Daily Archives: ஜூன் 19, 2006

This Day That Age – E-Tamil

எல்லாமே ஆறின கஞ்சிதான்; மீள் பதிவு; பழைய கள்ளு – புதிய பதிவு

 • நடுநிலையாகிப் போன பாலாஜி:
  Libertarian இருந்து Centrists ஆகி இருக்கிறது. தேர்வை நாளைக்கு எடுத்தால், வேறு முடிவு வரலாம்.

  அன்று: தேர்வு எழுத வருகிறீர்களா?
  நீங்களும் சோதித்துக் கொள்ள: Your Political Philosophy

 • விருப்பப் பட்டியல் – வைரமுத்து

  அன்று: பெரியகுளம் – திண்டுக்கல் நெடுஞ்சாலை. ஒரு விழா முடிந்து நண்பர்களோடு காரில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். விழாவில் வழங்கப்பட்ட நினைவுப் பரிசைப் பிரித்துப் பார்க்கிறார் நண்பர் ஒருவர். அது ஒரு வெள்ளிக் குத்துவிளக்கு. நல்ல வெள்ளிதானா என்று தேய்த்துப் பார்க்கிறார் இன்னொரு நண்பர். “விளக்கை அதிகம் தேய்க்காதீர்கள்; பூதம் வந்துவிடப் போகிறது” என்று சிரிக்கிறேன் நான். அப்படி பூதம் வந்துவிட்டால் யார் யார் என்னென்ன கேட்பார்கள் என்ற சுவையான கற்பனை தொடங்க ஒவ்வொருவரும் ஒவ்வொன்று கேட்கிறார்கள். கடைசியில் கேள்வி எனக்கு வருகிறது. காரை நிறுத்துங்கள் என்கிறேன். ஒரு புளிய மரத்தடி. தாள் கொடுங்கள் என்கிறேன்; தாள் இல்லை. அழைப்பிதழ்களின் வெள்ளைப் பக்கங்களில் எழுதத் தொடங்குகிறேன். எழுத வசதி எண்சீர் விருத்தம், புளிய மரத்தடியில் பூத்த கவிதை இது.

  நோட் #3: பவித்ராவின் ஆங்கில வலைப்பதிவில், அவருடைய விஷ்-லிஸ்ட் படித்திருக்கிறீர்களா?

 • அன்று: காலச்சுவடு – ஜூன் 2004 (My Takeaways) | இன்று: இன்னும் இணையத்தில் காலச்சுவடு புதுப்பிக்கவில்லை (இன்று: தமிழ் சிஃபி – ஏப்ரல் 2006 காலச்சுவடு)

  1. கடவுளுக்குத் தெரியாதவர்கள் – ஆதவன் தீட்சண்யா

  2. நீரோட்டம் – கண்ணன்: “நான் சந்திக்கும் பலர் எதற்காக இவ்வளவு பொய் சொல்கிறார்கள் என்றே தெரியவில்லை. பல சமயம் பொய் வெளிப்படும்போதே பொய் எனத் தெரிவித்தபடி வருகிறது. அல்லது இரண்டொரு நாட்களில் பொய் என ஊர்ஜிதமாகிறது. மீண்டுமொரு முறை பேச நேரும் போது முன்னர் கூறிய பொய்கள் மறைந்து புதிய பொய்கள் வெளிப்படுகின்றன. இவர்கள் எல்லோரையும் மோசமானவர்கள் எனக் கருத முடியவில்லை. பலர் நல்லவர்கள். நண்பர்கள். இந்தப் பொய்களுக்கு அற்பத்தனத்தைவிடப் பெரிய காரணம் எதையும் கண்டுபிடிக்கவும் முடியவில்லை. நான் பொய் சொல்லாதவன் அல்லதான். சத்திய சீலன்களைத் தேடி உறவுகொள்பவனும் அல்ல. இருப்பினும் அன்றாடம் பல சில்லறைப் பொய்களைச் சந்திக்க வேண்டியிருப்பது, வழக்கமான தமிழ் சினிமாவைப் பார்ப்பதுபோல, அவமானமாக இருக்கிறது. நம் அறிவை, புரிதலை, உள்ளுணர்வை இப்பொய்கள் தொடர்ந்து அவமதிக்கின்றன. இக்காலகட்டத்தில் “பொய்யானாலும் பொருந்தச் சொல்ல வேண்டும்’ என்ற பழமொழி என் மனத்தில் புதிய பொருள் கொண்டு ஒளிரத் தொடங்கியுள்ளது.”

