Daily Archives: ஜூலை 31, 2006

Colorful Rices: Red (hot) like this Lady?

Dinamani.com – TamilNadu Page

பெண் அதிகாரியின் அழகை வர்ணித்த அமைச்சரின் “அட்வைஸ்’ தேவையில்லை: ஜெ

சட்டப் பேரவையில் நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் திங்கள்கிழமை ஜெயலலிதா பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் கூறிய ஒவ்வொரு தகவலுக்கும் அமைச்சர்கள் குறுக்கீடு செய்து பதில் அளித்தனர். இதற்கு பேரவைத் தலைவரைப் பார்த்து அமைச்சர்கள் அதிகம் குறுக்கீடு செய்வதாக ஜெயலலிதா குறிப்பிட்டார்.

அப்போது பேசிய உணவுத் துறை அமைச்சர் வேலு, இதே சட்டப் பேரவையில் கடந்த ஆட்சிக் காலத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், உறுப்பினர்கள் குறுக்கீடு செய்யாத அளவுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டனர். அதை இப்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ள ஜெயலலிதா பின்பற்றலாமே என்றார்.

அப்போது குறுக்கிட்ட ஜெயலலிதா, “பெண் அதிகாரியை வர்ணித்த அமைச்சரின் அட்வைஸ் எனக்குத் தேவையில்லை’ என்றார்.

அமைச்சர் அன்பழகன்:

ரேஷன் அரிசி கருப்பு நிறத்திலும் சில சிவப்பு நிறத்திலும் உள்ளதாகக் கூறப்பட்டதற்கு அமைச்சர், சில மாநிலங்களிலிருந்து வரும் அரிசி அவரைப் போல கருப்பாக இருக்கிறது என்றும், சில மாநிலத்திலிருந்து வரும் அரிசி பெண் அதிகாரியைப்போல சிவப்பாக இருக்கிறது என்றும் உவமையாகச் சொன்னாரே அன்றி அது வர்ணனை அல்ல. வர்ணிக்கும் வயதில் அவர் இல்லை.

Find the Faces

கண்கள் இங்கே
முகம் எங்கே?

புகழ்பெற்றவர்களின் பெயர் சொல்லுங்க பார்க்கலாம்

 1. இந்த பதிவிற்கு விக்னேஷுக்குத்தான் (தண்டோரா – இது கண்டதை சொல்லும் – » கண்ணோடு காண்பது யார்??) நன்றியை நவில வேண்டும்

 2. ஆரம்பத்திலேயே சோதனையா?

 3. இவருக்கெல்லாம் எந்த துப்புமே வேண்டாமே…

 4. அக்மார்க் குமுதம் போட்டிகள் இப்படித்தான் இருக்கும்

 5. பழைய நினைப்புதான் பேராண்டி

 6. கண்களை எங்கே பார்க்கிறாங்க

 7. திருப்பதியில் சிலை இருக்கிறதாமே?

 8. நேதாஜியிடம் தோற்றவர்

 9. ஒன்றாவது கஷ்டமாக இருக்க வேண்டாமா?

 10. ஒன்றாவது எளிதாக இருக்க வேண்டாமா?

 11. தாஜ் மஹால் தேவையில்லை


| |

Classic Arts – PAK’s Appreciation Series (1)

மேற்கத்திய ஓவியங்கள்- ஒரு எளிய அறிமுகம்
பி. ஏ. கிருஷ்ணன்
I

ஓவியம் என்றால் என்ன?
மூன்று பரிமாணங்களில் பார்த்ததை (சமயங்களில் பரிமாணங்களைக் கடந்து நினைத்ததை அல்லது உணர்ந்ததை) இரு பரிமாணங்களில் மரம், துணி, சுவர், காகிதம் போன்ற பரப்புகளில் வரைவது. வரைந்தது நம்மை எங்கே இட்டுச் செல்கிறது என்பதே ஒரு ஓவியம் காலத்தை வென்றதா இல்லையா என்பதை வரையறுக்கிறது. காலத்தின் கைகளிலிருந்து மீட்கப் பட்ட கணக்கில்லாத ஓவியங்கள் உலகெங்கும் அருங்காட்சியகங்களில் இருக்கின்றன. இவற்றை கடந்து நாள்தோறும் பலர் செல்கிறார்கள். னால் அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்ட எல்லா ஓவியங்களும் காலத்தை வென்றதாக அடையாளப் படுத்தப் படவில்லை. அழியாது இருப்பதே வெற்றியாகி விட முடியாது. மிகச் சில ஓவியங்களே தலைமுறை தலைமுறைகளாக திரும்பத் திரும்பக் கவனிக்கப் படுகின்றன. திரும்பத் திரும்ப பொருள் கோள் (interpretation) செய்யப் படுகின்றன. இந்த மிகச் சிலவற்றில் ஒரு சிலவற்றை பற்றியும் இவற்றை வரைந்த ஓவியர்களைப் பற்றியும் இந்தத் தொடர் பேச இருக்கிறது.

