Monthly Archives: ஏப்ரல் 2006

The Week says too Close Call

தி வீக்கின் கருத்துக் கணிப்புகளில் இருந்து:

திமுக வாக்கு சதவீதம்: 45 %
அஇஅதிமுக சதவிகிதம்: 42 %

இன்னும் 1.5 % வாக்குகள் திமுக பக்கம் திரும்பினால், 160-165 இடங்கள் வரை திமுக கூட்டணிக்கு கிடைக்கும்.

செய்தி: நியுஸ் டுடேயில் வெளிவந்ததாக சன் நியுஸ்

பி.கு.: மாலைச்சுடரிலும் தேடியாச்சு; கிடைக்கவில்லை.

Ju.Vi – Galatta Cocktail

நன்றி: ஜூனியர் விகடன்

Tips on ‘How to’ Advice

துப்பு கொடுக்க பத்து துப்புகள்

 1. பத்து துப்புகள் வழங்குவது சிறப்பு; 10+கொசுறு, ஒன்பது கட்டளை, எட்டு எட்டா மனுசன் வாழ்வைப் பிரிச்சுக்கோ என்று துப்பினால் சாலச் சிறப்பு. (காட்டாக, ஜெயலலிதாவுக்காக எழுதினால் 9, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு வழங்கினால் 13).
 2. உங்களால் வழங்கப்படும் துப்புகளை, நீங்கள் கடைபிடிக்காமல் இருப்பது சிறப்பைத் தரும். (காட்டாக, கண்ணியமாக எழுத ஆலோசனை கொடுக்கும்போது, பயன்படுத்தக் கூடாத சுடுசொற்கள் என்று ஒரு துப்பு கொடுக்கவும்).
 3. பொத்தாம்பொதுவாக வலைப்பதிவருக்கு டிப்ஸ் என்பதைவிட, பெயர் போட்டு குறிப்பிட்ட வலைப்பதிவருக்கு டிப்ஸ் என்றால், ஏழு வாசகர்களே மீண்டும் மீண்டும் துப்பைப் படிக்க ஓடோடி வருவார்கள். (பல வலைப்பதிவர்கள் ஏற்கனவே இதை சிறப்பாக அனுசரிப்பதால் எடுத்துக்காட்டுக்கே வேலையில்லை).
 4. துப்புக்கு எதிர்துப்பு வழங்குமாறு துப்புகளைத் தொடுக்கவும். (காட்டாக சென்ற புல்லட்டில், ‘ஏழு’ வாசகர் யார், எந்த வலைப்பதிவர்கள் சகாக்களுக்கு தலைப்பு அந்தஸ்து கொடுக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா என்னும் அனானி கேள்வி எழவைக்கவும்).
 5. எந்தத் துப்பு வழங்கினாலும், தொழில் நுட்ப சங்கதிகள் ஒன்றிரண்டை சொருகி விடவும். (காட்டாக, கவிதை நன்றாக அமைய முரசு அஞ்சலைக் கொண்டு தட்டச்சவும்.)
 6. மறுப்புக்கூற்றுகள் இல்லாமல் துப்புகள் கொடுக்காதீர்கள். (காட்டாக, என்னுடைய துப்புகள் அவார்டு படம் பார்க்கிற மாதிரி என்ன சொல்லவருகிறது என்று புரியவில்லை போல் தோன்றினால் அது சிறுவனின் அறியாமுயற்சி என்று விட்டுவிடவும்).
 7. மன விகாரங்களை ஆலோசனகளாக எழுத்தில் வடிக்காமல், உங்கள் நோட்பேடில் எழுதிக் கிழித்து விடல் அல்லது கடாசிவிட்டு ‘குப்பைத் தொட்டி’யையும் காலியாக்கி (சந்தேகமாக இருந்தால்) கடின இயக்கியை (hard-drive) format-உம் செய்துவிடல் நலம்.
 8. சிறுகதை இலக்கணம் என்று பாரா சொல்பவற்றில் சில துப்பு விநியோகிகளுக்கும் பொருந்தும்.
 9. யார் யாரோ சொன்னதன் தொகுப்பாக இருந்தால் மூலங்களை குறிப்பிட்டு திரட்டு என்று சொல்லிவிடவும் அல்லது திருட்டு தர்ம அடி கிடைக்கும்.
 10. இலவசமாக எளிதாக வழங்கக் கூடியது அட்வைஸ்தான். எனவே, பதிவெழுத விஷயம் இல்லாவிட்டால் ‘டிப்ஸ்’ பதிவு இடவும். (காட்டாக, எந்த விஷயத்திற்கு துப்பு தருவது என்று விளங்காவிட்டால், துப்பு கொடுக்க துப்புகள் கொடுக்கவும்).

