Daily Archives: ஜூலை 5, 2006

Kalaaba Kaathalan

கலாபக் காதலனை பார்த்தேன்… ரசித்தேன். தோன்றிய சில:

 • சாஃப்ட்வேர் எஞ்சினீயர்களைக் கிண்டலடிக்கிறார்கள்: கண்மணி மிக அழகாக specifications கொடுக்கிறாள். அகிலன் மாதிரி ஆறடி உயரத்தில் சொவ்வறை வல்லுநராக இருக்க வேண்டும். மாமியார் வீட்டுடன் இருக்கக் கூடாது. நகரத்தில் வசிக்கணும். எக்ஸெட்ரா… அகிலன் ஒரு கணினி நிபுணன். எப்படி புரிந்து கொள்வான்? எப்படி செயல்படுவான்? படு நக்கல் + யதார்த்தம்.
 • கண்மணி சொல்வாள் ‘என்னைப் புரிந்து கொள்ள முடியாது: 100/100 உண்மை. அவளைப் புரிந்து கொண்டதாக நான் எண்ணியதால் – மாமாவுடன் சென்றவுடன், ஒரு தலைக் காதலனைக் கொலை செய்து விடுவாள் என்று எண்ணிய எனக்கு அதிர்ச்சி. அவளைக் கோழையாக சித்தரிக்காத இயக்குநர் இகோர், கடைசி காட்சியில் மட்டும் பல்டி அடிக்கிறார். செத்திருக்க வேண்டியது – வன் புணர்ந்த மாமாவோ, கூட்டிக் கொடுத்த அகிலனோ.
 • சென்னையின் கணினிப் பயிற்சியகங்கள்: மல்டிமீடியா கற்றுக் கொள்பவளுக்கு ‘/’க்கும் ‘\’க்கும் வித்தியாசம் தெரியவில்லை. வலையகம் செல்வதற்கு வழி கேட்கிறாள். எப்பா சாமீ… என்.ஐ.ஐ.டி.க்களும் எஸ்.எஸ்.ஐ.க்களும் ஒழுங்கா கற்றுக் கொடுக்க வேண்டும்.
 • கணி வேலையின் மன அழுத்தம்: முதுகு வலிப்பது கணினி வேலையின் இலவச இணைப்பு. அதற்கு நரம்பு மருத்துவரை அணுகாமல், நங்கையினை நாடி பிடிக்க சொன்னால் வலி மாயமாகவிட்டாலும், அடிக்கடி கழுத்து திருகிக் கொள்ளத் தோன்றும்.
 • கணி வேலையின் சித்தாந்தம்: மேலாளர் சொல்வதை கீழே பணிபுரிபவனிடம் சொல்லக் கூடாது. சகாவின் புலம்பல்களை மானகையாளர்களின் சந்திப்புகளில் போட்டுக் கொடுத்துவிடக் கூடாது. அகிலனும் அன்பரசியிடமும், குடும்பத்தினரிடமும் கண்மணியைக் குறித்துப் பகிர்ந்து கொள்ளாமல், open communication பின்பற்றாத அலுவல் சூழலை வீட்டிற்கும் எடுத்து செல்கிறான்.
 • லாவண்யா நர்மதா: ஊருக்கு வந்த புதிதில் Ramada Innஐப் பார்த்து ‘என்னங்க… நம்ம ஊரு ஆளுங்க கூட ஹோட்டல் நடத்துறாங்க போல? அங்கேயேத் தங்கிக்கலாமே’ என்று விசாரிப்பதை ஒட்டுக் கேட்டது போன்ற லாவண்யா ஐஸ்க்ரீம் காட்சி. வெள்ளந்தி வெள்ளந்திதான்.
 • சம்பந்தி பிணக்கு: நெஞ்சில் நின்ற, ‘அட… என்னம்மா பாலகுமாரன் அனுபவிச்சிருக்காரு’ என்று மனம் வெளிப்பட சிரித்து, உணர்ந்து, ஒன்றிய டிவி ரிமோட் போர் காட்சியமைப்பு.
 • கவிஞர்கள் கிண்டல்: கவிதை எழுதுவது எப்படி என்று கையேடு தயாரிப்பது போல் சுளுவாக விளையாடுகிறார்கள். உதவி இயக்குநர்கள் ஆளுக்கொரு வரியைக் கொடுத்து, கோர்த்து, பின் நவீனத்துவமும் வைரமுத்துயிஸமும் பிணைந்து எவ்வாறு பாடலும் புனைவும் எழுதுவது எளிது என்பதை அல்வா ஊட்டுகிறார்.
 • காதலில் நல்ல காதல் எது? கள்ள காதல் எது? எல்லா காதலும் காதல்தான்: கணவனில் நல்ல கணவன் எது? சந்தேக புருஷன் எது? எல்லா கணவனும் கண்ட்ரோல் ஃப்ரீக்தான்!

  கலாபக் காதலன் விமர்சனங்கள்


  | |