Daily Archives: ஜூலை 3, 2006

Clash in DMDK meet in Palani

Clash in DMDK meet in Palani

தேமுதிக கூட்டத்தில் அடிதடி; ஓட்டம் பிடித்த பெண்கள்
பழனியில் நடந்த தேமுதிக உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பெரும் அடிதடி, ரகளை நடந்தது. இதனால் கூட்டத்துக்கு வந்திருந்த பெண்கள் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

ஆர்.எப். சாலையில் உளள கல்யாண மண்டபத்தில் தேமுதிக உள்ளாட்சித் தேர்தல் ஆலோனை கூட்டம் நடந்தது. இதில் ஏராளமான பேர் கலந்து கொண்டனர். பெண்களும் பெரும் திரளாக வந்திருந்தனர்.

இக்கூட்டத்தில் மாவட்டத் தலைவர் ரவிக்குமார் பேசினார். அப்போது பழனி தொகுதியில் கட்சி சார்பில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்ற பி.கே.சுந்தரத்தின் ஆதரவாளர்கள் எழுந்து, கூட்டத்திற்கான நோட்டீஸில் சுந்தரத்தின் பெயர் போடாதது ஏன் என்று கேட்டு ரவிக்குமாரிடம் வாக்குவாதம் செய்தனர்.

அதற்கு ரவிக்குமார் பதில் சொன்னார். ஆனால் அதில் திருப்தி அடையாத சுந்தரத்தின் ஆதரவாளர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சுந்தரம் தனது ஆதரவாளர்களை அமைதியாக இருக்குமாறு கோரினார். ஆனால் அதற்குப் பலன் இல்லை.

இந்த வாக்குவாதம் பின்னர் அடிதடியாக மாறியது. இரு தரப்பினரும் மாறி மாறி கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். இருக்கைகள், நாற்காலிகள் பறந்தன.

ஆயக்குடி உள்ளிட்ட சில பகுதிகளைச் சேர்ந்தவர்களை மாவட்ட தலைமை புறக்கணிக்கிறது. இதனால்தான் இந்தப் பிரச்சினை ஏற்பட்டது என்று சுந்தரத்தின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

வழக்கமாக பிற கட்சிகளில்தான் இதுபோன்ற கலாட்டாக்கள் நடக்கும். இப்போது தேமுதிகவிலும் அது எட்டிப் பார்த்துள்ளது.

DPA leads in Pondycherry

DPA leads in Puthucherry local body elections:

புதுவை உள்ளாட்சி தேர்தல்:

 • காங்-திமுக முன்னணி
 • காரைக்காலில் தேமுதிக முன்னணி
 • அதிமுக தோல்வி

  புதுவை உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு வெற்றி கிடைத்துள்ளது. அதிமுக இந்தத் தேர்தலில் படு தோல்வி அடைந்துள்ளது.

  பாண்டிச்சேரி மாநிலத்தில் 38 ஆண்டுகளுக்குப் பின்னர் உள்ளாட்சித் தேர்தல் நடந்துள்ளது. மொத்தம் 3 கட்டமாக நடந்த இத்தேர்தலில் 85 சதவீத வாக்குகள் பதிவாகின. பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.

  புதுவையில் 2 மையங்களிலும், காரைக்காலில் 6 மையங்களிலும், ஏனாம், மாஹே ஆகிய இடங்களில் தலா 1 மையத்திலும் வாக்கு எண்ணும் பணி நடந்து வருகிறது. 5 நகராட்சி தலைவர் பதவிக்கான முன்னணி நிலவரம் வெளியாகியுள்ளது.

  புதுவை நகராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் டாக்டர் ஸ்ரீதேவி 6,000 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னணியில் உள்ளார். உழவர்கரை நகராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜெயபாலும், ஏனாமில் காங்கிரஸ் வேட்பாளர் சந்திராவும், மாஹ÷வில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ் பர்வத்தும் முன்னணியில் உள்ளனர்.

  காரைக்கால் நகராட்சித் தலைவர் தேர்தலில் விஜயகாந்த்தின் தேமுதிக வேட்பாளர் பிரபாவதி கூடுதல் வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார். புதுவை உள்ளாட்சித் தேர்தலில் முதல் முறையாகப் போட்டியிடும் தேமுதிக, முக்கியமான காரைக்கால் நகராட்சித் தலைவர் தேர்தலில் முன்னணி பெற்றிப்பது குறிப்பிடத்தக்கது.

  புதுவை நகராட்சி வார்டு தேர்தலுக்கு நடந்த தேர்தலில் திமுக நான்கு வார்டுகளையும், அதிமுக மற்றும் புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் தலா 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

  உழவர்கரை நகராட்சி உறுப்பினர் தேர்தலில் திமுக இரண்டிலும், காங்கிரஸ் மற்றும் சுயேச்சை ஆகியோர் தலா ஒரு இடத்திலும் வென்றுள்ளனர். இந்த நகராட்சியின் நான்கு வார்டுகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியின்றி ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 • Meera Jasmine – Tirupathi – Non-Hindus

  மீரா ஜாஸ்மினுக்கு ரூ. 10,000 அபராதம் :: thats tamil.com: “ரகசியமாக கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டு விட்டுச் சென்ற ‘குற்றத்தை’ சரி செய்ய நடத்தப்படும் தோஷ கழிப்பு பூஜைக்காக ரூ. 10,000 தர வேண்டும் என்று நடிகை மீரா ஜாஸ்மினுக்கு ராஜராஜேஸ்வர் கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

  கண்ணூர் மாவட்டம் தளிப்பரம்பு என்ற ஊரில் ராஜராஜேஸ்வர் என்ற பிரபமலான கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு பெண்கள் இரவு 8 மணிக்கு மேல்தான் நுழைய முடியும். மேலும், இந்துக்கள் மட்டுமே கோவிலில் வழிபடலாம்.

