இரட்டை இலை


தனது அரசியல் பயணத்தை திட்டமிட்டு படிப்படியாக வளர்த்து, பல விஷயங்களில் மக்களை ஈர்க்கும்படியாக தமிழக அரசியலில் செயல்பட்டவர் எம்.ஜி.ஆர் தவிர வேறு யாரும் இல்லை என்று சொல்லலாம். தமிழக மக்களின் நாடித்துடிப்பை அறிந்து செயல்பட்டு அவர்களைக் கவர்ந்தவர் எம்.ஜி.ஆர்.

அதற்கு மிகச் சிறந்த உதாரணம் “இரட்டை இலை” சின்னம்

தன்னுடைய கட்சிக்காக ஒரு சின்னத்தை தேர்ந்தெடுத்த பொழுது மிக எளிதில் மக்களை சென்றடையக் கூடிய சின்னமாகவும், எளிதில் சுவர்களில் வரையக் கூடியதாகவும் இருப்பதாலேயே இரட்டை இலையை தேர்ந்தெடுத்தாராம். அந்தச் சின்னத்தை அவர் தன்னுடைய இரு விரல்களை மக்களிடையே காட்டியே மிக எளிதாக பிரபலம் ஆக்கினார்.

இன்றைக்கும் நான் எப்ப ஓட்டு போட்டாலும் இரட்டை இலைக்குத் தான் என்று யோசிக்காமல் கூறும் பெருசுகளை பார்க்கும் பொழுது எம்.ஜி.ஆர் மக்களை தன் வசம் எப்படி வசப்படுத்தி இருந்தார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

எம்.ஜி.ஆரின் வளர்ச்சிக்கு தமிழக மக்களின் அறியாமையும், படிப்பறிவின்மையும், சினிமா கவர்ச்சியும் முக்கிய காரணம். அம் மக்களின் மனதில் எளிதில் நுழைந்த “இரட்டை இலை” சின்னமும் மற்றொரு காரணம்.

தகவல் : Sify

4 responses to “இரட்டை இலை

 1. எம்.ஜி.ஆர். திட்டமிட்டு அரசியலுக்கு வந்தாரா என்பது ஆராயப்பட வேண்டிய ஓர் கேள்வி.அவரது திரைப்பட வாழ்க்கை மிகுந்த சிரமத்திற்குப் பின் துவங்கியது.அவர் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தபோது அவருக்கு வயது 35.அன்று தமிழ் சினிமா கதாநாயகர்கள் அடுக்கு மொழி வசனங்களை நிமிடத்து 25 வார்த்தைகள் என்ற வேகத்தில் பேசும் திறமை கொண்டவர்களாக அல்லது பாடத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.எம்.ஜி.ஆரிடம் இதற்கான ஆற்றல், அவரது சமகாலத்தவர்களோடு ஒப்பிடும் போது குறைவு. அவர் சினிமாவில் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, அப்போது இளைஞர்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்த, திரைக்கலைஞர்களை மட்டமாக நினைக்காத இயக்கமான திமுகவில் இணைந்து கொண்டார். அது அவருக்கு ஒரு ‘committed audience’ஐ உறுதி செய்தது.திமுகவின் வளர்ச்சிக்கும், குறிப்பாகப் பெண்கள் இளைஞர்கள் வாக்குகளைப் பெற்றுத் தருவதில் அது பெரும் பங்களித்தது.It was a symbiosis.

  திமுகவை விட்டு வெளியேற்றப்பட்ட மறுநாளே அவர் கட்சி ஆரம்பிக்கவில்லை.அவரது ரசிகர்கள் தாக்கப்பட்டு ரத்தம் கசியும் உடலோடு சத்யா ஸ்டுடியோசிற்கு வந்ததைப் பார்த்து ஒரு உணர்ச்சி வேகத்தில் அவர் தனிக் கட்சியை ஆரம்பித்தார். (இதே போன்ற ஒரு சூழ்நிலையில் சிவாஜி சொன்னது: “அவங்களை ஆஸ்பத்திரியில் கொண்டு சேருங்கப்பா.ஆட்டோக்கு காசு இருக்கில்ல?”) தனது consituency ஐக் காப்பாற்றிக் கொள்ள அவர் எடுத்த நடவடிக்கை அது. பின்னர் அந்த consituency அவரைக் காப்பாற்றியது. ஒரு கட்டத்திற்குப் பின் அவரால் அரசியலில் இருந்து வெளியேற முடியவில்லை. கடைசி சில வருடங்கள் (உடல் ந்லம் குன்றுவதற்கு முன்பே) கட்சியின் அன்றாட நடவடிக்கைகள் அவர் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்பதுதான் உண்மை

