Daily Archives: மே 11, 2006

Net Observer on Elections

தேர்தல் பத்து

தமிழகத்தில் நடந்து முடிந்து, முடிவுகளும் அறிவிக்கப்பட்டு, அமைச்சரவை ஆருடங்களும் தொடங்கிவிட்ட தேர்தல் குறித்து எனக்கு மனதில் உதித்து எழுத்தில் வெளியான பத்து பிட்ஸ்.

 1. கடைசி நாளன்று இட்லி-வடை இன்னும் சிறப்பாக செய்திகளைத் தொகுத்திருக்கலாம். காலையில் எழுந்தவுடன் முடிவுகளை அறிய ‘வலைப்பதிவுகளை மட்டுமே நம்புவது’ என்று மேய்ந்ததில் தமிழ்மணம் தேர்தல் 2006 சிறப்பு பக்கம் மட்டுமே மேலோட்டமாய் அம்சமாகப் பட்டது.
 2. வழக்கமான ஊடகங்களை சாம்பார் மாஃபியா மூலம் சென்று, அலுவல் கிளம்பும் அவசரத்திலும் விடைகளைப் பெற முடிந்தது. மிகத் தெளிவான இடைமுகமாக ஐ.பி.என்.னும், அரிதான செய்திகளை சிஃபி.காமும் கொடுத்தது.
 3. கட்சி நிலைப்பாடுள்ளவர்கள் தங்கள் வேட்பாளர் நிலவரம் குறித்து தொடர்ந்து இற்றைப்படுத்தி இருக்கலாம். உடனடி அரட்டையாக ‘கேள்வி-பதில்’ போன்ற வசதியும் வலைப்பதிவுகளில் நிகழ்ந்திருந்தால் இணையத்துக்கே உரிய அன்னியோன்யம் கைவசமாகியிருக்கும். (நான் கேட்க நினைத்த கேள்வி: மயிலாடுதுறையில் விஜய டி ராஜேந்தர் எத்தனை ஓட்டுகள்? தளி (அல்லது) இந்தியன் எக்ஸ்பிரசில் தவறாய் சொன்னது போல் அவினாசியில் வென்ற சுயேச்சை யார்… எப்படி வென்றார்?)
 4. பொறுமையாக குளம்பி அருந்திக் கொண்டு, காலை சந்திப்புக் கடன்களை முடித்துவிட்டு மேய்ந்ததில், பரவலான கவரேஜுக்கு மாலை மலரும், லே-அவுட் மற்றும் புள்ளி விவரங்களுக்கு சிஃபியும், தமிழ் முரசு-ம், வரைபடங்களுடன் துல்லியமான தகவலுக்கு தேர்தல் ஆணையமும் பயன்பட்டது.
 5. சாதி, இன அரசியல் செய்யாமல் வெல்ல முடியும் என்று நிரூபித்த விஜய்காந்த்தை நினத்தால் சந்தோஷமாக இருக்கிறது, திராவிட கலாசாரத்தில் ஊறித்தான் திராவிட நாட்டில் வெல்ல முடியும் என்பது போல், பெரிய கட்சிகளைப் போலவே நடந்து கொண்டாலும் கருணாநிதிக்குப் பிறகு தோன்றப்போகும் வெற்றிடத்திற்கு துண்டு போட்டு வைத்திருக்கிறார். வைகோ மாதிரி ஆகி விடுவாரா அல்லது இன்னொரு பாக்யராஜா/டி. ராஜேந்தரா என்பது காலத்திற்கே வெளிச்சம்.
 6. இலவசம், பந்தா பொதுக்கூட்டம், சுடு மொழி, மகிழுந்து பவனி என்று திராவிட அரசியலின் சின்னங்களைக் கடைபிடிக்காமலும் லோக் பரித்ராண் மயிலாப்பூர் போன்ற தொகுதிகளில் வெல்லக்கூடிய வாய்ப்பு இருப்பது மேலும் மகிழ்ச்சியை அளித்த நிகழ்வு.
 7. சன் டிவி பங்குகளை வாங்கி வைக்க வேண்டும். டாடாவை மிரட்டினால் என்ன… விகடனை வாங்கினால் என்ன… அரட்டை அரங்கத்திற்கு பாக்யராஜ் மாறினால் என்ன… நிச்சயம் லாபகரமாக செயல்படும்.
 8. கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்காளத்தில் கூட தேர்தல் நடந்திருக்கு போல 😉
 9. ஜெயலலிதா இரண்டு தொகுதியில் போட்டியிடாதது போல சோனியா போன்ற தியாகிகள் மீண்டும் மீண்டும் ராஜினாமா செய்து… மீண்டும் மீண்டும் தேர்தல்களில் நின்று… மீண்டும் மீண்டும் ப்ரியங்காவும் ராகுலும் பறந்து பறந்து பிரச்சாரம் செய்து… மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படாமல் இருக்கும் காலம் என்று விடியுமோ?
 10. 10 ஸ்போர்ட்ஸ் பார்க்க கிடைக்காத அதிருப்தி வாக்குகளில் நிறைய சதவீதம் லோக் பரித்ரானுக்கும், Anti-incumbency வாக்கு மட்டுமே தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்துக்கும் கிடைத்திருக்காது என்று நம்புகிறேன்!