 • அன்று: Box Office History for India Movies | இன்று: Fanaa – $1,730,829

  1999 முதல் தற்போதைய ‘யுவா’ வரை அமெரிக்காவில் எவ்வளவு சம்பாதித்துள்ளது? வெற்றிகரமான ஆங்கிலப் படங்கள், அமெரிக்காவிலும், மற்ற இடங்களிலும் எவ்வளவு ஈட்டுகிறது? இந்தியர்கள், அமெரிக்காவில் இருந்து பெருமளவில் வீட்டுக்கு அனுப்பப்பட்டதால், படங்களின் வரும்படி குறைந்துள்ளதா? ஹிந்தி ‘அலைபாயுதே’, ‘ஹே ராம்’ அமெரிக்காவில் மட்டுமாவது வெற்றிபெற்றதா? ‘கிலாடி 420’ போன்ற அமெரிக்க இந்தியர்களிடம் எடுபடாத படங்களுக்கு, எவ்வளவு பணம் வருகிறது?

 • அன்று: நம்மில் ஒருவன்.. நமக்காக ஒருவன்! – ஷங்கர் பேட்டி | என்று? அன்னியன் தேவை (2) | அன்னியன் தேவை (1)

  “இத்தனை வருட சினிமா அனுபவம் தந்த படிப்பினை என்ன?”
  “ரொம்பக் கஷ்டப்பட்டு ‘செட்டில்’ ஆயிட்டோம் என்று நினைத்தால், அது உண்மையில்லைன்னு தெரியுது! ‘செட்டில்’ ஆவது ஒன்றுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பும் நம்பிக்கையும். ஆனால், நடக்கிறது என்ன? இந்த வாழ்க்கை கடைசிவரைக்கும் உழைப்பைக் கேட்டுக்கிட்டே இருக்கு. அதுவும் சினிமா… குறைந்தபட்ச தர்மத்தோடு இருக்கிறவங்கதான் நிலைக்க முடியுது. இது நண்பர்கள் யாரு, எதிரிகள் யாருன்னு தெரிஞ்சுக்க முடியாத உலகம். ஆனா அந்த ரெண்டு பேருமே கண் முன்னாடி சிநேகமா சிரிச்சுக்கிட்டே இருப்பாங்க. அதுதான் விசேஷம்!”

  “விமரிசனங்களை எப்படி எடுத்துப்பீங்க?”
  “நல்லாயிருக்குன்னு சொல்லும் போது சந்தோஷப்படறோமே… அதுமாதிரி நெகட்டிவ் விமரிசனம் கேட்கும்போதும் ‘லைட்’டாக எடுத்துக்க வேண்டியதுதான். நானே குத்தம் பண்ணியிருக்கலாம். ஆனால், ‘பாய்ஸ்’ படத்துக்கு விகடன் எழுதின விமரிசனம்… தப்பிருந்தா தலையில் குட்டலாம். ஸ்கேலில் ரெண்டு தட்டு தட்டலாம். முட்டிப்போட வைக்கலாம். கத்தியை எடுத்துச் செருகலாமா? அந்தக் காயம் அதிகமாக வலித்தது. என்னை வளர்த்துவிட்டு, என்னைக் கொண்டாடிவிட்டு, திடீர்னு தோளிலிருந்து தூக்கிப் போட்டால் என்ன செய்வேன், சொல்லுங்க. பரவாயில்லை.. இப்போ அந்தக் காயம் ஆறிவிட்டது!”

 • அன்று: இவரா… இவருடனா… இப்படியா | இன்று(ம்): தந்தையர் தினம்
 • அன்று: அன்றைய கில்லி கால்கோள் | இன்று: கில்லி

  | |

 • Chat Meet – Tamiloviam Meena

  எனக்கு அறிமுகமான சில இணைய விஐபி-க்களுடன் சிறு மின்னஞ்சல் அரட்டை பேட்டி:

  மீனா (மீனாஷி) தமிழோவியத்தின் தொடக்க காலத்தில் இருந்து தொடர்ந்து பல்வேறு தளங்களில் எழுதி வருபவர். கடந்த மூன்றாண்டுகளாக ஆசிரியர் பொறுப்பு.