  கடந்த வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு மேல் இந்தக் கோவிலுக்கு நடிகை மீரா ஜாஸ்மின் வந்தார். உடன் இருந்த தயாரிப்பாளர் மீரா இந்து மதத்திற்கு மாறி விட்டார். மீரா என்ற பெயரில்தான் அவர் அர்ச்சனையும் செய்தார் என்று கூறி விட்டு மீராவுடன் காரில் ஏறிப் பறந்து விட்டார்.

  இது இப்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கிறிஸ்தவப் பெண்ணான மீரா எப்படி ராஜராஜேஸ்வரர் கோவிலுக்குள் நுழைந்து சாமி கும்பிடலாம் என்று கோவில் நிர்வாகமும், இந்து மத அமைப்புகளும் குற்றம் சாட்டியுள்ளன.

  இந்த சர்ச்சை குறித்து மீரா ஜாஸ்மின் கூறுகையில்,

  சாமி கும்பிட்டதில் எந்தத் தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

  கடவுள்களுக்கு முன்பு எந்த மதமும் இல்லை. அனைத்தும் ஒரு மதம்தான். என்னைப் பொருத்தவரை இந்தக் கடவுள், அந்தக் கடவுள் என வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. கடவுள் ஒருவரே என்பது எனது நம்பிக்கை.

  அந்தக் கோவிலுக்கு ரகசியமாக நான் செல்லவில்லை. இரவு 8 மணிக்கு மேல்தான் அங்கு போக முடியும். நானும் கோவில் தலைமை நிர்வாக அதிகாரியிடம் அனுமதி பெற்று விட்டுத்தான் சென்றேன். தங்கக் குடம் காணிக்கையாகக் கொடுத்தேன். வழிபட்டு விட்டுத் திரும்பினேன்.

  நான் கோவிலுக்குப் போய் சாமி கும்பிட்டது இந்து மத விசுவாசிகளுக்க தவறாகத் தோன்றியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் மதம் மாறவில்லை. கிறிஸ்தவராகத்தான் இருக்கிறேன்

  என்றார் மீரா ஜாஸ்மின்.

  இந் நிலையில் மீரா ஜாஸ்மின் வந்து சென்றதால் கோவிலில் தோஷ நிவர்த்தி செய்ய சிறப்புப் பூஜை நடத்த வேண்டும். அதற்கான ரூ. 10,000 பணத்தை கோவிலுக்கு வழங்க வேண்டும், கோவிலுக்கு வந்து சென்றதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மீரா ஜாஸ்மினை கோவில் நிர்வாகம் கோரியது.

  இதை ஏற்றுக் கொண்ட மீரா ஜாஸ்மின் தனது பிரதிநிதி மூலம் கோவில் கோரிய பணத்தை கொடுத்து அனுப்பிவிட்டார்.இன்று இரவு அல்லது நாளை தோஷ நிவர்த்தி பூஜை செய்யப்படவுள்ளது. இதில் கேரளாவில் உள்ள பல்வேறு கோவில் தந்திரிகள கலந்து கொள்ளவுள்ளனர்.


  Rediff On The NeT: VHP criticises Sonia‘s refusal to sign visitors’ book at Tirupati: “All non-Hindus visiting the Tirupati temple have to sign the visitors’ register. This condition was complied with by former Union minister C K Jaffer Sharief when he had darshan of Lord Balaji recently”


  இந்து மதத்தை யார் முதிர்ச்சியுடன் பின்பற்றுகின்றனர்?

 • மீரா ஜாஸ்மினின் தெளிவான பதிலும் அபராதத்தைப் பெருந்தன்மையுடன் கட்டிய விதமும் மிகச் சிறப்பாக உணர்ந்து செயல்படுவதை உணர்த்துகிறது.
 • திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் செய்கைகள் (வருகைப் பதிவேட்டில் நம்பிக்கை வாக்குமூலம் தரக் கோருவது) பிரபலமானவர்களுக்கு மட்டுமே சர்ச்சைக்குரியது என்றாலும், வரவேற்கத்தக்கது.
 • தளிப்பரம்பு கோவில், பக்கத்திலேயே இருக்கும் ஐயப்பனை பார்த்து, தங்களையும் மாற்ரிக் கொண்டு, சர்வ மத வழிபாட்டுக்கு வேண்டிய வகை செய்யவேண்டும்.
 • சபரிமலை நிர்வாகம், தளிப்பரம்பை பார்த்து தன் பழமையான வழிமுறைகளை காலத்துக்கேற்றவாறு தளர்த்தி, பெண்களும் தரிசிக்குமாறு விதிமுறைகளைத் தளர்த்த வேண்டும்.

  | |