பேசு முன் சிலவற்றைத் தெளிவு படுத்தி விடுகிறேன். நான் ஒரு ஓவியன் அல்ல. ஒரு திறனாய்வாளனும் அல்ல. நான் பார்த்து பிரமித்தவன். மனிதனால் இத்தனை உச்சங்களை எட்ட முடியுமா என்று மலைத்தவன். உச்சங்களை எட்டிய கலைஞர்களைப் பற்றியும் அவர்கள் படைப்புகளைப் பற்றியும் ஓரளவு படித்தவன். படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் முயற்சியே இந்தத் தொடர். தமிழ் மட்டுமே தெரிந்தவர்கள் மேற்கத்திய ஓவியங்களைப் பற்றி ஓரளவு தெரிந்து கொள்ள இந்தத் தொடர் சிறிது உதவி செய்யும் என்று நம்புகிறேன்.

II

சென்ற வருடம் பாஸ்டன் நுண்கலை அருங்காட்சியகத்திற்கு நண்பர் பாலாஜியோடு சென்றிருந்தேன். பல ஓவியங்களைப் பார்த்து பார்த்து கண்கள் பஞ்சடைவோம் என்று பயமுறுத்திக் கொண்டிருந்தன. பசி வேறு. உணவகத்திற்குச் செல்லலாம் என்று நினைத்துக்கொண்டே நடக்கும் போது மிகத் தொலைவில் ஒளி பாய்ச்சப் பட்ட ஓவியம் ஒன்று தெரிந்தது. என்னை அறியாமலே சொன்னேன், ‘பாலாஜி, அது ஜான் ஸிங்கில்டன் காப்லியின் ஓவியம். வாட்ஸனும் சுறாமீனும் என்பது ஓவியத்தின் தலைப்பு என்று நினைக்கிறேன்’. பாலாஜி அருகே சென்று பார்த்தார். நான் சொன்னது சரிதான் என்று உறுதி செய்தார்.

எனக்கே ஒன்றும் புரியவில்லை.

காப்லியின் இந்த ஓவியத்தின் பிரதியைப் நான் பார்த்து ஒரு நாற்பது வருடங்களாவது இருக்கும். என்னுடைய தந்தையின் நண்பர் கோபால பிள்ளை எனக்கு மேற்கத்திய ஓவியங்களை அறிமுகம் செய்தவர். அவர் எனக்குப் பார்க்கக் கொடுத்த புத்தங்களில் ஒன்று “Great Painters and Great Paintings”. Reader’s Digest வெளியீடு. அந்தப் புத்தகத்தில் பேசப் பட்ட பல ஓவியர்களையும் அவர்கள் வரைந்த ஓவியங்களின் பெயர்களையும் ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்துக் கொண்டேன். எழுதப் பட்ட பெயர்களில் காப்லியின் இந்த ஓவியமும் ஒன்று. எழுதும் போது படித்தது நினைவில் ஒட்டிக் கொண்டு நாற்பது வருடங்கள் கழித்து உதிர்ந்திருக்கிறது. இத்தகைய உதிர்வுகள் காலம் காலமாக நடந்து வந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய உதிர்வுகளுக்காகவே ஓவியர்கள் தங்கள் வாழ்நாட்கள் முழுவதும் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

