Daily Archives: திசெம்பர் 7, 2005

ஜூவி

JuniorVikatan.com: வெள்ளச் சேதங்களைப் பார்வையிடச் சென்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லகண்ணு.

விருத்தாசலத்தில் உடைந்துபோன ஆற்றுப் பாலத்தை கடந்த 28-ம் தேதி பார்வையிட்டுவிட்டு, அப்படியே உழவர் சந்தை பக்கமாக நல்லகண்ணுவும் தோழர்களும் போயிருக்கிறார்கள். அப்போது, உழவர் சந்தை வாசலில் சில விவசாயிகள் காய்கறி விற்றுக் கொண்டிருக்க, அங்கு வந்த டி.எஸ்.பி-யான பழனி என்பவர் அவற்றை எல்லாம் உதைத்துத் தள்ளி, அங்கிருந்து விவசாயிகளை விரட்டிக் கொண்டிருந்தாராம். இதைப் பார்த்துப் பதறிப் போன நல்லகண்ணுவும் தோழர்களும் தட்டிக் கேட்ட போது, அவர்களை மரியாதை இல்லாமல் பேசினாராம் டி.எஸ்.பி. இதைக் கண்டித்து கம்யூனிஸ்ட்கள் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். போராட்டத்துக்கு டி.எஸ்.பி. அனுமதி மறுக்க, மாவட்ட எஸ்.பி-யான பன்னீர் செல்வம் தலையிட்டு, அனுமதி கொடுத்து இருக்கிறார். அப்படியும் ஆர்ப்பாட்டத்தின் போதும் தோழர்களை சகட்டுமேனிக்குத் திட்டினாராம்டி.எஸ்.பி. இதுசம்பந்தமாக போலீஸில் புகார் கொடுக்கப்பட்டு, அது பதிவு செய்யப்படாமலே இருக்கிறது.

வலைமொழி: தெரியாத தேவதையைவிட தெரிஞ்ச பிசாசு எவ்வளவோ மேல்


| | | |

குமுதம்

லேசான மனது வேண்டுமானால் மிஸ்டர் மியாவ் பக்கம் ஒதுங்குவேன். கொஞ்சம் மாறுதலுக்காக, மனது லேசாக குமுதம் பக்கம் சென்றால் நிறையவே சிந்திக்க வைத்துவிட்டார்கள்.

1. வைரமுத்துவுக்கு கமல் போட்டியா?

அமெரிக்காவில் இருந்து வெளிவரும் தென்றல் இதழின் டிசம்பர் இதழில் கமல் கவிதை:

‘என் ஜன்னல்வழிப் பார்வை கலிலியோவின் உலகைச் சதுரமாக்கியது.’

பல தளங்களில் விரிவடையும் கவிதை.

 • கலிலியோவின் உலகு என்பதன் மூலம் கடவுளின் உலகு அல்ல என்னும் அக்நாஸ்டிக் வாதம் முன்னிற்கிறது.
 • கன்ஸாஸ் முதல் பென்சிலிவேனியா வரை அமெரிக்காவில் நிகழ்ந்த இறையியலில் மட்டும் போதித்த ‘கடவுளின் குழந்தைகள்’ சித்தாந்தத்தை அறிவியலில் போதிக்க வைக்கும் சர்ச்சையை நினைவிலாழ்த்துகிறது.
 • என் பார்வை, உன் பார்வை, நம் பார்வை, அகலப் பார்வை என்று ஜன்னல்களை வெளிச்சமாக்குகிறது.
 • கலிலீயோவை சாளரம் வழியாகத்தான் பார்க்கிறோம் என்றும் பட்டறிவு வேறு, பகுத்தறிவு வேறு என்று உறுமுகிறது.
 • தான் என்னும் கர்வம் ‘என் ஜன்னல்’ என்னும் பிரயோகத்தில் மிளிர்கிறது.
 • பார்த்திபனின் கிறுக்கல்களுக்கு சரியான போட்டியாக இருப்பதை உணர்த்துகிறது.
 • ஜன்னல் என்னும் வட இந்தியச் சொல் தொடுப்பதன் மூலம் முபை எக்ஸ்பிரஸ் விமர்சகர்களுக்கு ஆஸ்கரடி கொடுக்கிறது.