  வெகுஜனங்கள் அரசியல் போக்கை எப்படியெல்லாம் மாற்றக் கூடியவர்கள், மாற்றுகிறார்கள் என்பதற்கு சமுகவியல் பார்வையிலான ஒரு case study எம்.ஜி.ஆர்.

 2. I too think that too much is made of MGR’s supposedly carefully cultivated political image/entry/career. Circumstances conspired to put him in a position from which his simpleminded doggedness carried him to the throne. In fact coming to think of it, Indian politics is replete with examples of such accidental politicians who went on to become extremely successful (I mean it in the narrow sense of holding high offices). Rajiv Gandhi, PVN, Deve Gowda, MMSingh, Sonia, Jayalaitha… the list goes on. Carefully groomed individuals (I’ll spare the examples) on the other hand, haven’t had that much success.

 3. //எம்.ஜி.ஆரிடம் இதற்கான ஆற்றல், அவரது சமகாலத்தவர்களோடு ஒப்பிடும் போது குறைவு.
  //
  நண்பர் ஜோ வுடன் பேசிக்கொண்டிருந்த போது சிவாஜி எம்ஜியார் பற்றிய ஒப்பீட்டில் சில விடயங்களை கூறினார், எம்ஜியாருக்கு ஆற்றல் குறைவாக இருந்த போதிலும் ஒவ்வொரு படத்திலும் பாடல்களிலிருந்து ஒளிப்பதிவிலிருந்து காமிரா கோணம் வரையிலும் முழுமையாக கவனம் செலுத்தி அப்படம் வெற்றிக்காக பாடுபட்டிருக்கின்றார், அதனால் தான் 300க்கும் மேற்பட்ட படங்களில் சிவாஜி நடித்திருந்தாலும் அதில் மூன்றில் ஒரு பங்கு அளவிற்கு நடித்த எம்ஜியாரும் திரையுலகில் சிவாஜிக்கு இணையாக கருதப்பட்டார். எம்ஜியார் சிறந்த திட்டமிடலுடன் கூடிய பெரிய புத்திசாலி எனவே கருதுகின்றேன், அவர் எதை எப்படி எப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாகவே செய்துள்ளார்.

  நன்றி

 4. மாலன் சார், நல்ல பார்வை. அரசியல் பார்வைக்காக எழுதப்படாவிட்டாலும், இந்தக் கட்டுரைகூட எனக்கு ஒரு செய்தியைச் சொன்னது.
  http://www.harimozhi.com/Article.asp?id=794

  திரைவெளிச்சத்தில் முதல்வரைத் தேடுகிறோம் என்று ஆளாளுக்குப் புலம்புவதுகூட எவ்வளவுதூரம் சரி? அது மட்டுமே போதுமாக இருந்தால் எம்ஜியாரைவிட வெளிச்சம் பெற்றவர்களும், ஜெ’யைவிட கவர்ச்சி அந்தஸ்து பெற்றவர்களும் முதல்படியைக் கூட அரசியலில் தாண்டமுடிந்ததில்லையே. திரை வெளிச்சம் முதல்/முக்கிய அறிமுகத்தை வேண்டுமானல் அவர்களுக்குத் தந்திருக்கலாம். ஆனால் அதனோடு இன்னும் சிலவும் சேர்ந்த செமத்தியான ஃபார்முலா தேவை என்றே நம்புகிறேன்.

  இந்த நேரத்தில் உங்களிடமிருந்து இந்த வலைப்பதிவில் அதிகக் கட்டுரைகளை எதிர்பார்க்கிறேன். 🙂 முன்கூட்டிய நன்றிகள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.