Daily Archives: பிப்ரவரி 24, 2006

இரட்டை இலை

தனது அரசியல் பயணத்தை திட்டமிட்டு படிப்படியாக வளர்த்து, பல விஷயங்களில் மக்களை ஈர்க்கும்படியாக தமிழக அரசியலில் செயல்பட்டவர் எம்.ஜி.ஆர் தவிர வேறு யாரும் இல்லை என்று சொல்லலாம். தமிழக மக்களின் நாடித்துடிப்பை அறிந்து செயல்பட்டு அவர்களைக் கவர்ந்தவர் எம்.ஜி.ஆர்.

அதற்கு மிகச் சிறந்த உதாரணம் “இரட்டை இலை” சின்னம்

தன்னுடைய கட்சிக்காக ஒரு சின்னத்தை தேர்ந்தெடுத்த பொழுது மிக எளிதில் மக்களை சென்றடையக் கூடிய சின்னமாகவும், எளிதில் சுவர்களில் வரையக் கூடியதாகவும் இருப்பதாலேயே இரட்டை இலையை தேர்ந்தெடுத்தாராம். அந்தச் சின்னத்தை அவர் தன்னுடைய இரு விரல்களை மக்களிடையே காட்டியே மிக எளிதாக பிரபலம் ஆக்கினார்.

இன்றைக்கும் நான் எப்ப ஓட்டு போட்டாலும் இரட்டை இலைக்குத் தான் என்று யோசிக்காமல் கூறும் பெருசுகளை பார்க்கும் பொழுது எம்.ஜி.ஆர் மக்களை தன் வசம் எப்படி வசப்படுத்தி இருந்தார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

எம்.ஜி.ஆரின் வளர்ச்சிக்கு தமிழக மக்களின் அறியாமையும், படிப்பறிவின்மையும், சினிமா கவர்ச்சியும் முக்கிய காரணம். அம் மக்களின் மனதில் எளிதில் நுழைந்த “இரட்டை இலை” சின்னமும் மற்றொரு காரணம்.

தகவல் : Sify

Advertisements

சொல்றாங்க சொல்றாங்க

1. தனக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளை விடுதலைச் சிறுத்தைகளுக்காக விட்டுக்கொடுத்தால் அதை ஏற்கமாட்டோம். பாமகவுக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் இடையே பிளவை ஏற்படுத்த கருணாநிதி முயற்சிக்கிறார். – திருமாவளவன்.

2. மக்களுக்கு நன்மைகள் செய்வதே அரசியல்வாதிகளின் முக்கியக் கடமை. – முன்னாள் நடிகர், இன்னாள் ஃபார்வர்ட் ப்ளாக் கட்சித் தலைவர் கார்த்திக்

விகடனும் விஷமும் – கருணாநிதி

சென்ற வார விகடனில், சிரிப்பு நடிகர் செந்தில் – கருணாநிதியை ‘ஏய் கருணாநிதி’ என்றும் ‘ஒண்டிக்கு ஒண்டி’ அழைத்து மேடையில் பேசியதை அட்டைப்படத்தில் வெளியிட்டு விகடனும் விஷம் கக்க ஆரம்பித்துள்ளது என்றபடி உடன்பிறப்புக்கு சீறச்சொல்லும் மு.கவின் மடல்.. வலைப்பதிவர் பார்வைக்கு. (செந்தில் போன்றவர்கள் இவ்வாறு பேசுவது அதுவும் வயதில், அரசியலில் மூத்த ஒரு தலைவரை பேசுவது ஹும். அதற்கு விகடனும் பப்ளிசிடி கொடுப்பது அதைவிட டூமச். விகடன் இனிமேல் ‘கக்குகிறான் கணேஷ்’ மாதிரி கவர் ஸ்டோரிகள் வெளியிடுவதுதான் சரி இல்லை நமீதா, ஸ்ரேயா படங்கள் வெளியிட்டு புண்ணியம் தேடிக்கொள்ளட்டும்.

-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0–0-0-0-0-0-0-0-0-0-0-0-0-

Click the link below for full view.
நன்றி: தினகரன்: 24-பிப்ரவரி 2006

திருமா குமுறல்

அ.தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்று அவர் கருதினால் 125 இடங்களை வைத்துக் கொண்டு மற்ற இடங்களை தியாகம் செய்யலாம். மத்தியில் கூட்டணி ஆட்சி வேண்டும் தமிழ்நாட்டில் மட்டும் வேண்டாம் என்று நினைப்பது ஜனநாயக விரோதம்

திருமாவின் குமுறல் நியாயமானதே. வெற்றி பெற மட்டும் கூட்டணி வேண்டும், பதவி தனக்கு மட்டும் வேண்டும் என்று கலைஞர் நினைப்பது ஜனநாயக விரோதமே..

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியில் வர இயலா விட்டாலும் பா.ம.க.- விடுதலை சிறுத்தை கள் நட்புணர்வு தொடர வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் சொல்லட்டும். அப்படி அவர் சொன்னால் விடுதலை சிறுத்தைகள் தேர்தலை புறக்கணித்து விட்டு பா.ம.க. போட்டியிடும் தொகுதிகளில் அக்கட்சி வேட்பாளர்களுக்கு வேலை செய்ய தயாராக இருக்கிறது.