காப்லியின் இந்த ஓவியத்தின் ஈர்ப்புத் தன்மையின் காரணம் என்ன? சுறாமீனின் திறந்த, கூரிய பற்கள் நிறைந்த வாயும் அதனிடமிருந்து தப்ப வழியின்றி மல்லாந்து மிதக்கும் சிறுவனும் என்னுள்ளே இத்தனை ண்டுகள் இருந்திருக்கிறார்கள். யார் இந்தச் சிறுவன்? தில்லிக்கு வந்ததும் இந்த ஓவியத்தைப் பற்றிப் படித்துப் பார்த்தேன். 1749 ம் ண்டு க்யூபாவிற்கு அருகே நடந்த சம்பவம் இது. கரையருகே நீச்சலடித்துக் கொண்டிருந்த வாட்ஸன் என்ற சிறுவனை சுறாமீன் ஒன்று தாக்கியது. அந்தத் தருணத்தை ஓவியமாக காப்லி வடித்திருக்கிறார்.

சுறா வாட்ஸனை மூன்று முறை தாக்கியது. இந்தப் ஓவியம் மூன்றாவது தாக்குதலுக்கு முந்திய தருணத்தை சித்தரிக்கிறது. சுறாமீனின் வாயில் மெல்லிய சிவப்பு; சிறுவனின் முகத்தில் உறைந்த பயம்; அவனைக் கையைப் பிடித்து தூக்குபவர்களின் முகங்களில் இறுக்கம், கவலை அதிர்ச்சி; சுறாவைத் தாக்குபவரின் வேகம்; இவை எல்லாவற்றையும் ஓவியத்தில் கொணர காப்லியால் முடிந்திருக்கிறது. சிறுவன் காப்பாற்றப் பட்டானா இல்லையா என்பதை அறிந்து கொள்ள இந்த ஓவியம் நம்மைத் துடிக்க வைக்கிறது.

சிறுவன் தனது வலது காலைச் சுறாவிற்குக் கொடுக்க நேர்ந்தது. னால் பிழைத்துக் கொண்டான். பின்னால் பெரும் வணிகனாக உயர்ந்து லண்டன் நகரத்து மேயராக ன வாட்ஸன் தன் கதையை காப்லியிடம் சொல்லி அவர் வரைந்த ஓவியம் இது. இந்த ஓவியத்தின் மீது காப்லிக்கு மிகப் பெருமை. அதனால் அதை இன்னொரு முறை வரைந்து தன்னுடைய ஸ்டூடியோவிலேயே வைத்துக் கொண்டிருந்தார். இந்த ஓவியம்தான் பாஸ்டன் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.

III

மனிதன் எழுதுவதற்கு வெகுகாலம் முன்பே வரைய ரம்பித்து விட்டான். மேற்கத்திய ஓவியங்களின் கதை ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளில் உள்ள குகை ஓவியங்களிலிருந்து ரம்பிக்கிறது. இந்த ஓவியங்கள் பதினைந்தாயிரம் ண்டுகளுக்கு முந்தியவை. மஞ்சட் காவி (ochre) கரி போன்றவைகளைக் கொண்டு வரைந்தவை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஸ்பெயின் நாட்டு குகை ஒன்றில் இத்தகைய ஓவியங்கள் முதன் முதலாகக் கண்டு பிடிக்கப் பட்ட போது விமரிசகர்கள் இவற்றை போலிகள் என்று நிராகரித்து விட்டார்கள். பழைய கற்கால மனிதன் இத்தகைய ஓவியங்களை வரைந்திருக்க முடியும் என்று அவர்கள் நம்பத் தயராக இல்லை. இன்று உலகெங்கும் பழைய கற்கால மனிதனின் கலைத் திறனுக்குச் சான்றாக பல குகை ஓவியங்கள் கண்டு பிடிக்கப் பட்டு விட்டன.

