Daily Archives: மார்ச் 10, 2006

Arithmetics; Alliances; Adjustments.

இன்றைய தினமலரில் இருந்து…

Dinamalar.com

Dubai Deal’s Collapse

தலையங்கம் | வர்த்தகரீதியில் செய்தி அலசல் | துபாய் நிறுவனத்துக்கு துறைமுகப் பொறுப்பை ஒப்படைக்க மறுப்பு (நியு யார்க் டைம்ஸ்)

முக்கியமான அமெரிக்கத் துறைமுகங்களில் இருந்து சரக்கை நிர்வகிக்கும் பணியை துபாய் நிறுவனத்துக்குத் தர அமெரிக்க அரசியல் மறுத்துள்ளது.

நண்பர்களுக்குக் கொடுக்க புஷ்ஷுக்கு விருப்பம்.

அமெரிக்கப் பாதுகாவலனாகக் காட்டிக் கொள்ள ரிபப்ளிகன் கட்சிக்கு ஆர்வம்.

கன்சர்வேடிவ்களை விட உயரிய முறையில் அமெரிக்க எல்லைகளின் ரட்சகனாக வெளிப்படுத்திக் கொள்ள டெமோக்ரடிக் கட்சிக்கு வாய்ப்பு.

இதே கொள்கைகள் சொவ்வறை நிரலிகளுக்கும் மேம்படுத்தப்பட்டால்…

 • கனடாவில் இருந்து வரும் ‘ப்ளாக்பெர்ரி’கள் வருகிறது. அவை நமது ரகசியங்களை வேவு பார்க்கலாம். குப்பையில் போடுவோம் போராட்டம்.
 • ஐ.பி.எம் திங்க்பேட் லெனோவாவின் சீனாவில் தயாராகிறது. கம்யூனிஸ நாட்டில் இருந்து தருவிப்பதால், உள்ளே பொதிந்திருக்கும் நுட்பம் ஆபத்தானது. கணினியை இனிமேல் அமெரிக்கா பயன்படுத்தாது.
 • ஜெர்மானியரின் SAP கொண்டு உற்பத்தி நிர்வகிக்கப்படுகிறது. அமெரிக்க கார் நிறுவனங்களான ஃபோர்ட், ஜி.எம்., பின் தங்குவதற்கு ஜெர்மனியே காரணம் என்னும் அறிவிப்பு.
 • பாகிஸ்தானில் இருந்து ஆடைகள் வருகிறது. நேனோ டெக்னாலஜியில் உடைகள் மூலம் இஸ்லாம் பரவும் அபாயம்.
 • இந்தியாவில் இருக்கும் சேவை மையங்கள் நமது பிரச்சினைகளைத் தீர்க்காமல் வளர்க்கவே முயற்சிக்கிறது. அமெரிக்காவை குழப்பத்தில் தள்ளி, கசாகூளமாக்கி விடும்.

  ஹ்ம்ம்ம்… சொல்ல முடியாது. அமெரிக்காவில் தேர்தல் வந்தால் நடந்தாலும் நடக்கலாம்.

  சில வாரங்கள் முன்பு ‘கார்டியன்’ வெளியிட்ட துபாய் குறித்த பருந்துப் பார்வை: The Guardian | Boom town


  | |

 • Book TV

  இன்று ஒரு தத்துவம்:
  பார்த்தது பல் அளவு;
  பார்க்காதது பார் அளவு!!

 • வாரயிறுதிகளில் ‘ஜெமினி‘, ‘அழகேசன்‘ பார்ப்பதற்கு இஷ்டமில்லையா?
 • வீட்டில் TIVO போன்ற தொலைக்காட்சியைப் பதிவு செய்து பார்க்கும் வசதி இருக்கிறதா?
 • தூக்கம் வராமல் அவ்வப்போது கஷ்டப்படுவீர்களா?
 • காத்திரமான விவாதங்களுக்கு தயார் செய்ய வேண்டுமா?
 • பாத்திரம் கழுவும்போது, நண்பர்களுடன் தொலைபேசும்போது, சமைக்கும்போது அஷ்டவதானியாக டிவியும் பார்க்க எண்ணமா?
 • வலைப்பதிவு எழுத மேட்டர் பற்றாக்குறையா?
 • புத்தகங்களப் படிக்காமலேயே சாரம்சத்தை அறிய ஆவலா?

  நீங்கள் பார்க்க வேண்டியது (வட அமெரிக்காவில் மட்டும்) ‘சி-ஸ்பான்’ வழங்கும் ‘புக் டிவி. இந்த வாரத்து முக்கியமான ஒளிபரப்புகளில் சில:

  1. சனி மாலை 6:00 : Richard Barnet ‘The Rockets’ Red Glare: When America Goes to War

  2. ஞாயிறு காலை 4:15 : அமெரிக்க ஜனாதிபதிகள் குறித்த அலசல் – Joyce Appleby on Thomas Jefferson, Gary Hart on James Monroe, Sean Wilentz on Andrew Jackson, and Charles Calhoun on Benjamin Harrison.

