African-American music performers harassed by Canada


கனடா குடிபுகல் அதிகாரிகளின் இனப்பாகுபாட்டு விழுமியம்

1. TheStar.com – artsentertainment – Not alone in border hassles: Rapper

2. globeandmail.com: Black stars harassed, suit alleges

3. Bloomberg.com: Canada

கனடாவை நிறப்பிரிகை இல்லாத நாடாக சொல்லலாம்?

வெற்றி பெறுவதற்காக வெறி கொண்ட வார்த்தைகளை உதிர்த்ததாக இங்கிலாந்தில் இனவெறி குற்றச்சாட்டு. (படிக்க: கில்லி – Gilli » Big Brother, Shilpa Shetty & Racism). அதைத் தொடர்ந்து கனடாவைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த இந்த வழக்கு ஜெரோம் (Jerome Almon) மூலம் தொடுக்கப்பட்டிருக்கிறது.

கறுப்பராக இருந்ததால் ‘சிறப்பு கவனிப்பு’ கிடைத்திருக்கிறது என்கிறார். ராப் பாடகராக இருந்ததினால், கனடாவுக்குள் நுழைவதற்கான ஆவணங்கள் சரிபார்த்தல் முதல் கார் பரிசோதனை வரை நீண்டு, நெடிய காத்திருத்தலாக மாறியிருக்கிறது. இனவெறி சொற்றொடர்களுக்கும் ஆளாகியிருக்கிறார்.

டொரண்டோ, வான்கூவர் நகரங்களில் தன்னுடைய இசை நிகழ்ச்சிக்கு தாமதமாக செல்ல வகைசெய்யும்விதமாக இவை அரங்கேறியிருக்கிறது. கருப்பின ராப் நட்சத்திரங்கள் கனடாவுக்குள் நுழையத் தடை விதிக்கும் சதித்திட்டத்தின் ஓர் அங்கமாகவே இந்த பாகுபடுத்தலையும் அவதானிக்கிறார்.

முந்தைய சம்பவங்கள் சில:

 • டிசம்பர் 2005 – வன்முறையை ஆராதிப்பதாக 50 செண்ட்ஸ், கனடாவுக்குள் நுழையத் தடைவிதிக்க முயற்சி.
 • மார்ச் 2003 – ஏற்கனவே அனுமதி மறுக்கப்பட்ட, DMX-இற்கு மீண்டும் கனடா நிராகரிப்பு. இசை நிகழ்ச்சியில் பாடமுடியாமல் ரத்து செய்கிறார்.
 • ஏப்ரல் 2001 – மாட்லி க்ரூவின் முன்னாள் அங்கத்தினர், டாமி லீ-யினால் இசை வாரக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்கு, கனடாவினுள் நுழைய அனுமதி கிடைக்கவில்லை.

  சட்டத்தின் துணையுடன் அதிகாரிகளின் மனக்கற்பனைகள் மாற முயற்சி எடுக்கும் வேளையில், தன்னுடைய மனசஞ்சலத்துக்கு ஈடாக $900 மில்லியன் தொகை கேட்டிருக்கிறார்.


  | | | | | |

 • 4 responses to “African-American music performers harassed by Canada

  1. சிறில் அலெக்ஸ்

   //சட்டத்தின் துணையுடன் அதிகாரிகளின் மனக்கற்பனைகள் மாற முயற்சி எடுக்கும் வேளையில், தன்னுடைய மனசஞ்சலத்துக்கு ஈடாக $900 மில்லியன் தொகை கேட்டிருக்கிறார்.//

   அடடா என்ன யாராவது திட்டமாட்டாங்களான்னு ஏங்க வச்சுட்டீங்க.

   🙂

  2. பாலாஜி – நீங்கள் பட்டியலிட்டிருக்கும் ஒவ்வொருவரின் மீதும் வண்டிவண்டியாக கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. உலகிலேயே டென்மார்க்கு அடுத்தபடியாக கனடாவிதான் தனிநபர் உரிமைகள் மிகவும் மதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

   இதில் கறுப்பர் என்ற இழை இருப்பதை மறுக்கமுடியாதென்றாலும், இனப்பாகுபாடு என்ற ஒற்றைப்படை பெட்டியில் இது அடைபடாது. கறுப்பர் என்பதைவிட கிரிமினல்கள் என்பதே இவர்களின் பொது அடையாளம்.

  3. @சிறில்

   —என்ன யாராவது திட்டமாட்டாங்களான்னு ஏங்க வச்சுட்டீங்க.—

   என்னை யாராவது திட்டினால் கூட ‘பாவம்… பொழச்சுப் போறான்’ என்று பயந்து ஒதுங்கிப் போயிடுவேன். இந்த மாதிரி ‘எவண்டா மாட்டுவான்’ என்று அலைகிறவர்களிடம் எதை சொன்னாலும் எடக்கு மடக்காகப் பார்த்து, லிடிகேஷன் போட்டு காசு எண்ணுவார்கள்.

  4. @வெங்கட் நன்றி.

   —வண்டிவண்டியாக கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. —

   ஆமாம்

  மறுமொழியொன்றை இடுங்கள்

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

  Google photo

  You are commenting using your Google account. Log Out /  மாற்று )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

  Connecting to %s

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.