Who is the most popular film actor in Tamil Nadu? – The Hindu Survey


லயோலா கல்லூரி கருத்துக் கணிப்புகளில் ரொம்ப நாளாக எனக்கு சந்தேகம் இருந்தது. தாடி வைத்து, தொப்பி போட்டு ‘சிவப்பதிகாரம்‘ ரகுவரன் மாதிரி பேராசிரியர் ‘இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி ஜெயிக்கும்’ என்று அடிக்கடி சன் டிவி செய்திகளில் ஊடக உரையாடுவார்.

முந்தாநேற்று கூட ‘இன்றைய தேதியில் ஆளுங்கட்சிக்கு அபார ஆதாரவு இருக்கிறது. நாளைக்கு ஏதாவது தேர்தல் வந்தால், திமுக முழுமையாக ஆட்சியைப் பிடிக்கும்’ என்று பேசிக் கொண்டிருந்தார்.

அதே Loyola College’s School of Media Studies நடத்திய சினிமா ரசிகர் கேள்வி பதிலின் முடிவுகள்:

அதிகம் கவர்ந்த நடிகர்:

ரஜினிகாந்த் – 15.6 %

விஜய் – 14.2 %

விஜய்காந்த் – 12.6 %

அஜீத் – 11.1 %

கமல் ஹாசன் – 8.3 %

பெரிதினும் பெரிதாக பிடித்த நடிகை:

அசின் – 14.1 %

ஜோதிகா – 11.8 %

சிநேகா – 8.9 %

த்ரிஷா – 7.5 %

சிம்ரன் – 6.1 %

சர்வேயில் பங்குபெற்றோர்: 2,945

ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. : )

செய்தி: தி ஹிந்து


| | | | | | |

14 responses to “Who is the most popular film actor in Tamil Nadu? – The Hindu Survey

 1. இலவசக்கொத்தனார்

  என்னங்க அவ்வளவு சந்தோஷம்??

  காப்டன், கமல், சிநேகா (இது சரியா சினேகாவா?), சிம்ரன் – இவங்களுக்கு மட்டும் என்ன போல்டு ஃபாண்ட்?

 2. தடித்த எழுத்தில் வந்தவர்கள் எல்லாம் ஆச்சரியமான இடத்தில் இருக்கிறார்கள்?

  கொஞ்ச நாள் முன்னாடி, கமலை விட விஜயகாந்த் ‘பிரபலமானவர்’ என்று என் கணிப்பை வாதிட்டுக் கொண்டிருந்தேன்.

  அதே போல் த்ரிசாவுக்கு நிறைய படம் இருந்தாலும், தமிழ் ரசிகர்களின் அபிமானத்தில் சினேகாவும் சிம்ரனும் முக்கிய இடம் வகிப்பது எதிர்பார்ப்பைத் திருப்தி செய்யும் முடிவு ; )

 3. //ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. : )//

  சிபி, தனுஸ் எல்லாம் காணுமே :))

 4. சூர்யா,விக்ரமெல்லாம் ஆட்டையில சேத்துக்கப்படலயா?
  – S.0

 5. —சிபி, தனுஸ் எல்லாம் —

  பிரசாந்த், விஷால், ஜெயம் ரவி???

  (பரத் எப்படி விடுபட்டது!?)

 6. —சூர்யா,விக்ரமெல்லாம் ஆட்டையில—

  தெரியவில்லையே. அப்படியே நயந்தாரா, கோபிகா, பாவ்னா, ரீமா சென் என்று இன்னொரு பட்டியல் இடலாம் 😛

  எப்படி நடத்தப்பட்டது (ஒருத்தர் ஒருவருக்குத்தான் வாக்களிக்கலாமா?),

  கேள்விகள் எவ்வாறு கேட்கப்பட்டது (இந்தப் பெயர்களில் தங்களுக்குப் பிடித்தமான பெயர் அல்லது புள்ளியிட்ட இடத்தை நிரப்புக),

  அணுகிய விதம் (படிவங்கள் அல்லது நிருபர்கள் மூலம் பேட்டி அல்லது இணையம்),

  எடுத்துக் கொண்ட மக்களின் சாம்பிள் குறித்த தகவல்….?!