  ‘முக்கிய இணைய இதழ்களின் ஆசிரியர்கள் எல்லாருமே் பெண்களாகவே இருப்பது எப்படி’ என்பது வாசகரிடம் கேட்க விரும்பும் கேள்வி 🙂

  1. திங்கள் இரவு நெருங்கிவிட, வேலை நெட்டி முறிக்க, செய்தி வெள்ளமாய் குழப்ப, என்ன எழுதலாம் என்று திணறியதுண்டா? (ஆம் என்றால்) எப்படி முடிவெடுத்தை எதை எழுத நேரிட்டது? (இல்லை என்றால்) என்ன எழுதலாம் என்பதை எவ்வளவு சீக்கிரம், எப்படி முடிவெடுப்பீர்கள்?

  பொதுவாக வாரம் முழுவதும் வரும் உலக, தேசிய, மாநில செய்திகளை விடாமல் படிக்கும் பழக்கம் உண்டு. அந்த வாரத்தில் எந்த நிகழ்வு எனக்கு முக்கியமாகப் படுகிறதோ அதுதான் அந்த வாரத் தராசாக வெளிவரும். பல நேரங்களில் முதலில் நான் எழுத நினைத்திருந்த செய்தியை விட விருவிருப்பான / முக்கியமான நிகழ்வுகளை கடைசி நேரத்தில் படிக்க நேர்ந்தால் அதை அந்த வார தராசாக எழுதுவது வழக்கம். ஆனால் இன்று வரை தராசு பகுதிக்காக என்ன எழுதலாம் என்று குழம்பியது கிடையாது.

  2. தாங்களும் கணேஷ் சந்திராவும் இணைந்துதான் ‘தராசு’/இன்ன பிற எழுதுவதாக காதுவாக்கில் செய்தி வந்தது. கணேஷ் சந்திராவுடன் இணைந்து எழுதிய அனுபவம் உண்டா? எப்படி இருந்தது? ‘சுபா’ போன்று உருவாகும் சாத்தியம் இருக்கிறதா?

  தமிழோவியத்தின் ஆசிரியராக நான் விரும்பி செய்யும் வேலைகளில் ஒன்று தராசு மற்றும் சினிமா விமர்சனம் எழுதுவது. நான் எழுதும் கட்டுரைகளில் யாரும் தலையிடுவது கிடையாது. அதை நான் விரும்பவும் மாட்டேன். ஒவ்வொரு வாரமும் தராசு மற்றும் சினிமா விமர்சனத்தை எழுதி முடித்த பிறகு அதை கணேஷ் அவர்களிடம் காட்டுவேன். என்னுடைய கட்டுடைகளின் முதல் விமர்சகர் அவர். மற்றபடி அவருடன் இணைந்து எழுதிய அனுபவம் இல்லை. எனவே சுபா போன்று உருவாகும் சாத்தியம் இருப்பதாக தெரியவில்லை.

  3. தாங்கள் இதுவரை எழுதியதில் மிகவும் பிடித்த கட்டுரை/செய்தி அலசல் எது? ஏன்? அந்த ஆக்கம் உருவாகுவதற்கு ஏதாவது சிறப்பு காரணங்கள்…