இதைச் சொல்வது திருமாவா ?

கடந்த சட்டமன்ற தேர்தல்/ பாராளுமன்ற தேர்தல் வரை ராமதாசை கடுமையாக விமர்சித்த திருமாவா இப்படி சொல்கிறார்.

ஆனாலும் திருமா எப்படி அரசியல் நடத்த வேண்டும் என்று ராமதாசிடம் பாடம் கற்கலாம். அது தான் அவருக்கும் அவரைச் சார்ந்த இயக்கத்திற்கும் உடனடி தேவை

திமுக கூட்டணிக்கு அடுத்தச் சிக்கலாக, ராமதாஸ் மூன்றாவது அணி தொடங்கக் கூடும் என்று தினமலர் கூறுகிறது. தினமலர் தனது “ஆசையை” இவ்வாறு யூகங்கள் மூலம் வெளியிடுவது வாடிக்கையாகி விட்டது.

ஒட்டகம் வாடகைக்கு

ஜெயலலிதா சொன்ன குட்டிக்கதை (தினமணி)

ஓர் ஊரில் ஒரு காய்கறி வியாபாரி, பழ வியாபாரி, மண்பானை வியாபாரி, கண்ணாடி வியாபாரி, ஒட்டகத்தை வாடகைக்கு விடும் ஒருவர் ஆகியோர் இருந்தனர். அவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஊருக்கு நன்மை செய்வதாகக் கூறி கூட்டு அமைத்தனர். அதாவது தில்லிக்கு சென்று மலிவி விலையில் பொருள்களை வாங்கி அவற்றை மக்களுக்குக் குறைந்த விலையில் தருவதாகக் கூறி மக்களிடமிருந்து பெரும் தொகையை முன்பணமாகப் பெற்றனர்.

தில்லிக்குச் சென்று பொருள்களையெல்லாம் வாங்கி, அவற்றை ஒரு கயிற்றில் கட்டினர். ஒட்டகத்தின் ஒரு பக்கத்தில் காய்கறிகளையும் பழங்களையும் தொங்கவிட்டனர். மற்றொரு பக்கத்தில் மண்பாண்டங்களையும் கண்ணாடிப் பொருள்களையும் தொங்கவிட்டனர். ஒட்டகம் முன்னால் செல்ல இவர்கள் அதைத் தொடர்ந்து சென்றார்கள். சிறிது நேரத்தில் வியாபாரிகள் களைத்துப் பின்தங்கிவிட்டனர். ஒட்டகத்தை வாடகைக்கு விடுபவர் ஒட்டகத்துடன் முன்னே சென்றுவிட்டார்.

ஒட்டகம் சற்று திரும்பிப் பார்த்தது. அதன் கண்முன்னே தெரிந்த காய்கறிகளையும் பழங்களையும் கொஞ்சம் கொஞ்சமாகத் தின்று தீர்த்துவிட்டது. பின்னால் வந்துகொண்டிருந்த வியாபாரிகளின் பார்வையில் வழியில் ஆங்காங்கே விழுந்து கிடந்த காய்கறித் துண்டுகளும் பழத்துண்டுகளும் தென்பட்டன. உடனே வேகமாக ஓடிவந்து ஒட்டகக்காரரைப் பார்த்து “இது நியாயமா? நீங்கள் தடுத்திருக்க வேண்டாமா?” என சப்தம் போட்டனர்.

ஒட்டக உரிமையாளருக்கு அது தெரியாமலில்லை. ஆனால் தீனிச் செலவு மிச்சம் என்று, காய்கறிகளையும் பழங்களையும் ஒட்டகம் தின்பதற்கு விட்டுவிட்டார். அவர்களிடையே வாக்குவாதம் முற்றியது. அப்போது ஒட்டகம் சற்று நகரவே ஒரு பெரிய சப்தம் கேட்டது. ஒட்டகத்தின் ஒரு பக்கத்திலிருந்து காய்கறிகளும் பழங்களும் காலியாகிவிட்டதால் மறுபக்கம் இருந்த கண்ணாடிப் பொருள்களும் மண்பாண்டங்களும் பாரம் தாங்காமல் விழுந்து உடைந்துவிட்டன. அதுதான் அந்த சப்தத்துக்குக் காரணம்.

ஊர் மக்களிடம் வாங்கிய பணத்தையும் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. சில நாள்களுக்குப் பிறகு அந்த வியாபாரிகள் மீண்டும் ஒன்றுகூடி, சென்னை சந்தையில் மலிவு விலையில் பொருள்களை வாங்கித் தருகிறோம் என்று கூறி முன்பணம் கேட்டனர். ஆனால் ஊர் மக்கள் இப்போது அவர்களிடம் ஏமாறத் தயாராக இல்லை.

அந்த ஊர் மக்களைப் போலவே தமிழக மக்களும் தங்களுக்கு நம்பிக்கைத் துரோகம் இழைத்தது யார் என்பதையும் நம்பிக்கைகு உரியவர் யார் என்பதையும் அறிவார்கள். எனவேதான் நாங்கள் மக்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டிருக்கிறோம். தமிழக மக்களும் எங்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.