்கள்ள நானு சரி பாதிங்க—

  சங்கர நாராயணர் 😉

 23. Sooper!! Vaazhthukkal Bala!

 24. Thanks once again for that valuable information on “Page ranking in Google”.

 25. வாழ்த்துக்கள் நண்பரே…

  நான்கூட இது மாதிரி ஒன்று ஆரம்பித்து ஒருமாதம் போடுவதற்குள் முதுகு ஒடிந்து விட்டது. பிறகு அதற்கான நேரமும் சரிவரவில்லை. உங்கள் பதிவை பிறகுதான் பார்த்தேன். நீங்கள் எப்படித்தான் இவ்வளவு செய்திகளை தொகுத்தீர்கள் என்று வியப்பாக இருக்கிறது.

  நீங்கள் ஆங்கிலத் தலைப்பு மற்றும் tags போடுவதன் காரணமும் புரிந்தது.

  வாழ்த்துக்கள்

  (நேற்று மறுமொழி இட முயன்ற போது பலமுறை முயன்றும் பக்கம் திறக்கவில்லை)

 26. பத்மா அர்விந்த்

  பாலா
  பாராட்டுக்கள். புது தள அமைப்பு என்னை குழப்புகிறது சில காலம் ஆனால் பழகி விடும்.

 27. பாலா நல்ல முயற்சி. தமிழில் ஒரு நல்ல செய்தி வலைத்தளம் இல்லை என்பது உன்மை. உங்கள் வலைத்தளம் மேலும் மேன்மையடைய எனது வாழ்த்துக்கள்….

  http://internetbazaar.blogspot.com

 28. @கப்பி

  புது ப்ளாகருக்கு மாறிவிட்டீர்களா?

 29. @ஜான்

  ஒரு நிமிடம், ‘ஏதோ எரிதம் வந்திருக்கு’ என்று நினைத்தேன். அப்புறம் தங்களின் ப்ளாகர் விவரம் அறிந்து, ‘அட.. எரிதம் அல்ல… பின்னூட்டம்தான்!’ என்று தெளிவடைந்தேன் 🙂

 30. @சிந்தாநதி

  —நீங்கள் எப்படித்தான் இவ்வளவு செய்திகளை தொகுத்தீர்கள் என்று —

  ஆடும் வரை ஆட்டம்!
  ஆயிரத்தில் நாட்டம்!
  கூடுகின்ற கூட்டம்!
  🙂

 31. @பத்மா

  —புது தள அமைப்பு என்னை குழப்புகிறது—

  பலரும் சொல்கிறார்கள். விரைவில் செப்பனிடுகிறேன்

 32. @LFC fan

  —தமிழில் ஒரு நல்ல செய்தி வலைத்தளம் இல்லை—

  ஒத்த மனமுடையவர்கள் சேர்ந்தால், முழுமையான் தளமாக மாற்ற முடியும். கை கொடுக்க ஆள் தேடுகிறேன் 🙂

 33. from ravi…

  //நண்பர்களிடம், உங்களின் பதிவுக்கு சுட்டியை சேர்த்து விடுமாறு அன்பாக மிரட்டவும் (கூகிள் பேஜ் ராங்க் கூட இதுவும் முக்கியம். எத்தனை பேர் உங்களின் வலையக முகவரிக்கு லிங்க் கொடுத்திருக்கிறார்கள்?)//

  இப்போது, ஒரு பதிவின் எல்லா பக்கங்களில் இருந்தும் காணப்படும் blogroll வகை தொடுப்புகள், முகப்புப் பக்கத்தைச் சுட்டும் தொடுப்புகளுக்கு கூகுள் மதிப்பைக் குறைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். இடுகைகளின் நடுவே இருந்து சூழலுக்கு ஏற்ப தனித்தனிப் பக்கங்களுக்கு கிடைக்கும் தொடுப்புகளுக்கு மதிப்பு கூட என்கிறார்கள். (context based links to internal pages)..

  அப்புறம், கில்லியில் தொடுப்பு தரும்போது, நிறைய சமயங்களில் தொடுப்பு வாசகம் தேடுபொறிகளுக்குப் புரியச் செய்வது போல் இல்லியே? எடுத்துக்காட்டுக்கு, http://gilli.in/kuruvi-movie-review-ravi/ பக்கத்தில் “நிறையவே உண்டு” என்பதற்குப் பதில் “குருவி – திரை விமர்சனம்” என்று தொடுப்பு கொடுத்திருந்தால் புண்ணியமா போகும் 🙂 அப்புறம், http://internetbazaar.blogspot.com/ தளத்தைக் காணலையே?

 34. அப்புறம், http://internetbazaar.blogspot.com/ தளத்தைக் காணலையே?—

  என்ன context என்று மறுமொழியில் கசக்கிப் பார்த்தேன். அந்தத் தளம் என்னுது இல்ல… எப்படி அது கேள்வியாக வந்தது என்றும் நினைவில் இல்ல

  (கில்லி/பரிந்துரை குறித்த ஆலோசனைக்கு நன்றி… செயல்படுத்த முயல்கிறேன் 🙂

 35. https://snapjudge.wordpress.com/2007/01/26/google-page-rank-tamil-news/#comment-4807 மறுமொழியில் அந்தத் தளப் பெயர் இருந்தது. உங்களுது என்று தவறுதலாக நினைத்துக் கொண்டேன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.