  குமுதம் :: இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்…..


  வடு மாங்கா ஊறுதுங்கோ; தயிர் சாதம் ரெடி பண்ணுங்கோ

  அன்று அருண் கேட்ட கேள்விக்கு அரசு பதிலளித்திருந்தார். கமல் மாதிரி அனுபவத்துக்கு ஏற்ற அளவுக்கு இந்த வரிகளும் விரிவடைகிறது என்கிறார்.


  வடிகட்டியவைகளுக்கு வாழ்த்துப்பா முன்னுரையுடன் கருத்து கனிமொழிக்கு போற்றித் துதி இயற்றியிருக்கிறார் வாலி.


  | | | | |

 • காப்பி குறள்

  அறத்துப்பால் – வழிபாடு

  1. அகர முதல வலைப் பதிவெல்லாம்
   பத்ரி குறிப்பே குரு.
  2. பதிவினால் ஆய போஸ்டென்கொல் வாலெறிவன்
   நற்பதிவில் மறுமொழியார் எனின்.
  3. சுட்டிமிசை காட்டினான் பின்பற்றி போனார்
   வலைமிசை நீடுசுற்று வார்.
  4. சுட்டுதல் சுட்டாமை இலான் பதிவோருக்கு
   யாண்டும் அனானிமஸ் இல.
  5. ப்ராக்ஸி ஐபி இருவினையும் பாரா முகமூடி
   பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
  6. சினிமா அரசியல் சமயம் கருத்து குத்து
   பதிவார் பார்வைபெறு வார்.
  7. மனத்துவப்பானவர் மாண்பு போற்றும் பதிவரின்
   ப்ராண்டுதலை மாற்றல் அரிது
  8. செய்திவாழி buzz தாள்பதிவார்க் கல்லால்
   பிறவாழி விசிட்டர் அரிது.

  தொடர்புடைய சுட்டி: Prabhu n Ferrari :: Blog kural | :: Thirukural :: DR.KALAIGNAR URAI ::


  | |

  மூவர்

  ஜெயபாஸ்கரன்

  @ LegoLand California‘ஐயா வணக்கம்
  நல்லாயிருக்கீங்களா?’

  ‘ம்’

  ‘வீட்ல எல்லோரும்
  செளக்கியமா இருக்காங்களா?’
  ‘இருக்காங்க!’

  ‘இப்ப வீடு எங்க இருக்கு?’
  ‘திருவான்மியூர்ல!’

  ‘உங்க கவிதையெல்லாம்
  பிரமாதமா இருக்குமே…
  தொகுதியா வந்திருக்கா?’
  ‘இல்ல!’

  ‘உங்க திறமை
  எனக்கு தெரியும்
  நல்லா வருவீங்க!’
  ‘நன்றி’

  ‘அடடா உங்க கூட ஒரு நிமிஷம்
  பேசக் கூட முடியல பஸ் வந்துடுது
  வரட்டுமா?’
  ‘நல்லது!’

  அடுக்கடுக்காக என்னை
  நலம் விசாரித்துவிட்டுப் போகிறான்
  அவன்.

  அன்பான விசாரணைகளை
  இறுகிய முகத்துடன் எதிர்கொள்வதாக
  என்னிடம் வருத்தப்பட்டுக் கொள்கிறான்
  இவன்.

  எப்படிச் சொல்வது இவனுக்கு?

  சொல்லப்பட்டவைகளை விடவும்
  நினைக்கப்பட்டவைகள் தான்
  எனக்கு நன்றாகக் கேட்கும்
  என்பதை.


  | |