| |

ADMK Ministers, Anandraj & Puthucheri

அமைச்சர் நிலவரம்: மாலைமலர்

வெற்றி பெற்றவர்கள்:

 • பெரியகுளம் தொகுதி – அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் – 12,862 ஓட்டுகள் வித்தியாசம்
 • நத்தம் – அமைச்சர் விசுவநாதன் – 3,927 ஓட்டுகள் கூடுதல்
 • பல்லடம் – அமைச்சர் செ.ம.வேலுச்சாமி – 5,517 ஓட்டுகள் வித்தியாசம்
 • கோபி – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் – 4,019 ஓட்டு வித்தியாசம்

  தோல்விப் பட்டியல்:
  தமிழக சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள் வருமாறு:-

 • திருமயம் – அமைச்சர் ராதாகிருஷ்ணனை x காங். வேட்பாளர் சுப்புராம் : 315 ஓட்டு வித்தியாசம்
 • ஆலந்தூர் – அமைச்சர் வளர்மதி x தி.மு.க. அன்பரசனிடம் தோல்வி
 • நெல்லை – அமைச்சர் நயினார்நாகேந்திரன் x தி.மு.க. மாலைராஜா : 317 ஓட்டுகள்
 • கன்னியாகுமரி – அமைச்சர் தளவாய் சுந்தரம் x தி.மு.க. சுரேஷ்ராஜன் : 10,687 வாக்குகள் வித்தியாசம்

  புதுவை சட்டசபை தேர்தலில் உருளையன் பேட்டை தொகுதியில் ஜனநாயக மக்கள் கூட்டணியின் அ.தி.மு.க. வேட்பாளராக முதலில் நேரு அறிவிக்கப்பட்டார். பின்னர் வேட்பாளர் மாற்றப்பட்டு நடிகர் ஆனந்தராஜ் அறிவிக்கப்பட்டார். இது உருளையன்பேட்டை தொகுதி அ.தி.மு.க.வினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து நேரு சுயேட்சையாக போட்டியிட்டார்.

  அ.தி.மு.க. வேட்பாளர் நடிகர் ஆனந்தராஜ் 710 ஓட்டுகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தார்.


  புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 30 சட்டமன்ற தொகுதிகள். காங்கிரஸ் – தி.மு.க. ஒரு அணியாகவும், அ.தி.மு.க. கண்ணன் கட்சி ஆகியவை தனி அணியாகவும் நின்றன.

  காங்கிரஸ் – 10
  தி.மு.க. – 7
  பா.ம.க. – 2
  இந்திய கம்யூனிஸ்டு – 1
  காங்கிரஸ் கூட்டணி – 20

  அ.தி.மு.க. – 3
  கண்ணணின் புதுவை முன்னேற்ற காங்கிரஸ் – 3
  ம.தி.மு.க. – 1
  அ.தி.மு.க. கூட்டணி – 7

  நெல்லித்தோப்பு தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சரும் மாநில தி.மு.க. அமைப்பாளருமான ஜானகிராமன் தோல்வி அடைந்தார்.

 • தேர்தல் முடிவுகள் டிரெண்ட்

  5.45 PM:

  கிட்டத்தட்ட இறுதி நிலவரம் (அணைக்கட்டு தொகுதி முடிவு தேர்தல் இயந்திரக் கோளாறினால் வெளியாகவில்லை)

  திமுக கூட்டணி: 163
  அஇஅதிமுக கூட்டணி: 68 + (அணைக்கட்டில் முன்னணி) = 69
  தேமுதிக (விஜயகாந்த்): 1
  சுயேச்சை (தல்லி தொகுதியில்): 1

  கட்சி வெற்றி
  திமுக 96
  காங்கிரஸ் 34
  பாமக 18
  சிபிஐ 6
  சிபிஎம் 9
  திமுக கூட்டணி 163
  அஇஅதிமுக 60
  மதிமுக 6
  வி.சிறுத்தைகள் 2
  அஇஅதிமுக கூட்டணி 68
  தேமுதிக 1
  சுயேச்சை 1
  பிற 2

