Daily Archives: ஜனவரி 12, 2006

தவமாய் தவமிருந்து

சேரன் குறிப்பால் உணர்த்திய கதை

இராமநாதன்
என்னோட பெயர் இராமநாதன். என்னுடைய அப்பா முத்தையா சிவகங்கையில் அச்சு பிரெஸ் நடத்த தெரியாம நடத்துகிறார்.

என்னுடைய தம்பி இராமலிங்கம் மேல்தான் குடும்பத்தில் எல்லோருக்கும் பாசம். அம்மா சாரதா வாயில்லாப் பூச்சி.

திருமண வயது வந்தபிறகும் எனக்கு கல்யாணம் செய்துவைக்க பெற்றோருக்கு விருப்பமில்லை. என்னுடைய சம்பளத்தில்தான் அவர்கள் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. மணம் முடித்த பிறகு அம்மாவுக்கு என் மேல் possessiveness அதிகரித்து விட்டது. ஷிஃப்ட் முடிந்து வீட்டுக்கு வந்து மனைவி லதாவுடன் இரண்டு நிமிஷம் பேசினால் கூட பொறுக்காது.

பிள்ளைத்தாச்சியை கடுமையாக வேலை வாங்கவேண்டாம் என்று நான் அவ்வப்போது அம்மாவிடம் பக்குவமாக சொல்லிவந்த போதும், அவர்கள் அதை தலையணை மந்திரம் என திரித்து அண்டைவீட்டாரிடம் பரப்பினர். தலைவர் படம் வந்திருக்கிறதே என்று ‘சந்திரமுகி’க்கு கிளம்பினாலும், வாய்க்கு ருசியாக ஏதாவது வாங்கித் தரலாம் என்றாலும் நடக்கவில்லை.

மூத்தவர்களே முன்யோசனை இல்லாமல் இருப்பதால் தனிக்குடித்தனம் சென்றேன். என்னுடைய முழு சம்பளப் பணத்தையும் எதிர்பார்ப்பதால், நான் மாதந்தோறும் அனுப்பிய ஆயிரம் ரூபாயை அவர்கள் பெற்றுக் கொள்ளாமல் திருப்பி அனுப்பிவிட்டார்கள்.

என்னுடன் பட்ட முரண்களுக்கு நிவர்த்தியாக, அப்பாவும் அம்மாவும், இராமலிங்கத்திடமும் அவனின் மனைவி வசந்தியுடனும் பக்குவமாக பதவிசாக இருந்தார்கள். வீட்டு வேலை செய்து ஓடாய்த் தேய்ந்த என் தாயார் உடல்நலம் குன்றிப் போய், இறந்து போனார். மனைவி இருந்தபோதே உரிய மரியாதை கிடைக்காத அவர்களின் வீட்டில் வாழப் பிடிக்காத அப்பா, மீண்டும் கிராமத்திற்கே தனிக்காட்டு ராஜாவாகத் திரும்பினார்.

கிங் லியர் போன்ற அப்பா, வார்த்தையில் தேன் தடவினால் மட்டுமே மகிழ்பவர். பெரியவர்களிடம் அனுகூலமாக, இனிப்பாக மட்டுமே பேச வேண்டும் என்று இராமல், என்னுடைய எண்ணங்களை உரத்த சொன்னதுதான், அப்பாவின் மரணத்துக்கு காரணம் என்று தம்பி இப்போது அப்பாவின் வழி தூற்றுகிறான்.

சாரதா அம்மா
என்னால் முடிலை. எவ்வளவு நாள்தான் இந்தக் குடும்பத்துக்கு உழைத்துக் கொண்டேயிருப்பது!

பொறுப்பற்ற கணவன். ஊர் மேயும் பிள்ளைகள். சீவி சிங்காரித்து காலையில் டாடா காட்டும் மருமகள். டபுள் இன்கம் – நோ கிட் என்று சொல்வார்கள். இவர்கள் டபுள் இன்கம் டபுள் கிட் நோ டிரபிள் என்று மாமனாரிடமும் மாமியாரிடமும் குழந்தைகளைப் பராமரிக்க விட்டுச் செல்லும் நவீன யுகத் தம்பதியர்.

கல்யாணமானவுடன் புருஷனுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் வேலை செய்தேன். மாமியார் போய் சேர்ந்தபிறகு, சொற்ப வருமானத்தில் ஊதாரியாய் செலவழிக்கும் அவரை சமாளித்துக் கொண்டே, குழந்தைகளுக்கு சேவை.

என்னுடைய மாமியார் எனக்கு செஞ்சதில் பத்தில் ஒரு பங்கு கூட இருக்காது. சித்த அடுப்பை பார்த்துக் கொள்ளச் சொன்னாலும் மூஞ்சியால் எத்தும் பெரியவன் பொண்டாட்டி லதா. அவள் கற்று கொடுத்த பாடத்தினால், அடுத்தவனின் மனவி வசந்தி சொன்னதையெல்லாம் செய்தேன்.

குழந்தைகள் எங்கள் பேச்சை நக்கல் செய்வார்கள்; பொறுமையைக் கடைபிடித்தேன். பேத்தி நடையையும் உடையையும் கிண்டல் அடிப்பாள்; ரசிப்பதாக நடித்தோம்.

எத்தனை நாள்தான் சம்பளமில்லா வேலைக்காரியாக சமைத்தும், ஷு கட்டியும், துணி தோய்த்தும், ஸ்கூல் பேக் தயார் செய்தும் கட்டியம் கட்ட முடியும்.

வயதான உயிர்தானே… சீக்கிரம் போய் சேர்ந்தது.

