Daily Archives: ஜூன் 27, 2006

Kalki’s Take on Eezham Conflict

Thalayangam

ஈழத் துயரம்!

அனுராதபுரம் கண்ணிவெடி கொடூரத்துக்குத் தாங்கள் பொறுப்பல்ல என்கிறார்கள் விடுதலைப் புலிகள். சின்ன குழந்தைகூட இதை நம்பாது! புலிகள் தலைவர் பிரபாகரன், தமது வன்முறைப் போக்கை உறுத்தலின்றி ஒப்புக் கொண்டவர். பத்திரிகையாளர் கூட்டம் கூட்டியே பிரகடனப்படுத்தியவர்.

இந்நிலையில், இலங்கை அரசுக்கு, புலிகள் மீது ராணுவத் தாக்குதல் நடத்துவதைத் தவிர வேறு வழி என்ன இருக்க முடியும்? ஒரு பாவமும் அறியாத பொது மக்கள் பலியாகிறபோது அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. மேலும் வேதனையான விஷயம், இலங்கை ராணுவமும் ஈழத் தமிழர்களுக்குக் கொடுமைகள் இழைப்பதாக வெளிவரும் செய்திகள்! எனினும், இப்பழிவாங்கும் உணர்வு, புலிகளின் முதல் தூண்டுதலாலும் மூடப் பிடிவாதத்தினாலும் விளைவதுதான் என்பதை மறுக்க முடியாது.

எத்தனையோ முறை பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்பட்ட போதிலும், புலிகள் தங்கள் வறட்டுப் பிடிவாத நிலையிலிருந்து இறங்கத் தயாராயில்லை. பேச்சு வார்த்தைகள் முறிந்து போயின. அல்லது தோல்வியுற்றன.

பேச்சுவார்த்தை காலகட்டத்தை ஒரு சாதகமான இடைவெளியாகப் பயன்படுத்திக் கொண்டு புலிகள் தாங்கள் இழந்த இடத்தை மீட்டார்கள்; அல்லது புதிய தாக்குதல்களை நடத்த தங்களை மேலும் ஸ்திரப்படுத்திக் கொண்டார்கள்.

இலங்கையில் அமைதி திரும்ப பாடுபட்ட நார்வே அமைதிக் குழுவே வெறுத்துப் போய்விடும் அளவுக்கு, புலிகளின் இந்த நாடகம் தொடர்ந்து, சமீபத்திய அனுராதபுர கொடூர நிகழ்வில் ஓர் உச்சகட்டத்தைத் தொட்டிருக்கிறது.

ஒரு பக்கம் இலங்கைத் தமிழர்களின் துயர் பெருகிக் கொண்டிருக்கிறது. மற்றொரு பக்கம் தமிழக மீனவர்கள் பாதுகாப்பின்றித் தவிக்கிறார்கள். இன்னொரு புறத்தில், இலங்கை அகதிகள் வரவு இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் எதிர்காலத்தில் வேறு பல சிக்கல்கள் விளையும்.

ஐரோப்பிய யூனியன் நாடுகள், விடுதலைப் புலிகளைத் தடைசெய்யப்பட்ட இயக்கமாக அறிவித்ததைத் தொடர்ந்து, அவ்வியக்கத்துக்குப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. ஐரோப்பா வாழ் இலங்கைத் தமிழர்களிடமிருந்து கிட்டிய, அல்லது பலவந்தமாக வசூலிக்கப்பட்ட பொருளாதார உதவி (வரி?!) பெறப்படுவது கடினமாகியிருக்கிறது. இயலாமை, புலிகளின் கோபத்தைத் தூண்டி மேலும் வன்முறையில் ஈடுபடச் செய்யும். அதே நேரத்தில், பொருளாதார நெருக்கடியினால் அவர்கள் நிலை பலவீனப்படவும் செய்யும்.

இத்தருணத்தை, இலங்கை அரசும் ஈழத் தமிழர் நலனில் அக்கறை கொண்ட இந்தியா போன்ற தோழமை நாடுகளும் முறையாகப் பயன்படுத்திக் கொண்டு அமைதித் தீர்வுக்கு ஆக்கபூர்வமாக முயற்சி செய்வது நல்லது.

ஆனால், தமிழகத்து அரசியல் கட்சிகள் சில, முதல்வர் கருணாநிதி தலைமையில் ஒன்றுகூடி, தீர்மானம் நிறைவேற்றியிருப்பதுபோல் மத்திய அரசு இலங்கைப் பிரச்னையில் உட்புகுந்து செயலாற்ற முடியாது.

இலங்கை மக்களின் துயரைப் போக்குங்கள் என்று இலங்கை அரசுக்கு மற்றொரு தீர்மானம் மூலம் அறிவுறுத்துவதால் மட்டுமே பிரச்னை எவ்வாறு தீரும்? பிரச்னையின் முளையும் வேரும் விடுதலைப் புலிகள்தான் என்னும்போது, இந்திய அரசு செய்யக் கூடியது என்ன? ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்த, இந்தியாவில் தடைசெய்யப்பட்ட இயக்கத் தலைவர்களுடன் அமர்ந்து பேச்சுவார்த்தையா நடத்த முடியும்? அது இயலாத காரியம்.