 7. நானும் இந்த சர்வேகளுக்கு எங்கட மதிப்புகுரிய இராஜாநாயகம் அவர்களுடன் சென்ற அனுபவத்தைப் பற்றி என்ர பதிவில பிறகு பதியுறன்.

  40 க்கு 38 தொகுதியில் வெல்லும் 2 தொகுதியில முடிவுகள் தெளிவில்லாமல் உள்ளதாக அறிவிக்கப்பட்டது. 40 க்கு 40 தி.மு.க எடுத்து வெண்டது.

 8. தலைவருக்கு வெறும் 15.6% தானா?
  இருக்காது…
  no..

 9. கோவி.கண்ணன் [GK]

  தலைவா,

  ரீமாசென்னைக் காணுமே, மயக்கத்தில் இருப்பதால் மறந்துட்டாங்களா ?
  :))

 10. —நானும் இந்த சர்வேகளுக்கு எங்கட மதிப்புகுரிய இராஜாநாயகம் அவர்களுடன் சென்ற அனுபவத்தைப் பற்றி என்ர பதிவில பிறகு பதியுறன்.—

  ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன்!

 11. @கார்த்திக்

  —தலைவருக்கு வெறும் 15.6% தானா—

  இளைய தலைமுறை மாறிவிட்டது?

 12. @ஜிகே

  —ரீமாசென்னைக் காணுமே—

  வல்லவன் (அல்லது) ரெண்டு பார்த்திருப்பார்கள் ; )

  —மயக்கத்தில் இருப்பதால் மறந்துட்டாங்களா—

  என்ன மயக்கம்!?

 13. வெட்டிப்பயல்

  ஜெனிலியா, இலியானா, அனுஷ்கா, தாமண்ணா இல்லாததால் இந்த சர்வே செல்லாது 😉

  Gaptain ரசிகர்கள் உலக நாயகனைவிட அதிகமா??? என்னப்பா நடக்குது ஊர்ல???

  //
  இளைய தலைமுறை மாறிவிட்டது?//
  அப்ப நாங்க எல்லாம் யாரு???

  1 வயசு குழந்தைல இருந்து தலைவருக்கு ஃபேன்ஸ் இருக்கு 😉

 14. விபி,

  —1 வயசு குழந்தைல இருந்து தலைவருக்கு ஃபேன்ஸ் இருக்கு—

  எங்க வீட்டிலேயே இருக்கு… இருந்தாலும் ‘நீங்கள் கேட்ட பாடல்லின்’ நண்டு சிண்டுகள் எல்லாம் பிடித்த நடிகராய் இளைய தளபதியை சுட்டும்போது காதுகளில் இருந்து சூடு பறக்க ஆவி புறப்படுவதை தவிர்க்க முடியவில்லை ; )

  —அப்ப நாங்க எல்லாம் யாரு???—

  தல… டீனேஜைத் தாண்டி விட்டாலே, வயசாகுதுன்னு அர்த்தம். நாங்களும் உங்க ஜெனரேசந்தானே : P (ஃபீட்பாக் கேப்பில் ஃபார்ட்டி வயசை கம்மி செஞ்சிட்டேன் ; )

  —Gaptain ரசிகர்கள் உலக நாயகனைவிட அதிகமா??? —

  அவர் ‘ராஜ பார்வை’ கவிழ்ந்தவுடனேயே ‘குணா’ போன்றவற்றை ஓரக்கட்டிவிட்டு, அண்ணாமலைக்கு போட்டியாக சிதம்பரம்; பாட்சாவுக்கு பதிலடியாக கோச்சா; அருணாசலத்திற்கு சகாவாக வெங்கடாசலம் என்று களமிறங்காமல் ‘அன்பே சிவம்’ கொடுத்தால்… : |

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.