| |

Cinematographer U.K. Senthil Kumar

நிகழ்ச்சி: முதல் பயணம்
தொலைக்காட்சி: கே டிவி
பேசுபவர்: ஒளிப்பதிவாளர் யு.கே. செந்தில்குமார்
பங்காற்றிய சில திரைப்படங்கள்: உள்ளத்தை அள்ளித்தா, அருணாசலம், முறை மாமன்.
பேட்டியாளர்: ப்ரியதர்ஷிணி

Cinematographer U.K. Senthil Kumar's Introduction in Sun TV 'Muthal Payanam' - Cameraman of 'Ullathai Alli Thaa', 'Murai Maaman' - an audio post - click to play


மணிவண்ணனுடன் வேலை பார்த்த முதல் பட அனுபவம் மற்றும் FAO (UN)இல் வேலை பார்த்தபோது நிகழ்ந்த ஒடுக்குமுறை:

Cinematographer U.K. Senthil Kumar's Introduction in Sun TV 'Muthal Payanam' - Cameraman of 'Ullathai Alli Thaa', 'Murai Maaman' : an audio post - click to play

நன்றி: கே டிவி


| |

Reality TV Show

சீரியஸாக விளக்கிய இதழ்: தமிழ் முரசு

Jayalalitha’s Jewels

வெளியான இதழ்: தினகரன்

Contestant Stats, EVM, Thoughtful Debates

மின்னி வாக்கு எந்திரங்கள் (Electronic voting machines) குறித்த இராம.கி.யின் தமிழ்-உலகம் பதிவு:

தமிழ்நாட்டில் 234 தொகுதிகள். பொதுவாக ஒவ்வொரு தொகுதிக்குள்ளும் பல வாக்கு நிலையங்கள் (polling stations) இருக்கும். ஒவ்வொரு வாக்கு நிலையமும் இரண்டு அல்லது 3 வட்டுகளைக் (wards) கொண்டிருக்கும். ஒரு வாக்கு அறை (polling booths) என்பது கிட்டத் தட்ட 1200 பேருக்கு ஒன்றாக இருக்கும். ஒரு வாக்கு நிலையத்தில் உள்ள வாக்காளர் எண்ணிக்கை 3, 4 வாக்கு அறைகள் கொண்டதாக இருக்கும். (5 வாக்கு அறைகள் வரைக்கும் கூட பெரிய வாக்கு நிலையங்களில் இருந்து நான் பார்த்திருக்கிறேன்.) ஒவ்வொரு வாக்கு அறைக்கும் ஒரு தலைமை வாக்கு அதிகாரி இருப்பார்.

தமிழ்நாட்டின் வாக்காளர் எண்ணிக்கை கிட்டத் தட்ட 62 மில்லியன்கள்.(சரியான எண்ணிக்கையைத் தேடினால் கண்டுபிடிக்க முடியும்; நான் நேரம் கருதி அதைத் தேடிக் கண்டுபிடிக்கவில்லை.) இதை 1200ல் வகுத்தால் மொத்தம் 51700 வாக்கு எந்திரங்கள் தமிழ்நாட்டில் மட்டும் பயன்படும் என்று கணக்கிட முடியும். (புதுச்சேரி 0.65 மில்லியன்கள்.)


தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக 160 பெண்கள் போட்டி: தினமணி

 • நாகப்பட்டினம், திருத்துறைப் பூண்டி (தனி), ஒரத்தநாடு ஆகிய தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் எவரும் போட்டியிடவில்லை.
 • ஸ்டாலின் போட்டியிடும் ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிகபட்சமாக 26 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
 • மிகக் குறைவாக ஒரத்தநாடு தொகுதியில் 4 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
 • ஒரு மின்னணு இயந்திரத்தில் 16 பேர் வரை இடம்பெறச் செய்யமுடியும். இதன்படி 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 2 மின்னணு இயந்திரங்கள் வைக்க வேண்டியுள்ளது.

  கையேந்தி பவனும் அமுதசுரபியும்எஸ். முரளி

  கட்சி 1: “”… எனவே நாங்கள் விவசாயத்துக்குப் பிரதான முன்னுரிமை வழங்க வேண்டும் என்கிறோம். அமெரிக்காவில் விளையும் சோயா பீன்சுக்கு மானியத்தை அள்ளி விடுகிறதே அமெரிக்க அரசு! ஆனால் நம் நாட்டில் மட்டும் உரத்துக்கு மானிய வெட்டு. இது ஏன்? மிகப் பெரிய முதலீட்டின் தொழில் தொடங்கினால் அதற்குத் தரும் பல்வேறு சலுகைகளுக்கு சுங்கத் தீர்வை விலக்கில் இருந்து மின் கட்டணச் சலுகை வரை – நீங்கள் வைத்துள்ள பெயர் ஊக்கத்தொகை. ஆனால் விவசாயி போடும் உரத்துக்குத் தந்தால் அதன் பெயர் “மானியம்’. நீங்கள் என்ன பிச்சையா போடுகிறீர்கள்?”

  கட்சி 2: “”விவசாயம் பிரதானம் என்பதை நாங்கள் மறுக்கவில்லை – தொழில் வளர்ச்சியும் நவீன மயமும் காலத்தின் தேவை என்கிறோம். எல்லாம் பெரு முதலீட்டுக்கும் நிதி திரட்டுதல் என்பது அரசுக்குச் சாத்தியமில்லை. எனவேதான் தனியார் மூலதனப் பங்களிப்பை வரவேற்கிறோம்…”

  கட்சி 1: “”இப்படிச் சொல்லித்தான் கல்வித்துறையையே வியாபாரமாக்கி விட்டீர்கள். மருத்துவம் என்பதை, அதன் மனிதநேய முகத்தையே இழக்க வைத்து, வெறும் பண உற்பத்தி மையமாக ஆக்கிவிட்டீர்கள்.”

  கட்சி 2: “”எந்தத் தனியார் கல்வி நிறுவனம் அல்லது மருத்துவமனை தவறு செய்தாலும், தயவுதாட்சண்யம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அதற்கேற்ற வகையில் சட்டங்களும், கண்காணிப்பு அமைப்புகளும் விரிவுபடுத்தப்பட வேண்டும். இதில் எங்களுக்கும் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் “போட்டி’ என்று “தாராளமயம்’ வந்தவுடன் மக்களுக்கு எவ்வளவு நல்ல விஷயங்கள் நடந்துள்ளது என்பதைப் பாருங்கள். இன்று வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு, ஒரே ஒரு சம்பளச் சான்றிதழையும், இன்கம் டாக்ஸ் ரசீதையும் வைத்துக் கொண்டு கடன்களை அள்ளி வீசுகிறார்கள் – இது பொருளாதார வளர்ச்சி இல்லையா?

  கட்சி 1: “”ஆனால் வயிற்றுக்கு இல்லையே சுவாமி! திறந்துவிடப்பட்ட பொருளாதாரத்தில் மார்க்கெட் முழுவதும் சம்மர் காட்டன் சர்ட்டுகளும் ஜீன்சும் கொட்டிக் கிடக்கிறது. ஆனால் பருத்தி விவசாயி தற்கொலை செய்து கொள்கிறானே, ஏன் இந்த முரண்பாடு…?”