  தனஞ்சய் தலை தப்பலாமா என்ற தராசு தான் என் எழுத்துகளில் எனக்கு மிகப்பிடித்த ஆக்கம். ஒரு 14 வயது மாணவியை கற்பழித்து கொலை செய்த பாதகன் அவன். உச்சநீதிமன்றம் வரை அவனுடைய மரண தண்டனையை உறுதி செய்த பிறகு தண்டனையை ரத்து செய்யுமாறு அவன் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பியிருந்தான். குடியரசுத் தலைவர் அவனுடைய மனுவை நிராகரிக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் எழுதப்பட்டது அந்த தராசு. உச்சநீதிமன்றம் வரை தண்டனை உறுதி செய்யப்பட்ட ஒருவனது மரண தண்டனையை எந்தக் காலத்திலும் குடியரசுத் தலைவர் ரத்து செய்யக்கூடாது என்பதே என்னுடைய கருத்து. என்னதான் மரணத்திற்கு மரணம் தீர்வாகாது என்று ஆர்வலர்கள் சிலர் கூறினாலும் உச்ச நீதிமன்றம் வரை ஒருவனது தண்டனை உறுதி செய்யப்பட்டது என்றால் அவன் எத்தகைய கொடூரமானவனாக இருந்திருக்கவேண்டும்? அவனை ஏன் மன்னிக்கவேண்டும்? சட்டம் தண்டித்த ஒருவரை ஜனாதிபதி மன்னித்துவிட்டால் நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புக்கு என்ன மரியாதை இருக்கும்? செய்த குற்றத்திற்கான தண்டனையிலிருந்து ஒருவரை எக்காரணத்தை முன்னிட்டும் தப்ப விடக்கூடாது என்ற கருத்தை வலியுறுத்தும் இந்தக் கட்டுரைதான் எனக்கு மிகவும் பிடித்த கட்டுரை.

  4. கதை/நாவல் பக்கம் ஒதுங்கும் எண்ணம் இருக்கிறதா? மனதில் உட்கார்ந்திருக்கும் கரு மற்றும் கதைக்களம் குறித்துப் பகிர முடியுமா?

  கதை / நாவல் எல்லாம் எழுதும் எண்ணம் இல்லை. மேலும் எனக்கு அரசியல் (உள்நாடு, வெளிநாடு) மிகவும் பிடிக்கும். எதிர்காலத்தில் ஒரு சிறந்த அரசியல் விமர்சகராக ஆவதே என் ஆசை.

  5. வலைப்பதிவு ஆரம்பிப்பீர்களா ? (ஆம் என்றால்) எப்போது… சொந்தப் பெயரிலா… எதைக் குறித்து அனுதினம் பதிவீர்கள்? (இல்லை என்றால்) ஏன் ? தற்போது பதிவுகளைப் படிக்கிறீர்களா? எது தவறவிடாமல் படிப்பீர்கள் ?

  எனக்கென்று வலைப்பதிவு தொடங்கும் எண்ணம் ஏதும் இல்லை. நான் எழுத நினைப்பதை எழுத “தமிழோவியம்” இருக்கிறது. தற்போது வேலை, குழந்தை இதற்கே நேரம் சரியாக இருக்கிறது. நாளிதழ்கள், வார இதழ்கள் படித்தது போக நேரம் கிடைக்கும் போது தமிழ்மணம் / தேன்கூடு வலைதிரட்டிகளை படிப்பதுண்டு.


  | |

  Subramania Saami

  மதுரை மாவட்டம். சோழவந்தான் அருகே வைகையாற்றைக் கடந்தால் முள்ளிப்பள்ளம். சின்னக் கிராமம். நுழைந்ததும் இருபுறமும் விரிகிற அக்கிரஹாரத் தெரு. இதில் ஒரு தெருவில் பிறந்து பிரபலாமனவர் சில்லென்ற குரலோடு வளைய வந்த பாடகரான டி.ஆர். மகாலிங்கம். இன்னொரு தெருவில் சரிந்த ஓடும், திண்ணையுமாக சிதிலமாகிக் கிடக்கிறது சுப்பிரமணிய சுவாமியின் பூர்வீக வீடு.

  “ஆச்சர்யமா இருக்கு… எங்க முன்னோர்கள் திருமலை நாயக்கர் அரசவையில் வேலை பார்த்திருக்கிறார்கள். அப்பொழுது எங்க குடும்ப முன்னோர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலம்தான் சோழவந்தான் பக்கத்திலே உள்ள முள்ளிப் பள்ளத்தில் இருக்கு.

  பூணூல் போட என்னை அழைத்தபோது ‘எதுக்குப் பூணூல்‘ என்று கேட்டேன். அதற்குச் சரியான பத்ல் இல்லை. ‘நியாயமான காரணம் தெரியாமல் பூணூலைப் போட்டுக்க மாட்டேன்‘ என்று மறுத்துவிட்டேன். அதனால் ஏழு வயதிலிருந்து பத்து வயது வரைக்கும் அப்பாவோடு பேசவில்லை. பிறகுதான் அம்மா, எங்களைச் சமாதானப்படுத்தி வைத்தார்கள்” என்கிறார் சுவாமி.

