Daily Archives: திசெம்பர் 30, 2005

தமிழ் சினிமா – 2005

சிறந்த நடிகர்: பிரசன்னா (கஸ்தூரி மான் & கண்ட நாள் முதல்) விஜய் (சிவகாசி)
மோசமான நடிகர்: ஸ்ரீகாந்த் (பம்பரக் கண்ணாலே & ஒரு நாள் ஒரு கனவு)

சிறந்த புதுமுகம்: ஆர்யா (அறிந்தும் அறியாமலும்) நதீஷா (சுக்ரன்)
மோசமான புதுமுகம்: சொர்ணமால்யா (சாரி… எனக்கு கல்யாணமாயிடுச்சு)

சிறந்த நடிகை: கோபிகா (பொன்னியின் செல்வன் & கனா கண்டேன்) பின்னணிக் குரல் (வெளிமாநில இறக்குமதிகள்)
மோசமான நடிகை: நயந்தாரா (சந்திரமுகி & கஜினி)

சிறந்த வில்லன்: ‘பேய்க்காமன்’ ஷண்முகம் (மாயாவி) முரளி (மஜா)
சிறந்த வில்லி: ஜோதிகா (சந்திரமுகி) பூஜா (ஜித்தன்)

சிறந்த ஆண் நகைச்சுவையாளர்: பசுபதி (மஜா) பிரபு (சந்திரமுகி)
சிறந்த பெண் நகைச்சுவையாளர்: அமிதா (கனா கண்டேன்) அஸின் (கஜினி)

சிறந்த வசனம்: பேரரசு (சிவகாசி)
மோசமான வசனம்: கமல் (மும்பை எக்ஸ்பிரஸ்)

சிறந்த திரைக்கதை: கே ஷாஜஹான் (கண்ணாடிப் பூக்கள்)
மோசமான திரைக்கதை: கலைஞர் கருணாநிதி (கண்ணம்மா)

சிறந்த இயக்கம்: ஜீவா (உள்ளம் கேட்குமே)
மோசமான இயக்கம்: ஷரவண சுப்பையா (ஏபிசிடி)

சிறந்த தயாரிப்பாளர்: பிரகாஷ்ராஜ் (கண்ட நாள் முதல்)
ஒரு பட நடிகர்: குட்டி (டான்ஸர்)


| | |

டாப்டென் – 2005

Vikadan Sujatha Katrathum Petrathumநத்திங் சீரியஸ், ஒன்லி ·ப்ரிவலஸ்

 • சிறந்த காதல் காவியம் – சிநேகா – நாக்ரவி விவகாரம்
 • சிறந்த ‘விடாது கருப்பு’- எஸ். ராமகிருஷ்ணன் (கதாவிலாசம் முடியுமுன்னே அடுத்த விகடன் தொடர் ஆரம்பம்)
 • சிறந்த பஜனை – கற்றதும் பெற்றதும்
 • சிறந்த ஸோலோ – ஜி.கே வாசன் (பிறந்தநாள் சுய கொண்டாட்டங்கள்)
 • சிறந்த காமெடி – விஜயகாந்தின் புதிய கட்சி
 • சிறந்த பெருங்காய டப்பா – தமிழ்முரசு
 • சிறந்த குடும்பத்தலைவி – சிம்ரன்
 • சிறந்த சடையப்ப வள்ளல் – நல்லி குப்புசாமி செட்டியார் (இலக்கியவாதி விழாக்களுக்கு நன்கொடைகள்)
 • சிறந்த “ஙே” – குமுதம் (நம்பர் 1 போயாச்)
 • சிறந்த சோகக்காட்சி – தங்கர்பச்சான் மன்னிப்பு விவகாரம்
 • சிறந்த புரட்சி – குஷ்பு & கற்பு
 • சிறந்த வாரிசு அரசியல் – சு.ரா. மறைவுக்குப் பிறகு ஜெ.மோ, மனுஷ்யபுத்திரன், யுவன் etc., எழுதிய கட்டுரைகளில் விவரம் தேடலாம்
 • சிறந்த கவர்ச்சிக் கன்னி – சானியா மிர்ஸா
 • சிறந்த சம்பவம் – நடிக – நடிகையர் வீடுகளில் இன்கம்டாக்ஸ் ரெயிடு
 • சிறந்த சைலன்ஸ் – திலகவதிக்குக் கிடைத்த சாகித்ய அகடமி
 • சிறந்த விமர்சனம் – தவமாய் தவமிருந்து (ஜூ.விகடனில் எஸ் ராமகிருஷ்ணன்)
 • சிறந்த எஸ்கேப் – துணை மேயர் கராத்தே தியாகராஜன்
 • புத்தகங்கள் – 2005

  மலரும் பட்டியல்களில், 2005(?)-இன் வாங்கி/படிக்க வேண்டிய பு(து)த்தகங்கள்:

 • தமிழகத்தில் அடிமைமுறை – ஆ சிவசுப்பிரமணியன் : ரூ. 80. @ காலச்சுவடு
 • எதிர்ப்பும் எழுத்தும் : துணைத்தளபதி மார்க்கோஸ் – எ பாலச்சந்திரன் (தொகுப்பு/தமிழாக்கம்) : ரூ. 350. @ விடியல்
 • சோளகர் தொட்டி – ச பாலமுருகன் : ரூ. 100. @ வானம்
 • தமிழரின் தத்துவ மரபு – அருணன் (2 பாகங்கள்) : ரூ. 100. @ வசந்தம்
 • விந்தனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் : (தொகுப்பு – மு பரமசிவம்) : ரூ. 160. @ சாகித்திய அகாதெமி
 • தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் 2005: தொகுப்பு – எல் அந்தோணிசாமி : ரூ 50. @ சிடா அறக்கட்டளை
 • தொலைகடல் & யாரும் யாருடனும் இல்லை – உமா மகேஸ்வரி : ரூ. 45. & 130. @ தமிழினி
 • புத்தம் சரணம் – அ மார்க்ஸ் : ரூ. 50. @ கறுப்புப் பிரதிகள்
 • மணல் கடிகை – எம் கோபாலகிருஷ்ணன் : ரூ. 255. @ யுனைடெட் ரைட்டர்ஸ்
 • உயிர்மை இதழ் தொகுப்புகள் (1 & 2) : ரூ. 200. @ உயிர்மை

  தொடர்புள்ள முந்தைய பதிவுகள்:

  1. நத்தார் தின விழைவுப் பட்டியல்
  2. புது யுகத்தில் தமிழ் நாவல்கள்
  3. புத்தகக் குறி (மீமீ)
  4. சென்னை சென்றபோது பர்ஸைக் கடித்த சில புத்தகங்களின் பட்டியல்
  5. செப். 2005


  | | |