இந்த ஓவியங்களில் எனக்கு மிகப் பிடித்தது லாஸ்கோ (Lascaux) குகை ஓவியங்கள். இந்த பிரெஞ்ச் ஓவியங்கள் 1940ம் ண்டு நான்கு சிறுவர்களால் கண்டு பிடிக்கப் பட்டன. லாஸ்கோ காட்டில் ஒரு பைன் மரம் இருந்த இடத்தின் கீழே ஒரு குறுகிய வழி இருப்பதை இவர்கள் பார்த்தார்கள். அந்த வழியாக இறங்கி ஒரு குகையை வந்தடைந்தார்கள். இந்தக் குகையின் சுவர்களில்தான் பல மிருங்களின் உருவங்கள் -எருதுகள், பசுக்கள் குதிரைகள், மான்கள் போன்றவைகளின் – தீட்டப் பட்டிருந்தன. மனிதனும் மிகச் சில கோடுகளால் தானும் தீட்டப் பட்டு விட்டேன் என்று அறிவித்துக் கொண்டிருந்தான். இந்த குகையை சென்றடைவது மிகக் கடினமாக இருந்ததால் இந்த ஓவியங்கள் பதினைந்தாயிரம் வருடங்கள் தாக்குப் பிடித்து விட்டன. னால் 1940ல் இருந்து 1955 வரை இந்த ஓவியங்களைப் பார்க்க ஏகப் பட்ட கூட்டம். மனிதன் கொண்டு வந்த கரியமிலக் காற்று பதினைந்தே வருடங்களில் ஓவியங்களை ஒரு கை பார்த்து விட்டது. இனி மனிதர்கள் குகைக்குள் வந்தால் மிஞ்சுவது மனிதர்கள் மட்டுமே என்பதை பிரஞ்சு அரசு உணர்ந்து இந்தக் குகைக்கு பார்வையாளர்கள் வருவதற்கு தடை விதித்தது. ஓவியங்களின் பிரதிகள் லாஸ்கோவிலேயே இன்னொரு குகை நிர்மாணிக்கப் பட்டு அதன் சுவர்களில் வரையப் பட்டன. இந்தப் பிரதிகளைத் தான் இன்று நாம் பார்க்க முடியும்.

இந்த ஓவியங்களில் புகழ் பெற்றது ‘காயமுண்ட எருதால் தாக்கப் படும் மனிதன்’ என்ற ஓவியம். இருண்ட குகையில் கல் விளக்கில் மிருகக் கொழுப்பை (அல்லது எலும்பு மஜ்ஜையை)எரித்து வெளிச்சம் வர வழைத்து வரையப் பட்ட ஓவியம் இது. சிலிர்த்துக் கொண்டு, வாலைச் சுழற்றிக் கொண்டு மனிதனைக் குறி வைத்துக் கொண்டு பாயத் தயாராக நிற்கிறது எருது. ஒரு மிருகத்தின் இயக்கத்தை இவ்வளவு துல்லியமாக சித்தரித்த இவன் நிச்சயமாக ஒரு மகத்தான கலைஞன். மனிதனை அவன் இத்தனை துல்லியமாக வரைவதற்குத் தகுதியானவனாக நினைக்கவில்லை. னாலும் அவனைக் குறியிடும் கோடுகள் அவனுடைய பேரச்சத்தையும், அவன் கால்கள் இடறுவதையும் வியக்கத் தக்க வகையில் நம் முன்னால் கொண்டு வந்து விடுகின்றன. மனிதனுக்குக் கீழே ஒரு பறவை. ஒரு கோலின் மீது நிற்கிறது.

இவ்வளவு உழைத்து யாருமே வர முடியாத ஓர் இடத்தில் இருபது அடிக்கும் மேற்பட்ட துவாரத்தின் அடியில் இந்த ஓவியங்களைத் தீட்டியதின் காரணம் என்ன? சில விமரிசகர்கள் இப்படி இயற்கையாக மிருகங்களின் உருவங்களைத் தீட்டினால் மனிதன் அவைகளின் பலத்தையும் திடத்தையும் தான் அடைய முடியும் என்று நினைத்திருக்கலாம் என்று கருதுகிறார்கள். சிலர் இவை பூசாரிகளால் மந்திர வேலைகளுக்காக வரையப் பட்டிருக்கலாம் என நினைக்கிறார்கள். மற்றும் சிலர் நரம்புசார் உளவியல் முறையில் இந்த ஓவியங்களை ராய்ந்து கிறக்கம் தரும் விதைகளையோ அல்லது இலைகளையோ உண்டதனால் மனதில் தோன்றும் வடிவங்களை ஓவியங்களாக வடிக்கும் முயற்சியாக இவை இருக்கலாம் எனக் கூறுகிறார்கள். நமக்கு இந்தகைய ராய்ச்சிகள் தேவையில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. மனிதனுக்கும் கலைக்கும் உள்ள உறவு பதினைந்தாயிரம் ண்டுகளுக்கு மேற்பட்டது என்று நினைப்பதே நமக்கு நிறைவைத் தந்து விடுகிறது. இந்த நிறைவு காலங்களையும் நாடுகளையும் மொழிகளையும் கடந்தது.