  ஒன்பதாவது வகுப்புப் படிக்கும்போது பள்ளித் தலைமை ஆசிரியர் கட்டிட நிதியில் குறிப்பிட்ட பணத்தைக் கையாடல் செய்துவிட்டார் என்று மாணவர்களை அழைத்துப் போராட்டம் நடத்தினதின் விளைவு? தலைமை ஆசிரியர் மாற்றப்பட்டார்.

  கல்கத்தாவில் உள்ள ‘இந்தியன் ஸ்டாஸ்டிகல் இன்ஸ்டிடியூட்‘டில் எம்.ஏ. சேர்ந்ததும் அங்கும் சிக்கல். அதன் டைரக்டர் எழுதிய கட்டுரையில் இருந்த தவறுகளைக் குறிப்பிட்டு சுவாமி ஒரு கட்டுரை எழுத, இன்ஸ்டிடியூட்டில் பிரச்சினை ஏற்பட்டு சுவாமிக்குக் கிடைத்து வந்த ஸ்காலர்ஷிப் நிறுத்தப்பட்டது.

  “அன்றைக்கு ஐஐடி-யில் என்னை அவர்கள் வெளியேற்றி இருக்காவிட்டால் இன்றைக்குப் பொருளாதாரக் கட்டுரைகளை எழுதிக் கொண்டு பேராசிரியராகத்தான் இருந்திருப்பேன்” – சு. சுவாமி

  நன்றி: நதிமூலம்மணா (உயிர்மை) – புத்தகம் குறித்த மாலனின் அணிந்துரை


  | |

  The Book of Questions

  இந்த ஏழு நாளும் உங்களிடம் கேள்வி கேட்க விருப்பம். நானாகக் கேட்கவில்லை. க்ரெகரி ஸ்டாக்கிடம் கடன் வாங்கித்தான் கேட்கப் போகிறேன்.

  ‘ஆம்’/’இல்லை’ என்று சொல்லிவிட்டுப் போய் விட வேண்டாம். யோசித்து, உங்கள் சொந்த வலைப்பதிவில் எண்ணங்கள் அடங்கிய மறுமொழிகளை இட்டு, இங்கும் ஒரு வார்த்தை பின்னூட்டமாக இட்டால், வசதியாக இருக்கும்.

  முன்கூட்டிய நன்றி 🙂

  1. இன்று மாலையே உங்களின் முடிவு நேரும். அதன் முன் எவருடனும் தொடர்புகொள்ள முடியவில்லை. எவரிடம் பேச முடியாததற்கு வருத்தமடைவீர்கள்? இறுதி நிமிடங்களில் சொல்லி விட முடியவில்லையே என்னும் ஏக்கம் ஏன் எழும்? இன்றளவும் எப்படி சொல்லாமல் தள்ளிப் போட்டீர்கள்?

  2. தமிழ் சினிமாவில் பார்த்திருப்பீர்கள். மருத்துவமனையில் குழந்தை மாறாட்டம். உங்களின் சூட்டிகையான ஒரு வயதுக் குழந்தை உங்களுடையது அல்ல! அசல் குழந்தைக்கு பரிமாற்றம் ஏற்பட முயற்சிகளை மேற்கொள்வீர்களா? வளர்த்த மகவா அல்லது வயிற்று மகவா?


  | |

  True Stars

  சனிக்கிழமை இரவுகளிலும் இன்ன பிற நாட்களில் மறு-ஒளிபரப்பாக வரும் Saturday Night Live-இல் முன்னுமொரு காலத்தில் பமீலா ஆண்டர்சன் தோன்றினார்.

  அன்று உதிர்த்த இந்த புகழ்பெற்ற வசனம் மனதில் தங்கிப் போனது:

  You know, if you’re nervous on stage, you actually should BE naked!

  சத்தியமாய் உதிர்த்த வார்த்தைகள்தான்; உதிர்ந்த வேறெதிலும் லயிக்கவில்லை. ‘எனக்கு என்ன தெரியுமோ அதைத்தானே நான் செய்ய முடியும்!‘ என்கிற ரீதியில் பமீலாவின் செய்கை அதிர்ச்சியை வரவழைக்காமல் புன்னகையைக் கொடுத்தது.