லதா
என்னோட புருஷன் இராமநாதனுக்கு சூதுவாது தெரியாது. வாங்கும் சம்பளத்தையெல்லாம் குடும்பத்துக்கே கொடுத்துருவார். தம்பி தன்னோட காதலுக்காக ‘ஜோடிப் புறா‘ பரிசு கொடுப்பதற்கு, இவர் எதுக்காக கஷ்டப்பட்டு உழைக்கணும்?

நாங்களும்தான் எங்களுடைய குழந்தைகளை வச்சுண்டு கஷ்டப்படறோம். எங்க வீட்டில் கொஞ்ச நாள் வந்து இருந்து கொண்டு, அந்தக் குழந்தைகள் கிட்டயும் பாசமழை பொழிஞ்சா அவங்க என்ன கொறஞ்சா போயிடுவாங்க?

அவங்க வர மாட்டாங்க.

அவர்களுக்கு பணம் முக்கியம்; மாடி வீடு அதை விட முக்கியம்; வீட்டில் அம்போ என்று தனியாக இருந்தாலும், சொகுசு கார் முக்கியம். நாள் பூரா பேச்சுத் துணைக்கும், மேலுக்கு முடியலைன்னா கூப்பிட குரலுக்கு வீட்டில் ஒருத்தர் இருப்பாங்க என்றாலும், பணம் இருக்கிற இடத்தில்தான் கட்டியம் பண்ணுவாங்க.

ஓட்டுனர் (டிரைவர்)
எங்க முதலாளி இராமலிங்கம் குறைந்த காலத்தில் பணக்காரர் ஆனவர்.

சொல் சாமர்த்தியம் அவர்கிட்டத்தான் கத்துக்கணும். இமேஜை எப்படி பாதுகாப்பது என்று பலமுறை அவரிடமிருந்து உணர்ந்திருக்கிறேன். தந்தைக்கு விசுவாசமானவன்னு ஒரு பிம்பத்தை அலுவலகத்தில் காட்டிக் கொண்டால், மேலதிகாரியிடமும் அப்படித்தானே நடந்து கொள்வார் என்று நினைத்துக் கொள்வார்கள். அவரின் வாழ்க்கையை பார்த்தால் சொல்ல மறந்த கதையெல்லாம் தெரியும்.


| |

கே டிவியில் குட்டி ரேவதி


பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக குட்டி ரேவதியின் பேட்டி ஒளிபரப்புகிறார்கள். காதல் படத்தில் நடிப்பதற்காக சந்தியா என்று பெயர் மாற்றம் செய்து கொண்டவர் இவர்.

ஏற்கனவே ரேவதி என்னும் பெயரில் புகழ் பெற்ற நடிகை/இயக்குநர் இருப்பதாலும், குட்டி பத்மினி, குட்டி ராதிகா போன்ற குட்டி பெயர்களில் விருப்பமில்லாததாலும், சொந்தப் பெயரை விட்டு விட்டதை கே டிவி நிகழ்ச்சியில், குட்டி ரேவதி பெயரும் சண்டக்கோழியும் புகழ் பெற்றிருக்கும் இன்றைய சூழலுக்கு எடுத்து வைப்பாரா என்பதை ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கிறார்கள்.


இன்றைய நாளேடுகளில் இருந்து – 12/01/2006

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் வரைவு வாக்காளர் பட்டியல் 23-ந் தேதி வெளியீடு
சென்னை, -“தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் வாக்காளர் வரைவு பட்டியல் வருகிற 23 -ந் தேதி வெளியிடப்படும்” என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறினார்.
http://dailythanthi.com/article.asp?NewsID=233227&disdate=1/12/2006&advt=1

புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கு தனி உடன்பாடு… காங்கிரஸ் “பிளான்’
புதுடில்லி: காங்கிரசுக்கான தொகுதிகளை கேட்டுப் பெற மூத்த தலைவர்கள் இரண்டு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க., தலைவர் கருணாநிதியுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி காங்கிரஸ் கட்சிக்கு கவுரவமான இடங்களைப் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. http://dinamalar.com/2006jan12/fpnews1.asp

சட்டசபைக் கூட்டம்: ¬முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்?
சென்னை:நடப்பு சட்டசபையின் கடைசிக் கூட்டத் தொடர் 13ம் தேதியன்று தொடங்குகிறது. இந்தக் கூட்டத் தொடரில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகக் கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
http://thatstamil.indiainfo.com/news/2006/01/11/assembly.html

புதுவை:அதிமுக & புமுகா கூட்டணி
வருகிற சட்டமன்றத் தேர்தýல் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கண்ணனின் புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க உள்ளது.
http://tamil.sify.com/fullstory.php?id=14118953

பொதுத் தேர்வுப் பணியைப் புறக்கணிக்க தலைமை ஆசிரியர் கழகம் முடிவு
மதுரை: பதவி உயர்வு, ஊக்க ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மார்ச் மாதம் தொடங்கவுள்ள பொதுத் தேர்வுப் பணியைப் புறக்கணிக்க தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கழகம் முடிவு செய்துள்ளது.
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20060111145538&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0

கண்ட நாள் முதல்

Kanda Naal Muthal - Priya, PC Sreeram, et al Thx: India Glitzகண்ட நாள் முதல் திரைப்படத்தை பார்த்த பிறகு படத்தின் கருவாக கண்ணதாசன் வரிகளை சொல்லலாம்…

நிலவும் மலரும்: ஏ எம் ராஜா & பி சுசிலா (இசை: ஏ எம் ராஜா)

சிரித்து சிரித்து உறவு வந்தால்
நிலைத்து வாழுமா?

மனம் துடித்து துடித்து சேர்ந்த பின்னே
தோல்வி காணுமா?

தன்னைப் பிரித்து பிரித்து வைப்பதினால்
காதல் மாறுமா?