  1.00 PM:

  திமுக கூட்டணி: 124 (வெற்றி) + 35 (முன்னணி) = 159
  அஇஅதிமுக கூட்டணி: 43 (வெற்றி) + 30 (முன்னணி) = 73
  பிற: 2

  12.00 AM:

  திமுக கூட்டணி: 72 (வெற்றி) + 87 (முன்னணி) = 159
  அஇஅதிமுக கூட்டணி: 23 (வெற்றி) + 50 (முன்னணி) = 73
  தேமுதிக: 2

  11.30 AM:

  திமுக கூட்டணி: 160
  அஇஅதிமுக கூட்டணி: 71
  தேமுதிக: 2

  10.40 AM:

  திமுக கூட்டணி: 144
  அஇஅதிமுக கூட்டணி: 84
  பிற: 6

  ஒரு மணி நேரத்துக்கு முந்தைய டிரெண்டில் மாற்றங்கள் இல்லை. காங்கிரஸ் (ஐ), திமுகவிடனான கூட்டணியில் சேர்ந்து ஆட்சி அமைக்க விரும்பும் என்கிறார் காங்கிரஸ் பிரமுகர் விஷ்வ பந்து குப்தா.

  கட்சி வெற்றி முன்னணி
  திமுக 8 77
  காங்கிரஸ் 4 25
  பாமக 1 17
  சிபிஐ 1 7
  சிபிஎம் 1 3
  திமுக கூட்டணி 15 129
  அஇஅதிமுக 5 68
  மதிமுக 0 9
  வி.சி 0 2
  அஇஅதிமுக கூட்டணி 5 79
  தேமுதிக 0 1
  பாஜக 0 2
  சுயேச்சை 0 3
  பிற 0 6

  9.40 AM:

  திமுக கூட்டணி: 140+
  அஇஅதிமுக கூட்டணி: 80+
  பிற: 2?

  எதிர்பார்த்தது போலவே சன் நியூஸ், ஜெயா டிவி சானல்கள் பொய் தகவலைத் தந்துகொண்டிருந்தனர். சிஎன்என் ஐபிஎன், என்.டி.டி.வி, ரீடிஃப் என்று யார் எதைச் சொன்னாலும் தமக்குப் பிடித்தமான செய்தியை தம்மிஷ்டத்துக்கு வாரி வழங்குவது இவர்கள் செயல். ஜெயா டிவிக்கு மட்டும்தான் அஇஅதிமுக ஜெயிக்கும் தகவல் வந்துள்ளது போலும்.

  பாண்டிச்சேரி நிலவரம்

  3.00 PM

  காங்கிரஸ் (ஐ) – 10
  திமுக – 7
  பாமக – 2
  சிபிஐ – 1
  மொத்தம் – 20

  அஇஅதிமுக – 3
  புமகா – 3
  மதிமுக – 1
  மொத்தம் – 7

  சுயேச்சை – 3

  காங்கிரஸ் (ஐ) + திமுக கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.

  1.10 PM

  காங்கிரஸ் (ஐ) கூட்டணி: 14 (வெற்றி) + 6 (முன்னணி) = 20
  அஇஅதிமுக கூட்டணி: 6 (வெற்றி) + 1 (முன்னணி) = 7
  பிற: 3

  11.05 AM

  முடிவுகள் வெளியானவை – 19

  காங்கிரஸ் (ஐ) – 10
  திமுக – 2
  பாமக – 1

  புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் – 3
  அஇஅதிமுக – 3

  காங்கிரஸ் (ஐ) மீண்டும் ஆட்சி அமைக்கும். ஆனால் அதற்கு திமுகவின் ஆதரவு தேவையாக இருக்கும் என நினைக்கிறேன்.

  இதைப்படிங்க முதல்ல

  கழக ரத்தத்தின் ரத்தங்கள் யாராவது திரிசங்கு சொர்க்கத்தில் காலையில் உலாவி கொண்டிருந்த ஜெயா டிவி முன்னணி நிலவரத்தை சொல்லமுடியுமா?

  ஆறுதல் செய்தி:

  மீண்டும் விஜயகாந்த் வென்றதாக தகவல்கள் வருகின்றன.

  ஆப்பு

  அடிப்பது அம்மா அலை..எதிர்ப்பவர் யாரும் இல்லை – ஜெ முழக்கம்

  அவசர ஆப்பு

  வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிப்பு – விஜயகாந்த் பத்து சீட்டாவது பிடிப்பார்- சிலர் கணிப்பு

  ஆசை ஆப்பு

  (இங்கு ஆப்புக்கள் அப்டேட் செய்யப்படும்)