  என்னுடைய நெஞ்சுக்கினிய ஏழு நாயகிகளை இந்த வாரம் உலவவிட உத்தேசம்.

  இது முதல் போணி!

  Swades - Hindi Movie Heroine & Model turned Actress - Gayathri Joshi


  | |

  Rhetorics, Cliches & Dejavu

  Water

  தண்ணீர் என்றவுடன் என்ன நினைவுக்கு வருகிறது?

  சமீபத்தில் தீபா மேத்தாவின் ‘வாட்டர்’ பார்க்க கிடைத்தது. மனதை வெகுவாக பாதித்த படம். சில விமர்சனங்களுக்கு…

 • வெளிகண்ட நாதர்
 • ஸ்ரீகாந்த் மீனாட்சி
 • சுமதி ரூபன்
 • அருண்

  ஜான் ஆபிரஹாம் மாதிரி விதவைப் பெண் வாழ்வு கொடுப்போம் என்று யோசித்தது ஒரு காலம். லிஸா ரே போன்று அழகிகள் யாரும் கண்ணில்படவில்லை.

  தாமரையிலைத் தண்ணீர் போல் ‘ஒட்டி ஒட்டாமல் இரு‘ என்று ரஜினி பாடியது நினைவுக்கு வருகிறது.

  தண்ணித் தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்‘ என்று சிந்து பைரவியின் சிறந்த பாடல் முணுமுணுக்கலாம்.

  தந்தையர் தினத்தை முன்னிட்டு இன்று அப்பாக்களுக்கு நுழைவுக் கட்டணம் வாங்க மாட்டோம் என்று பல தீம் பார்க்-கள் அறிவித்திருந்தது. 92 டிகிரி ஃபாரென்ஹீட்டை சமாளிக்க ‘தண்ணீர் தொட்டி’யில் ஜலக்கிரீடையின் நடுவே நள்ளிரவில் நட்சத்திரம் ஆகப் போவது நிழலாடியது.

  இந்த வாரம் அமைதியான வாரம்.

  ‘அப்பாக்கள் சில பேரு செய்கின்றத் தப்பைத்தான்
  அடியேனும் அந்நாளில் செய்தேனம்மா!’

  என்று பாடியதற்கேற்ப ‘பாரிஜாதம்’ படத்தில் பாக்யராஜ் சொதப்பியிருப்பார் என்று எண்ணினேன். Sun TV திரை விமர்சனத்தில் பல காட்சிகள் ‘என்னடா இழுவை… மேட்டருக்கு வாடா‘ என்று போரடித்தது. இல்லை என்கிறார் இகாரசு.

  ‘பாலத்திற்கு அடியில் நிறைய தண்ணீர் போயிடுச்சுங்க’ என்று Cliche சொல்வது போல் மீண்டும் மீண்டும் சிரிப்பாக மீண்டும் பாலாஜி… பாஸ்டனில் இருந்து.

  தமிழ்மணத்திற்கு இது போதாத காலம்.

  http://www.thamizmanam.com is for sale. The package includes the domain and the software. Those interested may write to எகாசி@gmail.com with their proposal.

  பஸ்மாசுரசன் வரம் பெற்றவுடன், சோதிக்க சிவனைத் துரத்தின கதையாய், தமிழ்மணத்தை ஒரு கை பார்க்கலாம்; படுத்தலாம் என்று ஓடோடி வந்தால் செண்ட்டி போட்டு பிஸினஸ் டீல் கேட்கிறார்கள். பஸ்மாசுரனால் மோகினி வந்தாள்; என்னாலும் யாராவது வந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.

  அம்மா செண்டிமெண்ட், புரட்சி வீரன் சண்டைக் காட்சி, குத்துப் பாட்டு, திரைக்கதை லாஜிக் என்று செல்லும் தமிழ்மண * வாரங்களில், இப்பொழுது மசாலா நேரம்.

  ஆதரவும் அன்பும் ஆலோசனைகளும் கோரும்,
  பாலாஜி
  பாஸ்டன்


  | |