  3. சனி காலை 9 : Francis Fukuyama – அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகளை அலசுகிறார்.

  4. சனி மாலை 10 : Norman Mailer and John Buffalo Mailer on the Bush administration, 9/11, Iraq, fascism, and popular culture.

  5. ஞாயிறு காலை 9 : Yitzhak Nakash on the Shi’a in the modern Arab world.

  6. சனி மாலை 7 : 2005 National Book Critics Circle விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்களில் இருந்து…

  முழுதும் பார்க்க சி-ஸ்பான் வலையகத்துக்கு வருகை புரியவும்.


  | |

 • திமுக கூட்டணி இடப்பங்கீடு முடிவு

  பாட்டாளி மக்கள் கட்சி திமுக கூட்டணியில் 31 இடங்கள் பெற்றுள்ளது. இன்று காலை முடிவான ஒப்பந்தத்தின்படி திமுக கூட்டணியின் (ஜனநாயக முற்போக்குக் கூட்டணி) இடங்கள் பின்வருமாறு:

  திராவிட முன்னேற்றக் கழகம் – 129
  திமுக சின்னத்தில் முஸ்லிம் லீக் – 3
  காங்கிரஸ் – 48
  பாட்டாளி மக்கள் கட்சி – 31
  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 13
  இந்திய கம்யூனிஸ்ட் – 10
  மொத்தம் = 234

  காங்கிரசுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் அதிகமாகவும், பாமகவுக்குக் குறைவாகவும் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

  திமுகவும் அதிகமாகவே தியாகம் செய்துள்ளது.

  இந்தக் கூட்டணி நல்ல வலுவான கூட்டணி. நிச்சயம் வெற்றிவாய்ப்புகள் அதிகம் உள்ள கூட்டணி. இப்பொழுதைக்கு உள்ள ஒரே பிரச்னை இந்திய கம்யூனிஸ்டுகளின் அதிருப்தி. அதைச் சரிக்கட்டுவது பெரிய விஷயமல்ல.

  இதற்கு மாறாக அதிமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் + சில்லறைகள் கூட்டணி வெற்றிபெறுவது கஷ்டம்தான். ஆனால் போட்டி பல இடங்களிலும் கடுமையாக இருக்கும்.

  திமுக கூட்டணி

  திமுக கூட்டணியில் சில கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  * காங்கிரஸ் – 48
  * கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) – CPI (M) – 13
  * இந்திய கம்யூனிஸ்ட் – CPI – 10
  * முஸ்லிம் லீகுக்கான திமுகவின் உள் ஒதுக்கீடு – 3

  பாமகவுக்கு 28-இலிருந்து 31 இடங்கள் ஒதுக்கப்படும் என்று பேசுகிறார்கள். இதனால் திமுகவுக்கு என்று கிடைக்கும் இடங்கள் = 129-இலிருந்து 132

  இந்தக் கூட்டணியில் மிகவும் சந்தோஷமாக இருப்பது காங்கிரஸ். பாமகவுக்கு அதிருப்தி இருக்கும் என்று நினைக்கிறேன். மதிமுக கூட்டணியில் இருந்து கழன்று கொண்டதால் கிடைக்கும் 22 இடங்களின் தங்களுக்குக் கணிசமான தொகுதிகள் கிடைக்கும் என்று பாமக எதிர்பார்த்திருக்கும். ஆனால் காங்கிரசுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் நிறையக் கிடைத்துள்ளதுபோலத்தான் எனக்குத் தோன்றுகிறது.

  மேலும் சென்ற தேர்தல்களின்போது பாமகவே முதன்முதலில் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் செய்துகொள்வது வழக்கம். அவர்களுக்கு தங்களின் தேவை மிக நன்றாகத் தெரிந்திருக்கும்; அவர்களைக் கூட்டணியில் வரவேற்கும் கட்சிக்கும் பாமகவின் முக்கியத்துவம் தெரிந்திருக்கும். ஆனால் இம்முறை பாமகவே கடைசி ஒப்பந்தம் செய்யப்போகிறது.

  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வருத்தத்தில் உள்ளதாகத் தெரிகிறது. தனக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகளுக்குக் கொடுத்த அதே அளவு இடங்கள் தேவை என்று கேட்பதாகத் தெரிகிறது. இவர்கள் இருவருக்குமே கொடுக்கப்பட்ட இடங்கள் அதிகம் என்பது என் கருத்து. ஆளுக்கு 7 தொகுதிகளுக்குமேல் கொடுத்திருக்கவே வேண்டாம்!