IV

இவ்வாறு இருண்ட குகைகளில் துவங்கிய ஓவியக்கலையின் வரலாற்றின் அடுத்த குறிப்பிடத் தக்க காலம் எகிப்தில் தொடங்குகிறது. அன்றைய எகிப்தியர் வாழ்க்கை மரணத்திற்கு அப்புறமும் வாழப்படுகிறது என நம்பினார்கள். அது வாழப் படும் இடமும் உலகமும் வேறு. அவ்வளவுதான். அவர்கள் இறந்தவர்கள் சிறப்போடு வாழ வேண்டும் என்று நிர்மாணித்த பல கலைச் சின்னங்கள் இன்றும் நம்மை வியக்க வைக்கின்றன. அவர்கள் மிகவும் விரும்பியவை கட்டிடக் கலையும் சிற்பக் கலையும்தான். ஓவியங்கள் அவர்களுக்கு இரண்டாம் பட்சம். னால் ஓவியங்களை வரைவதற்கு அதிகச் செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எனவே அவர்கள் கல்லறைச் சுவர்களை அழகு செய்வதற்கு ஓவியங்களைத் தேர்ந்தெடுத்தார்கள். பணக்கார எகிப்தியர்கள் தங்கள் வீட்டுச் சுவர்களிலும் ஓவியங்களை வரையச் செய்தனர். னால் அவற்றில் தப்பியவை மிகச் சிலவே.

எகிப்திய ஓவியங்களில் பெரும்பாலானவை Fresco Secco என்ற முறையில் வரையப் பட்டிருக்கின்றன. இந்த முறையில் ஓவியம் தண்ணீரில் கலந்த வண்ணக் கலவை கொண்டு சுண்ணாம்பு பூசி நன்றாக உலர்ந்த சுவரில் தீட்டப் படுகிறது.

எகிப்தியர்கள் மனிதர்களை வரைந்தார்கள். அவர்கள் அணிந்திருந்த அணிகலன்களையும் டைகளையும் மிகச் சிறப்பாக வரைந்தார்கள். எகிப்திய ஓவியக் கண்கள் நம்மை எப்போதும் நேராகப் பார்க்கின்றன-முகங்கள் பக்கவாட்டில் வரையப் பட்டிருந்த போதிலும். இந்த ஓவியங்கள் காட்சியின் ‘உயிர்’ என்று எதை நினைக்கின்றனவோ அதை வலியுறுத்துகின்றன. உதாரணமாக ‘அழுகின்ற பெண்கள்’ என்ற ஓவியத்தில் அதன் உயிர் பெண்களின் கண்ணீர். எனவே ஓவியத்தில் இருக்கும் எல்லாப் பெண்கள் கண்களிலிருந்தும் மூன்று அல்லது நான்கு தாரைகளில் கண்ணீர் வெளிவந்து அவர்கள் கன்னங்களில் மூன்று அல்லது ஐந்து துளிகளாக இறங்குகிறது.

எகிப்தியர்கள் பறவைகளையும் மிருகங்களையும் வரைந்திருக்கும் விதம் அசதாரணமானது. நெபாமன் கல்லறையில் வரையப் பட்டிருக்கும் பறவை வேட்டைக் காட்சியில் வேட்டையாடும் மனிதனும் அவனது மனைவியும் மகளும் விரைத்து நிற்பது போல நமக்குத் தோன்றுகிறது. னால் அதே ஓவியத்தில் பாய்ந்து பறவையைப் பிடிக்க முயலும் பூனை உயிருள்ளது. பறவைகளும் வண்ணத்துப் பூச்சியும் பறப்பது என்றால் என்ன என்பதை மூவாயிரம்ண்டுகளுக்குப் பின்னும் நமக்கு விளக்குபவை.

பி. ஏ. கிருஷ்ணன்

The paintings are available in the following sites:
1. Lascoux
2. Watson and the shark
3. Fowling Scene


| |