ஆனால் தமிழகத்தில் ஈழத் தமிழர் நலனுக்காக குரல் கொடுத்துவரும் கட்சிகளும் அதன் தலைவர்கள் பலரும் புலிகள் இயக்கத்தின் அனுதாபிகள் என்று அறியப்பட்டவர்கள். இந்தத் தலைவர்கள் விடுதலைப் புலிகளுக்கு அறிவுறுத்தி, அவர்களை இலங்கை அரசுடன் முறையான பேச்சு வார்த்தைக்கு அழைப்பதுடன், தனி தமிழ் ஈழ பிடிவாதத்தைக் கைவிடும்படியும் வலியுறுத்த வேண்டும். கண்ணீரில் மிதக்கும் ஈழத் தமிழர்களின் துயர் தீர்க்க இவர்கள் தான் பாடுபட வேண்டும். மத்திய அரசும் இவர்களை எப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று யோசிக்க வேண்டும். பிரச்னையின் ஆணிவேரைக் கண்டுகொள்ளாமல் ஒதுக்கிவிட்டு, மேம்போக்காக தீர்மானங்கள் மட்டும் நிறைவேற்றுவதில் ஒரு பிரயோஜனமுமில்லை.

Ghana vs Brazil

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting ஜெயிக்குமா???

உலகக்கோப்பை கால்பந்து 2006 » இன்றைய போட்டியின் முன்னோட்டம் – பிரேசில் vs கானா: “பிரேசில் வெல்வது என்பது கானா அணிக்கு இயலாத காரியமாக எனக்கு படுகிறது. கானா இந்த போட்டியில் வெல்வதற்கு எதாவது அதிசயம் நடக்கவேண்டும். ஆகையால் இதுவரை சிறப்பாக விளையாடிய கானா அணிக்கு Bye Bye சொல்லும் நேரம் வந்துவிட்டது.”

பிபிசி-யின் கானா கையேடு

 • கானா – பிரேசில் :: பிபிசி முன்னோட்டம்

 • Guardian Unlimited :: கழனி நண்டு கானா

 • ஆப்பிரிக்க கண்டத்தின் பதினொன்று – New York Times

 • கோணல் பக்கங்கள்சாரு நிவேதிதா

  | |

 • Jaya attacks Nakkeran of spreading false stories

  Jaya attacks Nakkeran of spreading false stories

  உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதிக்கு சென்னை அருகே மகாபலிபுரத்தில் ரகசியமாக சிகிச்சை மேற்கொள்ள தான் உதவியதாகவும், அதற்கு உபகாரமாக அவர் ரூ. 50 கோடி பணம் கொடுத்ததாகவும், அதில் சில கோடி ரூபாய் கள்ள நோட்டு எனவும் அந்த கள்ள நோட்டுக்களை அதிமுக ஆட்சியில் வெள்ள நிவாரண நிதியுடன் கலந்து விட்டதாகவும் வெளியாகியுள்ள செய்தியை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறுத்துள்ளார்.

  இதுதொடரபாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

  25.6.2006 அன்று வெளியான நக்கீரன் இதழில் கள்ள நோட்டுக் கணக்கு என்ற தலைப்பில் மிகப் பொய்யான செய்தி வெளியாகியுள்ளது.


  Webulagam : CBI to file chargesheet against Jayalalithaa on gift case!

  தனது பிறந்தநாளிற்கு அன்பளிப்பாக ரூபாய் 2 கோடி பெற்றது தொடர்பான வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு எதிராக மத்திய புலனாய்வுக் கழகம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவுள்ளது!

  ஜெயலலிதா தற்பொழுது தமிழக சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவராக உள்ளதால் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு அனுமதியளிக்குமாறு சட்டப் பேரவைத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளதாக மத்திய புலனாய்வுக் கழகத்தின் காவல் கண்காணிப்பாளர் கூறியதாக யு.என்.ஐ. செய்தி தெரிவிக்கிறது.

  ஜெயலலிதாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கான அடிப்படைகளை விளக்கும் 180 பக்க புலனாய்வு அறிக்கையையும் பேரவைத் தலைவரின் பார்வைக்கு கடந்த 23 ஆம் தேதி ம.பு.க. அளித்துள்ளது.

  சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு அவர்கள் உறுப்பினர்களாக உள்ள அவைத் தலைவரிடம் இருந்து ஒப்புதல் பெறவேண்டும் என்று நரசிம்ம ராவ் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தமிழக சட்டப் பேரவைத் தலைவரிடம் அனுமதி கோரியுள்ளதாக தெரிவித்துள்ள ம.பு.க. காவல் கண்காணிப்பாளர், சென்னையில் உள்ள ம.பு.க. சிறப்பு நீதிமன்றத்தில் ஜூலை முதல் வாரத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

  தனது பிறந்தநாளிற்காக ஜெயலலிதா 89 வங்கி வரைவோலைகளை பெற்றுள்ளார் என்றும், அதுமட்டுமின்றி, ரூ.15 லட்சத்திற்கு ரொக்கமாக அன்பளிப்பு பெற்றுள்ளார் என்றும், ஆனால் அதற்கான கணக்கை வருமான வரித்துறைக்கு தெரிவிக்கவில்லை என்று கூறி வருமான வரித்துறையின் தலைமை இயக்குநர் அளித்த புகாரின் அடிப்படையில் ஜெயலலிதாவிற்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் 1996 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

  இந்த வழக்கு பிறகு மத்திய புலனாய்வுக் கழகத்திற்கு மாற்றப்பட்டது. அயல்நாடுகளில் இருந்தும் வங்கி வரைவோலைகளாக அன்பளிப்பு பெறப்பட்டுள்ளதால் அது தொடர்பாக லண்டனிலும், அமெரிக்காவிலும் ம.பு.க. அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். தற்பொழுது தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநராக உள்ள டி. முகர்ஜிதான் ம.பு.க. சார்பாக அயல்நாடு சென்று விசாரணை நடத்தியவர்.

  முதலமைச்சராக உள்ள ஒருவர் ரொக்கமாகவும், வங்கி வரைவோலையாகவும் அன்பளிப்புகளை பெறுவது ஊழல் தடுப்பு சட்டப் பிரிவு 11-ன் கீழ் குற்றம் என்று கூறி ம.பு.க. வழக்கு பதிவு செய்துள்ளது.

  Sambar Pipeline to be Launched

  குறிப்பு: இது முழுக்க முழுக்க கற்பனை என்றாலும், நிஜத்தில் நிகழ்ந்தால் நான் பொறுப்பல்ல!

  சென்னையிலிருந்து மதுரைக்கு குழாய் மூலம் சாம்பார், ரசத்தை அனுப்பும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி ஏன் ஆரம்பிக்கவில்லை என்று ஜெயலலிதா இன்று கேள்வி எழுப்பினார்.

  “நியாயவிலைக் கடை மூலம் ரேஷன் பொருட்களில் குறைந்த விலையில் அரிசி மட்டுமே தற்போது கிடைக்கிறது. சர்க்கரை, துவரம் பருப்பு போன்ற பிற மளிகை சாமான்களுக்கு மானியம் வழங்கினாலும் ஏழை மக்களின் வருவாய்க்கு ஏற்றவாறு விற்கப்படுவதில்லை.

  அதிமுக உள்ளாட்சித் தேர்தலில் வென்றால், லாரிகள் மற்றும் ரயில்கள் மூலம் சென்னையிலிருந்து மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு மொத்த சமையலையும் அனுப்ப வகை செய்யும்” என்றார் செல்வி ஜெயலலிதா.

  சத்துணவுக்கு ஆகும் போக்குவரத்து செலவு, வழியில் டியூசிஎஸ் பொருட்கள் கணிசமாக ஊழலாவதால் ஏற்படும் இழப்பு ஆகியவற்றைத் தவிர்க்க சென்னையிலிருந்து 11 மாவட்டங்கள் வழியாக மதுரைக்கு குழாய் அமைக்கும் திட்டம் அமல்படுத்தப்படும்.

  இந்தத் திட்டத்தைக் கேள்விப்பட்ட முதல்வர் கருணாநிதி, ‘குழாயைத் திருகினால் கோழி‘ என்னும் திட்டம் தன்வசம் இருப்பதாக உட்னடியாக அறிவித்தார்.

  அவர் கூறுகையில், இருபது ரூபாய்க்கு கொள்முதலாகும் ப்ராய்லர் கோழிகள், வாடிக்கையாளரிடம் ஐம்பது/அறுபது ரூபாயாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. தோல் நீக்கப்பட்ட கோழிகள், குழாய்கள் மூலம் தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

  இந்த அறிவிப்பைக் கேள்விப்பட்ட மனேகா காந்தி, கோழிகளுக்கு ஆதரவாக குழாயடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.

  இவை அனைத்தையும் கேட்டு மகிழ்ச்சியடைந்த மாண்புமிகு ஜனாதிபதி அப்துல் கலாம், ரோஹிணி விண்கலத்திலேயே கொஞ்சம் ‘வத்தக்குழம்பு’ ஈஷிக்கொண்டு உலகை வலம் வந்ததைப் மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டார். ‘தொலைநோக்குப் பார்வையுடன் நிலவுக்கும் சாம்பார் கால் வைக்க வேண்டும்’ என்று பள்ளிச் சிறுவர்களிடம் இனிமேல் வலியுறுத்தப் போவதாக சொன்னார்.

  நிஜ நிகழ்வுகள்: Webulagam : IOC’s southern oil pipeline dedicated to Nation! | Chennai-Madurai Petrol pipeline dedicated to nation


  | |